Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 19 July 2015

இன்றைய புனிதர் 2015-07-19 புனித.சிம்போரோசா (St.Symphorosa)


இவர் தனது ஏழு குழந்தைகளுடன் உரோம் நகரில் வசித்து வந்தார். கிறிஸ்துவின்மீது விசுவாசம் கொண்டதால் தன் கணவரால் கைவிடப்பட்டார். நாளடைவில் இவர் கணவரும், இவரின் பொருட்டு கொலை செய்யப்பட்டார். இருப்பினும் தன் குழந்தைகளையும், கிறிஸ்துவ நெறிக்கு சான்றுபகரும் முறையில் வளர்த்தார். தானும் அவ்வாழ்வை வாழ்ந்தார். அப்போது அரசர் அட்ரியான்(Hadrien), தான் எழுப்பிய ஆலயம் ஒன்றை மிக ஆடம்பரமாக திறந்துவைத்தான். சிம்போரோசாவும் தன் குழந்தைகளும் தவறாமல் அவ்வாலயத்திற்கு சென்று ஆராதனை வைத்து செபித்தனர். இதை கவனித்த அரசன் அவர்களை ஏளனம் செய்தான். உம் மன்றாட்டை கடவுள் கேட்பாரா, இல்லையா என்று பார்க்க உம் பிள்ளைகளை கொன்று அவர்களின் வழியாக எனக்காக செபம் செய் என்று கூறினான். ஆனால் சிம்போரோசா அரசனிடம், உனக்காக என் பிள்ளைகளை நான் கொல்லமாட்டேன் என்று தைரியமுடன் அரசனிடம் கூறினார். இதனால் அரசன் அதிர்ச்சி அடைந்து கோபம் கொண்டு ஹெர்குலஸ்(Herkules) என்றழைக்கப்படும் ஆலயத்திற்கு கொண்டு சென்றான். அவ்வாலயத்தில் வைத்து, அவர் குழந்தைகளின் கண்ணெதிரில் முகத்தை கிழித்து, தலைமுடியை தன் கையால் பிடுங்கி எரிந்தான். பின்னர் ஆணிகளால் அறைந்து கொன்றான். தாயில்லா ஏழு குழந்தைகளையும் தன் விருப்பப்படி ஒன்றன்பின் ஒன்றாக கொன்று எரிந்தான். இதைக்கண்ட சில கிறிஸ்துவர்கள் அவர்கள் அனைவரின் உடலையும் ஒன்று சேர்த்து, உரோம் நகரில் புதைத்தனர். சில வருடங்கள் கழித்து அவர்களின் கல்லறை மேல் "ஏழு சகோதரர்கள்" என்ற பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டது.

No comments:

Post a Comment