Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 1 July 2016
இன்றைய புனிதர் 2016-07-02 புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno) இயேசு சபை குரு
இன்றைய புனிதர் 2016-07-02
புனித பெர்னார்டின் ரியலினோ (St.Bernardin Riyalyno)
இயேசு சபை குரு
பிறப்பு 1530 கார்ப்பி, இத்தாலி
இறப்பு 2 ஜூலை 1616
இவர் லெச்சே (Letche) என்ற ஊரில் படித்தார். இதே நக ரில் 42 ஆண்டுகள் இயேசு சபைக் குருவாக பணிபுரி ந்தார். இரு நகரத்தாரும் "எங்கள் புனிதர்" என்றே இவரை அழைக்கின்றார். பொலோஞ்ஞா பல்கலை க்கழகத்தில் படிப்புகளை முடித்தார். வெளியுலகில் பெரிய காத்திருந்தன. இவர்தன் இளம் வயதில் துலிண்ட்ரா என்ற அழகி ஒருத்தியை விரும்பினார். ஆனால் அவள் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டாள். இவர் ஓர் முன்கோபியாக இருந்தார்.
ஒருநாள் நேம்பினஸ் (Nepinas) வீதி வழியாக இரு துறவி கள் நடந்து செல்வதை இவர் பார்த்தார். புதிதாக தோ ன்றிய இயேசு சபையை சேர்ந்தவர்கள் இவர்கள் எ ன்பதை அறிந்தார். அவர்களுடன் தொடர்பு கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் பலிபூசையிலும், சிறப்பாக மறையுரையிலும் பங்குபெற்றார். இவை களே இவரது தேவ அழைத்தலுக்கு நல்லவித்தாக திக ழ்ந்தன. அந்நாட்களில் இவரின் மனதில் பெரிய குழ ப்பம் ஏற்பட்டது. தம் அறையில் தனிமையில் செபமா லை ஜெபித்துக்கொண்டிருந்தார். அப்போது மரிய ன்னை குழந்தை இயேசுவுடன் வந்து காட்சி தந்தார். அவரின் குழப்பம் நீங்கியது. அவருக்குள் பேரமைதி நிலவியது. பின்னர் இயேசு சபையில் சேர உறுதி பூண்டார். 1541 ஆம் ஆண்டு அச்சபையில் சேர்ந்தார். 52 ஆண்டுகள் அச்சபையில் வாழ்ந்தார். உயர்ந்த படிப்புகள் படித்து பெரிய பட்டங்கள் பெற்றிருந்தும், தாழ்ச்சியின் பொருட்டு துணை சகோதரராகவே இருக்க விரும்பினார். ஆனால் இவரை குருத்துவத்தி ற்கு சபை தெரிந்து கொண்டது. குருவாக ஆனபின் லெச்சே என்ற இடத்திற்கு வந்தார். இங்கு "எல்லாரு க்கும் எல்லாமாக" நடந்து அனைவரின் மதிப்பையும் அடைந்தார். இவர் ஏழைகளை பேணுவதில் மிகச் சிறந்தவராக திகழ்ந்தார். இவர் மரணப்படுக்கையில் இருந்ததை கேட்ட மக்கள் கல்லூரிக்கு படையெடுத்து சென்றனர். கல்லூரியின் நுழைவாயிலையே அடைக்க வேண்டியதாயிற்று. நகரின் தலைவரே தந்தையின் இறுதி ஆசி பெற வந்துவிட்டார். இவர் "ஓ மிகுந்த வணக்கத்துக்குரிய ஆண்டவளே" என்று மரியின் பெயரை உச்சரித்தவாறு தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.
செபம்: தாழ்ச்சியின் மறு உருவே எம் இறைவா! உம் சாவிலும் கூட நீர் உம்மையே தாழ்த்தினீர். உமக்கு சான்று பகரும்விதமாக புனித பெர்னார்டினும், தம்மையே தாழ்த்தி, உமக்குரியவராக வாழ்ந்தார். பல திறமைகள் இருந்தபோதும், ஒன்றுமில்லாமைபோல், உம்மோடு ஒன்றித்திருந்தார். அவரை முன்மாதிரியாக கொண்டு நாங்களும் வாழ்ந்திட உம் அருள் தந்து, எம்மை ஆசீர்வதித்து வழிநடத்தும்.
No comments:
Post a Comment