Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 3 July 2016

இன்றைய புனிதர் 2016-07-04 புனித எலிசபெத் (St. Elisabeth) குடும்பத் தலைவி

                                               

இறப்பு                                                                                             பிறப்பு

இவர் ஸ்பெயின் நாட்டு மன்னன் 3 ஆம் பீட்டரின் மகள். ஸ்பெயின் மொழியில் எலிசபெத்தின் பெயர் இசபெ ல்லா. ஹங்கேரி நாட்டு அரசி புனித எலிசபெத்தின் பேத்தி. இவர் இளமை முதல் ஆழமான பக்தியிலும் தவமுயற்சிகளிலும் வளர்ந்தார். 12 வயதில் போர்த்து க்கல் மன்னன் டென்னிசுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். மன்னன் தன் வாழ்வை கீழ்த்தரமாக வாழ்ந்ததால், இவனுக்குத் தவறாக பிறந்த ஒரு மகனும் இருந்தான். எலிசபெத் இத்தகைய சூழ்நிலையிலும் தன் ஆன்மீக வாழ்வில் மிகுந்த உறுதியும் ஆர்வமும் காட்டி னார். அதிகாலையில் தினந்தோறும் கட்டளை செப த்தில் உள்ள செபத்தை செபித்து வந்தார். உண்ணா நோன்பையும், ஒறுத்தல் முயற்சிகளையும் பெருக்கிக் கொண்டே போனார். தம்முடைய கணவர் முன்கோபியா கவும், முரடராகவும் நடந்துக்கொண்டாலும், தன்னுடைய விசுவாசம் நிறைந்த செபத்தின் மூலம் தன்னுடைய 40 ஆண்டு காலத் திருமண வாழ்வில் இவர் வெற்றிக்கண்டார். கணவனை முற்றிலும் இறைவன் பக்கம் மனம் மாறிட வழிவகுத்தார். மனமாறிய கணவர் 12 ஆண்டுகள் இறை விசுவாசத்தில் வாழ்ந்து இறந்தார்.

எலிசபெத் தன் கணவரின் இறப்பிற்குப்பின் கிளாரம்மாள் துறவு மடம் சென்று அசிசியாரின் 3 ஆம் சபை உறுப்பினராக வாழ்ந்தார். ஏழைகளை பேணுவதில் தன் நேரத்தையும், மிகுந்த பணத்தையும் செலவழித்தார். நோயுற்றவர்களுக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றினார். இவரின் கணவர் உயிருடன் வாழ்ந்தபோது, முரடாக இருந்தபோது ஒரு முறை வயிற்று பசியுடன் இருந்த ஏழை ஒருவர் அரண்மனைக்கு வந்தார். அவருக்கு ரொட்டி கொடுக்க கூடை நிறைய எடுத்து சென்றார். இதைக் கண்ட முரட்டுக் கணவர், அவரை வழிமறித்து, கூடையை பார்த்தார். அப்போது கூடையிலிருந்த 2 ரொட்டித்துண்டுகள் ரோஜா மலர்களாக மாறி காட்சியளித்தது.

அனைத்திற்கும் மேலாக இவர் ஓர் "அமைதி விரும்பி" என்றே அழைக்கப்பட்டார். 5 முறை மிகக் கடுமையான சூழலில் அமைதியை நாட்டில் நிலைநாட்டினார். அமைதியை நிலைநாட்ட கருதி முறையாக எடுத்த நீண்ட அரிய பயணம், அவரது உயிரை வாங்கியது. 1323 ல் தன் மகன் அல்போன்சோ தன் தந்தையின் வப்பாட்டியின் மகனுடன் போர் தொடுத்தபோது, எலிசபெத்தின் குறுக்கீட்டால் அமைதி ஏற்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பின்னர், தாம் தங்கியிருந்த மடத்திலிருந்து வெளியேறி, ஸ்பெயினுக்கு பயணமாகி, அல்போன்சோவுக்கு அவரின் மைத்துனர் காஸ்டில் நாட்டு மன்னருக்கும் இடையே அமைதியை நிலைநாட்டினர். தம் உடன்பிறந்தவரும், ஆரம்கான் நாட்டு மன்னனுமான 2 ஆம் ஜேம்சுக்கும் தம் இன்னோரு உறவினரும் காஸ்டில் மன்னனுமான 4ஆம் பெர்னாண்டுக்கும் இடையிலும் அமைதியை உண்டு பண்ணினார்.

தன் கணவரை இறைவன் பக்கம் திருப்பியதும் இறைவனுடன் ஒப்புரவு செய்து வைத்ததும், எலிசபெத்தின் மிகப் பெரிய சாதனை. கணவர் சாவு படுக்கையிலிருக்கும் போதுதான். அவரை மனந்திருப்பினார். கடைசிவரை கணவரை அருமை பெருமையாக கவனித்துக் கொண்டார். "அமைதியை ஆண்டவனின் கட்டளையாக கருதி நிலைநாட்ட வேண்டும். நான் அமைதியை விட்டு செல்கிறேன். என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்" என்றார் நம் ஆண்டவர். அதாவது நான் உங்களைவிட்டு பிரியும்போது அமைதியில்தான் உங்களைக் காணவேண்டும் என்பது பொருள். ஆண்டவர் வரும்போது விரும்பி எதிர்பார்ப்பேன் என்று சொல்லி சென்றதும் அமைதியே, அமைதி விரும்பியாக இரு; அப்போது எங்கும் அமைதி மயமாக திகழும், கடவுளின் திருச்சபை அமைதியில்தான் நிறுவப்பட்டது" என்ற புனித கிளிசொலொகு அருளப்பரின்(Chrisologu John) வார்த்தையை தன் வாழ்வாக வாழ்ந்தார்.


செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! ஏழைகளின் மேல் பாசம் வைத்து, தன் வாழ்வையே அவர்களுக்காக கொடுத்து, உம்மில் நம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வாழ்ந்து, பலரின் வாழ்வில் ஒளியேற்றிய புனித எலிசபெத்தைபோல, நாங்களும் ஏழைகளின் நண்பர்களாக வாழ வரம் தாரும்

No comments:

Post a Comment