Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 14 July 2016
இன்றைய புனிதர் 2016-07-15 புனித பொனவந்தூர் (St. Bonaventure) ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)
இன்றைய புனிதர் 2016-07-15 புனித பொனவந்தூர் (St. Bonaventure) ஆயர், மறைவல்லுநர் (Bishop and Doctor of the Church)
பிறப்பு1218 தஸ்கனி ( Tuscany), இத்தாலி
இறப்பு 1274லயனஸ்(Lyons), பிரான்ஸ்
இவரின் திருமுழுக்கு பெயர் ஜான். இவர் 4 வயது இரு க்கும்போது கொடிய நோயால் தாக்கப்பட்டார். புனித அசிசியாரிடம் வேண்டிய பிறகு அவரின் நோய் அவ ரைவிட்டு விலகியது. இதனால் இவர் தன் இளம் வயதி லிருந்தே அசிசியாரிடம் அளவு கடந்த பக்திக்கொண்டி ருந்தார். தன் படிப்பை முடித்த பின், தன்னை புனித அசிசி சபையில் அர்ப்பணிக்க விரும்பினார். துறவற சபையில் தன்னை அர்ப்பணித்தபின், இவரின் 36 ஆம் வயதில், சபைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 16 ஆண்டுகள் சபையை நன்கு வளர்த்தெடுத்தார். இவர் அச்சபைக்கு ஆற்றியத்தொண்டால், இவர் இரண்டாம் பிரான்சிஸ் என்றழைக்கப்பட்டார்.
இவர்தான் மூவேளை செபத்தை முதன்முதலில் தன் சபையில் அறிமுகப்படுத்தினார். இன்று இச்செபம் திரு ச்சபையிலும் வேரூன்றியுள்ளது. இவர் பலரின் கட்டா யத்தினால் அல்பேனிய நாட்டின் ஆயராகவும், கர்தி னாலாகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். 2 ஆம் லியோன் பொதுச் சங்கத்தில், சில கருத்துக்களை நுணுக்கமாய் ஆராய தயாரித்துக்கொடுத்தார். அப்போதுதான் கிழ க்கு, மேற்கத்திய திருச்சபைகளையும் ஒன்று சே ர்த்தார். லியோன் பொதுசங்கம் நடக்கும்போது, இவர் மிகவும் நோய்வாய்ப்பட்டார். திருத்தந்தையிடமிருந்து நோயில் பூசுதலை பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் இறையன்பு, செபம், காட்சி தியானம் இவைகளில் தன் நேரங்களை செலவிட்டார்.
இவர் ஒருநாள் பாத்திரங்களை கழுவிக்கொண்டிரு ந்தார். அப்போதுதான் திருத்தந்தை 10 ஆம் கிரகோரி யார் இவரை கர்தினாலாக உயர்த்தினார். இதை அறி விக்க, கர்தினாலின் தொப்பியையும் எடுத்து சென்று, செய்தியை அவரிடம் தெரிவித்தனர். ஆனால் அவர் தன் வேலையை முடித்து வரும்வரை அத்தொப்பியை அருகிலிருக்கும் மரக்கிளையில் தொங்கவிட சொ ன்னார். இதிலிருந்து அவரின் தாழ்ச்சி எத்தமையது என்பது வெளிப்பட்டது.
செபம்: என்றும் வாழும் கடவுளே! அசிசியாரை போலவே தன் வாழ்வை வாழ்ந்த புனித பொனவெந்தூரை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். ஏழை மக்க ளின்மேல், அளவில்லா அன்பு கொண்டு நோயால் தா க்கப்பட்டவர்களுக்காக தன்னையே அர்ப்பணம் செய்து நோய்களை அன்பின் வழியாக குணமாக்கிய இப்புனிதரை போல, இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு மருத்துவரும், தங்களிடம் வருகின்ற நோயாளிகளிடம் அன்புகாட்டி வழிநடத்த தேவையான வரம் தந்தருள வேண்டு மென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment