இன்றைய புனிதர் 2015-07-17 புனித எட்விக் (St.Hedwig) போலந்து நாட்டு அரசி (Queen of Poland) இவரின் தந்தை ஹங்கேரி நாட்டு அரசர் அன்ஜோய்(Anjou) என்பவரின் மகள் லூட்விக்(Ludwig). எட்விக் 10 வயது இருக்கும் போதே தந்தை இறந்துவிட்டார். இதனால் தன் தந்தைக்குப் பிறகு எட்விக் ஹங்கேரி நாட்டு அரசியாக முடிசூட்டப்பட்டார். தனது 11 ஆம் வயதில் யாகிலோ(Jagiello) என்பவருக்கு திரு மணம் செய்து வைக்கப்பட்டார். அரசி எட்விக் மிகவும் பக்தியு ள்ளவர். திருமணம் செய்யும் முன் ஞானஸ்நானம் பெறவேண் டுமென்று கூறி, தன் கணவரையும் அதற்கு இணங்கவைத்தார். எட்விக்கின் கணவர், எட்விக்கின் பக்தியை பார்த்து பரவசம டைந்தார். இதனால் எட்விக் செபிப்பதற்காக போலந்து நாட் டில் , தன் மறைமாநிலத்தில் ஆலயங்களை கட்டினார். 1388 ஆம் ஆண்டு எட்விக்கும், யாக்கிலியோவும் சேர்ந்து வில்னா (Wilna) என்ற மறைமாநிலத்தை உருவாக்கினர். இவர்கள் ஏழைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், அனாதை குழந்தைகளுக்கும் எல்லா உதவிகளையும் செய்து வாழ்வை வழங்கினர். அவர்களுக்காக ஆலயங்களையும் பல கல்வி நிறுவனங்களையும் எழுப்பினார். 1297 ஆம் ஆண்டு தனது 23 ஆம் வயதில், தன் பெயரில் கிராகோவ் மறைமாநிலத்தில் இறையியல் கல்லூரி ஒன்றையும் கட்டினார். பின்னர் எட்விக் என்ற பெயரில் ஒரு துறவற மடத்தையும் தொடங்கினார். திருத்தந்தை 2 ஆம் ஜான்பால் திருத்தந்தையாக தேர்ந்தெடுத் தப்பின் 1979 ஆம் ஆண்டு போலந்து நாட்டை முதன்முறையாக பார்வையிடச் சென்றார். அப்போதுதான் எட்விக் என்ற பெயர் கொண்ட புதிய துறவற இல்லத்தைத் திறந்துவைத்தார். இவர் கிராகோவ் நாடு முழுவதும் பல நன்மைகளை செய்து, மக் களை வாழவைத்தார். எட்விக் இறந்தபிறகு கிராக்கோவ் மாநிலத்திற்கு சொந்தமான பேராலயத்தில் அடக்கம் செய்யப் பட்டார்.
No comments:
Post a Comment