Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 13 July 2016

இன்றைய புனிதர் 2016-07-13 புனித இரண்டாம் ஹென்றி(St.Henry) அரசர்


         
இன்றைய புனிதர்2016-07-13

புனித இரண்டாம் ஹென்றி(St.Henry)

                                                  அரசர்

பிறப்பு973பவேரியா (Bavaria), ஜெர்மனி

இறப்பு1024பாம்பர்க்(Bamberg), ஜெர்மனி

புனிதர்பட்டம்: 1146, திருத்தந்தை 3 ஆம் யூஜின்

இவர் பவேரியா நாட்டு அரசராக 995 ல் உரோம் பேரர சின் மன்னராக 1002 ல் உயர்வுப்பெற்றார். திருச்சபை யின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் போர்களில் ஈடுபடத் தயங்காதவர். இவர் துறவற மடத் தலைவ ர்களையும், ஆயர்களையும் நியமனம் செய்யும் அதிகா ரத்தை பெற்றிருந்தார். இவரின் துணைவியாரும் புனித வாழ்க்கை வாழ்ந்து புனிதர் பட்டம் பெற்றார். உரோம் நகரில் ஏற்பட்ட கலகத்தை நசுக்க திருத்தந்தை 8ஆம் ஆசீர்வதிப்பருக்கு மன்னர் உறுதுணையாயி ருந்தார். இவர் மற்ற நாடுகளில் அமைதி நிலவ அரு ம்பாடுபட்டார்.

இவர் தன் நாட்டு மக்களுக்கு பின்வரும் இறைவசன த்தை அடிக்கடி கூறிவந்தார். "அழிந்து போகும் செல்வ த்தை துறந்துவிட்டு என்றும் அழியா, நிலையான செல்வத்தை வான்வீட்டில் சேர்த்து இடத்தை தக்க வைத்துக்கொள்ளவேண்டும்" என்பதை மறக்கக்கூ டாது என்பார். இவ்வுலகில் நாம் பெறும் புகழ் புகை யாக மறைந்துவிடும். எனவே நிலையான பேரின்ப த்தை அடைய முயற்சிக்கவேண்டும் என்று அடிக்கடி கூறுவார். தன் நாட்டில் கடவுளின் இரக்கத்தைப் பெற, பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார். அவற்றின் பராமரிப்பிற்காக செல்வங்களை வாரி வழங்கினார். பாக்பெர்கில்லிருந்து பணத்தை செலவிட்டார். இறுதி வரை இறைப்பணியாற்றி அவ்வாலய பணியி ன்போதே உயிர் துறந்தார்.


செபம்:
எல்லாம் வல்லவரே! அரசரான போதும் கூட, இவ்வுலக காரியங்களின் மேல் அக்கறை கொள்ளாமல், உம் மேல் அக்கறைகொண்டு வாழ்ந்தார் அரசன் ஹென்றி. தன் நாட்டு மக்களையும், விண்ணகத்தில் செல்வம் சேர்க்க தூண்டினார். இவரால் பவேரியா முழுவதும் இறைப க்தி பரவிற்று. இப்பக்தியானது அம்மக்களிடையே எப்போதும் நிலைக்க, அவர்களை வழிநடத்தியருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment