Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 14 July 2016

இன்றைய புனிதர் 2016-07-15 புனித பொனவந்தூர் (St. Bonaventure) ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

     
  இன்றைய புனிதர் 2016-07-15
                  புனித பொனவந்தூர் (St. Bonaventure)
         ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)

பிறப்பு1218 தஸ்கனி ( Tuscany), இத்தாலி

இறப்பு 1274லயனஸ்(Lyons), பிரான்ஸ்

இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இரு க்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவ ரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதி லிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டி ருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார்.

இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திரு ச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டா யத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தி னாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழ க்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சே ர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.

இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிரு ந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரி யார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறி விக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொ ன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.


செபம்:
என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்க ளின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தா க்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 13 July 2016

இன்றைய புனிதர்2016-07-14 புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis) குரு

           
    இன்றைய புனிதர்
2016-07-14

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)

                                           குரு

பிறப்பு1550ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)

இறப்பு 1614 உரோம்

பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்

இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழ ந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இத னால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம னையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆ ற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது.

அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விரு ப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்ப த்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவே ற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறு வினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயா ளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைக ளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இ ச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.

இன்றைய புனிதர் 2016-07-13 புனித இரண்டாம் ஹென்றி(St.Henry) அரசர்


         
இன்றைய புனிதர்2016-07-13

புனித இரண்டாம் ஹென்றி(St.Henry)

                                                  அரசர்

பிறப்பு973பவேரியா (Bavaria), ஜெர்மனி

இறப்பு1024பாம்பர்க்(Bamberg), ஜெர்மனி

புனிதர்பட்டம்: 1146, திருத்தந்தை 3 ஆம் யூஜின்

இவர் பவேரியா நாட்டு அரசராக 995 ல் உரோம் பேரர சின் மன்னராக 1002 ல் உயர்வுப்பெற்றார். திருச்சபை யின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர். இவர் துறவற மடத் தலைவ ர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகா ரத்தை பெற்றிருந்தார். இவரின் துணைவியாரும் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார். உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை 8ஆம் ஆசீர்வதிப்பருக்கு மன்னர் உறுதுணையாயி ருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரு ம்பாடுபட்டார்.

இவர் தன் நாட்டு மக்களுக்கு பின்வரும் இறைவசன த்தை அடிக்கடி கூறிவந்தார். "அழிந்து போகும் செல்வ த்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை மறக்கக்கூ டாது என்பார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ் புகை யாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்ப த்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தன் நாட்டில் கடவுளின் இரக்கத்தைப் பெற, பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பாக்பெர்கில்லிருந்து பணத்தை செலவிட்டார். இறுதி வரை இறைப்பணியாற்றி அவ்வாலய பணியி ன்போதே உயிர் துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்லவரே! அரசரான போதும் கூட, இவ்வுலக காரியங்களின் மேல் அக்கறை கொள்ளாமல், உம் மேல் அக்கறைகொண்டு வாழ்ந்தார் அரசன் ஹென்றி. தன் நாட்டு மக்களையும், விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தூண்டினார். இவரால் பவேரியா முழுவதும் இறைப க்தி பரவிற்று. இப்பக்தியானது அம்மக்களிடையே எப்போதும் நிலைக்க, அவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 11 July 2016

இன்றைய புனிதர் 2016-07-12 புனித யோவான் குவால்பெர்டூஸ்(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்


                 
     இன்றைய புனிதர் 2016-07-12

புனித யோவான் குவால்பெர்டூஸ்

(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்

பிறப்பு995புளோரன்ஸ், Florence

இறப்பு1073, 12 ஜூன்டோஸ்கானா, Toscana

புனிதர் பட்டம்: 1193, திருத்தந்தை 3 ஆம் செலஸ்டின், Pope Cholestin III
இவர் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலி ருந்தே ஆன்மீக காரியங்களில் அக்கறை காட்டி வள ர்க்கப்பட்டார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே ஆசைப்பட்டார். தன் உறவினர் ஒருவரின் துணைகொண்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேறினார். அவரின் உதவியினால் துறவற சபை க்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் உதவி செய்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் கொன்று போட்டார்கள். அவரோடு சேர்த்து யோவானின் உடன்பிறந்த சகோதர ரையும் கொன்றார்கள். ஆனால் யோவான் கொலை க்காரர் யார் என்று கண்டுபிடித்தார். கொலை செய்த வர் யோவானிற்கு பயந்தார். ஆனால் அவரோ கொலை காரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தின மும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். அதன்பிறகுதான் துறவியாகும் முடிவை கைவிடாமல் புனித பெனடிக்ட் துறவற இல்லம் சென்று 1013 ஆம் ஆண்டில் துறவியானார்.

யோவான் பல ஆண்டுகள் துறவறமடத்தில் வாழ்ந்த பிறகு 1080 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, புதி தாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபை யிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “Vallombrosanerorden” என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையிலிருந்து பிரிந்தாலும் கூட அந்த கடின மான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்த வர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒரு போதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக்கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய யோவான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். அவ்வாறு பார்வையிட டோஸ்கானாவில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இறந்தார். இவ ரின் உடல் டோஸ்கானாவிலுள்ள இவரால் தொடங்க ப்பட்ட துறவற இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! ஏழுமுறை அல்ல மாறாக ஏழு எழுபதுமுறை மன்னிக்க வேண்டுபவரே! கொலை க்காரனை மன்னித்து, அன்பு செய்து உம்பால் ஈர்த்த புனித யோவானைப்போல, நாங்களும் பிறரை மன தார மன்னித்து, அன்பு செய்து உம் மகிழ்ச்சியில் நிலை யான பங்கு வகிக்க, உம் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Saturday, 9 July 2016

இன்றைய புனிதர் 2016-07-10 டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

                      

இன்றைய புனிதர் 2016-07-10

டென்மார்க்கின் புனித குன்ட், நார்வே புனித ஓலப், ஸ்வீடன் புனித எரிக், (அரசர்கள், மறைசாட்சிகள்)(Kund of Denmark, Olaf of Norway, Erich of Sweden

இறப்பு 29 ஜூலை 1030

இவர் 1015 ஆம் ஆண்டில் தனது 20 ஆம் வயதில் நார்வே நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1014 ஆம் ஆண்டில் தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவ ரானார். இவர் அரசரான 15 ஆண்டுகள் கழித்து, மிகவும் செல்வம் இருந்ததால் ஏழைகளிடம் பகிர்ந்து கொடு த்தார். ஏராளமான ஏழை மக்களுக்கு வழிகாட்டினார். தன் முழு வாழ்வையும் ஏழை மக்களுக்காகவே அர்ப்ப ணித்தார். மிஷினரி வேலை செய்து, கிறிஸ்துவை பர ப்ப, பல நாடுகளிலிருந்து கிறிஸ்துவர்களையும், துற வற குழுமத்தினரையும் தன் நாட்டிற்கு அழைத்தார். பல ஆலயங்களை கட்டினார். பலரை மனந்திருப்பி ஞானஸ்நானம் பெற சொன்னார். இதனால் எதிர் திரு ச்சபை மக்களால் 1028 ஆம் ஆண்டு பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். இவரின் உரிமைகள் அனை த்தும் பறிக்கப்பட்டது. பின்னர் அணுவணுவாக துன்பு றுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரின் கல்ல றை நார்வே நாட்டில் உள்ளது. இவரின் பெயரால் அந்நா ட்டில் பெரிய பெரிய பேராலயங்கள் கட்டப்பட்டுள்ளது.

எரிக் (Erich), ஸ்வீடன்

இறப்பு: 18 மே 1160, உப்சலா(Uppsala), ஸ்வீடன்
பாதுகாவல்: ஸ்வீடன் நாட்டின் பாதுகாவலர்
இவரும் மறைசாட்சியாளர் குன்ட் போலவே, ஆலய த்தில் திருப்பலி நேரத்தில் கொலை செய்யப்பட்டார். இவரும் தன் நாட்டில் மறைபரப்பு பணியை செய்து, மக்களை ஆன்மீகத்தில் வளர்த்தெடுத்தார். 1150 ஆம் ஆண்டில் ஸ்வீடன் நாட்டின் அரசராக இருந்தார். மறை ப்பணி செய்ததின் காரணமாக இவரும் கொலை செ ய்யப்பட்டார். ஸ்வீடன் நாட்டில் உப்சலா என்ற ஊரில் உள்ள பேராலயத்தில் இவரின் உடல் அடக்கம் செய்ய ப்பட்டது.

குன்ட் (Kund), டென்மார்க்

இறப்பு: 10 ஜூலை 1086
புனிதர்பட்டம்: 1100, திருத்தந்தை 2ஆம் பாஸ்கலீஸ் (Pope Paschalis II) 1080 ஆம் ஆண்டு இவர் டென்மார்க் நாட்டின் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகுந்த விசு வாசம் கொண்டவர். கிறிஸ்துவை தன் நாடு முழுவதும் பரப்ப பெரும்பாடுபட்டவர். பல ஆலயங்களையும், துறவு மடங்களையும், பள்ளிகளையும் நாடு முழுவதும் கட்டினார். இவர் கிறிஸ்துவை பரப்பிய காரணத்தி ற்காகவே, இவரின் எதிரிகளால் திருப்பலியில் இருக்கும்போதே குத்திக் கொலை செய்யப்பட்டார்.



செபம்:
நிலை வாழ்வளிப்பவரே எம் இறைவா! உம்மீது கொண்ட தணியாத தாகத்தால் தங்கள் நாடுகளில் மறைபரப்பு பணியை செய்து கொலை செய்யப்பட்டா ர்கள். இன்றைய புனிதர்கள். இருப்பினும் இவர்களின் இறப்பினால் அந்நாடுகளில் கிறிஸ்தவம் பரவியது. உம் பெயரை அந்நாட்டு மக்களிடையே நிலைநாட்டி னார்கள். இன்று அந்நாடுகளில் மறைபரப்பு பணியை செய்யும் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து, பணியில் நிறைவு பெற உடனிருந்து வழிநடத்தியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong) மறைசாட்சி


         இன்றைய புனிதர்2016-07-09
            


புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

                         மறைசாட்சி

முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்

சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டி ருக்கிறது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்சத்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செ ய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திரு ந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்த னர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்த னர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலை களிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்க ளின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செ ய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திரு முழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவ ர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூ லம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறி ஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நா னம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவ ரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படு த்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்து வர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தா ர்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போb து, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்

Friday, 8 July 2016

இன்றைய புனிதர் 2016-07-09 புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

            

இன்றைய புனிதர்

2016-07-09

புனித அகஸ்டின் ஸாவோ ரோங் (St. Augustine Shawo Rong)

      

                      
முத்திபேறுபட்டம்: திருத்தந்தை 2 ஆம் அருள் சின்னப்பர்
சீன நாட்டில் கி.பி. 5 ஆம் நூற்றாண்டிலேயே இந்நா ட்டில் கிறிஸ்துவின் நற்செய்திக்கு வித்திடப்பட்டிருக்கி றது.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு கிறி ஸ்தவ ஆலயம் கட்டப்பட்டது. 618-907 வரை டாங் வம்ச த்தினர் அரசுரிமை ஏற்று ஆட்சி செய்த காலத்தில் 2 நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தனர். 13 ஆம் நூற்றாண்டில் மேலை நாடுகளிலிருந்து நற்செய்தி பரப்ப சென்ற ஜியோனித மோன்றோ கோர் வீனோ ( Gionitha Mondro Gor vino) போன்றோர் சீன மக்களின் முன் கூறப்பட்ட கலாச்சாரத்தை ஆழமாக புரிந்து வைத்திருந்தார்கள். இதனால் பெய்ஜிங் தலைநகரிலேயே ஆயர் தங்குவதற்கு ஆயர் இல்லம் அமைந்திருந்தது. இதனால் மறைபரப்பு பணியாளர் தங்கள் பணியில் முழுவீச்சில் இறங்கவும் வாய்ப்புக் கிடைத்தது.

பின்னர் 16 ஆவது நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மறைப்பணியாளர் பல துறவு சபைகளிலிருந்தும் மிக கவனமாக தேர்வுசெய்யப்பட்டு சீனா சென்றடைந்தனர். அவர்களில் ஒருவர் புகழ்பெற்ற சேசு சபைக் குரு மத்தேயுரிச்சி. இவ்வாறு சென்றவர்கள் முதலில் சீன நாட்டின் கலாச்சாரத்தை நன்கு புரிந்து வைத்திருந்தனர். அதோடு கணிதம், விஞ்ஞானம் போன்ற கலைகளிலும் சிறந்தவர்களாய் இருந்தனர். இதனால் சீன மக்களிடம் எளிதாக தொடர்புகொண்டனர். அவர்களின் மனதில் இடம்பிடித்து அவர்களுக்கேற்ப நற்செய்தி பணியை பரப்பினர். 16, 17 ஆம் நூற்றாண்டுகளில் ஏராளமானோர் நற்செய்தியை ஏற்றுக்கொண்டு திருமுழுக்கு பெற்றனர். இவ்வாறு கிறிஸ்தவர்களானவர்கள் மெய்மறை கற்று, தங்களை உயர்ந்தவர்களாக கருதினர்.

அப்போது சீன நாட்டு மன்னன் 1692 ல் நாடு தழுவிய மறை சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினர். இதன்மூலம் விரும்புபவர்கள் மெய்மறையில் சேரலாம். கிறிஸ்துவை பின்பற்றலாம் என்றும் கூறினான். இதன் பலனாக ஏராளமான மக்கள் திரண்டுவந்து ஞானஸ்நானம் பெற்றனர். அப்போது திருத்தந்தையாக இருந்தவரின் பிரதிநிதி டூர்னோனின்(Durnon) அறிவின்மையால் "திருவழிபாட்டில் சீன ரீதி" என்பதை அறிமுகப்படுத்தினார். இதனால் மன்னன் ஆத்திரமடைந்து கிறிஸ்துவர்களை தாக்கினான். அண்டை நாடான ஜப்பானில் கிறிஸ்தவர்களுக்கு விரோதிகளாக இருந்தவர்கள், சீனாவிற்கு வந்து கிறிஸ்தவர்களை கொன்று குவித்தார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பாதி வரை இக்கொடுமை நடந்தவண்ணமாய் இருந்தது. பல ஆலயங்களும் தாக்கப்பட்டது.

1648 ல் "மஞ்ச் டார்டர்"(Manj Dardar) இனத்தை சேர்ந்த கொடியவர்கள், கிறிஸ்தவர்கள் வாழ்ந்த ஊர் ஒன்றை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அத்தோடு புனித சாமிநாதர் சபையை சார்ந்த தந்தை பிரான்சிஸ் பெர்னாண்டசைக் கொன்றனர். வியாகுல அன்னை மறையுண்மைகளை கூறி செபமாலை செபிக்கும்போது, அவரின் உடனிருந்த தோழர்களையும் கொன்றனர். இவர்களே சீன மண்ணில் முதல் மறைசாட்சிகள் ஆவர்.

மீண்டும் 1715-1747 வரை நற்செய்தி பரப்பிய ஸ்பெயின் நாட்டு மறைப்பணியாளர்களையும் கொன்றனர். இன்னும் பல மறைப்பணியாளர்களையும் கொன்றனர். 1796-1821 முடிய ஆட்சி செய்த மன்னன் கியா கின்(Kiya Kin)கிறிஸ்தவ மறைக்கு எதிராக பல சட்டங்களை விதித்தான். சட்டங்களை மீறியவர்களுக்கு மிக கடுமையான தண்டனையை கொடுத்தான். பல கிறிஸ்தவர்கள் கழுத்து நெறிக்கப்பட்டும், தலை வெட்டப்பட்டும் கொல்லப்பட்டனர். 5 ஆம் நூற்றாண்டிலிருந்து 1862 ஆம் ஆண்டு வரை கொல்லப்பட்டவர்களில் 119 பேர் முத்திபேறுபட்டம் பெற்றவர்கள்


செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மை இவ்வுலகில் பரப்புவதற்காக பாடுபட்ட பலர், உம் பெயரால் உயிரழந்தனர். இன்றும் எம் நாட்டில் மறைபணியாளர்களுக்கு பல கொடுமைகள் நேருகின்றது. உம் மக்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை நீர் கருணை கூர்ந்து காத்தருளும். அவர்கள் மனந்திரும்பி உம்மை ஏற்று, வாழ்வில் இன்பம் கண்டு, மற்றவர்களையும் வாழ வைக்க உம் அருள் தாரும்