Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 29 July 2015
இன்றைய புனிதர் 2015-07-30 புனித பீட்டர் கிறிசோலோகு (St.Peter Chrysologus)
இவர் 430 ஆம் ஆண்டு இராவென்னா என்ற நகரின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நகரில் புகழ்மிக்க பணக்காரர்கள் வசி த்து வந்தனர். இதனால் உரோமை பேரரச ரால் அந்நகர் சுற்றி வளைக்கப்பட்ட கைப் பற்றப்பட்டது. அரசர் ஹோனோரியுஸ் (Honorius) என்பவரால் இராவென்னா மக்கள் துன்பப்படுத்த ப்பட்டார்கள். 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏறக்குறைய 50ஆண் டுகள் கொன்ஸ்டானிநோபிளில் வாழ்ந்த அரசன் ஒருவன், திருச்சபையைப்பற்றி தவறாக போதித்தான். இதனால் ஆயர் பீட்டர் இதனை சுட்டிக்காட்டி, தவற்றை திருத்திக்கொள்ள வேண்டுமென்று எச்சரித்தார். ஆயர் தன் மறைமாநிலம் முழுவ தும் மிக எளிமையான முறையில் திருப்பலி நிறைவேற்றி, பொருள் தரும் வகையில் சொற்பொழிவாற்றி மக்களின் மனங் களில் இடம்பிடித்தார். பின்னர் மிலான் மறைமாநிலத்திற்கு சென்று அங்கிருந்த சில பிரச்சனைகளையும் தீர்த்து வைத்தார். மீண்டும் இராவென்னா வந்த பிறகு, உரோமை அரசரின் கீழிரு ந்த தன்னுடைய மறைமாநிலத்தை, திருத்தந்தையின் அதிகார த்திற்கு கொண்டு வந்தார். பின்னர் அந்தியோக்கியா நகரிலிரு ந்த இறையியல் பள்ளிக்கு தேவையான சில புத்தகங்களை எழுதினார். இவரின் நூல்கள் அனைத்திலும் மரியன்னைக்கெ ன்று சிறப்பிடத்தை தந்துள்ளார். இதன் வழியாக இவர் அன்னை யின் மேல் எவ்வளவு பக்தி கொண்டவர் என்பதை அறியலாம்.
இன்றைய புனிதர் 2015-07-29 புனித மார்த்தா (St.Martha
இவர் மரியா, லாசர் இவர்களின் உடன் பிறந்தவர். இவர் ஆண்டவரின் மேல் அள வுகடந்த அன்பும், பாசமும் கொண்டவர். இதனால் ஆண்டவரை தன் வீட்டிற்கு வரவழைத்து, அவருக்கு பணிவிடையும் புரிந்தார். இலாசர் இறந்த வேளையில், ஆண்டவர் இயேசு அங்கு இல்லாமல் போனதை எண்ணி கலங்கினார். இதையறிந்த இயேசு விரைந்து மார்த்தாவின் இல்லத்தை அடைந்தார். அப்போது மார்த்தா ஆண்டவரிடம் "நீர் இங்கே இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான். இப்போதுகூட நீர் கடவுளிடம் கேட்பதை எல்லாம் அவர் உமக்குக் கொடுப்பார்", என்று முறையிட்டார். ஆண்டவர் ஒருவரே மெசியா, இறைமகன் என்பதை முழுமையாக நம்பினார். இயேசு மார்த்தாவின் நம்பிக்கையை பார்த்து, அவர் தன் சகோதரனின் இறப்பினால் அடைந்த துயரைக்கண்டு மன்றாட்டை ஏற்று, சகோதரர் இலாசரை உயிர்த்தெழ செய்தார்.
Sunday, 26 July 2015
பொதுக்காலம் 17 வது ஞாயிறு 26 யூலை 2015 வாசகங்கள்
திருப்பலி முன்னுரை
இறை அன்பில் நிறைவாகப் பங்கேற்க வந்திருக்கும் அன்பின் சொந்தங்கள் அனைவருக்கும் திருமகன் இயேசுவின் பெய ரால் அன்பு வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறேன். இறை நம்பி க்கையோடு ஆண்டவரைத் தேடி வந்தவர்கள் அவருடைய அன்புக்கும் கனிவுக்கும் உரியவர்கள் ஆகிறார்கள் எனும் பட்ட றிவைப் பெற்றுள்ள நாம் பெற்றுள்ள பெருவாழ்வு பகிர்ந்து வழ ங்கப்பட்டால் சிறப்புக்குரியவராவோம் எனும் உணர்த்துதலை இன்றைய திருப்பலிப் பங்கேற்பு வழியாக உணர வைக்கப்படு கிறோம். பொதுக்காலத்தின் 17 வது ஞாயிறு திருப்பலியை கொண்டாட உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
இறைவன் நமக்கு மிகுதியாக தருகிறார் என்ற கருத்தை இன் றைய திருவழிபாடு நமக்கு முன்வைக்கிறது. மக்கள் மீது பரிவு கொண்டவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்கிறார். நம் மேல் கனிவு காட்டும் இறைவன், நமது வாழ்வில் அற்புதங் களை செய்யவும் தயாராக இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். இறைவனின் செயல்பா ட்டை நம் வாழ்வில் உணர, நாம் அன்போடும் தாழ்மையோ டும் நம்மை அவரிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம். ஆண்டவரின் அருஞ்செயல்களை நமது வாழ்வில் காண வரம் வேண்டி, இந்த திருப்பலியில் பங்கேற்போம்.
முதல் வாசகம்
முதல் வாசக முன்னுரை
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய முதல் வாசகம், இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் முன் அடையாளமாக இறைவாக்கினர் எலிசா செய்த அற்புதத்தை எடுத்துரைக்கிறது. பணியாளர் கொண்டு வந்த இருபது வாற்கோதுமை அப்பங்களைப் பலுகச் செய்து எலிசா நூறு பேரின் பசியாற்றிய நிகழ்வையும், ஆண்டவரின் சொல்லுக்கு ஏற்ப அவற்றில் மீதியும் இருந்ததாக இங்கு காண் கிறோம். நாமும் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்ந்து, மிகுதியான வரங்களைப் பெற வேண்டி, இந்த வாசக த்துக்கு செவிமடுப்போம்.
இம்மக்கள் உண்ட பின்னும் மீதி இருக்கும்.
அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 4: 42-44
பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரிடம் கொண்டு வந்தார். எலிசா, "மக்களுக்கு உண்ண க் கொடு" என்றார். அவருடைய பணியாளன்,"இந்த நூறு பேரு க்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?" என்றான். அவரோ , "இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் 'உண் ட பின்னும் மீதி இருக்கும்' என்று ஆண்டவர் கூறுகிறார்" என் றார். அவ்வாறே அவன் அவர்களுக்குப் பரிமாற, அவர்கள் உண்டனர். ஆண்டவரது வாக்கின்படி மீதியும் இருந்தது.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
பல்லவி: ஆண்டவரே, எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
திருப்பாடல் 145: 10-11. 15-16. 17-18
ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி
15 எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன; தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 16 நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். பல்லவி
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். பல்லவி
இரண்டாம் வாசகம்
இரண்டாம் வாசக முன்னுரை
வாழ்வுக்குரியவர்களே,
இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல், ஆண்டவரில் முழுமையாக நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கிறார். அன்பு, அமைதி, பொறுமை, கனிவு, தாழ்மை ஆகியவற்றைக் கடைபிடித்து, அனைவரும் ஒருமைப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதையும் அவர் எடுத்துரைக்கிறார். திருமுழுக்கின் வழியாக கடவுளின் பிள்ளைகளாக மாறியுள்ள நாம், அவரை முழுமையாக சார்ந்து வாழும் வரம் வேண்டி, இந்த வாசகத் துக்கு செவிமடுப்போம்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-6
ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே: தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே: நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே: திருமுழுக்கு ஒன்றே. எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே: அவர் எல்லாருக்கும் மேலானவர்: எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்: எல்லாருக்குள்ளும் இருப்பவர்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா
நற்செய்தி வாசகம்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15
இயேசு கலிலேயக் கடலை கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின் தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு,"இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?" என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக,"இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே" என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா,"இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?" என்றார். இயேசு,"மக்களை அமரச் செய்யுங்கள்" என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின்,"ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்" என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள்,"உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே" என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
இன்றைய புனிதர் 2015-07-26 புனித சுவக்கின், அன்னம்மாள் (St. Joachim and St. Anna) அன்னை மரியாவின் பெற்றோர்
கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் மரபு வழி செய்தியின்படி அன்னாவும், சுவக்கின் என்ப வர்களும் அன்னை மரியின் பெற்றோர்கள் என்று கூறப்ப டுகின்றது. 6 ஆம் நூற்றாண் டிலிருந்தே அன்னாவுக்கு வணக்கம் செலுத்தப்பட்டு வந்தது. 10 ஆம் நூற்றாண்டில் இப்பக்தி மிகுதியாக பரவியது. 15 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் புனித அன்னா ஜூலை மாதம் 25 ஆம் நாள்தான் இறந்தார் என்ற வரலாற்று செய்தி யைக் கொண்டு, 550 ஆம் ஆண்டு கான்ஸ்டாண்டிநோபிளில் ஆட்சி செய்த அரசன் புனித அன்னா பெயரில் பேராலயம் கட்டினான். 12 ஆம் நூற்றாண்டிலிருந்து அன்னை மரியின் பெற்றோர்களின் மீதிருந்த பக்தி உலகம் முழுவதும் பரவியது. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து ஜூலை 26ஆம் நாள் இப்புனிதர்க ளின் விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. 1568 ஆம் ஆண்டு புனித 5 ஆம் பயஸ் இவ்விழாவை, திருச்சபை பட்டியலிலிரு ந்து நீக்கினார். ஆனால் 1584 ஆம் ஆண்டு மீண்டும் உரோமை திருச்சபை புனிதர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.அன்னை மரியின் பெற்றோர்கள் திருமணமாகி பல ஆண்டுகள் குழந் தைப்பேறு இல்லாமல் இருந்துள்ளனர். செப, தவ, ஒறுத்தல் கள் பல புரிந்து, நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு பெண் குழந் தையை பெற்றெடுத்தனர். அக்குழந்தைக்கு "மரியா" என்று பெயர் சூட்டினர். தன் ஒரே மகளை ஞானத்திலும், அறிவிலும், பக்தியிலும் சிறந்த பெண்ணாக வளர்த்தெடுத்தனர். இவர்கள் இறுதியாக எருசலேமில் வாழ்ந்துள்ளனர்.
Friday, 24 July 2015
இன்றைய புனிதர் 2015-07-23 புனித பிரிஜித்தா (St.Bridget)
இவர் அரசர் மனைவி என்பதால், கணவருக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் இவருக்கே கொடுக்கப்பட்டது. இவர் அவை அனைத்தையும் வைத்து இவர் பெயரில் ஒரு துறவற மடத்தை நிறுவினார். அதன்பிறகு உரோமைக்கு சென்று, அந்நாட்டில் உள்ள மக்களுக்கு ஆன்ம வாழ்வில் எடுத்துக்காட்டாய் வாழ்ந்தார். தான் மேற்கொண்ட கடுந்தவத்தின் காரணமாய், பல நாட்டிற்கு திருப்பயணம் சென்றார். அப்பயணங்களில் பல நூல்களையும் எழுதினார். இளம் வயதிலிருந்தே இறைவனிடமிருந்து தான் பெற்ற காட்சிகள் அனைத்தையும், புத்தகங்களில் வடிவமைத்தார். புனித நாட்டிற்கு பயணம் செய்யும்போது தன்னுடைய மகன்களில் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை கேட்டார். இதனால் மிகவும் மனத்துயர் அடைந்து, புனித நாட்டிற்கு செல்லாமல் மீண்டும் உரோம் நகர் திரும்பினார். தனது மற்ற பிள்ளைகளை சந்திக்க திட்டமிட்டார். ஆனால் அத்திட்டம் நிறைவேறாமல் போகவே, மனத்துயர் அடைந்து நோய்வாய்ப்பட்டு இறைவனடி சேர்ந்தார். இறக்கும்வரை இறைவனை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டிருந்தார். இவர் தியானம் செய்யும்போது பலமுறை இயேசுவின் திருப்பாடுகளை காட்சியாக கண்டார்
இன்றைய புனிதர் 2015-07-22 புனித மகதலா மரியா (St. Mary Magdalene)
இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.
இன்றைய புனிதர் 2015-07-24 புனித.கிறிஸ்டோபர் (St.Christopher)
இவருக்கு ரெப்ரோபூஸ் (Reprobus) என்ற பெயரும் உண்டு. பல மக்களை மனமாற்றியதால், இவரை டேசியூஸ் அரசன் (Decius) கொல்ல ஆணையிட்டான். இவர் வழித்துணை பாதுகாவலராக போற்றப்படுகின்றார். அதற்கு ஒரு வரலாறு உண்டு.
ஒருநாள் இவர் ஆற்றைக் கடக்கும்போது, ஒரு சிறு பிள்ளை வந்து என்னையும் தூக்கி, கரையை கடக்க உதவுங்கள் என்றது. இவரும் அக்குழந்தையே தோளில் சுமந்துகொண்டு ஆற்றில் இறங்கினார். ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் குழந்தை கனக்க ஆரம்பித்தது. அவரால் வலியை பொறுக்கமுடியவில்லை. இருந்தும் கீழே விட்டுவிடாமல் கரையை கடந்தார். இறக்கியவுடன் அக்குழந்தை "நான் தான் கிறிஸ்து" என்று சொல்லி மறைந்தது.
நீண்ட பயணம் செய்பவர், இவரிடம் ஜெபித்த போது பல நன்மைகளை பெற்றுள்ளனர். வயலில் வேலை செய்பவர்களூம் தண்ணீர் வேண்டி ஜெபித்த போது மழையை பெற்றுள்ளனர். ஐரோப்பாவில் இவரின் பக்தி அதிகமாக பரவியுள்ளது.
Monday, 20 July 2015
இன்றைய புனிதர் 20 July 2015
இன்றைய புனிதர்
2015-07-20
புனித அப்போலினாரிஸ் (St.Apollinaris)
இவர் துருக்கி நாட்டில் பிரிஜியா(Brijiya) மாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்ப பெரும்பாடுபட்டார். இதனால் அந்நாட்டு அரசன் மார்க்ஸ் அவுரேலியஸ்(Markus Aurelias)என்பவரால் பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ஆயர் தன்னுடைய செபத்தால் அரசனை வென்றார். ஆயரின் சொல்படி நடந்த அரசன், திருச்சபைக்காக பல உதவிகளை செய்தான். அந்நாட்டில் கிறிஸ்தவர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்தான்.
மார்க்ஸ் நாளடைவில் "கிறிஸ்துவர்களின் நண்பன்" என்ற பெயரை பெற்றான். அப்போலினாரிஸிடமிருந்து, பல விசுவாச போதனைகளை கற்றுக் கொண்டான். ஆயர் மன்னனின் மனதை கவர்ந்து விசுவாசத்தை அம்மண்ணில் நிலைநாட்டியதால் "வீரம் கொண்ட விசுவாச தந்தை" என்ற பெயரை பெற்றார். கிறிஸ்துவர்களின் முன்னேற்றத்திற்காக ஆயருக்கு, அரசர் உதவியதால் , அரசனின் எதிரிகளால் ஆயர் தாக்கப்பட்டார். அரசன் நிறைவேற்றிய சட்டங்கள் பல கிறிஸ்துவர்களுக்கு சாதகமாக இருந்ததால் அரசனும் அவமானத்திற்குள்ளாக்கப்பட்டான். இந்நிலையில் எழுந்த போராட்டங்களில், ஆயர் அப்போலினாரிஸ் எதிரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். துருக்கி நாட்டில், 2 ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயர்களில் "சிறந்தவர்" என்ற பெயர் பெற்றார்.
Sunday, 19 July 2015
இன்றைய புனிதர் 2015-07-19 புனித.சிம்போரோசா (St.Symphorosa)
இவர் தனது ஏழு குழந்தைகளுடன் உரோம் நகரில் வசித்து வந்தார். கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டதால் தன் கணவரால் கைவிடப்பட்டார். நாளடைவில் இவர் கணவரும், இவரின் பொருட்டு கொலை செய்யப்பட்டார். இருப்பினும் தன் குழந்தைகளையும், கிறிஸ்துவ நெறிக்கு சான்றுபகரும் முறையில் வளர்த்தார். தானும் அவ்வாழ்வை வாழ்ந்தார். அப்போது அரசர் அட்ரியான்(Hadrien), தான் எழுப்பிய ஆலயம் ஒன்றை மிக ஆடம்பரமாக திறந்துவைத்தான். சிம்போரோசாவும் தன் குழந்தைகளும் தவறாமல் அவ்வாலயத்திற்கு சென்று ஆராதனை வைத்து செபித்தனர். இதை கவனித்த அரசன் அவர்களை ஏளனம் செய்தான். உம் மன்றாட்டை கடவுள் கேட்பாரா, இல்லையா என்று பார்க்க உம் பிள்ளைகளை கொன்று அவர்களின் வழியாக எனக்காக செபம் செய் என்று கூறினான். ஆனால் சிம்போரோசா அரசனிடம், உனக்காக என் பிள்ளைகளை நான் கொல்லமாட்டேன் என்று தைரியமுடன் அரசனிடம் கூறினார். இதனால் அரசன் அதிர்ச்சி அடைந்து கோபம் கொண்டு ஹெர்குலஸ்(Herkules) என்றழைக்கப்படும் ஆலயத்திற்கு கொண்டு சென்றான். அவ்வாலயத்தில் வைத்து, அவர் குழந்தைகளின் கண்ணெதிரில் முகத்தை கிழித்து, தலைமுடியை தன் கையால் பிடுங்கி எரிந்தான். பின்னர் ஆணிகளால் அறைந்து கொன்றான். தாயில்லா ஏழு குழந்தைகளையும் தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாக கொன்று எரிந்தான். இதைக்கண்ட சில கிறிஸ்துவர்கள் அவர்கள் அனைவரின் உடலையும் ஒன்று சேர்த்து, உரோம் நகரில் புதைத்தனர். சில வருடங்கள் கழித்து அவர்களின் கல்லறை மேல் "ஏழு சகோதரர்கள்" என்ற பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டது.
மூன்றாவது திருவழிபாடு ஆண்டு பொதுக்காலம் 16வது வாரம் ஞாயிற்றுக்கிழமை 2015-07-19
மூன்றாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 16வது வாரம் ஞாயிற்றுக்கிழமை
2015-07-19
முதல் வாசகம்
நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர் " தோன்றச் செய்வேன்
இறைசாக்கினர் எரேமியா 23:1-6
ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு! தம் மக்களை வழி நடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்: அதனைத் துரத்தியடித்தீர்கள்: அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப் பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா: திகிலுறா: காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர். ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன: அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள "தளிர் " தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்: இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். "யாவே சித்கேனூ " என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி
பதிலுரைப் பாடல்
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை
திபா 23:1-3a, 3b-4, 5,6
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்(பல்லவி)
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் ப+சுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.(பல்லவி)
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.(பல்லவி)
இரண்டாம் வாசகம்
கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். திருத்தூதர் பவுல் எபேசியரருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2:13-18
ஒரு காலத்தில் தொலைவில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின்மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார். அவர் வந்து, தொலைவில் இருந்த உங்களுக்கும், அங்கிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.
- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு
- இறைவா உமக்கு நன்றி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! அல்லேலுயா, அல்லேலுயா! என் ஆடுகள் எனது குரலுக்கு செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பிந்தொடர்கின்றன. அல்லேலுயா அல்லேலூயாநற்செய்தி வாசகம்
புனித மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6:30-34
திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள் " என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.
Saturday, 18 July 2015
இன்றைய புனிதர் 2015-07-17 புனித எட்விக் (St.Hedwig)
St.Victory
இன்றைய புனிதர் 2015-07-17
புனித எட்விக் (St.Hedwig)
போலந்து நாட்டு அரசி (Queen of Poland)
இவரின் தந்தை ஹங்கேரி நாட்டு அரசர் அன்ஜோய்(Anjou) என்பவரின் மகள் லூட்விக்(Ludwig). எட்விக் 10 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். இதனால் தன் தந்தைக்குப் பிறகு எட்விக் ஹங்கேரி நாட்டு அரசியாக முடிசூட்டப்பட்டார். தனது 11 ஆம் வயதில் யாகிலோ(Jagiello) என்பவருக்கு திரு மணம் செய்து வைக்கப்பட்டார். அரசி எட்விக் மிகவும் பக்தியு ள்ளவர். திருமணம் செய்யும் முன் ஞானஸ்நானம் பெறவேண் டுமென்று கூறி, தன் கணவரையும் அதற்கு இணங்கவைத்தார்.
எட்விக்கின் கணவர், எட்விக்கின் பக்தியை பார்த்து பரவசம டைந்தார். இதனால் எட்விக் செபிப்பதற்காக போலந்து நாட் டில் , தன் மறைமாநிலத்தில் ஆலயங்களை கட்டினார். 1388 ஆம் ஆண்டு எட்விக்கும், யாக்கிலியோவும் சேர்ந்து வில்னா (Wilna) என்ற மறைமாநிலத்தை உருவாக்கினர். இவர்கள் ஏழைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எல்லா உதவிகளையும் செய்து வாழ்வை வழங்கினர். அவர்களுக்காக ஆலயங்களையும் பல கல்வி நிறுவனங்களையும் எழுப்பினார். 1297 ஆம் ஆண்டு தனது 23 ஆம் வயதில், தன் பெயரில் கிராகோவ் மறைமாநிலத்தில் இறையியல் கல்லூரி ஒன்றையும் கட்டினார். பின்னர் எட்விக் என்ற பெயரில் ஒரு துறவற மடத்தையும் தொடங்கினார். திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் திருத்தந்தையாக தேர்ந்தெடுத் தப்பின் 1979 ஆம் ஆண்டு போலந்து நாட்டை முதன்முறையாக பார்வையிடச் சென்றார். அப்போதுதான் எட்விக் என்ற பெயர் கொண்ட புதிய துறவற இல்லத்தைத் திறந்துவைத்தார். இவர் கிராகோவ் நாடு முழுவதும் பல நன்மைகளை செய்து, மக் களை வாழவைத்தார். எட்விக் இறந்தபிறகு கிராக்கோவ் மாநிலத்திற்கு சொந்தமான பேராலயத்தில் அடக்கம் செய்யப் பட்டார்.
Subscribe to:
Posts (Atom)