Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 30 May 2016

இன்றைய புனிதர் 2016-05-31 புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் (The visitation of the blessed virgin Mary)

                               

                  இன்றைய புனிதர் 2016-05-31 
                         புனித கன்னிமரி எலிசபெத்தை சந்தித்தல் 
(The visitation of the blessed virgin Mary)
இத்திருநாள், தொடக்கத்தில் புனித பொனவெந்தூரின் தூண்டு தலால் பிரான்சிஸ்கன் சபையில் 1263 ஆம் ஆண்டு முதல் கொண் டாடப்பட்டு வந்தது. பின்னர் திருச்சபை முழுவதும் பரவியது. கன்னிமரியிடம் தேவதூதர் மங்களவார்த்தை சொன்னபிறகு, சில நாட்களுக்குள் யூதேயா நாட்டில் இருந்த தம் உறவினரான எலிசபெத்திடம் மரியா சென்றார். எலிசபெத்தம்மாளை சந்தித்த நேரத்தில்தான், கன்னிமரி "என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது" என்ற தமது ஒப்பற்ற புகழ்ப்பாடலைப் பாடி பூரிப்படைந்தார். அதன்பின்னர் திருமுழுக்கு யோவானின் பிற ப்பு வரையிலும், 3 வாரங்கள் தங்கி எலிசபெத்தம்மாளுக்கு உதவி செய்து வந்தார். அன்னை மரியாள் அன்று பாடிய பாடல் ஓர் நன்றியின் பாடல். இறைவன் தன்னைத் தேவனின் தாயாக உயர்த்தியதற்கு நன்றி செலுத்துகிறார் மனுக்குலத்தை மீட்க இறைவன் வழிவகுத்ததையும், நன்றி மனப்பான்மையுடன் பாடுகின்றார்.

என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? என்று எலிச பெத், மரியாவை பார்த்துக் கேட்டார். "என் ஆண்டவரின் தாய்" என்று அவர் மரியாவை அழைப்பதிலிருந்தே, மரியாவுக்குரிய அஞ்சலி செலுத்தப்படுகிறது. மேலும் மரியாவின் ஆன்மீகத் திற்கு அடித்தளமும் இடப்படுகிறது. இறைவன் இத்தகைய அருள் அடையாளத்தைஸ் செய்துள்ளார் என்று முதலில் இறைவனுக் குரிய புகழ்ச்சியை எலிசபெத் செலுத்துகின்றார். அதன்பிறகு மரியன்னையைப் பாராட்டுகின்றார். "ஆண்டவர் உமக்கு சொன் னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்" என்று கூறுவதன் வழியாக, மரியாவின் ஆன்மீகம் அடித்தளமாக அமைவது, அவரது ஆழமான விசுவாசம் என்பதை எலிசபெத் சுட்டிக்காட்டுகிறார். மரியன்னையின் புகழ்மாலையில் "வாக் குறுதியின் பெட்டகமே" என்று மரியாவை திருச்சபை அழை க்கின்றது, வாழ்த்துகின்றது.

"வாக்குறுதியின் பெட்டகம்" யூதர்களிடம் இருந்த நாள் வரை, யூதர்கள் இறைப்பிரசன்னத்தையும் யாவேவின் வழி நடத்து தலையும் ஆழமாக உணர்ந்திருந்தனர். இந்த ஒளியில்தான், மரியன்னை உலக முடிவுவரை, இறை இயேசுவின் பிரசன்ன த்தை மக்களிடையே கொண்டுவந்தார். மேலும் மன்னன் தாவீது மகிழ்ச்சி பொங்க, யூத மக்கள் கண்டுகளிக்கும் விதமாக பேழை யின் முன் ஆடி மகிழ்ந்தார். அதேபோன்றுதான் எலிசபெத்தின் வயிற்றினுள் குழந்தையாக உருவாகிக்கொண்டிருந்த திருமுழு க்கு யோவானும் அக்களிப்பால் துள்ளினார். இறுதியாக திருப் பேழை 12 யூத கோத்திரத்தாரையும், யெருசலேம் நகரில் தாவீ தின் அரியணை முன் ஒன்றாகக் கூட்டி சேர்த்தது. அதேபோன்று எல்லோருக்கும் முதல்வராக, நற்செய்தி மறைபரப்பாளராக, எலிசபெத்திடம் தமக்கு தேவதூதர் வழியாக கிடைத்த நற்செய்தியை அறிவிக்க சென்றதன் வழியாக, உலக முடிவு வரை, வரவிருக்கும் மறைபரப்புப் பணியாளர்களுக்கு ஓர் முன்னோடியாக மரியா அமைந்துவிட்டார் என்பதை அறியப்படுகின்றது.

மரியன்னை இறைவனில் மகிழ்ச்சி கொள்ள எல்லா உரிமையும் பெற்றிருந்தார். மனுக்குல மீட்பரை இவ்வுலகிற்கு கொண்டு வரும் பேறுபெற்றிருந்தார். கடவுளின் திட்டத்தை அறிந்தார். தனது ஆன்மீக ஆற்றல் அனைத்தையும், இறைவனின் தொண்டுக்காகவும், அவரது புகழ்ச்சிக்காகவும் தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான அன்பான இறைவா! இதோ உமது அடிமை என்று கூறி, தன்னை முழுவதும் உம்மிடம் அர்ப்பணித்தார். அன்னை மரியாள் நாங்களும் அன்னையின் பக்தர்களாக வாழ்ந்து, அன்னையைப்போல பிறருக்கு உதவி செய்து, நாங்கள் என்றும் உம் திட்டத்திற்கு ஆம் என்று கூறி, உமது அடிமைகளாக வாழ வரம் தாரும்.

Sunday, 29 May 2016

இன்றைய புனிதர் 2016-05-30 புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans ) பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)


இன்றைய புனிதர்
2016-05-30

புனித ஜோன் ஆப் ஆர்க் (St.Johanna of Orleans )
பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலி (Patron of France)


பிறப்பு6 ஜனவரி 1412டோம்ரேமி(Domremy), பிரான்சு

இறப்பு1431ரூவன்(Rouen), பிரான்சு

புனிதர்பட்டம்: 16 மே 1920 திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்

இவர் புத்தகங்களையும், பாடல்களையும் நாடகங்களையும் பாதுகாக்கும் பொறுப்பில் இருந்தவர். பல வரலாற்று அறிஞர்க ளும், இறையியலாளர்களும், மருத்துவர்களும் இவரின் நற்பண் புகளால் ஈர்க்கப்பட்டு, அவரிடம் பல ஆராய்ச்சிகளை செய்ய குவிந்தனர். பிரான்ஸ் நாட்டின் பாதுகாவலியாக உள்ள இப் புனிதரை பார்க்கும் அனைவரும் வியக்கின்றனர். இப்பெண் ணின் வீரம் அந்நாட்டை அதிர வைக்கக்கூடியதாக இருந்தது. இவர் குதிரையின் மேல் அமர்ந்திருக்கும் படத்தை பார்க் கும் போதே, இவர் எவ்வளவு பெரிய போர் வீரர் என்பதை அறியலாம்.

இவர் டோம்ரேமி என்ற ஊரில் மாவட்ட ஆட்சியாளராக இருந் தவரின் மகளாக பிறந்தார். அவர் பிறந்த ஊர் இன்று டோம்ரே மிலா புசேலா(Domremy la Pucelie) என்றழைக்கப்படுகின்றது. இவர் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்தில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் ஞானஸ்நானம் பெற்ற அந்தத் தொட்டியும், அவர் தங்கியிருந்த அறையில் இருந்த சிறிய சிறிய பொருட்களும், அவர் பயன் படுத்திய பெரிய துப்பாக்கியும், இன்றும் அவர் பிறந்த வீட்டில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. அவ்வீடு இன்று ஓர் அருங் காட்சியகமாக காணப்படுகின்றது.

இவர் மிகுந்த பக்தியுள்ளவராக தன் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டார். ஆனால் இவர் படிக்கவோ, எழுதவோ ஒருபோதும் கற் றுக்கொள்ளவில்லை. இவரின் வீட்டில் இருந்த தோட்டத்தில் எப் போதும் வேலை செய்வார். தனது 13 ஆம் வயதில் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, ஒருவித சத்தத்தைக் கேட் டார். இங்கிலாந்து நாட்டிலிருந்து பிரான்சு நாட்டிற்கு போர் வீர ர்கள் போர்புரிய வந்ததை அப்போது அவர் பார்த்தார். நூற்றுக் கணக்கான இங்கிலாந்து போர் வீரர்கள் பிரான்சை கைப்பற்ற வந்ததை அறிந்தார். இதனால் தன் நாட்டை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று நினைத்தார். இதற்காக நாள்தோ றும் தன்னையே தயாரித்தார். 1429 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர்களில் ஆண்கள் உடுத்தும் ஆடையை, அணிந்துகொண்டு, குதிரையின் மேல் ஏறி, Vaucoulerus மற்றும் Chinon நகரங்களை நோக் கி சென்று, போரிட்டு இளவரசர் 7 ஆம் சார்லஸ் அவர்களை வென்றார். அதோடு அங்கு மறைபரப்புப்பணியையும் செய்தார். இவர் உரைத்த வாக்கைப்போல, அதுவரை யாரும் உரைக்கவி ல்லை. அவரின் மறையுரைகள் அனைத்தும், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனையறிந்த 7ஆம் சார்லஸ், இறையியலாளர்கள், கவிஞர்கள் என அனைவரையும் வரவ ழைத்து, ஜோன் ஆப் ஆர்க்கின் உரையைப் போல ஒன்றை தயார் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர்களால் அதை செய்ய இயலவில்லை. அவர் ஆற்றிய உரைகள் அனைத்தையும், இறைஞானத்தால் தூண்டப்பட்டதாக இருந்தது.

இவர் 1429 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் முறைப்படி, பிரான்சு நாட்டு படைவீரர்களுள் ஒருவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். அன் று முதல் முழு நேர போர் பணியாளராக இருந்தார். மிகக் குறைந்த நாட்களிலேயே போர் வீரர்களின் தலைமைப்பொறு ப்பை ஏற்றார். சக்தி பெற்ற ஆண்களால் செய்ய முடியாத வேலைகளைகூட இவ்விளம்பெண் சாதாரணமாக செய்து முடித்தார். செய்த வேலைகள் அனைத்திலும் வெற்றிப்பெற்றார். 1429ஆம் ஆண்டு ஜூலை 17 ஆம் நாள் 7ஆம் சார்லஸை மனம்மா ற்றி, அவருடைய உதவியுடன், ரைம்ஸ் (Reims) என்ற ஊருக்கு அழைத்து சென்று, அங்கிருந்த பேராலயத்தில் அவருக்கு மூடி சூட்டினார். இதனால் மன்னர் சார்லஸ், ஜோன் ஆப் ஆர்க்கின் காலடியில் விழுந்து வணங்கி நன்றி கூறினார். இச்செயலைப் பார்த்த மன்னருடன் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அச்சமு ற்று, மன்னரின் மேல் கோபம் கொண்டார்கள். பிறகு மன்ன ருக்கும் ஜோன் ஆப் ஆர்க்குக்கும் எதிராக போர்புரிய ஆரம்பி த்தார்கள். 1440 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டினர், பிரான்சு நாட்டை முற்றுகையிட்டபோது, மன்னனை பழிவாங்கும் வித மாக போரில் ஆர்வம் காட்டாமல், கடமைக்காக போர்புரிந்தனர். அப்போது இதனை கண்ட ஜோன் ஆப் ஆர்க் பெரும் வேதனை அடைந்தார். எதிரிகளால் இவர் தாக்கப்பட்டு, பிடித்துக்கொண் டுப் போகப்பட்டார். எதிரிகள் அவரின் மேல் பல குற்றங்களை சுமத்தி பழிவாங்கினர். எதிரிகளின் கொடுமையை தாங்கமு டியாமல், சொல்லொண்ணா துயரம் அடைந்தார். பிரான்சு நாட்டிற்காக ஏராளமான நன்மைகளை செய்த ஜோன் ஆப் ஆர்க், தன் 19 ஆம் வயதில் ரூவென் என்ற இடத்தில் சுட்டெரித்துக் கொல்லப்பட்டார். பிரான்சு நாட்டு இளம்பெண்கள் பலர், இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டு, தங்கள் வாழ்வை இன்றும் நாட்டிற்காக அர்ப்பணிக்கின்றனர். எதிரிகளை எதிர்த்து போரிடுபவர்களு க்கு இவரின் வாழ்வு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாய் உள்ளது.


செபம்:

வழிநடத்துபவரே எம் இறைவா! எதிரிகளால் எம் நாட்டு மக்கள் தாக்கப்படும்போது, வீராங்கனை ஜோன் ஆப் ஆர்க்கின் துணைகொண்டு, எம் மக்களை நாங்கள் காத்தருள, நீர் துணைபுரிய வேண்டுமென்று, இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Saturday, 28 May 2016

இன்றைய புனிதர் 2016-05-29 புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் (St.Sicinnius, St.Alexander) மறைசாட்சிகள் (Martyrius)

                           

                  

                 இன்றைய புனிதர் 2016-05-29

         புனித சிசினியுஸ், புனித அலெக்சாண்டர் 

                                   (St.Sicinnius, St.Alexander)
                           மறைசாட்சிகள் (Martyrius)

     இறப்பு 29 மே 397 தென் டிரோல்(Südtirol), இத்தாலி




இவர்கள் மூவரும் தென் டிரோலிலுள்ள பேராலயத்தில் மறைசா ட்சிகளானார்கள். இவர்கள் மூவருமே மிலான் பேராயர் அம்புரோஸ் அவர்களால் திருநிலைப்படுத்தப்பட்டு, தமத்திருத் துவர்கள் என்றழைக்கப்பட்டார்கள். பிறகு ஆயர் விஜிலியஸ்(Vigilius) அவர்களால் மிஷினரியாக அனுப்பப்பட் டார்கள். மூன்று பேரும் இறைவனின் வார்த்தைகளை இடைவி டாமல் பரப்பினார்கள். கடவுளுக்கென்று நோனிஸ்பெர்க்(Nonsberg) என்ற ஊரில் ஓர் ஆலயம் எழுப்பினார்கள். இவர்களின் மறை பரப்பு பணிகளை பார்த்தவர்களும், இதனால் ஈர்க்கப்பட்டவ ர்களுள் ஏராளமானோர் மனந்திரும்பி இறைவனை நம்பினர். அவ்வாறு அவர்கள் தொடர்ந்து போதிக்கும்போது ஒருநாள், மூவ ரும் அறுவடை திருநாளை சிறப்பிக்கும்விதமாக ஆலயத்தில் கூடி ஜெபிக்கும் வேளையில், கடவுளை நம்பாதவர்களில் சிலர், அதிரடியாக ஆலயத்திற்குள் நுழைந்து மூவரையும் தாக்கி னார்கள். அதில் அலெக்சாண்டர் உயிருடன் எரிக்கப்பட்டார். உயிருடன் எரித்த அலெக்சாண்டரின் சாம்பலை கொண்டுவந்து சிசினியுஸ், மார்டீரியசின் மேல் தூவி ஏளனம் செய்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தார்கள். இவ்வாறு மூவருமே கொடி யவர்களின் அகோர செயல்களால், மறைசாட்சிகளாக அவ்
வாலயத்திலேயே இறந்தார்கள்.


செபம்:

அன்புத் தந்தையே இறைவா! அன்று இன்றைய புனிதர்கள் மூவ
ரும் மறைசாட்சிகளாக மரித்தார்கள். அவர்களைப்போல இன் றும் எத்தனையோ மக்கள், தங்கள் அன்றாட வாழ்வில் மறை சாட்சிகளாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனை வரையும் நீர் நிறைவாக ஆசீர்வதித்து, அவர்கள் இம்மண்ணில் செய்த பாவங்களை மன்னித்து, உம் வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Friday, 27 May 2016

இன்றைய புனிதர் 2016-05-28 புனித கெர்மானூஸ் (St.Germanus) ஆயர் (Bishop)


                     

              இன்றைய புனிதர் 2016-05-28

       புனித கெர்மானூஸ் (St.Germanus)ஆயர் (Bishop)

பிறப்பு496அவுடன்(Autun), பிரான்சு

இறப்பு 28 மே 576

தனது இளமைப்பருவத்திலிருந்தே பலவற்றை படித்து தெரி ந்துகொள்வதிலும், அவற்றை மக்களுக்காக பயன்படுத்துவதி லும் இவர் தனது நாட்களை கழித்தார். 530 ஆம் குருவாக திரு நிலைப்படுத்தப்பட்டார். 540 ஆம் ஆண்டு அவுடன் என்ற ஊரில் புனித சிம்போரிஸ் (Symphorian) என்றழைக்கப்பட்ட ஓர் துறவற மடத்தைக் கட்டினார். 550 ல் பாரிஸ் நகரின் ஆயர் இறந்துவிடவே, அரசர் முதலாம் சில்டேபெர்ட் (Childebert I) அவர்களால் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது கெர்மானூஸ், அரசர் குடும் பத்தின் ஆலோசகராக அமர்த்தப்பட்டார். அவர் ஓர் உயர்ந்த அரசரிடம் பணியாற்றியபோதும், ஏழ்மையான வாழ்வை ஒரு போதும், எக்காரணத்தை முன்னிட்டும் கைவிடவில்லை. தன்னு டைய ஒறுத்தல் வாழ்வினால் ஏராளமான ஏழைகளின் கண் ணீரைத் துடைத்தார். தனது அருமையான, எளிமையான மறையுரையால் மக்களை இறைவன்பால் ஈர்த்தார். இவரின் மறையுரையைக் கேட்கவே ஆங்காங்கே இருந்தவர்கள் அனைவரும் கூடி வந்து, பலமணி நேரம் காத்திருந்து, ஆயரின் மறையுரையைக் கேட்டு சென்றார்கள். இவர் வாழும் போதே பாரிஸ் மக்களால் புனிதராக போற்றப்பட்டது. இதனால் போலந்து நாட்டு அரசர் 5 ஆம் யோவான் கஸ்மீர் (Johann Kasmir) அவர்களாலும், மக்களாலும் கெர்மானூஸ் என்று, இவர் பெயராலேயே ஓர் ஆலயம் கட்டினர். இவ்வாலயத்தில் அவர் தனது இறுதிநாட்கள் வரை, வாழ வேண்டுமென்று மக்களால் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்ட்டார். அவ்வாலயம் கட்டும்போதே அதன் அருகில், அவருக்கென்று ஓர் தங்கும் அறையையும் கட்டிக்கொடுத்தனர். அதில், அவர் தங்கும் அறையில், தனது தலைவைத்து படுக்குமிடத்தில் "28" என்ற எண்ணை எழுதிவைத்தார். அப்போது அவ்வெண்ணின் அர்த்தம் என்னவென்று யாவராலும் அறியமுடியவில்லை. அவர் இறந்தபோதுதான், அவ்வெண், அவரது இறப்பின் நாள் என்பதை அனைவரும் உணர்ந்தனர். இவ்வாறு இவர் வாழும் போதே தனது இறப்பிற்கான நாளை குறித்து, அதன்படியே இறந்தார்.

இவர் இறக்கும் வரை 6 ஆம் நூற்றாண்டில் தூனிக்கா (Tunika) நாட்டிலிருந்த புனித வின்செண்ட் அவர்களின் நம்பிக்கைக்குரிய மக்களுக்காக இவர் பெரிதும் பாடுபட்டார். அரசன் முதலாம் சில்டேபெர்ட் அவர்களின் உதவியுடன் மிகக் குறைந்த ஆண்டுகளிலேயே ஏராளமான பணிகளை செய்து, பிரான்சு நாட்டு திருச்சபையில் , ஓர் பெரிய தொண்டாற்றும் ஆயராக திகழ்ந்தார்.

இவர் மெய்யியலையும் கரைத்து குடித்தவராக இருந்தார். படித்தவைகளை தன் வாழ்வாக வாழ்ந்தார். இவர் ஓர் "மெய்யியல் அறிஞர்" என்றே மக்களால் அழைக்கப்பட்டார்.


செபம்:

ஏழைகளின் நண்பனே எம் இயேசுவே! செப, தவ முயற்சியினால் புனித கெர்மானூஸ், ஏழை மக்களுக்கு உதவினார். ஆனால் பல சமயங்களில் நாங்கள் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து, ஏழைகளுக்கு உதவி செய்ய மனம் இல்லாமல் இருந்திருக்கின்றோம். இப்புனிதரின் வழியாக நாங்கள் எங்களின் தவற்றை உணர உதவியிருக்கின்றீர். உமது உதவியினால் ஏழைமக்களை நாங்கள் நண்பர்களாக ஏற்று, உதவி செய்து, வாழ உமதருளை தந்தருளும்.

இன்றைய புனிதர் 2016-05-27 புனித அகஸ்டின் (St. Augustine) காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)

                                         

             இன்றைய புனிதர் 2016-05-27

          புனித அகஸ்டின் (St. Augustine)

               காண்டர்பரி ஆயர்(Archbishop of Canterbury)

பிறப்பு ஆறாம் நூற்றாண்டு ரோம், இத்தாலி

இறப்பு26 மே 605கெண்ட், காண்டர்பரி, இங்கிலாந்து

இவர் காண்டர்பரி நகரின் முதல் ஆயர். இவர் இங்கிலாந்து நாட் டின் பாதுகாவலர். உரோமைத் துறவற மடத்திலிருந்து, இவரது தலைமையில்தான், திருத்தந்தை பெரிய கிரகோரியார் 40 துற விகளை இங்கிலாந்து நாட்டுக்கு மறைபரப்பு பணிக்காக அனு ப்பிவைத்தார். அப்போது அவர்கள் பிரான்சு நாட்டு வழியே சென் றார்கள். அச்சமயத்தில் இங்கிலாந்து நாட்டு மக்களின் சூழ்ச்சி யைக் கண்டு அச்சமுற்றார்கள். அவர்கள் திருத்தந்தையின் ஆலோசனை என்ன என்பதைக் கேட்டு தெரிந்து கொள்ள, தங் கள் தலைவரை உரோமுக்கு அனுப்பினர். தங்களுக்கு மறைபோ தக பணியை ஆற்றுவதற்கு சாக்சென் மொழி தெரியாதென்ப தையும் சுட்டிக்காட்டினர். இதனால் இங்கிலாந்தில் மறைபரப்பு பணி செய்ய வேண்டாமென்றும் தெளிவுப்படுத்தி சொன்னா ர்கள்.

இதற்கு திருத்தந்தை வதந்திகளையும், பயமுறுத்தல்களையும் பார்த்து அஞ்சவேண்டாம். இறைவனில் முழு நம்பிக்கை கொள் ளுங்கள். பல தியாகங்களை செய்யுங்கள். என்ன நடந்தாலும் அவற்றை இறைவன் கொடுத்த கொடை என்று ஏற்றுக்கொள்ளு ங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பினார். திருத்தந்தை கொடு த்த அறிவுரையின்படி, அவர்கள் தைரியம் கொண்டு, இயேசு வின் பணியை செய்யத் தயாரானார்கள். இதனைத் தொடர்ந்து 597 ல் தானெட் (Thanet) என்ற தீவை அடைந்து பணியைத் தொடர்ந் தார்கள். இந்தத் துறவிகளின் அயராது உழைப்பும், அஞ்சா நெஞ் சமும் எந்த அளவுக்கு வெற்றியை கொணர்ந்தது என்பதைப் பற்றி புனித பேதா அவரின் வரலாற்றில் புகழ்ச்சியோடு எழுதி யுள்ளார்.

இவர்கள் தானெட் தீவில் பணி செய்தபோது, புனித மார்ட்டின் பெயரால் கட்டப்பட்ட ஆலயம் ஒன்று அங்கு இருந்தது. இவ்வால யம் மிகவும் பாழடைந்து கிடந்தது. இதை இத்துறவிகளிடம் ஒப்படைத்தனர். அத்துறவிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அக்கோவிலில் செபித்தனர். பண் இசைத்தனர். திருப்பலி நிறைவேற்றினர், போதித்தனர். திருமுழுக்கு கொடுத்து வந் தனர். இவர்களது எளிய வாழ்க்கையும், ஆழ்ந்த ஜெப வாழ்வும் அந்நாட்டு அரசனை பெரிதும் கவர்ந்தது. அரசன் எதெல்பெட் தூய ஆவியின் திருநாளன்று மெய்மறையில் சேர்ந்தார். அங்கி ருந்தோரும், அரசனுடன் இருந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கிறிஸ்துமஸ் விழாவன்று மனந்திரும்பி புதிய ஞானஸ் நானம் பெற்றனர். நாளடைவில் இவர்களின் விசுவாசம் வியத் தகு முறையில் வளர்ச்சியடைந்தது. இதையறிந்த திருத்தந்தை அவர்களை மேன்மேலும் உற்சாகப்படுத்தினார். இதனால் இவ ர்களுக்கும், திருத்தந்தைக்கும் இருந்த உறவு மேலும் வலுப்பெ ற்றது. இவற்றையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்த புனித அகஸ்டீன், இங்கிலாந்து நாட்டில் காலடி எடுத்துவைக்கும் போதே காட்சியாகக் கண்டு இவையனைத்தும் நடக்கும் என்று சொன்னார். அவர் இச்சகோதரிகளை ஏஞ்சல்ஸ்(தேவ தூதர்கள்) என்றே கூறி வந்தாராம். மிக மேலான காரியங்களையும் இறைவ னின் மேல் சுமத்திவிட்டு, இறைவன் பெயரால் செய்து இக்கன் னியர்களை கொண்டு மறையுரையாற்றி வெற்றி கண்டாராம் இப்புனிதர்.


செபம்:

நல்ல நண்பனே என் இறைவா! தீயவர்களின் நடுவில் மறைபரப் பாற்றி, வெற்றி பெற்று, உமது நாமத்தை நிலைநாட்டி, கொடியவ ர்களையும் தம் அன்பு செயல்களால் மனந்திருப்பினார். இன் றைய புனிதர் அகஸ்டின் இன்னும் உம் பணியை தைரியத்துடன் செய்து, எதிரிகளை அன்பால் ஈர்த்து உம்மை இவ்வுலகில் பரப்ப ஒவ்வொரு துறவறத்தாருக்கும் உம் அருள் தாரும்.

Thursday, 26 May 2016

இன்றைய புனிதர் 2016-05-26 புனித பிலிப்புநேரி(St. Philip Neri) குரு, ஆரட்டரி போதகர் சபை நிறுவுனர் (Priest, Founder of the folk preacher Aratorimus)

                  
                இன்றைய புனிதர் 2016-05-26

புனித பிலிப்புநேரி(St. Philip Neri)
குரு, ஆரட்டரி போதகர் சபை நிறுவுனர் (Priest, Founder of the folk preacher Aratorimus)

பிறப்பு21 ஜூலை 1515புளோரன்ஸ் (Florence), Italy

இறப்பு25 மே 1595உரோம்

முத்திபேறுபட்டம்: 11 மே 1615 திருத்தந்தை ஐந்தாம் பவுல்
புனிதர்பட்டம்: 12 மார்ச் 1622 திருத்தந்தை 15ஆம் கிரகோரி

இத்தாலி நாட்டில் பிளாரன்ஸ் நகரில் பிறந்த இவர், தனது 26 ஆம் வயதில் வணிகத் தொழிலைவிட்டுவிட்டு, தமது ஆன்மீக நல னைக் குறித்தும் மற்றவர்களின் ஆன்மீக ஈடேற்றத்தை முன்னி ட்டும் உரோம் நகர் சென்றார். அங்கு இவர் வேதக்கலை, தத்து வக்கலையைப் பயின்றார். அவற்றோடு ஜெபத்திலும், தவ முயற் சிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது உரோம் நகரில் 12 மைல் சுற்றளவில் இருந்த புகழ்மிக்க 7 தேவாலயங் களையும், தினமும் மாலை பொழுதில் நடந்தே சென்று சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இரவில் புனித செபஸ்தியா ரின் புதைக்குழி வளாகத்தில் தங்கினார். அதோடு நலிவுற்ற, ஏழை மக்களின் நலன்களை கருதி மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளை சந்தித்தார். அவர் தெரு வழியாக நடந்து செல்லும்போது, ஆன்மீகத்தில் அக்கறையற்றவர்களை இனங் கண்டு, தமது திறமையான பேச்சியினாலும், அணுகுமுறைகளி னாலும் அவர்களை இறைவன் பால் ஈர்த்து மனம்மாற செய்தார்.

பிறகு 1548 ஆம் ஆண்டு தமது குறிக்கோளை ஏற்றுக்கொண்டவ ர்களை ஒருங்கிணைத்து, திவ்விய நற்கருணை ஆராதனை வைத்து, பல பக்திமுயற்சிகளை பரப்பி மக்களை இறைவ ன்பால் ஈர்த்ததோடு, இறைவனைப்பற்றி ஊர்களில் எடுத்துரைக் கவும் வழிவகுத்தார். இவ்வாறு இப்பணியில் 10 ஆண்டுகளை கழித்தார். அப்போது இவரின் ஆன்ம குரு, இவரிடம் குருத்துவ தை நாட பணித்தார். பின்னர் இவர் குருமடத்தில் சேர்ந்து, குருவானார். குருப்பட்டம் பெற்றபின் 33 ஆண்டுகள் ஆரட்டரி (Aratery) என்று அழைக்கப்பட்ட ஜெபக்குழுவை உருவாக்கி, பல குருக்களின் துணையோடு அச்செபக்குழுவை தொடர்ந்து நடத் தினார். இதன்வழியாக ஏராளமான ஞானப்பலன் கிடைத்ததை கண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அதன்பிறகு இக்குழு வை உயர்த்தி "ஆரட்டோரியன்ஸ் செபக்குழுவினர்" என்று பெயரிட்டு, அக்குழுவை தொடர்ந்து வழிநடத்தினார். இன்று வரை இக்குழு செயல்பட்டு வருகின்றது. நாள்தோறும் தொழி லாளர் பலர் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெறவும், ஆன்மீக ஆலோசனை பெறவும் வந்த வண்ணமாய் இருந்தனர். பல குருக்களும், கர்தினால்களும் இவரது ஆலோசனையை நாடி வந்தனர். இவர் எப்போது திருப்பலி நிறைவேற்றினாலும், தன்னை மறந்து பரவசத்தில் ஆழ்ந்துவிடுவார். இளைஞர்கள் பலரை ஆன்மீக வாழ்வுக்குக்கொண்டு சேர்த்தார். எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவும், ஆழமான இறை அனுபவம் பெறவும், தாழ்ச்சி, ஒறுத்தல், ஆசைகளை கட்டுப்படுத்துதல், அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனத்தை பெறுதல் ஆகியவற்றால் தம்மிடம் வந்தவர்களுக்கு பயிற்சி அளித்தார்.

இளைஞர் ஒருவர் திவ்விய நன்மை உட்கொண்ட உடனே தம் அலுவலகத்திற்கு விரைந்து ஓடி போய்விடுவார். பூசையின் இறுதிவரை இருக்கமாட்டார். ஒருமுறை இவரது குற்றத்தை உணர்த்தும்முறையில், பூசை உதவி செய்யும் இருவரிடம் எரியும் மெழுகுவர்த்திகளைக் கொடுத்து, அந்த இளைஞரின் பின்னால் ஓடுங்கள் என்றார். இளைஞரும் தன் தவற்றை உணர்ந்து அதை திருத்திக்கொண்டார். சிலருக்கு மற்றவர்களின் நற்பெயரைக் கெடுக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டு, அவர்களைத் திருத்தும் பணியில் ஈடுபட்டார். இன்னொரு முறை, பிறரைப் பழி தூற்றும் ஒரு பெண்ணிடம் ஒரு வாத்தின் இறகுகளைப் பறிக்க சொன்னார். பறித்து முடித்தபின் அவற்றைக் காற்றில் பறக்கவிட சொன்னார். இதன்பின் அப்பெண்ணிடம் இன்னொன்று செய்யுமாறு கேட்டார். பறித்த இறகுகளை ஒன்று சேர்த்து அவற்றைப் பறக்கவிட சொன்னார். பின்னர் பறக்கவிட்ட இறகுகளை ஒன்று சேர்த்து, தன்னிடம் கொண்டுவரச்சொன்னார். அப்போது அப்பெண் அவரிடம், அது என்னால் முடியாதே என்றார். "அப்படித்தான் நீ மற்றவர்களின் பெயரைக் கெடுத்தபின் அதை நீ சரிப்படுத்த முடியாமல் என்பதை புரிந்துக்கொள், திருத்திக்கொள்" என்று கூறினார். அப்பெண்ணும் தன் தவற்றை உணர்ந்து திருந்தினார்.

இவர் உரோம் நகரின் இரண்டாம் அப்போஸ்தலர் என்று அழைக்கப்படுகின்றார். இவரது பெயருக்கு இது மிகவும் பொருத்தமானதாக இருந்தது. நாள்தோறும் பிலிப்பு, வைகறையில் தாழ்ச்சியுடன் எழுப்பிய மன்றாட்டு, ஆண்டவரே பிலிப்பை உமது அருட்கரம் கொண்டு நடத்தும். இல்லாவிட்டால் பிலிப்பு உம்மைக் காட்டிக்கொடுத்து விடுவான், என்று நாள்தோறும் மறவாமல் ஜெபிப்பார்.


செபம்:

ஆண்டவராகிய கடவுளே! திவ்விய நற்கருணை பக்தியை வளர்த்து, உம்மீது பற்றுகொள்ளசெய்த புனித பிலிப்புநேரி போல, நாள்தோறும் திவ்விய நற்கருணையின் வழியாக உம்மைப்பற்றி, எல்லோர்க்கும் எல்லாமுமாக வாழ்ந்து, உம்மை எங்கள் வாழ்வில் பிரதிபலிக்க எமக்கு உமதருளை தந்தருளும்.

Tuesday, 24 May 2016

இன்றைய புனிதர் 2016-05-25 புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)

                                
                  இன்றைய புனிதர் 2016-05-25
புனித வணக்கத்துக்குரிய பேதா (St.Beda, the Reverend)
பிறப்பு இங்கிலாந்து
இறப்பு 735இங்கிலாந்து
இவர் ஆழமான ஆன்மிக வாழ்வை அடிப்படையாகக்கொண்டு வாழ்ந்தார். இதன்பொருட்டு இவர் "வணக்கத்திற்குரிய" என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். இவர் ஆசீர்வாத ப்பர் சபையை சேர்ந்தவர். இவர் ஓர் மறைவல்லுநர் இவருக்கு 7 வயது நடக்கும்போது நார்த்தம்பிரியாவில்(Narthampriya) இருந்த துறவற மடத்தில், புனித பெனடிக்ட் பிஸ்கோப்(Benedict Piskop) என்ப வரின் கண்காணிப்பில் கவனிக்கப்பட்டு, பயிற்சியளிக்கப் பட்டு வந்தார். அப்போதிலிருந்தே மறைநூலை ஆழமாக கற்றுதேர்வ தில் எனது நாட்களை செலவழித்தேன் என்று குறிப்பிடுவார். "எனக்கிருந்த ஒரேயொரு ஆசை, கற்றுக் கொள்ளவேண்டும், கற்றுத்தரவேண்டும். திருநூல்களை எழுதவேண்டும் என்பது தான்" என்பதை என்று அடிக்கடி கூறுவார். அவருடைய ஆன்மீக வாழ்வு ஒரு அமைதியாக ஓடும் ஒரு நீரோட்டம் போன்றது எனலாம்.

இங்கிலாந்து நாட்டில் ஆன்மீகக் கல்வி அப்போதுதான் தொட ங்கியிருந்தது. இருப்பினும், இத்தொடக்க நாட்களிலேயே இவர் எழுதிய நூல்கள், அவற்றில் காணப்பட்ட ஆழமான கருத்துகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இவர் எழுதிய 45 நூல்க ளில் 30 நூல்கள் திருநூலை பற்றியதாக இருந்தது. இவர் இங்கிலா ந்தில் கல்லூரியில் மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். திருநூ லை பற்றி அதிகமாக போதித்து வந்தார். இவர் ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே போதும், மாணவர்களின் நெஞ்சில் அவை அழி யாமல் பதிந்துவிடும்.

அவரது இறுதி நாளன்று, அவர் அவரது மாணவர்களில் ஒருவ ராகிய வில்பெர்ட் (Willbert) என்பவரை, தன் பக்கத்தில் இருக்கு மாறு வேண்டிக்கொண்டார். அவரும் அவரின் விருப்பத்தை நிறைவேற்றினார். ஆனாலும் மற்ற மாணவர்களும் அவருடன் இருந்தனர். அப்போது வில்பெர்ட், பேதாவை நோக்கி, "அன்பு ஆசிரியரே, நேற்று நீங்கள் சொன்னவற்றை நாங்கள் எழுதி கொண்டிருந்தோம். அவற்றின் இன்னும் இரு வசனங்கள் எஞ் சியிருக்கின்றதே. அதை நாங்கள் எழுதவில்லை", என்றார். அதற்கு ஆசிரியர் பேதா, "எழுதிக்கொள்" என்று கூற, அவரும் அதை எழுதிக் கொண்டார். அப்போது பேதா, அம்மாணவரிடம் நல்லது பிள்ளாய்! இப்போது எனது தலையை உனது கைகளால் தாங்கிப்பிடி. இந்நிலையில் நான் என் தந்தையிடம் பேசப்போ கிறேன் என்று கூறினார். வில்பெர்டும் அவர் சொன்னப்படியே செய்தார். அப்போது பேதா "தந்தை, மகன், தூய ஆவிக்கு மகிமை உண்டாவதாக" என்று கூறியபடியே உயிர் நீத்தார்.


செபம்:

வாழ்வின் ஊற்றே எம் இறைவா! ஆழமான ஆன்மீகத்தின் வழியாகவும், உம்மை தன் கற்று கொடுக்கும் பணியின் வழியாகவும் புனித பேதா இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தார். சாவு என்பது வாழ்வின் எதிரொலி என்பதை கற்பித்து வாழ்ந்தார். இப்புனிதரைபோல ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் பக்தியில் வளரவும், வாழவும், உம் அருள் தந்து காத்திடும்.

Monday, 23 May 2016

இன்றைய புனிதர் 2016-05-24 சாலையோர மாதா


                               

                   இன்றைய புனிதர் 2016-05-24

                                            சாலையோர மாதா

இத்தாலி மொழியில் "மடோநாடெல்லா ஸ்ட்ராடா" என்று அழைக்கப்படும். சாலையோர மாதாவின்மீது இயேசு சபையி னருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையினருக்கு என்றுமே ஒரு தனி பக்தி உண்டு. இவ்வாலயம் இயேசு சபையின் முதல் ஆலயம். இவ்வாலயத்தை மையமாக வைத்தே புனித இஞ்ஞாசியாரும், அவர் தம் தோழர்களும் தங் களது ஆன்மீக பணிகளில் ஈடுபட்டனர். இவ்வாலயத்தில் மன் றாடிவிட்டு சென்றபோது செய்த காரியங்கள் அனைத்தையும் வெற்றிப்பெற்றது. இதனால் இந்த சிற்றாலயத்திற்கு இன்று வரை தனிச்சிறப்பு பெற்று வருகின்றது.

கி.பி. 1538 ஆம் ஆண்டின் இறுதியில் புனித இனிகோ தம் தோழ ர்களுடன் இந்த ஆலயத்திற்கு அருகில் கிடைத்த ஓர் வீட்டில் தங்கிருந்து தங்களின் பணிகளில் ஈடுபட்டனர். இந்த ஆலயத் தில் அடிக்கடி திருப்பலி நிறைவேற்றுவது, மறையுரை ஆற் றுவது, ஒப்புரவு அருட்சாதனம் அளிப்பது, மறைக்கல்வி போதி ப்பது என பல பணிகள் இவர்களின் முதன்மை பணிகளாக அமைந்தது. அவ்வாலயத்தின் பங்குத்தந்தையாக இருந்த பீட்டர் கொடாசியோவுக்கு (Peter Codasio) இயேசு சபையினர் ஆற் றிய பணிகள் மிகவும் பிடித்திருந்தது. அப்போது 1538 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1539 மே வரை உரோமையிலும், சுற்று வட்டாரங்களிலும் கடுங்குளிரும், உணவுப்பற்றாக்குறையும் மக்களை வாட்டி வதைத்தது. புனித இனிகோ தம் சகோதர ர்களுடன் 3000 மக்களின் துயர்நீக்கி, உணவும், உடையும் கொடுத்து வந்தார். இத்தொண்டு பங்கு குரு பீட்டர் கொடாசியோவின் நெஞ்சை நெகிழ வைத்தது. அவர்களின் தொண்டால் பங்கு குரு பெரிதும் ஈர்க்கப்பட்டார். இதனால் அச்சபையில் சேரவிரும்பி, ஒருமாத தியானத்தில் ஈடுபட்டு, இறுதியில் 1539 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். இவர்தான் இயேசு சபையின் முதல் இத்தாலியர் ஆவார். அதன்பின் இவர் வழியாக சட்டரீதியாக சாலையோர மாதா ஆலயம் இயேசு சபைக்கு கிடைத்தது.

இந்த ஆலயம் மிகவும் சிறியதாகவும், குறுகலாகவும் இருந்ததால் பல மக்கள், பல ஆண்டுகளாக, ஆலயத்தின் வெளியே நின்றவாறே திருப்பலியில் பங்குக்கொண்டனர். இதனால் இயேசு சபையினர் அனைவரின் உழைப்பால் இவ்வாலயத்தின் முன்னால் திருப்பலிக்கென்று இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் இயேசு சபையினர், தங்குவதற்கும், பணிபுரிவதற்கும் வசதியாக தந்தை பீட்டர் தம் தந்தையின் சொத்துக்களை விற்றுப்பெரிய வீடு ஒன்றை அமைத்து கொடுத்தார். அச்சமயத்தில் இயேசு சபையில் இறந்தவர்கள் இவ்வாலயத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டார்கள். புனித பீட்டர், இவரின் தந்தை கொடாசியோ, புனித இனிகோ அனைவரும் இவ்வாலயத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

இவர்களின் இறப்பிற்கு பின் 1565-ல் பிரான்சிஸ் போர்ஜியா(Francis Borgiya) என்பவர் இயேசு சபையின் தலைவராக பொறுப்பேற்றார். இவரது காலத்தில் ஜேசு என்ற பெயரில் பேராலயம் ஒன்று கட்டுவதற்காக முன்னிருந்த சிற்றாலயத்தை இடித்துவிட்டு, இன்று ஜேசு என்றழைக்கப்படும் பேராலயத்தைக் கட்டினார். இவ்வாலயம் உரோம் நகரில் உள்ள ஆலயங்களில் மிகவும் கவர்ச்சிகரமானமாக காணப்படுகின்றது. இன்றுவரை உலகின் எப்பகுதியிலிருந்தும் இயேசு குருக்கள் உரோம் வந்தாலும் இவ்வாலயத்தில், சிற்றாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மாதா உருவத்தின் முன், திருப்பலி நிறைவேற்றுவதில் தனி ஆர்வம் காட்டுகின்றனர்.


செபம்:

புனித.கன்னி மரியாளே எமக்காக இயேசுவை மன்றாடும்
.

இன்றைய புனிதர் 2016-05-23 புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi) குரு

                               
                             

                  இன்றைய புனிதர் 2016-05-23

புனித ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி (St.John Baptista de Rossi)

குரு

பிறப்பு 1698வோல்ஜியோ(Voltgio), இத்தாலி
இறப்பு 23 மே 1764 உரோம்                      
புனிதர்பட்டம்: 1881, திருத்தந்தை 13 ஆம் லியோ
இவர் ரோமில் டொமினிக்கன் சபையில் படித்தவர். படிக் கும் போது இவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டார். இறக்கும் வரை இவர் இந்நோயால் அவதிப்பட்டார்.. 1721 ஆம் ஆண்டு ஜான் பாப்டிஸ்டா டி ரோஸி குருவானார். இவர் குருவான நாளிலிருந்து ஏழைமக்களுக்காகவும், நோயாளிகளுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்தார். ஏழை மக்களுக்கென்று, எதிர்கால வாழ்வில் முன்னேறுவதற்காக ஒரு குழுவை அமைத்தார். இதன்வழியாக மக்களுக்கு தன் நம்பிக்கையும், தைரியத்தையும், அவர் அவர்க ளுக்குரிய உரிமையோடு பேசுவதற்கும், நோன்பிருந்து செபிப்ப தற்கும், தவத்தின் வழியாக பல நற்பலன்களை அடைவது எப்படி என்பதையும் கற்றுக்கொடுத்தார். 1737 ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை, தீயவர்களை எதிர்த்து போராடி ஏழை மக்களின் உரிமைகளை அவர்களுக்கு பெற்றுத்தந்தார். கானானிய மக்க ளின் நண்பராக வாழ்ந்து அவர்களின் ஆன்மகுருவாகவே இறந் தார். இவர் இறந்தபிறகு ஜாதி, மதம் என்று பாராமல் அனைத்து மக்களும் இவரின் கல்லறைக்கு வந்து, இவரை வழிபட்டு, நற்பல ன்கள் பலவற்றை பெற்று சென்றனர்.


செபம்:

இரக்கத்தின் ஊற்றே இறைவா! இன்று புனிதர்களாக போற்றப்படுகின்றவர்களில் பெரும்பாலானோர், ஏழை, எளிய மக்களுக்காக உழைத்தவர்களாக உள்ளனர். இவர்களின் முன்மாதிரிகையான வாழ்வைப் பின்பற்றி, இன்றைய உலகில் உள்ள ஒவ்வொரு இறையடியார்களும் ஏழை எளியவரை அன்பு செய்து வாழ உமது அருள் வரங்களை தந்து காத்திட வேண்டுமாய் உம்மை இறைஞ்சுறோம்.

Sunday, 22 May 2016

இன்றைய புனிதர் 2016-05-22 புனித ரீட்டா.(St.Rita) குடும்பத்தலைவி, துறவி(Widow, nun)


              
             இன்றைய புனிதர் 2016-05-22

புனித ரீட்டா.(St.Rita)

குடும்பத்தலைவி, துறவி(Widow, nun)

பிறப்பு  1381உம்பிரியா(Umbria), இத்தாலி
இறப்பு 22 மே 1457 காசியா(Cascia), இத்தாலி

முத்திபேறுபட்டம்1626 திருத்தந்தை 8 ஊர்பான் (Pope Urban VIII)
புனிதர்பட்டம்: 24 மே 1900 திருத்தந்தை 13 ஆம் லியோ
ரீட்டா கால்நடைகளை வைத்து வாழ்க்கை நடத்தியவர்களின் ஒரே மகள். இவர்கள் இத்தாலி நாட்டில் உம்பிரியா என்ற மலைப் பகுதியில் வாழ்ந்துவந்தார்கள். பல காலமாக இவரின் பெற்றோ ர்கள் குழந்தைபேறு இல்லாமல் வாழ்ந்தார்கள். ரீட்டாவின் பிறப்  பிற்கு பின் இவ்வேதனை இவர்களைவிட்டு நீங்கியது. ரீட்டா தன் தாயின் வளர்ப்பால், இறை இயேசுவை முழுமையாக அன்பு செய்வதில் ஊறிக்கிடந்தார். ஏழை எளியவர்களின்மேல் அன்பு கொண்டு, வாரி வழங்கினார். ரீட்டா துறவு வாழ்வை தேர்ந்து கொள்ள விரும்பினார். ஆனால் இவரின் பெற்றோர் தங்களின் வயதான காலத்தில், தங்களை பராமரித்து கவனிக்கவேண்டு மென்று விரும்பி, மகளை துறவறத்திற்கு அனுப்பாமல் திருமண த்திற்கு சம்மதம் தர மீண்டும் மீண்டும் வற்புறுத்தினர். இதற்கு சம்மதம் தெரிவித்து தன் பெற்றோரின் ஆசையை நிறைவேற் றினார் ரீட்டா. உடனே பெற்றோர் பவுலோ பெர்டினாண்டோ என் பவருக்கு ரீட்டாவைத் திருமணம் செய்து கொடுத்தனர். ஆனால் அய்யோ பாவம் ரீட்டா! கணவர் மிக கோபம் கொண்டவர். கொடூ ரக்குணங்களை தன் மனைவியிடம் காட்டிவந்தார். ரீட்டா அஞ்சா நெஞ்சத்துடன் அனைத்து துன்பக்கலனையும் ஏற்றுக்கொண் டார். கணவர் மனம்மாற தன் துன்பங்களை ஒப்புக்கொடுத்தார்.

பின்னர் இவருக்கு ஜான், பவுல் என்ற 2 மகன்கள் பிறந்தனர். இவ ர்களும் தந்தையைப்போலவே மூர்க்கர்களாக நடந்தனர். ரீட்டா எதையும் தாங்கும் இதயம் கொண்டு வாழ்ந்தார். இதன் மத்தி யில் நோயுற்றோரையும், ஏழைகளையும் சிறப்பாக வழித்தவறி சென்றோரையும் சந்தித்து, அவர்கள் அருட்சாதனங்களை பெற வழிகாட்டியாக வந்தார். இறைவன் ரீட்டாவின் மன்றாட்டுக்கு நல்ல பலன் அளித்தார். பவுலோ முற்றிலும் மனம் மாறினார். இத னால் பவுலோவின் நண்பர்கள் அவர்மேல் கோபம் கொண்டு அவரின் பகைவர்கள் ஆனார்கள். பிறகு அவரை குத்திக் கொன் றார்கள். இதனால் ரீட்டாவின் மகன்கள் கோபம் கொண்டு, தந் தையைக் கொன்றவர்களை பழிவாங்க சபதம் செய்தனர். இத னால் ரீட்டா தன் மகன்களின் மனமாற்றத்திற்காக கடுமையாக ஜெபித்துவந்தார். இவர்கள் மனமாறவில்லையென்றால் இறை வனை அவர்களை அழைத்துக் கொள்ள மன்றாடினார். ஓராண் டிற்குள் இறைவன் அவரின் மன்றாட்டை கேட்டு இருவரையும் அவரிடம் அழைத்துக்கொண்டார்.

ரீட்டா இவர்களின் இறப்பிற்குப்பின் தனிமையில் விடப்பட்டார். இந்நிலையில் ஜெப, தவ அறமுயற்சிகளில் ஈடுபட்டு, துறவறத் தை நாடினார். எனவே, புனித அகுஸ்தினாரின் சபையைத் தேர் ந்துகொண்டார். அதிகமாக புனித அருளப்பர், புனித அகஸ்டீன், புனித நிக்கோலாஸ் இவர்களின் பரிந்துரையை நாடி ஜெபித்து வந்தார். ஒருநாள் இரவு தூங்கும்போது யாரோ தனது பெயர் சொல்லி அழைப்பது அவரின் காதில் விழுந்தது. அதைக்கேட்ட ரீட்டா உடனே எழுந்தார். அப்போது இம்மூன்று புனிதர்களும் ரீட்டாவை, மடத்தின் கதவு பூடப்பட்டிருந்த நிலையில், மடத்திற் குள் இருந்த சிற்றாலயத்திற்குள் கொண்டுபோய் விட்டனர். அங்கு ரீட்டா மறுநாள் காலைவரை மெய்மறந்து தியானத்தில் மூழ்கி, ஜெபித்துக்கொண்டிருந்ததை கன்னியர்கள் கண்டார் கள். அப்போது எப்படி ஆலயத்திற்குள் வந்தாய் என்று ரீட்டாவி டம் கேட்டதற்கு, மூன்று புனிதர்களும் தன்னை இங்கு அழைத்து வந்ததாகக் கூறினார். இவர் கூறுவது உண்மை என்றுணர்ந்த கன்னியர்கள், அவரை தங்களின் துறவு மடத்தில் ஓர் உறுப்பி னராக ஏற்றுக்கொண்டார்கள். அவர் அவ்வப்போது சிலுவையில் அறையுண்ட இயேசுவை காட்சி தியானத்தில் கண்டார். அக்காட்சியை அவர் இங்கும் கண்டு, அதிலேயே தன் நேரத்தை செலவிட்டார். ரீட்டா அவரின் தலையில் முள்முடி வைத்து கொண்டு ஜெபித்தார். இதனால் ஏற்பட்ட காயம் ஆறாமல் வலித் துக்கொண்டே இருந்தது. அக்காயத்தில் சகிக்கமுடியாத துர்நாற் றம் வீசியது. அப்புண்ணில் புழுக்கள் நெளிந்துக்கொண்டிரு ந்தது. இச்சிலுவையின் நிமித்தம் அவர் தம் அறையைவிட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால் இவரிடமிருந்து அருள்பொழி யப்படுவதைப் பார்வையாளர் யாவரும் உணரமுடிந்தது. பல அருஞ்செயல்கள் இவரது இறப்பிற்குப் பின் நிகழ்ந்த வண்ண மாய் இருந்தது. 76ஆம் வயதில் தனது தூய ஆன்மாவை எல்லாம் வல்லவரிடம் ஒப்படைத்த இவர் வாழும் போதும், இறந்துவிட்ட பிறகும் நன்மைகளை இவ்வுலக மக்களுக்கு செய்து கொண்டே இருந்தார். இயலாதவைகளை பெற்றுத்தரும் ஆற்றல் வாய்ந்தவராக இப்புனிதர் திகழ்ந்தார்.

ரீட்டா பிறந்த சமயத்தில் ஒரு விநோத நிகழ்ச்சி நடந்தேறியது. பெரிய பெரிய தேனீக்களின் கூட்டம் ஒருவித சத்தத்துடன் ரீட்டா பிறந்த வீட்டிற்குள் புகுந்தது. அவரிடமிருந்த அறைக்குள்ளும் புகுந்தது. ஆனால் யாரையும் ஒரு தேனீயும் கொட்டியதில்லை. இந்நிகழ்ச்சி இன்றுவரை ஆண்டுதோறும் புனித வாரம் முழுவதும், ரீட்டாவின் திருநாளன்று நடைபெறுகிறது. இது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்கப்பட்டு, உண்மைதான் என்று கண்டறியப்பட்டது. இந்நிகழ்வானது, இவருக்கு புனிதர்பட்டம் கொடுப்பதற்கான தயாரிப்புத்தணிக்கையில் இடம்பெற்றுள்ளது.


செபம்:

தந்தையே நீர் விரும்பினால் இத்துன்பக்கிண்ணம் என்னைவிட்டு அகலட்டும் என்று ஜெபித்த இயேசுவே! உம் பெயரை இவ்வுலகில் நிலைநாட்ட மறைசாட்சிகளாய் மரித்தவர்களை நீர் கருணை கண்கொண்டு நோக்கியருளும். மரித்த ஒவ்வொரு ஆன்மாக்களும் இம்மண்ணில் வெற்றியடைய உம் வரம் தாரும்.

Saturday, 21 May 2016

இன்றைய புனிதர் 2016-05-21 புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph) குரு


இன்றைய புனிதர்
2016-05-21

புனித ஹெர்மான் ஜோசப் (St.Hermann Joseph)
குரு

பிறப்பு: 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில்

இறப்பு: 7 ஏப்ரல் 1241ஹோப்பன்(Hopen), ஐப்பல்(Eifel), ஜெர்மனி

இவர் ஓர் ஏழையின் குடும்பத்தில் பிறந்தார். இவர் சிறுபிள்ளை யாக இருக்கும்போதே கொலோனில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அப்போது செபிக்க சென்றபோது ஒருநாள் கொலோன் ஊரில் இருந்த ஓர் ஆலயத்தில், அன்னை மரியாள், கையில் குழந்தை இயேசுவை வைத்திருக்கும் ஒரு படத்தை பார்த்து, அப்படத்தின் முன் மண்டியிட்டு செபித்தார். அப்போது ஹெர்மான் தன் கையில் ஆப்பிள் பழம் வைத்திரு ந்தார். அதை எடுத்து அன்னைமரியிடம் கொடுக்க, குழந்தை இயேசு தன் கையை நீட்டி சிறுவன் ஹெர்மான் கொடுத்த அப்பழத்தை வாங்கிக் கொண்டார். இதைப் பார்த்து திகைத்துப் போன அவர், தான் ஓர் குருவாக வேண்டுமென்று முடிவு செய்தார். அதன்பிறகு அவர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். எப்போதும் செபிக்க வேண்டும், விவிலியம் வாசிக்கவேண்டும். திருப்பலியில் பங்கெடுக்கவேண்டும் என்று நினைத்து, இதுதான் துறவற வாழ்வு என்றுணர்ந்து அவ்வாழ்வை தேர்வை செய்தார். ஆனால் அங்கு அனைத்தும் அவருக்கு எதிர்மறையாக இருந்தது. அவரை அந்த துறவற மடத்தில், உணவு சமைப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை ஏற்றுகொள்ள சொன்னார்கள். அவரும் அப்பொறுப்பை ஏற்று தினமும் கடைக்குச் சென்று, தன்னிடம் ஒப்படைத்த வேலைகளை செய்து வந்தார். இதனால் கோவிலில் அமர்ந்து செபிப்பதற்கென தனியாக அவருக்கு நேரம் கிடைக்காததால், ஒருநாள் அன்னைமரியிடமும், தந்தை சூசையிடமும், தனது கவலைகளை செபத்தில் கூறிக்கொண்டிருந்தார். அப்போது அன்னையானவள், அவரிடம் உன் உடனுள்ள சகோதர, சகோதரிகளுக்கு நீ புரியும் உன் வேலைகளே உன்னிடமிருந்து வருகின்ற உண்மையான ஜெபம் என்றுணர்த்தினார்.
அதன்பிறகு ஹெர்மான் தனது எண்ணங்களை மாற்றிக்கொண்டு தனக்கு குறிக்கப்பட்ட வேலைகள் அனைத்தையும் மகிழ்வோடு செய்து வந்தார். அவ்வேலைகள் அனைத்தையும் ஜெபமாக மாற்றினார். அதன்வழியாக உடனிருந்த அனைவரின் அன்பையும் பெற்றார். அதிலிருந்து ஹெர்மான் அன்னைமரியின் பாடல் ஒன்றை எப்போதும் பாடிக் கொண்டே இருந்தார். அவர் தொடர்ந்து நீண்ட நாட்களாக நோன்பிருந்து ஜெபித்தார். இதனால் கடுமையான நோய்க்கு ஆளாக்கப்பட்டார். அப்போது சுல்பிக் (Zulpich) என்ற ஊரில் இருந்த சிஸ்டர்சீசியன்(Zisterzienserinn) துறவற இல்லத்திற்கு சென்றார். அங்கு அவர் ஆன்மீக குருவாக பணியாற்றினார். அவரை சந்திக்க வந்த அனைவருக்கும் ஆசீரை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தினார். ஹெர்மான் அத்துறவற இல்லத்திற்குள் நுழைந்தவுடனே, "இங்குள்ள கல்லறையில்தான் என்னை அடக்கம் செய்யவேண்டும், நான் இங்குதான் இறப்பேன்" என்று கூறினார். அவர் கூறியபடியே, ஒருநாள் ஆலயத்தில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே, கண்களைமூடி அமைதியாக இறைவனிடம் சேர்ந்தார்.


செபம்:

எல்லாம் வல்ல இறைவா! புனித ஹெர்மான் அன்னைமரியிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அவரது அன்பையும், பாசத்தையும் பெற்று நாங்கள் என்றும், அன்னைமரியின் பிள்ளைகளாக வாழ உம் அருளை எமக்கு பொழிந்தருளும். ஆமென்

Thursday, 19 May 2016

இன்றைய புனிதர் 2016-05-19 புனித இவோ ஹேலோரி (St.Ivo Helory) குரு

                     
                    இன்றைய புனிதர்2016-05-19

                  புனித இவோ ஹேலோரி (St.Ivo Helory)

                                                                   குரு

பிறப்பு 1253 ரேகையர் (Treguier)

இறப்பு 19 மே 1303

இவர் சட்டவிரோதமாக குற்றம் புரியவர்களை திருத்தும் பணி யையும், ஒருங்கிணைக்கும் பணியையும் செய்தார். இவர் இறை யியலையும், திருச்சபை சட்ட ஒழுங்குமுறையும் பற்றி படித்தார். தனது 31 ஆம் வயதில் குருப்பட்டம் பெற்று குருவானார். மிகச் சிறிய சிறிய ஊர்களில் குருவாக பணியாற்றினார். குருவான 14 ஆம் வருடத்தில் ஆன்ம குருவாக பணியாற்றினார். அப்பணி யில் அவர் முழுதிருப்தி அடையவில்லை. இதனால் அடுத்த 5 வருடங்களிலிருந்து இறக்கும்வரை ஏழைகளுக்கு உதவிசெய்து சட்டங்களால் துன்புறுத்தப்பட்டவர்களையும், கைவிடப்பட் டவர்களையும் அன்பு செய்து, அவர்களை வாழ்வில் முன்னேற்ற மடைய வழிவகை செய்தார். வாழ்வில் சுகமே இல்லாமல், எப் போதுமே துன்பத்தில் மட்டுமே வாழ்ந்தவர்களுக்கு, எல்லா நலன் களை செய்து கொடுத்து, மறுவாழ்வை அளித்து மகிழ்ச்சியூட்டி னார். அவரது வாழ்வு மற்றவர்களுக்கு ஓர் முன்மாதிரியான வாழ்வாக இருந்தது. இவரது வாழ்வால் ஈர்க்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து "இவோவின் சகோதரர்கள்" என்று பெயர் கொண்ட ஓர் சபையைத் தொடங்கி, தங்களது இறுதிமூச் சுவரை மக்களுக்காக பல இன்னல்கள் அடைந்து, தொடர்ந்து பணியாற்றினார்.


செபம்:

அன்பான இறைவா! திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பது போல, யாருமில்லாமல், வாழ்க்கையே சோகம் என வாழ்ந்தவர்களுக்கு புனித இவோ வழிகாட்டியாகத் திகழ்ந்தார். தனது நாட்டைவிட்டு, சட்டங்களால் புறக்கணிக்கப்பட்டு, உறவை இழந்து வாழும் மக்களை நீர் கண்ணோக்கியருளும், உமது அன்பின் திருக்கரம் கொண்டு அவர்களை வழிநடத்தியருளும்.

Wednesday, 18 May 2016

இன்றைய புனிதர் 2016-05-18 புனித முதலாம் யோவான் (St. John I) திருத்தந்தை, மறைசாட்சி (Pope, Martyr)


                   

           இன்றைய புனிதர் 2016-05-1                         புனித முதலாம் யோவான் (St. John I)

திருத்தந்தை, மறைசாட்சி (Pope, Martyr)

பிறப்பு டோஸ்கானா(Tuscany), இத்தாலி

இறப்பு 18 மே 526 ராவென்னா(Ravenna)

இவர் ஹார்மிஸ்தாஸ்(Hormisdas) என்ற திருத்தந்தைக்கு அடுத்தப்படியாக 523 ஆம் ஆண்டு ஆகஸ்டு 13 ஆம் நாள் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கான் ஸ்டாண்டினோபிள் என்ற நகரில், ஒரு தூதவராக காலடி எடுத்து வைத்த முதல் திருத்தந்தை. இவர் திருத் தந்தையாக இருந்தபோது, ஆரியமதத்தை சேர்ந்த சேர் ந்த அரசர் முதல் தியோடரிக்(Theoderich) உரோம் நகரை ஆட்சி செய்து வந்தான். அப்போது கான்ஸ்டாண்டி னோபிளில் இருந்த மன்னர் ஜஸ்டினோஸ்(Justinos) அந்ந கரிலிருந்த ஆரிய மதத்தை சார்ந்த முதலாம் ஜஸ்டி னோஸ் என்பவரை கொடுமைப்படுத்துகிறான் என்ப தைப்பற்றி கேள்விப்பட்டான். இதனால் மன்னர் ஜஸ் டினோஸிடம் இப்பிரச்சனைகளைப்பற்றி பேசவும், மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்தவும் வேண்டி, அரசர் தியோடரிக், திருத்தந்தையை தூதுவராக கான்ஸ்டா ண்டினோபிளுக்கு அனுப்பி வைத்தார். திருத்தந் தையை அன்புடன் நடத்துமாறு அந்நாட்டு மன்னருக்கு தூதுவிட்டான்.

அப்போது திருத்தந்தை, மன்னர் ஜஸ்டினோஸிடம் மிக வும் அன்பாகவும், ஞானத்தோடும், பேசி எல்லாப் பிரச்ச னைகளையும் தீர்த்துவைத்து, நல்லதோர் உறவை ஏற் படுத்தி, சமாதான உடன்படிக்கை செய்து வைத்துவி ட்டு, மீண்டும் திருத்தந்தை இத்தாலி நாட்டிற்கு திரும்பி   னார். நடந்தவைகள் அனைத்தையும் அரசர் தியோடரிடம் எடுத்து கூறினார் திருத்தந்தை. திருத்தந்தை ரோம் திரும்பிய சில மாதங்களிலேயே கான்ஸ்டாண்டினோபிள் மன்னன், அவரை சந்தித்து பேச உரோம் வந்தான். இவர்கள் இருவருக்கும் நல்லதோர் உறவு ஏற்பட்டது. திருச்சபையையும், நாட்டையும் நல்வழியில் வழிநடத்த ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்தனர். இவர்களின் நல்லுறவை கண்ட அரசர் தியோடரிக், பொறாமைக்கொண்டு பயமுற்றான். அவர்கள் இவனுக்கெதிராக சதித்திட்டம் தீட்டுவதாக எண்ணினான். இதனால் தியோடரிக் ஆத்திரம்கொண்டு மன்னன் ஜஸ்டினின் ஆட்களில் ஒருவரான பொயித்தியஸ்(Poithias) என்பவரைக் கொன்றான். அதன்பின் திருச்சபைக்கெதிராக பல அநியாயங்களை செய்தான். பிறகு ராவென்னா நகரில் திருத்தந்தையைச் சிறையிலிட்டான். அங்கு அவர் சொல்லொண்ணாத் துயரங்களை அடைந்தார். கொடிய வேதனைக்குப்பின் உயிர்நீத்தார். அவர் இறந்த சில நாட்களுக்குப்பின் தியோடரிக்கும் இறந்தார். ஆனால் அவன் இறப்பதற்கு முன் தனக்குப்பிடித்த ஒருவரை திருத்தந்தையாக தேர்ந்தெடுத்துவிட்டு இறந்தான்.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! நீர் சிலுவைச் சாவை சுமந்து, உயிர் நீத்ததைப்போல, கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப பல ஆயர்களும், குருக்களும், கன்னியரும், பொதுநிலையினரும் உயிர் துறந்துள்ளனர். இவர்களின் வாழ்வை முன்மாதிரியாகக் கொண்டு, எம்மை முழுவதும் அர்ப்பணித்து உமக்காக வாழ்ந்திட உம் அருளைப் பொழிந்தருளும்.

Tuesday, 17 May 2016

இன்றைய புனிதர் 2016-05-17 புனித பாஸ்காலீஸ் பேலோன் (St.Paschalis Baylon) குரு

                   

               இன்றைய புனிதர் 2016-05-17

புனித பாஸ்காலீஸ் பேலோன் (St.Paschalis Baylon)குரு

பிறப்பு  16 மே 1540 டோரேஹெர்மோசா (Torrehermosa), அரகோனியா(Aragonien)
இறப்பு  17 மே 1592  வாலென்சியா(Valencia)
புனிதர்பட்டம்: 1690 திருத்தந்தை எட்டாம் அலெக்ஸாண்டர்
இவர் பிறந்து வளர்ந்த உடன் குடும்பத்தை கவனிக்கும் பொறு ப்பை ஏற்றார். இதனால் ஆடுகளை பராமரிக்கும் ஆயனாக கூலி வேலைக்கு சேர்ந்தார். இவர் ஒருபோதும் பள்ளிக்கூடம் போனதே இல்லை. ஆனால் இவர் தானாகவே எழுதவும், படிக்கவும் கற்றுக் கொண்டார். ஆடு, மாடுகளை வயலில் மேய்க்கும் போது கடவு ளின் படைப்பை கண்டுரசித்து, அதன்வழியாக கடவுளை வழிப ட்டு அவரோடு தொடர்புகொண்டார்.

தனக்கு 17 வயது நடக்கும்போது பிரான்சிஸ்கன் சபையில் ஆடு, மாடுகளை பராமரிக்கும் பணிக்காக அமர்த்தப்பட்டார். அப்போ துதான் அவர் முதன்முதலில் துறவிகளின் வாழ்வைப்பற்றி கேள் விப்பட்டு, அவர்களைப்பற்றி தெரிந்துக்கொண்டார். இதனால் இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்களால் மிகவும் ஈர்க்கப்ப ட்டார். இவரது ஆழமான விசுவாசத்தை கண்ட அச்சகோதரர்கள் இவரை தங்கள் சபையில் சேர அனுமதித்தனர். இதனை அறிந்த அவ்வூர் மக்கள் அச்சகோதரர்களையும், பாஸ்காலிஸ்சையும் தவறாக பேசினர். இதனால் பாஸ்காலிஸ் மிகவும் வேதனைப்ப ட்டார். இருப்பினும் பிரான்சிஸ்கன் சபை சகோதரர்கள் அவரை ஊக்கமூட்டி, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட அழைத்து சென்ற னர். பின்னர் அச்சபை தலைமை சகோதரர் அவர்களின் அறிவு ரைப்படி, இவர் பிரான்சிஸ்கன் சபை சகோதரராக வாழ முழும னதுடன் விருப்பம் தெரிவித்தார்.

அதன்பிறகு 1564 ஆம் ஆண்டு மான்போர்ட் சபை சகோதரர்கள் பாஸ்காசிசை தங்கள் சபைக்கு கடனாக தர வேண்டி இடைவி டாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். அவர்களின் வற்புறுத் தலால் சில வருடங்களுக்கு கடனாக மான்போர்ட் சபைக்கு அனு ப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் ஏழ்மையில் வாழ்ந்து, எளிமை யான வாழ்வை மேற்கொண்டு சில துறவற மடங்களை ஏற்படுத் தினார். அவர் ஏற்படுத்திய துறவற மடங்களில், சிறிய சிறிய பணிகளில் அமர்த்தப்பட்டு, அவற்றை திறம்பட இறைவ னின் மகிமைக்காக செய்தார். அவர் மான்போர்ட் சபையில் இருந்தா லும் கூட, பிரான்சிஸ் சபையின் ஒழுங்குகளை தவறாமல் கடை பிடித்து வந்தார். மக்களிடம் மிகவும் அன்பாகவும், பாசமாகவும் இருந்தார். அவர் திவ்விய நற்கருணை பேழையின் முன் மணிக் கணக்காக அமர்ந்து செபிப்பார். அதிலிருந்துதான் அளவில்லா மகிழ்ச்சியையும், மனநிறைவையும் பெற்றார். இவருக்கும் அவ் வில்லத்திலுருந்த திவ்விய நற்கருணை பேழைக்கும் காந்தம் போன்றதொரு உறவு இருந்தது. எப்போதும் இறைவனிடம் தொட ர்பு கொண்டிருந்த அவர் பரிசுத்த ஆவி திருநாளன்று இறைவ னடி சேர்ந்தார். அவரது கல்லறையில் எண்ணிலங்கா அற்புதங் கள் இன்று வரை நடந்து வருகின்றது.

இவர் ஸ்பெயின் நாட்டு புனிதர்களில் மிக உயர்ந்த புனிதராக அழைக்கப்படுகின்றார். 1897 ஆம் ஆண்டு திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களால் பலிபீட திருவருட்சாதனத்தின் பாதுகாவலர் என்றழைக்கப்பட்டார். இவர் இறந்த 100 வருடங்களுக்குப்பிறகு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.


செபம்:

நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! திவ்விய நற்கருணை யின் மீது அளவில்லா நம்பிக்கைக்கொண்டு, வாழ்விற்குத் தேவையான சக்தியை புனித பாஸ்காலிஸ் பெற்றுக் கொண்டார். நாங்களும் அவரைப் போல திவ்விய நன்மை உட்கொண்ட பிறகு உம்மீது ஆழ்ந்த பற்றுக்கொண்டு வாழ எமக்கு உமது ஆசீர்வாதங்களைத் தாரும்.

Monday, 16 May 2016

இன்றைய புனிதர் 2016-05-16 புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo) குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்

                   
                  இன்றைய புனிதர் 2016-05-16

புனித ஆண்ட்ரூ பொபோலா, சே.ச. (St.Andrew Popolo)

குரு, மறைசாட்சி, வார்சாவ் உயர்மறைமாவட்டத்தின் பாதுகாவலர்

பிறப்பு1591சண்டோமிர் பாலாடைன்(Sandomir Palatine), போலந்து'

இறப்பு  16 மே 1657  ஜானாவ் (Janow), போலந்து

முத்திபேறுபட்டம்: 30 அக்டோபர் 1853 திருத்தந்தை 9ஆம் பயஸ்புனிதர்பட்டம்: 17, ஏப்ரல் 1938 திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர்

புனித ஆண்ட்ரூ தான் குருவானபிறகு போலந்து நாட்டிலுள்ள லித்துவேனியாவில்(Lithuvenia) பணியாற்றினார். அப்போது போலந்து நாட்டில் மிகவும் குழப்பம் ஏற்பட்டது. கிரேக்க பிரிவி னையைச் சேர்ந்தவர்கள் வெறிபிடித்தவர்களைப் போல நடந்த னர். ஆனால் ஆண்ட்ரூ அவர்களிடையே அஞ்சாமல், மன நெகிழ் வோடு, அஞ்சா நெஞ்சத்தோடு மறைபணியாற்றினார். ஏழை எளியவர்களின் குடிசைகளுக்கு சென்று, அவர்களை சந்தித்து, மறைக்கல்வியை நுணுக்கமாகக் கற்றுக்கொடுத்தார். போலந்து நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டபோது, எல்லோர்க்கும் எல்லாமு மாய் இருந்து பணியாற்றினார்.

கோசாக் என்றழைக்கப்பட்ட குழப்பக்காரர்கள் போலந்து நாட்டி லிருந்த கத்தோலிக்க மக்களை வேரோடு அழிக்க திட்டமிட்டனர். அப்போது ஜானாவ் என்ற இடத்தில் இவர்களின் பிடியில் ஆண்ட்ரூ சிக்கிக்கொண்டார். இக்கொடிய வெறியர்கள் இவரை தடியாலும், சாட்டையாலும் அடித்தனர். குதிரையின் பின் காலில் இவரை காட்டி, குதிரையை அடித்து, வேகமாக ஓடவிட்டனர். குதிரை ஓடிய இடமெல்லாம் இவரை இழுத்து சென்றது. இதனால் குரு ஆண்ட்ரூ சாகும் தருவாய்க்கு தள்ளப்பட்டார். அப்போது அவர்கள் ஆண்ட்ரூவிடம் நீ ஒரு குருவா? என்று வினவி ஏளனம் செய்தனர். அப்போது ஆண்ட்ரூ, "ஆம், நான் கத்தோலிக்க விசு வாசத்தில் பிறந்தவன். நான் குருதான். குருவாகவே கிறிஸ்துவு க்காக இறக்கவும் விரும்புகிறேன்" என்று கூறினார். மீண்டும், " நான் கிறிஸ்துவுக்காக இறப்பதால், அவர் எனக்கு மீட்பளிப்பார். நீங்களோ மனந்திரும்புவீர்கள். அதற்கு நீங்கள் தவம்புரிவீர்கள், இல்லையேல் மீட்பு பெறமாட்டீர்கள்" என்று கூறினார். இச்சொற் களை கேட்டதால் மேலும் அவர்கள் சீற்றங்கொண்டு, முன்பை விட பல மடங்கு தண்டனையை கொடுத்தார்கள். ஆண்ட்ரூவின் தலையில் அடித்து, கூரிய ஈட்டியால் தலையில் குத்தினார்கள். அவரின் உடலில் தோலை உரித்தனர். தீப்பந்தங்களை வைத்து அவரது நெஞ்சில் சுட்டு, காயம் உண்டாக்கினர். முன்புறமும் பின்புறமும் சுட்டனர். அப்போது கூட ஆண்ட்ரூ மனம் தளரவி ல்லை. மாறாக, தமது விசுவாசப்பிரமாணத்தை சொல்லிக்கொ ண்டிருந்தார்.

இவரின் நம்பிக்கையை பார்த்த அவர்கள், மீண்டும் ஆண்ட்ரூ வின் காதுகளையும், மூக்கையும் வெட்டினர். நாவையும் கண் களையும் பிடுங்கி எறிந்தனர். சாகும் நிலையில் புனிதர் கிடந்த  போதும், பகைவர்கள் மனமிரங்காமல் தொடர்ந்து அடித்தனர். இறுதியாக இரக்கமற்றவர்களின் அடிகளை தாங்கமுடியாமல், புனிதரின் தூய ஆன்மா இறைவனடி சேர்ந்தது.

புனிதர் அடைந்த இத்தகைய பெரும் வேதனைகளை திருத் தந்தை ஒன்பதாம் பத்திநாதர் இவருக்கு புனிதர் பட்டம் கொடுத்  தபோது உலகிற்கு விடுத்த செய்தியில் இவைகளை குறிப்பிட்டுள்ளார்.


செபம்:

மன்னிப்பின் நாயகனே எம் இறைவா! புனித ஆண்ட்ரூ தன்னை துன்புறுத்தியவர்களை மன்னித்து, அவர்களை அன்பு செய்து, அவர்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசி மன்றாடினார். நாங்களும் அவரைப்போல, எங்களை துன்புறுத்தியவர்களை மன்னித்து வாழ எமக்கு உமது அருளையும், ஆசீரையும் தந்தருளும்.

Sunday, 15 May 2016

இன்றைய புனிதர் 2016-05-15 புனித.சோபியா மறைசாட்சி

                  
                இன்றைய புனிதர் 2016-0515 

                             புனித.சோபியா

                                                       மறைசாட்சி

பிறப்பு இத்தாலி

இறப்பு 137 ரோம்

இவர் ஓர் திருமணமான பெண். இவருக்கு 3 பெண் குழந்தை பிற ந்தனர். இவரின் முதல் குழந்தையின் பெயர் விசுவாசம் Faith. வய து 12, இரண்டாவது குழந்தையின் பெயர் நம்பிக்கை Hope. வயது 10. மூன்றாவது குழந்தையின் பெயர் அன்பு love. வயது 9. 1 கொரி 13-ல் குறிப்பிடும் இறைவார்த்தைகளை தன் குழந்தைகளுக்கு திருமு ழுக்கு பெயராக வைத்தார். சோபியா. இறைவனை இவர்கள் தங் களின் உயிருக்கும் மேலாக நேசித்தார்கள். இதனால் கொடிய வெறியர்களால் பலவித துன்பத்திற்கு ஆளானார்கள்.

குழந்தைகள் ஒவ்வொருவரையும் ஒருவர் பின் ஒருவராக கொன் றார்கள். அதன்பின் தாய் சோபியாவையும் கொன்றார்கள். சோபியாவை வைத்தே, அவரின் கைகளாலேயே தன் குழந்தைக ளை கொன்று புதைத்தார்கள். பின்பு சோபியாவை குழந்தைக ளின் கல்லறையிலேயே வைத்து அவரையும் கொலை செய்தார் கள். இவர்கள் அனைவரும் 117- லிருந்து 138 ஆண்டிற்குள் மறைசா ட்சிகளாக இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

778 ஆம் ஆண்டுகளில் இவர்களது கல்லறைகளை ஆல்சேஸ்-ல் (Alsace)உள்ள எசாவ் (Eschau) என்ற ஊரிலிருக்கும் ஒரு பெண்களின் துறவறமடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக வரலாறு கூறுகின்றது. அதன்பிறகு பல்கேரியா (Bulgaria) நாட்டின் தலைநகரை இப்புனித ரின் பெயர் கொண்டு சோபியா என்றழைக்கப்பட்டது. பின்னர் ஆறாம் நூற்றாண்டில் புனித சோபியாவிற்கென்று ஓர் ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் 1376-லிருந்து பல்கேரியா நாட்டின் சோபியா பேராலயம் மிகவும் புகழ் பெற்று பேசப்படுகின்றது. அதன் மறுபெயராக இவ்வாலயம் Holy Wisdom என்றழைக்கப்படுகி ன்றது. இவருக்கு பல்கேரியா நாட்டில் 20 மீட்டர் உயரமான ஒரு பெரிய சுரூபம் வைத்து இன்றுவரை வணங்கப்படுகின்றது.


செபம்:

எங்கள் தாயும் தந்தையுமான இறைவா! உம் பொருட்டு இன்ன ல்கள் அடையும் ஒவ்வொருவரையும் நீர் கண்ணோக்கியருளும். மறைசாட்சியாக மரிக்கின்ற இன்னும் துன்பப்பட்டுகொண்டிரு க்கின்றவர்களை நீர் ஆசீர்வதித்து எதையும் உமக்காக தாங்கும் இதயத்தை தந்திட வேண்டுமாய் இறைஞ்சுகிறோம்.

Saturday, 14 May 2016

இன்றைய புனிதர் 2016-05-14 புனித.மத்தியாஸ் அப்போஸ்தலர்

                                    

               இன்றைய புனிதர் 2016-05-14

                              புனித.மத்தியாஸ் அப்போஸ்தலர்

ஆண்டவர் விண்ணகம் சென்றபின், பேதுரு ஒருநாள் சீடர்கள் மத்தியில் எழுந்து நின்றார். இறந்துபோன யூதாசுக்கு பதிலாக நாம் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார். அப்போஸ்த லராக தேர்ந்தேடுக்கப்படுவர் தொடக்கமுதல் இயேசுவோடு இருந்தவராகவும், அவரின் விண்ணேற்பை நேரில் பார்த்தவரா கவும், அவரைப் பற்றி நன்கு தெரிந்தவராகவும் என்று கூறி னார். அதனால் அனைவரும் கூடிவந்து ஒரு மனதாக ஆண்ட வரை நோக்கி செபித்தனர். ஆண்டவரே, மக்களின் மனங்க ளை அறிபவரே, உமக்குரிய சீடர் ஒருவரை எங்களுக்கு காண் பியும் என்று மன்றாடினர்.

அப்போது கூட்டத்திலிருந்த பர்சபா என்பவரையும், மத்தியா என்பவரையும் தேர்ந்தெடுத்தனர். பர்சபாவுக்கு "யுஸ்து" என் னும் மற்றொரு பெயரும் இருந்தது. சீடர்கள் இருவரின் பெய ரையும் தனித்தனி சீட்டுகளில் எழுதி குலுக்கினர். அப்போது சீட்டு மத்தியாவின் பெயருக்கு விழுந்தது. உடனே சீடர்கள் மத்தியாவை ஆண்டவரின் பெயரால் தங்களோடு சேர்த்துக் கொண்டனர்(தி.பணி 1:15-26) அதன்பிறகு மத்தியா, யூதேயா, எத்தியோப்பியா நாடெங்கும் சென்று மறைபரப்பு பணியை ஆற்றினார். இவர் இயேசுவின் நற்செய்தியை அறிவிக்கும் போது, யெருசலேம் நகரில் தலைவெட்டப்பட்டு, மறைசாட்சி யாக இறந்தார். ஜெர்மனி நாட்டின் ட்ரீயர் என்ற நகரில், பழமை வாய்ந்த ஆசீர்வாதப்பர் துறவற மடத்தில் மத்தியாவின் புனித பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளது.


செபம்:

மனிதர்களின் மனங்களை அறியும் இறைவா! திருத்தூதர் மத்தியா எவ்வாறு உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டு, உம்மை ப்பற்றி சான்று பகர்ந்தாரோ, அதேபோல உம் பணிக்காக அழைக்கப்பட்ட ஒவ்வொரு துறவிகளும், குருக்களும் வாழ உதவி செய்தருளும்
.

Friday, 13 May 2016

இன்றைய புனிதர் 2016-05-13 புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட் (St.Andreas Hubert Fairnet) சபை நிறுவனர்

                                              
                             

                   இன்றைய புனிதர் 2016-05-13

               புனித.அந்திரேயா ஹூபர்ட் பேர்னெட்                                                               (St.Andreas Hubert Fairnet)

                                                சபை நிறுவனர்

பிறப்பு  6 டிசம்பர், 1752  வியன்னா (Wien)
இறப்பு  13 மே 1834  லா பூய் (La Puye)

புனிதர் பட்டம்: 4 ஜூன் 1933
திருத்தந்தை பதினோராம் பயஸ்

அந்திரேயா ஹூபர்ட் தன் குழந்தை பருவத்தையும் இளமை பருவத் தையும் மிகவும் கஷ்டப்பட்டு கடந்துவந்தார். இதனால் அவரால் சரி யான விதத்தில் கல்வி படிப்பை முடிக்க முடியாமல் போனது. இவர் சிறுவயதிலிருந்தே குருவாக வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஒரு நாள் முதன்மைகுரு அந்திரேயாவின் ஊருக்கு, பங்கு ஆலயத்தை பார்வையிடவந்தார். அச்சமயத்தில் முதன்மைகுரு திருப்பலி நிறை வேற்றினார். அத்திருப்பலிக்கு அந்திரேயா பூசைஉதவி செய்தார். திருப்பலி முடிந்தபிறகு வீடு செல்வதற்காக ஆலயத்திலிருந்து அந்திரேயா வெளியே வந்தார். அப்போது ஆலயத்தின் முன் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பெரிய பணக்காரரிடம் பிச்சை போடும்படி கெஞ்சினார். ஆனால் உதவிசெய்ய அப்பணக் காரர் மறுத்துவிட்டார். இதனை கவனித்த அந்திரேயா அப்பிச்சைக் காரரை தன் வீட்டிற்கு அழைத்துஸ் சென்று தன்னிடம் உள்ளதை யெல்லாம் அவருக்கு கொடுத்தார். இதனை கவனித்த முதன்மைகுரு தன் உடைகள் மற்றும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் அப்பிச் சைக்காரரிடம் கொடுத்துவிட்டு, அந்திரேயாவை தன்னுடன் வரும் படியாக அழைப்பு விடுத்து, அவரின் விருப்பத்திற்கிணங்க குருக்க ளின் இல்லத்திற்கு அழைத்து சென்றார்.

அந்திரேயா தான் ஓர் குருவாக வேண்டுமென்று தனது விருப்பத்தை முதன்மை குருவிடம் தெரிவித்தார். பின்னர் அவர் குரு மடத்தில் சேர் ந்து முறைப்படி கற்று குருவானார். அந்திரேயா ஓர் உயர்ந்த, பலனளி க்கும் நல்ல இறை ஊழியரானார். இவர் ஏழைகளில் ஒருவராக வாழ் ந்தார். அப்போது ஏழை மக்களுக்கு பணிசெய்ய பிரான்சு நாட்டிற்கு சென்றார். அங்கு பல ஏழை மக்களின் வாழ்வை உயர்த்தியபின் 1792 ஆம் ஆண்டு மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்குஸ் சென்றார். அப்போது யோகன்னா எலிசபெத்து என்பவரின் உதவியுடன் ஏழைக்காக ஓர் சபையை தொடங்கினார். இச்சபைக்கு "அந்திரேயாவின் சகோதரி கள்" (Sisters of Andreas) என்று பெயர் சூட்டினார். இச்சபையை அந்திரேயா அவர்களே 1820- 1832 வரை தலைவராக பொறுப்பேற்று வழிநடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, இச்சபையானது பிரான்சு, இத்தாலி,ஸ்பெயின், கனடா என பல்வேறு நாடுகளுக்கு பரவியது. இச்சபையானது ஒரு சில ஆண்டுகளில் ஏழைகளுக்கென்று ஓர் மரு த்துவமனையை கட்டியது. அதனைத் தொடர்ந்து நோயாளர்களை கவனிப்பதற்கென்று ஒரு செவிலிய பள்ளியையும் நிறுவியது. இப் பள்ளியையும், மருத்துவமனையையும் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்கள் ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.


செபம்:

குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்து வரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணரவும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமையை தாரும்.குணமளிப்பவரே எம் இறைவா! மருத்துவம் நாளுக்குநாள் வளர்ந்துவரும் இவ்வுலகில், நீரே அனைத்திற்கும் மேலாக, முதல்வ ராக, குணமளிப்பவராக உள்ளீர் என்பதை இவ்வுலக மக்கள் உணர வும் உமது அருளாலே எப்போதும் குணம் பெறவும் உமது வல்லமை யை தாரும்.

Wednesday, 11 May 2016

இன்றைய புனிதர் 2016-05-12 புனித பங்கிராஸ் மறைசாட்சி

                        
                    இன்றைய புனிதர் 2016-05-12                                               புனித பங்கிராஸ் மறைசாட்சி

பிறப்பு 289 சின்னாடா(Synnada), பிரிஜியா(Phrygia)

இறப்பு 304 அவுரேலியா(Aurelia), ரோம்(Rome)

கிறிஸ்துவின் மீது மிகுந்த பக்திகொண்ட பங்கிராஸ் தனது 14 வயதிலேயே டயக்ளீசியன் காலத்தில் கொடிய சித்ரவதைக்கும், சாவுக்கும் உள்ளானார். கிறிஸ்துவை நெருங்கி பின்பற்றிய பங்கிராசின் மாமா டெனிஸ் இவரை வளர்த்தார். நாளடைவில் டெனிஸ் கிறிஸ்துவுக்காக சிறையில் அடைக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தார். புனித பங்கிராஸ் உரோமையில் மறைசாட்சியாக இறந்தார். அவர் இறந்தபோது து508 ஆம் ஆண்டு திருத்தந்தை சிக்மாக்கஸ் இவரது கல்லறைமீது ஒரு பேராலயம் எழுப்பினார். இப்புனிதரின் கல்லறை உரோமில் அவுரேலியா சாலையில் உள்ளது. உரோமையில் இன்று வரை இந்த ஆலயம் அழகாக காட்சியளிக்கிறது.

இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவ ரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்ற போது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிக ளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழு திய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதி னார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


செபம்:
எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.


இளைஞர் பங்கிராஸ் இன்று எந்த அளவுக்கு சிறப்புப்பெற்றவ ரெனில், லண்டனில் புனித பங்கிராஸ் பெயரில் தொடர்வண்டி நிலையம் ஒன்று இன்றும் காட்சியளிக்கிறது. புனித பெரிய கிரகோரியார் மறைபரப்பு பணிக்கென இங்கிலாந்து சென்ற போது, இப்புனிதர் பெயரால் ஆசீர்வாதப்பர் சபைத் துறவிக ளுக்கு துறவு மடம் கட்டினார். அப்போது இச்சபையை சேர்ந்த துறவியும் ஆயருமான அகஸ்டின் பதவிக்கு வந்தார். அப்போது அவர் அந்த நாட்டில் எழுப்பிய முதல் ஆலயத்திற்கு புனித பங்கிராஸ் பெயரை சூட்டினார்.

கர்தினால் வைஸ்மன் "பபியோலா" என்ற புனைப்பெயரில் எழு திய பங்கிராசின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து எழுதி னார். பங்கிராஸின் வாழ்க்கை வரலாற்றில் நமக்கு கிடைக்கும் தகவல் மிக மிக குறைந்ததே ஆயினும், விசுவாசத்தில் வீரச்சாவு வரைக்கும் அவர் காட்டிய பற்றுறுதி அன்று முதல் இன்று வரை ஓர் உயர்ந்த எடுத்துக்காட்டாக உள்ளது.


செபம்:

எல்லாம் வல்ல இறைவா! உமது திருச்சபையைக் காக்க மறைசாட்சியாக மரித்த பங்கிராசுக்காக, இன்று நாங்கள் உம்மை போற்றி புகழ்கின்றோம். விண்ணகத்திலிருந்து அவர் புரியும் மன்றாட்டின் உதவியினால் திருச்சபையை வளர்க்க நீர் எங்களுக்கு உதவி செய்தருளும்.

Tuesday, 10 May 2016

இன்றைய புனிதர் 2016-05-11 புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi) கப்புச்சின் சகோதரர்

                     
                      இன்றைய புனிதர் 2016-05-11
               புனித.லாக்கோனி இக்னேஷியஸ் (St.Ignatius of Laconi)                                                                            கப்புச்சின் சகோதரர்

பிறப்பு  1701 சார்டினியன்(Sardinien), இத்தாலி

இறப்பு  1785 சார்டினியன், இத்தாலி

21 அக்டோபர் 1952 திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்
இவர் இளமையாக இருக்கும்போதே தனது தந்தைக்கும், மாமா விற்கும் வயலில் வேலை செய்வதற்கு உதவி செய்து வந்தார். தனது 18 ஆம் வயதில் நோயால் தாக்கப்பட்டு, மிகவும் வேதனை அடைந்தார். அப்போது தன் நோய் குணமானால் தான் ஓர் துறவி யாகிறேன் என்று இறைவனிடம் சத்தியம் செய்து குணம் பெற வேண்டி தொடர்ந்து செபித்தார். இவரின் மன்றாட்டை இறைவன் கேட்டதால் இரண்டு ஆண்டுகள் கழித்து பூரண குணமடைந்தார். குணமடைந்த உடன் இவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மறந்துவிட்டார். அதன்பிறகு ஒருநாள் குதிரையில் சவாரி செய் தார். அப்போது குதிரையின் மீதிருந்து வ்ழுக்கி கீழே விழுந்ததில் பலமாக அடிப்பட்டார். அப்போதுதான் அவர் இறைவனிடம் செய்த சத்தியத்தை மீண்டும் நினைவுகூர்ந்தார். மீண்டும் இறை வனிடம் இறைவேண்டல் செய்தார். ஆனால் தன் நோயை கண் டிப்பாக குணமாக்க வேண்டுமென்று செபிக்காமல், இறைவன் விரும்பினால் குணமாக்கட்டும் என்று செபித்தார். அப்போது தனது 20 ஆம் வயதில் கப்புச்சின் துறவற மடத்திற்கு சென்றார். பின்னர் 1736 ஆம் ஆண்டிலிருந்து கப்புச்சின் துறவறமடத்தில் உறுப்பினரானார்.  இக்னேஷியஸ் தன்னுடன் இருந்த மற்ற சகோதரர்களுடன் நட்புடனும், சுமூகமான உறவுடனும், அனை வரையும் மகிழ்ச்சிப்படுத்தியும், உதவி செய்தும் வாழ்ந்தார். தனது 45 ஆம் வயதுவரை தனது குழுமத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே பணிவிடை செய்து வந்தார். ஆனால் அவர் மற்றவர் களை பற்றி ஒரு சிறிய அளவில் கூட குறை கூறவில்லை. அவ ரின் உதடு கடுமையான சொற்களை ஒரு நாளும் உச்சரிக்கவி ல்லை. அவருக்கு வேலை பளு அதிகமானபோதுகூட மற்றவர்க ளிடம் அதை ஒப்படைக்காமல், புன்முறுவலுடன் செய்து முடிப் பார். தனது வாழ் நாட்களில் தனது உடலில் ஏற்பட்ட ஒவ்வொரு நோய்களையும் இறைவனிடம் இறைவேண்டுதல் செய்தே குணம் பெற்றார்.

இவரை தாக்கிய பல நோய்கள் இயேசுவின் அற்புதத்தால் குண மாவதை பார்த்த பலரும் பரவசமடைந்தனர். இறுதியாக இக்னேஷியஸ் தனது 84 ஆம் வயதில் இறைவனடி சேர்ந்தார்.


செபம்:

கேளுங்கள் உங்களுக்கு கொடுக்கப்படும் என்று கூறிய இயேசுவே! மருத்துவராய் இருந்து பல அற்புதங்களை செய்து புனித லாக்கோனி இக்னேஷியசை குணப்படுத்தி வாழ்வழ் ளித்தீர். அவரைப்போலவே நாங்களும் எங்களது சிறு, சிறு நோயிலும் உம்மீது நம்பிக்கை வைத்து, உமது ஆசீரால் குணம் பெற உமதருளை தந்து எம்மை காத்தருளும்.

இன்றைய புனிதர் 2016-05-10 புனித.அவிலா அருளப்பர் (St.John of Avila) அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)

                  
                இன்றைய புனிதர்2016-05-10

புனித.அவிலா அருளப்பர் (St.John of Avila)

அண்டலூசியா திருத்தூதர்(Apostle of Andalusien)

பிறப்பு 1500 ஸ்பெயின்

இறப்பு  10 மே 1569  மோண்டில்லா (Montilla), ஸ்பெயின்
31 மே 1970 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவரின் தந்தை ஓர் யூத குலத்தை சேர்ந்தவர். இதனால் யூதரான அருளப்பர் பள்ளியிலும், கல்லூரியிலும் இருந்து அவ்வப்போது வெளியேற்றப்பட்டார். மாணவர்களுக்கான உரிமைகள் அனை த்தும் இவரிடமிருந்து பறிக்கப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, அமெரிக்காவில் மிஷினரியாக பணியாற்ற விரும்பி இறையி யலை முறைப்படி கற்றார். ஆனால் இவரால் இத்திட்டத்தை நிறைவேற்றாமல் போகவே, ஸ்பெயினில் இத்திட்டத்தை நிறை வேற்றினார்.

ஏறக்குறைய 1530 லிருந்து அருளப்பர் செவிலா நகர் (Sevilla) ஆயரு டன் இணைந்து மறைபரப்பு பணியாளராக அண்டலூசியாவில் பணியாற்றினார். இவரது மறைபரப்பு பணியால் கவரப்பட்ட பலர் அவரை பின் தொடர்ந்தனர். பலரும் இவர் உரைத்த இறை வாக்குகளை கேட்டு தங்களின் தாறுமாறான வாழ்வை மாற்றிக் கொண்டனர். இவரின் எளிமையான வாழ்வும், போதனையும் எல்லோரையும் தன்னிடத்தில் ஈர்த்தது. இக்னேசியஸ் லயோலா தொடங்கிய இயேசு சபைக்கு அருளப்பர் பல விதங்களில் உதவி செய்தார். ஆனால் அருளப்பரிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொண்ட இயேசு சபை சகோதரர்கள், மத அடிப்படையில் அவரு க்கு பல தொந்தரவுகளை கொடுத்தனர். அருளப்பரை மிகவும் துன்புறுத்தினர். இறை இயேசுவின் மறைபோதனை பணியை திறம்பட ஆற்றிய அருளப்பர் ஏறக்குறைய 20 ஆண்டுகள் தீராத நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். இறந்த இவரின் உடலை இயேசு சபையினர் அவர்களின் மடத்திலிருந்த கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி தர மறுத்துவிட்டனர். இதனால் மாண் டிலாவில் இருந்த இயேசு சபைக்கு சொந்தமான ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

இவர் எழுதிய பல கடிதங்களும், புத்தகங்களும் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திருவருட்சாதனங்களைப் பற்றியும், அன்னை மரியாவைப் பற்றியும் இவர் எழுதிய 18 நூல் கள் ஒன்று சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந் நூல்களை வாசிக்கும்போதே அவிலா அருளப்பரின் மிக எளி மையான வாழ்வையும், அவரின் போதனைகளையும் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். இவர் ஸ்பெயின் நாடு முழுவதிலும் சென்று மிஷினரியாக பணியாற்றினார். சிறப்பாக இவர் அண்டலூசியாவின் அப்போஸ்தலர் என்று அழைக்கப்பட்டார்.


செபம்:

எங்களோடு இருந்து எம்மை நாளும் வழிநடத்திவரும் எல்லாம் வல்ல இறைவா! புனித அவிலா அருளப்பரின் மறைபோத னையின் வழியாக ஏராளமான மக்களை உம்பால் ஈர்த்தீர். இப்புனிதரின் வழியாக நீர் உம் மக்களோடு பேசினீர். உமக்கு எதிராக செயல்படும் ஒவ்வொருவரையும் நீர் மனந்திருப்பி, உமது சாட்சிகளாக வாழ வரம் தாரும்.

Sunday, 8 May 2016

இன்றைய புனிதர்2016-05-09 புனித.கரோலின் கெராடிங்கர் (St.Karoline Gerhardinger) சபை நிறுவுனர்


இன்றைய புனிதர்2016-05-09

புனித.கரோலின் கெராடிங்கர் (St.Karoline Gerhardinger)
சபை நிறுவுனர்
பிறப்பு 1797 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி
இறப்பு 9 மே 1879 மியூனிக்(Munich) , ஜெர்மனி


புனிதர்பட்டம்: 17 நவம்பர் 1985
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால்

கப்பலோட்டியின் மகளாக பிறந்த இவர் 1833 ஆம் ஆண்டுவரை தான் பிறந்த ஊரிலேயே ஆசிரியராக பணியாற்றினார். அப்போது ரேகன்ஸ்பூர்க்கில் ஆயராக இருந்த ஜார்ஜ் மைக்கேல் என்பவர் ஒரு துறவற மடம் தொடங்க திட்டமிட்டார். இத்துறவற மடம் இளைய பெண்குழந்தைகளை பராமரிப்பதற்காக இருக்க வேண்டுமென்று நினைத்தார். அப்போது ஆயர் ஜார்ஜ், கரோலின் உதவியை நாடினார். பின்னர் இருவரும் சேர்ந்து "மரியாவின் எளிய அருட்சகோதரிகள்" (Congregation of School sisters of Notredam) என்ற சபையை முதன்முதலில் நூர்ன்பர்க்கில் 1834 ஆம் ஆண்டு மார்ஸ் 22 ஆம் நாள் நிறுவினார்கள். இச்சபையை தொடர்ந்து வழிநடத்த அரசர் முதலாம் லூட்விக் பல உதவிகளை செய்தார்.

ரேகன்ஸ்பூர்கிலிருந்து இப்புதிய துறவற மடத்தில் தங்கும் அறைகள் மிக குறைவாக இருந்ததால் 1843 ஆம் ஆண்டு இத்துறவற சபையை மியூனிக்கில் இருந்த புனித கிளாரம்மாள் துறவற மடத்திற்கு மாற்றினார். மிகக் குறைந்த வருடங்களில் இத்துறவற சபை மிகவேகமாக உலகம் முழுவதும் பரவியது. பின்னர் இச்சபை 'இயேசுவின் புனித தெரசாள்" என்று பெயர் மாற்றம் பெற்றது. தான் இறக்கும் வரை கரோலின் அவர்களே இச்சபையின் தலைவியாக பொற்ப்பேற்று வழிநடத்தினார்.

இவர் மியூனிக்கில் உள்ள புனித யாக்கோபு ஆலயத்தில் தனது இறுதி நாட்களை கழித்தார். இவரது உடல் புனித யாக்கோபு ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:

ஏழைகளின் நண்பனே எம் இறைவா! ஆசிரியர் பணியின் வழியாகவும், குழந்தைகளை பராமரிக்கும் பணியின் வழியாகவும் உமக்குரியவராக புனித கரோலின் வாழ்ந்தார். இவரைப் போலவே ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களின் பணி வாழ்வின் வழியாக உம்மைப் போற்றி புகழ உம் வரம் தாரும்.

இன்றைய புனிதர்2016-05-08 புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy) துறவி, சபை நிறுவுனர்

இன்றைய புனிதர்2016-05-08                                                                 புனித.கிளாரா ஃபாய் (St.Klara Foy)                                                                     துறவி, சபை நிறுவுனர்                                                                                       

பிறப்பு 11 ஏப்ரல் 1815 ஆஹன்(Aachen), ஜெர்மனி                                   இறப்பு 8 மே 1848 சிம்பல்பெல்டு(Simpelfeld), ஹாலந்து

வர் தனது கல்வியை முடித்தபின் துறவற சபைகளை பற்றி தெரிந்து கொள்ள பல புத்தகங்களை படித்தார். ஆஹனில் பிற ந்த இவர், தனது பங்குதந்தை பவுல் உதவியுடன், பல சமூக பணி களில் தன்னை ஈடுபடுத்தினார். சிறப்பாக இளைஞர்களிடத்தில் அதிக அன்பு காட்டினார். 1837 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் ஆஹனில் இளைஞர்களுக்கென்று ஓர் பள்ளியை நிறுவினார். இப்பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு, இவரின் சமூக சேவை பணிக்குழுவில் இருந்தவர்கள் முன் வந்தனர். இவ ர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சமூக சேவையோடு, 1844 ஆம் ஆண்டு இறைவனின் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திகொ ண்டனர். இதன் விளைவாக 1848 ஆம் ஆண்டு கிளாரா ஃபாய் அவ ர்கள் "குழந்தை இயேசுவின் ஏழைகள்" என்ற சபையை நிறுவி னார். ஏராளமான ஏழை குழந்தைகளை ஒன்று சேர்த்து அவர் களை பராமரித்தார்கள் இச்சபை கன்னியர்கள். அதோடு கல்வி கற்றுக் கொடுத்து, வாழ்விற்கு வழிகாட்டி, தாய்க்குத் தாயாக இருந்து பராமரித்தார்கள். நாளடைவில் குழந்தைகளின் எண் ணிக்கை பெருகவே மீண்டும் ஓர் துறவற இல்லத்தை நிறுவி னார். இதில் பல கைவிடப்பட்ட பெண்களும், விதவைகளும் வந்து சேர்ந்தனர். கிளாரா இச்சபையை தொடங்கிய 15 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி முழுவதும் 19 துறவற மடங்களை துவ ங்கினார். சில கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையில் இவ ரது சபை ஹாலந்து நாட்டிலும் தொடங்கப்படவேண்டியதாக இருந்தது. இதனால் ஹாலந்து நாட்டில் ஓர் துறவற மடம் தொடங் கப்பட்டு, அந்த மடமே பிற்காலத்தில் இச்சபையின் தலைமை இல்லமாகவும் அமைந்தது. இச்சபையின் முதல் சபைத்தலைவி யாக கிளாரா ஃபாய் அவர்களே பொறுப்பேற்றார். பல ஏழை குழ ந்தைகளுக்கும், கைவிடப்பட்ட பெண்களுக்கும், விதவைகளுக் கும் தாயான இவர் இறந்தபிறகு ஹாலந்து நாட்டிலுள்ள சிம்பல் பெல்டு என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, இவரை முன் மாதி ரியாக கொண்டு இன்றுவரை இச்சபைத்துறவிகள் பணியா ற்றிவருகிறார்கள்


செபம்:


ஏழைகளே நீங்கள் பேறுபெற்றவர்கள் என்று மொழிந்த இயேசுவே! பெண்களின் மேல் அக்கறை கொண்டு, ஓர் சபையை நிறுவி இன்று வரை பணியாற்றிகொண்டிருக்கும் இச்சபையை நீர் நிறைவாக ஆசிர்வதியும். பெண்களின் முன்னேற்றத்தி ற்காக உழைக்கின்ற ஒவ்வொருவருக்கும் நல்ல உடல், உள்ள, ஆன்ம நலன்களை தந்து, எல்லா இடையூறுகளையும் எதிர் கொள்ள உமது சக்தியை தந்து, ஆசீர்வதித்து வழிநடத்தி யருள வேண்டுமென்று தந்தையாம் இயேசுவே உம்மை வேண்டு கிறோம்.

Saturday, 7 May 2016

இன்றைய புனிதர் 2016-05-07 புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary) துறவி , ஹங்கேரி நாட்டு அரசி

                   
                  இன்றைய புனிதர் 2016-05-07                                            புனித.கீசலா (St.Gisela, Queen of Hungary)                                                                                          துறவி , ஹங்கேரி நாட்டு அரசி

பிறப்பு 985 ரேகன்ஸ்பூர்க் (Regensburg), ஜெர்மனி

இறப்பு 7 மே 1060 பாசாவ் (Passau), ஜெர்மனி

இவர் ஹங்கேரி நாட்டு அரசர் இரண்டாம் ஹென்றியின் மகளாக பிறந்தார். இவரது பெற்றோர் இவரை ஹங்கேரி நாட்டை சேர்ந்த அரசர் முதலாம் ஸ்டீபன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். 1003 ஆம் ஆண்டு இவர்களுக்கு எமரிச் (Emmerich) என்ற ஓர் மகன் பிறந்தார். கீசலா ஆன்மீக காரியங்களில் மிகவும் அக்கறை காட்டிவந்தார். ஹங்கேரியில் இருந்தபோது தினமும் தவறாமல் திருப்பலிக்கு செல்வதிலும், ஆலய பணிகளில் ஈடுபடுவதிலும் முழுகவனம் செலுத்திவந்தார். அப்போது அவர் தனது அரண்மனை அருகிலேயே ஓர் ஆலயம் எழுப்பினார்.

1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.


செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்
1038 ஆம் ஆண்டு கீசலாவின் கணவர் அரசர் முதலாம் ஸ்டீபன் இறந்துவிட்டார். இதனால் கீசலா விதவையாக ஆனார். அச்சமயத்தில் அவரை அரண்மனையில் இருந்த ஆண்கள் பலர், தங்களது ஆசைகளுக்கு இணங்க வற்புறுத்தினர். இதனை மறுத்த கீசலா பல்வேறு துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டார். சில வெறியர்களால் கீசலா ஹங்கேரி நாட்டிலிருந்து, ஜெர்மனி நாட்டிலுள்ள பாசாவ் என்ற ஊருக்கு அழைத்துவரப்பட்டு, அரசர் மூன்றாம் ஹென்றியின் அரண்மனையில் இருந்த சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அங்கு பெனடிக்ட் துறவற சபையை சார்ந்த துறவற இல்லம் இருந்தது. கீசலா 1045 ல் இத்துறவற சபையில் சேர்ந்து முறைப்படி பயிற்சிகள் பெற்று, ஒரு சிறந்த துறவியானார். துறவி கீசலா மிகவும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இறைவனின் பாதையில் தன் காலத்தை கழித்தார். தனது ஜெப வாழ்வினாலும், தவ வாழ்வினாலும் மற்றவர்களை கவர்ந்தார். இதனால் மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.

1060 ல் இறந்தபோது அடக்கம் செய்யப்பட்ட இவரது கல்லறை, 1908 ஆம் ஆண்டு மீண்டும் திறக்கப்பட்டது. பல ஆண்டுகள் கழித்தும், இவரது உடல் அழியாமல் காணப்பட்டது.


செபம்:
வாழ்வின் வழிகாட்டியே எம் இறைவா! திருமணமானபோதும், உம்மில் விசுவாசம் கொண்டு பின்னர் துறவியாக தன்னை அர்ப்பணித்து, உமக்காக உயிர்விட்ட புனித கீசலாவைப்போல, இல்லற வாழ்வில் உள்ள ஒவ்வொரு பெண்களும், எல்லாஸ் சூழலிலும் உம்மில் விசுவாசம் கொண்டு வாழ, நீர் அவர்களோடு இருந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்

Friday, 6 May 2016

இன்றைய புனிதர் 2016-05-06 புனித டோமினிக் சாவியோ இளைஞர்களின் பாதுகாவலர்

                            
                           இன்றைய புனிதர் 2016-05-06
                          புனித டோமினிக் சாவியோ
                                               இளைஞர்களின் பாதுகாவலர்

பிறப்பு  1842முரியால்டோ, இத்தாலி (Murialdo)
இறப்பு  9 மார்ச் 1857 

முத்திபேறுபட்டம்: பதினோறாம் பத்திநாதர்
புனிதர் பட்டம்: 1954 பனிரெண்டாம் பத்திநாதர்
டோமினிக் சாவியோ, புனித தொன்போஸ்கோவின் முதல் மாண வர். இவர் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே ஆன்மீக வாழ் வில் சிறந்து காணப்பட்டார். இவரின் குடும்பத்தில் இருந்த ஒவ் வொருவருமே, இவரை பக்தியுள்ள குழந்தையாக வளர்த்தனர். இவரின் பங்கு ஆலயத்தில் இருந்த பங்குதந்தை ஜான், டோமினி க்கின் தெய்வீக ஆர்வத்தை கண்டு, இன்னும் அதிகமாக இயேசு வை நெருங்கி செல்ல வழிகாட்டினார். அன்னை மரியிடம் பக்தி யை வளர்க்க எங்கும் நல்ல சூழ்நிலை இருந்தது. காற்று, மழை, குளிர், வெயில் என்று பாராமல் அதிகாலையிலேயே தினமும் தவறாமல் திருப்பலிக்கு சென்று பூசை உதவி செய்தார்.

டோமினிக் தான் பெற்ற திருமுழுக்கை பழுதின்றி பாதுகாத்து, புனிதத்துவத்தில் திளைத்தார். இதனால் சிறு வயதிலிருந்தே இவர் ஓர் புனிதராக கருதப்பட்டார். இவரின் வாழ்வு இளைஞர்க ளுக்கு ஓர் எடுத்துக்காட்டான வாழ்வாக இருந்தது. இவரின் தூய்மை, பக்தி, ஆன்ம வேட்கை மற்றவர்களின் வாழ்வை சிந்தி க்க தூண்டியது. இவரின் கிறிஸ்துவ வாழ்வு உயிரோட்டம் நிறைந்த வாழ்வாக இருந்தது என்று திருத்தந்தை பதினோராம் பத்திநாதர் குறிப்பிடுகின்றார்.

இவர் இறப்பதற்குமுன், விண்ணகவாழ்வைப்பற்றி காட்சியாக கண்டு, ஆஹா, என்ன ஒரு அற்புதமான, இன்பமயமான காட்சி என்று கூறி மகிழ்வோடு உயிர்துறந்தார். 1954 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாள் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் புனிதர் பட்டம் கொடுக்கும்போது, இன்றைய இளைஞர்கள் டோமினிக் கின் வாழ்வை பின்பற்ற வேண்டுமென்று கூறினார். தீமையை விடுத்து, நன்மையை நாடி இறைப்பற்றோடு வாழ்ந்து சான்று பகர வேண்டும் என்று இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்தார்.


செபம்:

"எனக்கு பெரிய செயல்களை சாதிக்க ஆற்றல் கிடையாது. ஆனால் நான் செய்வது அனைத்தையும் மிகச் சிறியவையாக இருப்பினும், அவற்றை இறைவனின் மகிமைக்காக செய்கி றேன்" என்று கூறிய தோமினிக் சாவியோவைப்போல, நாங்க ளும் எல்லாவற்றையும் இறைவனின் மகிமைக்காக செய்ய இறைவா எமக்கு உமதருள் தாரும்.

Wednesday, 4 May 2016

இன்றைய புனிதர் 2016-05-05 புனித.காடேஹார்டு(St.Godehard) ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim)

                 
               இன்றைய புனிதர் 2016-05-05

புனித.காடேஹார்டு(St.Godehard)

ஹில்டஸ்ஹைம் ஆயர் (Bishop of Hildesheim)

பிறப்பு 960 ரைகர்ஸ்டோர்ப் (Reicherdorf), ஜெர்மனி

இறப்பு 5 மே 1038 ஹில்டஸ்ஹைம், ஜெர்மனி


புனிதர் பட்டம்: 1131
திருத்தந்தை. இரண்டாம் இன்னொசெண்ட்
ஹில்டஸ்ஹைம் நகரின் பாதுகாவலர்

காடேஹார்டு ஓர் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார். இவர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே இவரின் தந்தை தன் நில த்தை பெனடிக்ட் சபையை சேர்ந்த குருக்களுக்கு தானமாக தந் தார். இச்சபையை சார்ந்தவர்களும் அந்நிலத்தில் ஒரு துறவற இல்லம் கட்டினர். நாளடைவில் சிறுவன் காடேஹார்டு பள்ளி செல்லும் பருவத்தை அடைந்தததால் குருக்களாலேயே பள்ளி க்கு அழைத்து செல்லப்பட்டான். அறிவிலும், ஞானத்திலும் மிக சிறந்தவனாய் இருந்தான். கல்வியை முடித்துவிட்டு, துறவிக ளின் மடத்திலேயே சிறுசிறு உதவிகளை செய்து கொடுத்து, அவர்களுடனே தங்கினார். அப்போது துறவிகளோடு சேர்ந்து பாடல்கள் பாடுவதிலும், திருப்பலியிலும் பங்கேற்றார். துறவற குருக்களின் வாழ்க்கை இவருக்கு பிடித்துவிடவே, தானும் குருவாக வேண்டுமென்று ஆசைகொண்டு, 990 ஆம் ஆண்டு தனது துறவற வார்த்தைப்பாடுகளைபெற்று குருவானார். இவர் குருவானபிறகு ஜெர்மனியிலுள்ள ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பப்பட்டார்.

அப்போது ஜெர்மனியை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் ஹென்றி அவர்களால் 1022 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் ஹில்டஸ்ஹைமிற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஆயரான பிறகு ஜெர்மனி முழுவதும்30 புதிய ஆலயங்களையும், ஒரு சில பெரிய தேவாலயங்களை பழுது பார்த்து திருத்தியமைக்கும் பணியையும், பல பள்ளிகளையும் கட்டினார்.

பின்னர் "குளுனி" என்ற சபையை நிறுவினார். அதன்பிறகு பிரான்ஸ் நாட்டிலும் இச்சபையை தொடங்கினார். ஆயர் காடேஹார்டு மக்களிடம் காட்டிய அன்பிற்கு ஈடு இணை ஏதும் கிடையாது. ஹங்கேரி, ஹாலந்து, போலந்து, சுவிட்சர்லாந்து என பல்வேறு நாடுகளுக்கு சென்று மறைபரப்பு பணியை செய்து இறைவன்பால் மக்களை ஈர்த்தார். ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றினார். எப்போதும் புன்முறுவலுடன் பணிசெய்து, மக்களின் நண்பனாகவும், இறைவனின் சீடனாகவும் இறுதிவரை வாழ்ந்தார். இவர் இறக்கும் வரை இறைவனின் பணியை இடைவிடாமல் ஆர்வமாக ஆற்றினார். இவர் இறந்தபின் இவரது உடல் ஹில்டஸ்ஹைமில் உள்ள பெரிய தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


செபம்:

நல்ல ஆயனாம் இறைவா! இறக்கும்வரை மக்களுக்கு உதவி செய்து, ஏழைகளின் சிரிப்பில் இறைவனை கண்ட காடேஹார்டைப் போல, இன்றைய உலகில் வாழும் உமது இறை ஊழியர்களும் பணிபுரிய உம் அருள்தாரும்

Tuesday, 3 May 2016

இன்றைய புனிதர் 2016-05-04 புனித.ஜோசப் மேரி ரூபியோ சேசு சபை குரு

                        
                      இன்றைய புனிதர் 2016-05-04
புனித.ஜோசப் மேரி ரூபியோ சேசு சபை குரு

பிறப்பு 1864ஸ்பெயின்
இறப்பு 1929மட்ரிட், ஸ்பெயின்
இவர் மட்ரிட் நகர் (Madrid) அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். இவர் இளமையாக இருக்கும்போதே, இறைபணியிலும், சமூக பணியிலும் மிகவும் ஆர்வம் காட்டி வந்தார். அறிவில் சிறந்து விளங்கிய இவர், இறையியல் படிப்புகளைத் திறம்பட முடித்தார். தமது 23 ஆம் வயதில் குருவாக திருநிலைபடுத்தப்பட்டு மட்ரிட் மறைமாவட்டத்தில் பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அப் போது அங்கு ஏறக்குறைய 23 ஆண்டுகள் தந்தை ஜோக்கிம்டோ ரஸ் என்ற குருவிடம் மிக நெருக்கமான தோழமை கொண்டி ருந்தார். இயேசு சபையில் சேர வேண்டுமென்று ஆசைப்பட்ட ரூபியோ, டோரஸின் தோழமையால் அதை தள்ளிபோட்டார். 19 ஆண்டுகள் மட்ரிட் மறைமாநிலத்தில் சிறப்பாக செய்தார். அப்போது தந்தை திடீரென்று இறைவனடி சேர்ந்தார். அதன்பின் ரூபியோ இயேசு சபையில் சேர்ந்து கிரனாடா நகரில் இளந்துறவு நிலையை தொடர்ந்தார். அப்போது இவரின் வயது 42. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தனது துறவற வார்த்தைப்பாடுகளை கொடுத்தார். பின்பு மீண்டும் மட்ரிட் வந்து 18 ஆண்டுகள் தொடர்ந்து இறைபணியை ஆற்றினார்.

ரூபியோ ஒப்புரவு அருட்சாதனத்திலும், சிறப்பாக மறையுரை ஆற்றுவதிலும் வல்லவராக இருந்தார். அரசர்களும், மக்களும் இவரிடம் ஒப்புரவு அருட்சாதனம் பெற எப்போதும் காத்து கொண்டிருந்தார்கள். பாவ அறிக்கையைவிட ரூபியோ மக்களு க்கு கொடுத்த அறிவுரையே மக்களை அதிகம் கவர்ந்தது. இவர் தம் மறையுரைகளில் எளிமை காணப்பட்டது. மற்றவர்களின் மனதை மாற்றியது. கடவுளை அன்பு செய்யும் எளிய முறைக ளைக் கற்றுக்கொடுத்தார். திரு இதய பக்தியையும், நற்கருணை நாதர் பக்தியையும் பரப்பி வந்தார். இதனிடையே அப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் மக்களை சந்தித்து வந்தார். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்து வந்தார்.

ஆலயப்பீடத் திருப்பணிக்குத் தேவையான துணிகள் போன்ற பொருட்களுக்கு எல்லா ஆலயங்களிலும் தக்க அக்கறை செலு த்துவதற்கெனப் பெண்கள் இயக்கம் ஒன்றை தொடங்கினார். நாளடைவில் 6000 பெண்கள் இதில் உறுப்பினர்களாக சேர்ந்து பணி செய்தனர். இயேசுவின் திரு இதய பக்தியை வளர்க்கவும், சமுதாய தொண்டு புரியவும் வேறு ஓர் அமைப்பையும் ஏற்படு த்தினார். இவ்வமைப்பில் 5000 பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த அமைப்பு ஏழை மாணவ மாணவிகளுக்குப் பொருளுதவி அளி த்து, கல்வி கற்க வைத்து, ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு பொருளுதவியும் செய்தனர்.

இல்லறத்தினர் தலத்திருச்சபையில் தியானம், நோயாளிகளை சந்தித்தல் போன்ற தொண்டுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள தந்தை ரூபியோ மிக சிறந்த வழிகாட்டியாக திகழ் ந்தார். இப்படியாக மட்ரிட் நகரின் எல்லா பகுதிகளிலும் ரூபியோ வின் செயல்பாடுகள் எதிரொலித்தது. ரூபியோ ஏராளமான இளம் உள்ளங்களுக்கு குருத்துவத்திற்கும், துறவற வாழ்வுக்கும் வழிகாட்டினார். பிரான்ஸ் நாட்டில் புனித மரிய வியான்னியை அவர் வாழ்ந்த போதே எப்படி மதித்துப் போற்றினார்களோ, அதேபோல் தந்தை ரூபியோவையும், மட்ரிட் நகரினர் மதித்து வந்தனர். அப்போது ரூபியோ தனது 64 ஆம் வயதில் இதய நோயால் பாதிக்கப்பட்டு இறந்தார்.


செபம்:

உலகை படைத்து பராமரித்து ஆளும் இறைவா! தந்தை ரூபியோவைப் போல ஏழை, எளியவர்களின் வாழ்வில் ஒளியேற்றி, அவர்களுக்கு வாழ்வளிக்க எமக்கு உமது வழிகாட்டுதலை தந்தருளும்.

Monday, 2 May 2016

இன்றைய புனிதர் 2016-05-03 புனித.பிலிப்பு திருத்தூதர்

                   

            இன்றைய புனிதர் 2016-05 03                             புனித.பிலிப்பு திருத்தூதர்

பிறப்பு பெத்சாயிதா, கலிலேயா

இறப்பு ஹியராப்போலிஸ், பிரிஜியா
கலிலேயாவிலுள்ள பெத்சாயிதா என்ற ஊரில் தோன்றிய பிலிப்பு, யோவான் நற்செய்தியாளரால் மீண்டும் மீண்டும் குறிப் பிடப்படுகின்றார். இறைமகன் இயேசு, பேதுருவையும், அந்திரே யாவையும் தேர்ந்து கொண்டபிறகு, என்னைப் பின்பற்றி வா என்று கூறி பிலிப்பைத் தேர்ந்துகொண்டார். பிலிப்பும் இயேசு வின் அழைத்தலை ஏற்று உடனே அவரைப் பின் தொடர்ந்தார். இதிலிருந்து பிலிப்பு எந்த அளவிற்கு இயேசுவுக்கு பணிந்திருந் தார் என்பதை தெரிந்துக்கொள்ளலாம். பின்பு பிலிப்பு உடனே தன் நண்பர் நத்தனியேலிடம் சென்று, நடந்ததை எல்லாம் விள க்கினார். நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வரக்கூடுமோ என்ற நத்தனியேலிடம் வந்து பாரும் என்று கூறி பதிலளித்தார் பிலிப்பு. இதிலிருந்து பிலிப்பு எவ்வளவு திறந்த மனதுடன் இருந்திருக்கி றார் என்பதை அறிந்து கொள்ளலாம். 200 தெனாரியத்திற்கு அப் பம் வாங்கினாலும் கூட போதாதே என்று யேசுவிடம் பதிலளித் தார் பிலிப்பு (யோவான் 6:7)

ஒருமுறை இயேசுவைப்பற்றி கேள்விப்பட்ட கிரேக்கர்கள் யெருச லேமை வந்தடைந்து, யேசுவைப் பார்க்க வேண்டுமென்று பிலி ப்பிடம் கேட்டனர். உடனே பிலிப்பு இதை அந்திரேயாவிடம் தெரி வித்து இதைப்பற்றி இருவரும் கலந்து பேசி, கிரேக்கர்களைப்ப ற்றி இயேசுவிடம் தெரிவித்தார். இதிலிருந்து பிலிப்பின் உயர்ந்த எண்ணங்களை அறியலாம். தூய ஆவியாரின் வருகைக்கு பிறகு பிலிப்பு ஆசியா சென்று மறைபரப்புப்பணியில் நாட்களை செல விட்டார் என்று தியோடற், யுசிபியுஸ் என்ற பழங்காலத்து வரலா ற்று ஆசியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.


செபம்:

ஆண்டவராகிய கடவுளே! உம் திருத்தூதரான பிலிப்புவின் விழா வை ஆண்டுதோறும் கொண்டாடுவதன் வழியாக எங்களை மகிழ்வித்தீர். அவருடைய வேண்டுதலால் நாங்கள் உமது முடிவி ல்லா பேரின்ப ஒளியை காண எமக்கு உமதருளை தந்தருளும்

இன்றைய புனிதர் 2016-05-02 புனித அத்தனாசியார் ஆயர், மறைவல்லுநர்

                      
                    இன்றைய புனிதர் 2016-05-02
                       புனித அத்தனாசியார்
                        ஆயர், மறைவல்லுநர்

பிறப்பு  கி.பி.295  அலெக்சாந்திரியா, எகிப்து
இறப்பு 3 மே 373 அலெக்சாந்திரியா

அலெக்சாந்திரியா நகரில் வசித்த கிறிஸ்தவர்களில் மிகவும் பக்தியான கிறிஸ்துவ பெற்றோர்க்கு மகனாக அத்தனாசியார் பிறந்தார். கிரேக்க பள்ளியில் படித்த இவர், இளம் வயதிலிருந்தே அறிவுத்திறன் மிகுந்தவராய் காணப்பட்டார். தமது 21 ஆம் வயதிலேயே திருத்தொண்டர் பட்டம் பெற்ற இவர், ஆயர் அலெக்சாண்டரின் செயலராக விளங்கினார். அப்போது மனித அவதாரம் என்ற நூலை எழுதினார். இவர் இளைஞனாக இருந்தபோதிலிருந்தே, பாலைநிலத்தில் தனிமையை தேடி வாழ்ந்து வந்த தவ முனிவர்களுக்கும், சிறப்பாக வனத்து அந்தோணியாருக்கும் மிகவும் அறிமுகமானவராக இருந்தார்.

323 ஆம் ஆண்டு ஆரியுஸ் என்ற கத்தோலிக்க குரு, ஒரு தவறான கொள்கையை உருவாக்கி அதை திருச்சபை முழுவதும் பரப்பி வந்தார். இதனால் ஆயர் அலெக்சாண்டர் இந்த தவறான கொள்கையை பற்றி பேசவேண்டாம் என்று ஆரியுசுக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் ஆரியுஸ் ஆயருக்கு எதிராக செயல்பட்டு, மேலும் செசாரியா பகுதிக்கு சென்று அங்கும் பரப்பிவந்தார். மக்களை கவரக்கூடிய முறையில் இத்தவறான கொள்கைகளை பாடல்களாக தொகுத்து அவற்றை பாடவைத்தார். இந்நிலையில் 325 இல் மிகவும் புகழ்பெற்ற நீசேயா பொதுசங்கம் கூட்டப்பட்டது. இச்சங்கத்தில் தான் விசுவாசப் பிரமாணம் திருச்சபையில் பயன்படுத்தப்பட வேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அப்போது ஆரியுசின் தவறான கொள்கையை சுட்டிகாட்டி, அவர்மீது குற்றம் சாட்டி, அவரை சபைக்கு புறம்பாக தள்ளிவைத்தனர். அப்போது சங்கம் முடிந்த சில நாட்களிலேயே ஆயர் அலெக்சாண்டர் காலமானார். அப்போது 30 வயதே ஆகியிருந்த அத்தனாசியார், அலெக்சாண்டிரியா நகர் ஆயராக நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஆயர் அத்தனாசியார், ஆரியுசின் தவறுகளையும், அவருக்கு உதவி செய்த ஆயர்களையும் வன்மையாக கண்டித்தார். இதனால் 5 முறை ஆயர் அத்தனாசியர் நாடுகடத்தப்பட்டார்.17 ஆண்டுகள் அவர் ஆயராக வாழ்ந்தார். இருப்பினும் அவர் கிறிஸ்துவின் மீது இடைவிடாத பற்றும், நம்பிக்கையும் கொண்டு வாழ்ந்தார். அவரை துன்புறுத்தியவர்களின் மீது சிறிதும் காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல் புனிதராகவே வாழ்ந்தார். அவர்மீது கொடுமையாக குற்றம் சாட்டியவர்களையும், பொறுமையோடு ஏற்று, அன்பு செய்தார்.

அப்போது ஆயர் அத்தனாசியாரை பழிவாங்கும் நோக்கத்துடன், அலெக்சாண்டிரியா ஆயர்களும், ஆரியூசும் ஒன்று சேர்ந்து, கப்படோசியாவை சேர்ந்த கிரகோரி என்பவரை அலெக்சாண்டிரியாவின் ஆயராக தேர்ந்தெடுத்தனர். இதனால் ஆயர் அத்தனாசியார் ரோம் சென்று திருத்தந்தையிடம் நடந்தவைகள் அனைத்தையும் எடுத்துக்கூறினார். பின்னர் திருத்தந்தையின் அனுமதி பெற்று மீண்டும் அலெக்சாண்டிரியாவுக்கு திரும்பினார். அப்போது ஆயராக இருந்த கிரகோரியின் வன்முறைகளை கண்டு அதிர்ச்சியடைந்தார். இவர் திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்டு, இவற்றிற்கு நீதி கிடைக்கவேண்டுமென்று இடைவிடாமல் இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன் விளைவாக ஆயர் கிரகோரியும், அலெக்சாண்டிரியா அரசரும் இறந்துவிட்டனர்.

அதன்பிறகு அரசன் ஜூலியன் அரசனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அரசரானதும் முதலில் ஆயர் அத்தனாசியாரை மீண்டும் ஆயர் பதவியில் அமர்த்தினார். ஆனால் ஆரிய வெறியர்கள் இதனால் சீற்றம் கொண்டு, "அமைதியைக் குலைப்பவர் அத்தனாசியர்" என்று முத்திரையிட்டு, அரசன் ஜூலியனை நாடு கடத்தினர். அதன்பிறகு பகைவர்களால் அரசன் அம்பெய்து, குத்தி கொல்லப்பட்டார். இதனால் மன்னன் வாலென்ஸ் அரசு பதவியை ஏற்றார். இவர் ஆயர் அத்தனாசியருக்கு மிக பெரிய உதவிகளை செய்து, திருச்சபையைக் காத்தார். ஏறக்குறைய 50 ஆண்டுகள் பல்வேறு துன்பங்களை தாங்கி கொண்டு, ஆயர் அத்தனாசியார் திருச்சபையில் கிறிஸ்துவின் படிப்பினைகளை நிலைநாட்டினார். அலெக்சாண்டிரியாவில் இவர் இறந்தாலும், இவரது உடல் வெனிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ளது.


செபம்:
அன்பே உருவான இறைவா! யாருக்கும் தீமை செய்யாமலிருப்பது மட்டும் அறம் ஆகாது. நன்மை செய்யாமலிருப்பதும் தீமையே என்றுரைத்த புனித அத்தனாசியாரைப் போல, நாங்கள் எங்களது திருச்சபைக்கு நல்லதை செய்து வாழ எமக்கு உம் வரம் தாரும்.

Sunday, 1 May 2016

இன்றைய புனிதர் 2016-05-01 புனித யோசேப்பு (சூசையப்பர்) தொழிலாளர்களின் பாதுகாவலர்


                 


               இன்றைய புனிதர் 2016-05-01

                        புனித யோசேப்பு (சூசையப்பர்)                         தொழிலாளர்களின் பாதுகாவலர்

நாத்திக பொதுவுடைமையாளர்கள் மே தினத்தை தொழிலாளரின் நலனுக்கென்று முதன்முறையாக உரு வாக்கினர். இதற்கு முழுமையான பொருள் கிடைக்கும் வகையில் 1955 ஆம் ஆண்டு திருத்தந்தை 12ஆம் பத்தி நாதர் தொழிலாளரான புனித சூசையப்பர் திருநாளை மே மாதம் முதலாம் நாளில் திருச்சபை முழுவதிலும் கொண்டாட பணித்தார். இயேசு ஒரு தச்சு தொழிலாளி என்பதற்கு நம் தாயாம் திருச்சபை முக்கியத்துவம் கொடுக்கிறது. இயேசுவை இப்பணிக்கு உருவாக்கிய வர் சூசையே. மனிதன் தன் கைகளாலும், தன் அறிவா ற்றலாலும் கிறிஸ்துவின் மறையுடலைக் கட்டி எழுப்பக் கடமைப்பட்டவன் என்பதை புனித சூசையப்பர் தன் வாழ்வின் வழியாக உணர்த்தியுள்ளார்.

இன்றைய உலகில் மனிதன், தனது முயற்சியினாலும், திறமையாலும் அடைந்த மாபெரும் வெற்றியை நினை க்க நினைக்க அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கி ன்றது. அனைத்து நாட்டு மக்களும் கைகோர்த்துப் பணியாற்றுகிறார்கள் என்பது வெற்றிக்கு மூல கார ணமாக உள்ளது. உலக மாந்தர் அனைவரும் ஒரு குடும் பத்தினர்போல் சுருங்கிவிட்ட காட்சி வியப்பானது. புதிய சாதனங்களும், கண்டுபிடிப்புகளும் எவ்வாறு பயன்படுத்தப்படவேண்டும் என்பதை திருச்சபை உலக மக்களுக்கு எடுத்துரைத்துவருகிறது. கடவுளின் திட்டம், மனித வரலாற்றில் நிறைவேற, மனிதன் எவ் வாறு ஒத்துழைக்கவேண்டும் என்பதை சூசை தன் வாழ்வில் உணர்த்தியுள்ளார். உலகின் பல பகுதிக ளிலும் மனித உழைப்பின் மாண்பினைப் பாராட்டும் விழா மே மாதம் முதல் நாளன்று கொண்டாடப்பட வேண்டுமென்று இத்திருவிழா நிறுவப்பட்டது.

செபம்:
உலகை படைத்து பராமரித்து ஆளும் இறைவா! உழைக்க வேண்டும் என்னும் நியதியை, மனித இனத்திற்குத் தந்துள்ளீர். நாங்கள் புனித யோசேப்பின் எடுத்துக்காட்டான வாழ்வாலும், மன்றாட்டாலும் நீர் கட்டளையிடும் பணிகளை புரியவும், நீர் வாக்களித்த பேற்றைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வரம் அருளும்.