Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 13 July 2016
இன்றைய புனிதர்2016-07-14 புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis) குரு
இன்றைய புனிதர்2016-07-14
புனித கமில்லஸ் தெ லெல்லிஸ் (St. Camillus de Lellis)
குரு
பிறப்பு1550ஷீட்டி(Chieti), அப்ருட்சி(Abruzzi)
இறப்பு 1614 உரோம்
பாதுகாவல்: மருத்துவர்களின் பாதுகாவலர்
இவர் தன்னுடைய குழந்தை பருவத்தில் தாயை இழ ந்தார். தந்தை இவரைவிட்டு அகன்று போனார். இத னால் யாரும் கவனிப்பாரற்று, ஆதரவற்றிருந்தார். இளமையிலேயே சூதாட்டத்திற்கு அடிமையானார். 17 வயதில் துருக்கியருடன் போரிட வெனிஸ் நகரிலிருந்த படைப்பிரிவில் சேர்ந்தார். அங்கு அவரின் காலில் புண் ஏற்பட்டு , ஆறாமல் இருந்தது. இதனால் உரோமையில் ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கேயும் அவர் சூதாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம னையில் நடைபெற்ற திருப்பலியில் பங்கெடுக்க ஒரு நாள் சென்றார். அப்போது கப்புச்சின் சபை குரு ஆ ற்றிய மறையுரை இவரை மறுமனிதனாக்கியது.
அதன்பின் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று விரு ப்பம் கொண்டு, ஓரளவு புண் குணமடைந்த உடன் கப்புச்சின் துறவற சபை ஒன்றை நாடி தன் விருப்ப த்தை தெரிவித்தார். அங்கு அவரின் விருப்பம் நிறைவே ற்றப்பட்டாலும் புண் முழுமையாக குணமாகாததால் வெளியே அனுப்பப்பட்டார். மீண்டும் சென்று குருத்துவ பயிற்சிகள் அனைத்தையும் பெற்று, தனது 34 ஆம் வயதில் குருவானார். அதன்பிறகு ஒரு சபையை நிறு வினார். அச்சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து, நோயா ளிகளுக்குக்கென்று தன்னையே தியாகம் செய்தார். நோயாளிகளை தேடிச் சென்று பணிபுரிந்தார். பல தொற்று நோய் கொண்ட மக்களுக்கு பணியாற்றினார். இதனால் அச்சபையில் இருந்த குருக்களும் , தொற்று நோயால் தாக்கப்பட்டு இறந்தனர். மருத்துவமனைக ளைக் கட்டி, நோயாளிக்கு தொண்டாற்றுவதே இ ச்சபையின் பணியாக இருந்தது. இறுதியாக தனது 64ஆம் வயதில் இவரும் நோயால் தாக்கப்பட்டு இறந்தார்.
செபம்: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! நோயுற்றோர் மீது தனியன்பு கொண்டு கமில்லஸ் பணிபுரிந்தார். அவருடைய பரிந்துரையால் எங்கள் சகோதர சகோதரிகளில் உம்மை அன்பு செய்து, எங்கள் இறப்பு வேளையில் நம்பிக்கையோடு உம் திருமுன் வந்து சேர அருள்புரியும்.
No comments:
Post a Comment