Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 5 July 2016

இன்றைய புனிதர் 2016-07-06 புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி


இன்றைய புனிதர்  2016-07-06


புனித மரிய கொரற்றி (St.Maria Goretti) மறைசாட்சி

பிறப்பு1890அங்கோனா (Ankona), இத்தாலி

    இறப்பு 1902

புனிதர்பட்டம்: திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்

இவரது புனிதர் பட்டமளிப்பு விழாவுக்கு உலகில் பல பகுதிகளிலிருந்தும் 2,50,000 மக்கள் உரோமைக்கு வருகைத் தந்தனர். கல்வி கற்குமளவுக்கு இவர் வீட்டில் வசதி இல்லாமல் போய்விட்டது. 12 வயதில் இவருக்கு புதுநன்மை கொடுக்கும்போது கூட மற்றவர்களைவிட ஏழையாக, எளிமையாக இருந்தார். ஆனால் தாய் இவருக்கு ஊட்டி வந்த ஞான சத்துணவு மிக உயர்ந்தது. இவர் 20 ஆம் நூற்றாண்டின் புனித ஆக்னஸ் என அழைக்கப்படுகிறார். புதுநன்மைக்குப் பின் 5 வாரங்கள்கூட ஆகவில்லை. அலெக்சான்ரோ வெரைனெல்லா என்ற 18 வயது இளைஞன் தவறான வழியில் மரியாவை அடைய முனைந்தான். மரியா பாவத்திற்கிணங்க மறுத்துவிட்டார். ஆத்திரத்தில் அவன் மரியாவை மாசற்ற மலர் போன்ற உடலை பலமுறை கத்தியால் குத்தி கிழித்தான்.

"இது பாவம்", இதற்காக நீ நரகத்திற்கு செல்வாய் என்று மரியா அவனை எச்சரித்து பயனில்லை. குற்றுயிராய் விடப்பட்ட அவர் மருத்துவமனையில் 24 மணிநேரம் கழித்து உயிர் நீத்தார். "மன்னித்துவிட்டேன் அவரை" என்று சொல்லிவிட்டு மடிந்தார். கொலை பாதகனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது. பலகாலமாக மனந்திரும்பி மனமில்லாதிருந்த அவன் எதிர்பாராமல் பாவமன்னிப்பை மன்றாடினான். "மரிய கொரற்றி விண்ணினின்று மலர்களை என் கை நிறைய கொடுத்தததாக கனவு கண்டேன்" என அறிவித்தான். 27ஆண்டுகளுக்கு பின்னர் அவனது சிறை வாழ்வுக்கு முற்றுப்புள்ளியிடப்பட்டது. அப்போது மரியாவின் தாயிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

இந்த அலெக்சான்ரோ தம் இறுதி நாட்களில் கப்புச்சின் 3ஆம் சபைத் துறவியாக வாழ்ந்தார். இவர் இறந்த 50ஆண்டுகளுக்குள் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. மரியாவின் தாயும், 2 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உடனிருந்தனர். இலட்சக்கணக்கான மக்கள் புனிதர் பட்டம் கொடுப்பதை பார்க்க மண்டியிட்டு இருந்த கூட்டத்திலே அலெக்சான்ரோவும் கண்ணீர் சிந்தி பங்குபெற்றார்.


.


செபம்:
இந்நாட்களில் கற்பு என்றால் என்ன என்று அக்கறையின்றி கேட்கும் போதும், திரைப்படங்களிலும், சுவரொட்டிகளிலும் ஆபாசக் காட்சிகளை தெய்வாக்கும் சூழலில், நாங்கள் தூய ஆவியின் ஆலயமாக திகழ்ந்து, எம்மையும் பிறரையும் மதிக்கும் வரம் தாரும் இறைவா.

No comments:

Post a Comment