Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 24 July 2015
இன்றைய புனிதர் 2015-07-22 புனித மகதலா மரியா (St. Mary Magdalene)
இவர் கலிலேயா நாட்டைச் சேர்ந்தவர். இயேசுவின் சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். இயேசு பாடுகள்பட்டு, மரித்து, உயிர்தெழும்வரை மரியா அவரோடு உடனிருந்தார். உயிர்த்த இயேசுவை முதன்முதலில் கண்டவர். இவரிடமிருந்துதான் இயேசு ஏழு பேய்களை ஓட்டினார். தான் செய்த பாவங்களின் பரிகாரமாய் ஆண்டவரின் பாதங்களை கழுவிய மரியா இவர்தான். இறந்து அடக்கம் செய்யப்பட்ட ஆண்டவரின் கல்லறை, வெறுமனே இருப்பதை முதன்முதலில் பார்த்து, இயேசுவின் சீடர்களிடம் அறிவித்தவரும் இவரேதான். இயேசுவை காணவில்லையே என்று ஆதங்கப்பட்டு, கண்ணீர் விட்டு அழுது, இயேசுவை பற்றிக்கொண்டவர் இவர்.
மரியா ஓர் பெரும்பாவி என்று மக்களால் ஒதுக்கிவைக்கப்பட்டபோது, தன் நிலையை உணர்ந்து அழுது, ஓடிச்சென்று இயேசுவிடம் சென்றார். தன் பாவங்களின் பரிகாரமாய் செய்த செயலினால் இயேசுவின் ஆழ்மனதில் இடம்பிடித்தார். அன்னை மரியாளுக்குபிறகு, இயேசுவின் அருகில் எப்போதும் அவருக்காக வாழ்ந்தவர். " என்னை இப்படி பற்றிக்கொள்ளாதே" என்று ஆண்டவரே கூறும் அளவுக்கு, அவர் மேல் அன்புகொண்டவர். இயேசுவைப்பற்றி கொள்வதில் அனைவருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாய் அன்றிலிருந்து இன்றுவரை திகழ்கிறார்.
No comments:
Post a Comment