Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 11 July 2016

இன்றைய புனிதர் 2016-07-12 புனித யோவான் குவால்பெர்டூஸ்(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்


                 
     இன்றைய புனிதர் 2016-07-12

புனித யோவான் குவால்பெர்டூஸ்

(St.Johannes Cualbertu) சபை நிறுவுனர்

பிறப்பு995புளோரன்ஸ், Florence

இறப்பு1073, 12 ஜூன்டோஸ்கானா, Toscana

புனிதர் பட்டம்: 1193, திருத்தந்தை 3 ஆம் செலஸ்டின், Pope Cholestin III
இவர் ஓர் உயர் குடும்பத்தில் பிறந்தவர். இளமையிலி ருந்தே ஆன்மீக காரியங்களில் அக்கறை காட்டி வள ர்க்கப்பட்டார். தான் ஓர் துறவியாக வேண்டுமென்று இளம் வயதிலிருந்தே ஆசைப்பட்டார். தன் உறவினர் ஒருவரின் துணைகொண்டு, ஆன்மீக வாழ்வில் முன்னேறினார். அவரின் உதவியினால் துறவற சபை க்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் உதவி செய்தவரை குடும்பத்தில் உள்ளவர்கள் கொன்று போட்டார்கள். அவரோடு சேர்த்து யோவானின் உடன்பிறந்த சகோதர ரையும் கொன்றார்கள். ஆனால் யோவான் கொலை க்காரர் யார் என்று கண்டுபிடித்தார். கொலை செய்த வர் யோவானிற்கு பயந்தார். ஆனால் அவரோ கொலை காரரை மன்னித்து, பாவமன்னிப்பு பெறச்செய்து, தின மும் திருப்பலியில் பங்குபெறுமாறு மனமாற்றினார். அதன்பிறகுதான் துறவியாகும் முடிவை கைவிடாமல் புனித பெனடிக்ட் துறவற இல்லம் சென்று 1013 ஆம் ஆண்டில் துறவியானார்.

யோவான் பல ஆண்டுகள் துறவறமடத்தில் வாழ்ந்த பிறகு 1080 ஆம் ஆண்டு அங்கிருந்து வெளியேறி, புதி தாக ஒரு துறவற சபையை ஆரம்பித்தார். புனித பெனடிக்ட் துறவற சபை ஒழுங்குகளையே, புதிய சபை யிலும் கைபிடித்தார். இப்புதிய சபைக்கு “Vallombrosanerorden” என்று பெயர் சூட்டினார். பெனடிக்ட் துறவற சபையிலிருந்து பிரிந்தாலும் கூட அந்த கடின மான வாழ்வை தானும் வாழ்ந்து, தன் சபையில் இருந்த வர்களையும் வாழவைத்தார். துறவற இல்லத்தைவிட்டு யாரும் வெளியில் போகக்கூடாது என்ற சட்டத்தையும், இவ்வுலக வாழ்வை துறவற வாழ்வில் துறவிகள் ஒரு போதும் வாழக்கூடாது என்ற ஒழுங்கையும் கடினமாக கடைபிடிக்கக்கூறினார். பல துறவற இல்லங்களை தொடங்கிய யோவான் அவ்வப்போது இல்லங்களை தவறாமல் சந்தித்து, உற்சாகத்துடன் இறைவனின் பணியில் பங்குபெற துறவிகளை ஊக்கமூட்டினார். அவ்வாறு பார்வையிட டோஸ்கானாவில் பயணம் செய்யும்போது எதிர்பாராத விதமாக இறந்தார். இவ ரின் உடல் டோஸ்கானாவிலுள்ள இவரால் தொடங்க ப்பட்ட துறவற இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:
எல்லாம் வல்ல தந்தையே! ஏழுமுறை அல்ல மாறாக ஏழு எழுபதுமுறை மன்னிக்க வேண்டுபவரே! கொலை க்காரனை மன்னித்து, அன்பு செய்து உம்பால் ஈர்த்த புனித யோவானைப்போல, நாங்களும் பிறரை மன தார மன்னித்து, அன்பு செய்து உம் மகிழ்ச்சியில் நிலை யான பங்கு வகிக்க, உம் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

No comments:

Post a Comment