Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 8 July 2016

இன்றைய புனிதர் 2016-07-08 புனித. கிளியன் (St.Kilian) ஆயர், மறைசாட்சி

                     
                    இன்றைய புனிதர் 2016-07-08
                       புனித. கிளியன் (St.Kilian)
                           ஆயர், மறைசாட்சி

பிறப்பு640வூர்ட்ஸ்பூர்க் ( Wurzburg )

இறப்புஜூலை 8, 689வூர்ட்ஸ்பூர்க் (Würzburg)

முத்திபேறுபட்டம்: 788

இவர் பெயரில் வூர்ட்ஸ்பூர்க்கில் ஓர் ஆலயம் உள்ளது. பல வருடங்களாக இவ்வாலயம் புனித தலமாக இரு ந்தது. அங்குள்ள கிரிப்தா (Krypta)என்ற சிற்றாலய த்தில் உள்ள கல்லறையில் இப்புனிதரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆயராக இருந்தபோது பய ன்படுத்திய, தலையில் வைக்கும் தொப்பியும்,கையில் பிடிக்கும் நீண்ட பெரிய சிலுவையும் பாதுகாக்கப்பட்டு, பார்வைக்கு வைக்கப்பட்டது. மற்றும் சில பொருட்க ளும், திருவிவிலியம் மைன்ஸ்(Mainz) என்ற மறைமாவ ட்டத்திற்கு சொந்தமான நூலகத்தில் வைத்து பாது காக்கப்படுகின்றது. இவரின் வாழ்க்கை வரலாறு மிக நீண்ட  அளவில் இருப்பதால் வரலாறாக வடிவமைக்கப்பட்டது.

இவர் 687 ஆம் ஆண்டில் மிக சிறந்த ஆயர் என்ற பெருமையை பெற்றார். வூர்ட்ஸ்பூர்க் மக்களிடையே இவரின் பெயரில் தனிப்பட்ட நம்பிக்கை வளர்ந்தது. 689 ஆம் ஆண்டு கெய்லானா (Gailana) என்ற நாட்டை சார்ந்த ஓர் அரசன், இனத்தின் பெயரால், ஆயர் கிளியன் கொலைசெய்ய திட்டமிட்டான். அவருடன் இணைந்து பணிபுரிந்த குருக்கள் கோலோண்ட்(Kolont) மற்றும் டோப்னான்(Tofnan) இருவரும் முதலில் கொல்லப்பட்டார்கள். நற்செய்திக்கு சான்று பகரும் விதமாக இருவரும் மறைசாட்சியானார்கள். பிறகு கிளியன் அவர்களின் செப வாழ்வினால் அரசர் குடும்பத்தினர் தூண்டப்பட்டு, வூர்ட்ஸ்பூர்க் வந்து ஆயரிடம் ஞானஸ்நானம் பெற்று மனந்திரும்பினர். பாவமன்னிப்பு பெற்று இறைவனை நம்பினர். ஆனால் அரசனின் படையை சேர்ந்தவர்கள், அரசருக்கு தெரியாமலேயே ஆயரை கொன்றார்கள். இவர்கள் மூவருக்குமே (கிளியன், கோலோண்ட், டோப்னான்) வூர்ட்ஸ்பூர்க் பேராலயத்தில் கல்லறைகள் உள்ளது. உலகப் போரில் இப்பேராலயமானது அழிவுக்குள்ளாக்கப்பட்டதால், 1910 ஆம் ஆண்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நொய்முன்ஸ்ரர் பேராலயம்(Neumünsterkirche) என்று இன்றும் அழைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பலியில் பங்கெடுக்கப்படுகின்றது.


செபம்:
புதுமைகள் செய்பவரே இறைவா! மறைசாட்சிகளாக மரித்த ஆயர்களையும், குருக்களையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். இவர்களின் வழியாக உம் இறையாட்சியை இம்மண்ணில் பரப்பினர். இன்றும் திருச்சபைக்கு எதிராக, பல அநீதிகள் நடக்கின்றது. நீரே இவைகளை கண்ணோக்கி நல்லதோர் தீர்ப்பை வழங்கி உம் திருச்சபையை வழிநடத்தியருளும்.

No comments:

Post a Comment