Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 30 June 2016

இன்றைய புனிதர் 2016-07-01 புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon) திருத்தொண்டர்

                                  

                     இன்றைய புனிதர்2016-07-01

புனித இக்னேசியஸ் பால்சோன் (St.Ignatius Falzon)

                                              திருத்தொண்டர்

பிறப்பு 1813 மால்டா

இறப்பு01 ஜூலை 1875            

 புனிதர்பட்டம்: 1905, திருத்தந்தை 10ஆம் பயஸ்

இவர் குழந்தை பருவத்திலிருந்தே மிகவும் பக்தியா னவராக வளர்ந்தார். தினமும் ஜெபமாலை செபிப்ப தில் வல்லவராக திகழ்ந்தார். இவர் தனது உயர் கல்வி யை முடித்தபின் குருமடத்திற்கு சென்றார். ஆனால் குருவாவதற்கான வயதையும், தகுதியும் இவரிடம் இல்லாமல் இருந்தது. இதனால் தன் வாழ்நாள் முழுவ தும் இவர் ஓர் ஆன்ம வழிகாட்டியாக பணிபுரிந்தார். இவர் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் ஞான உபதேசம் கற்றுக்கொடுப்பதிலும், அடிக்கடி மால்டா தீவிற்கு சென்று, அங்கிருந்து ஆங்கிலேயே படைவீரர்க ளுக்கு திருவருட்சாதனங்களைப் பற்றி கற்றுக்கொடு ப்பதிலும் தன் நாட்களை கழித்தார். போர் வீரர்கள் மனந்திரும்பி கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, விசுவாச த்தில் வளர வழிகாட்டினார். இவர்களின் உதவியினா லும், 600 படைவீரர்களைக்கொண்டு, வாலெட்டாவில் ஓர் சபையை தொடங்கினார்.

காலைமுதல் மாலைவரை உழைத்து முடித்துபின், நாளுக்கு நன்றி கூறியும், அந்நாளில் செய்த பாவத்தி ற்கு பாவமன்னிப்பும் வேண்டி ஒவ்வொரு நாள் மாலை யும் வழிபாடு நடத்தப்பட்டது. உலகின் பாவங்களு க்காக அனைவரும் சேர்ந்து செபித்துக்கொண்டிரு க்கும்போது, தன் கைகளைவிரித்து, கண்களை மேலே உயர்த்தியவாறு, தன் ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார்.


செபம்:
அன்புத் தந்தையே எம் இறைவா! குருத்துவ வாழ்வில் தன்னை அர்ப்பணிக்க விரும்பி, தகுதியின்மையால் குருவாகாமல், வாழ்நாள் முழுவதும் திருத்தொண்ட ரைப் போலவே வாழ்ந்த இக்னேசியசை நினைத்து நன்றி கூறுகின்றோம். அவரைப்போல வாழும் இளைஞர்களை நீர் ஆசீர்வதியும். இவர்களின் வழியாக உம் மக்களுக்கு தேவையானவற்றை கற்றுக்கொடுக்க, நீர் வரம் தர வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம்

இன்றைய புனிதர் 2016-06-30 உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள் (The first Martyrs of the See of the Rome)


                 

             இன்றைய புனிதர் 2016-06-30

உரோமை திருச்சபையின் முதல் மறைசாட்சிகள்
(The first Martyrs of the See of the Rome)

கி.பி. 64 ஆம் ஆண்டில் உரோமையில் நிகழ்ந்த பெருந்தீ விபத்தின் அழிவுக்குப்பின் மாமன்னன் நீரோ முத ன்முறையாக திருச்சபையை வாட்டி வதைத்தபோது, மெய்யடியார்கள் பலரும் மிகக் கொடிய வேதனைக ளுக்கு ஆளாகி கொல்லப்பட்டார்கள். ஏற்பட்ட தீ விப த்தானது 6 நாள் பகலும், 7 நாள் இரவும் அதற்கு மேலும் கொழுந்து விட்டெரிந்தது. அப்போது மன்னன் நீரோ வெகுளித்தனமாக உடைகள் அணிந்துகொண்டு, ஒரு கோபுர உச்சிக்கு சென்று தீப்பிழம்புகளை கண்டுகளி த்தான். அவன் வெகுளித்தனமாக இவ்வாறு கண்டுகளி த்ததை பார்த்த பலரும், நீரோவே தீயை வளர்க்க ஆணை பிறப்பித்திருப்பானோ என்று ஐயமுற்றனர். எப்படியும் தீயை அணைக்க அவன் எந்தக் கட்டளை யும் பிறப்பிக்கவில்லை. இதனால் நீரோவே தீ தொட ர்ந்து எரிய வழிவகுத்திருக்கலாம் என்ற ஐயம் வலுப்ப ட்டது. இதையறிந்த நீரோ மன்னன், கிறிஸ்தவர்களே இதற்கு காரணம் என்று திசைதிருப்பிவிட்டான். டாசிற்றஸ்(Dasitras) என்ற வரலாற்று ஆசிரியர் அப்போது இந்த குற்றச்சாட்டை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று குறிப்பிடுகின்றார். இருப்பினும் கிறிஸ்தவ ர்களை ஒன்றாக சேர்க்க ஆணையிட்டான். தனது பெரிய நந்தவனத்திலேயே அவர்களை கூட்டிக் கிறி ஸ்தவர்கள் மீது தார் எண்ணெய் ஊற்றி அவர்களை ஓர் இரவு முழுவதும் சுட்டெரித்தான். இதனை கண்ட மக்க ள் ஆத்திரமும், பயமும் கொண்டு வெளியேறினார்கள்

செபம்:
அன்பான ஆண்டவரே உரோமைத் திருச்சபையின் தொடக்கத்தை மறைசாட்சியரின் இரத்தத்தால் புனித ப்படுத்தினீர். கடுமையான மரணப் போராட்டத்தில் அவர்களிடம் விளங்கிய உறுதியான ஆற்றலை வெளிப்படுத்தினீர். திருச்சபையின் வளர்ச்சிக்காக மறைசாட்சிகளாக மரிக்கும் ஒவ்வொருவரையும் நீர் நினைவு கூர்ந்து, உமது திருச்சபையை வளர்த்தெடுக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Wednesday, 29 June 2016

இன்றைய புனிதர் 2016-06-29

                                    

புனித பேதுரு, புனித பவுல் (St.Peter and St.Paul)

                                                  புனித பவுல்:

இறைவன் மட்டுமே வீழ்ச்சியுற்ற மனிதனை மீட்க இயலும். மனி தனின் முயற்சி எத்தகையதாக இருந்தாலும், சட்டங்களை மிகக் கண்ணுங்கருத்துமாக கடைபிடித்தாலும் பாவத்தினின்றும், அலகையினின்றும், சாவினின்றும் விடுதலை அடைய மனிதன் தன்னை முழுவதும் இயேசுவின் அருள் ஆற்றலுக்கு ஒப்படை த்தாக வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை இவரிடம் வேரூ ன்றியிருந்தது.

தமஸ்கு நகருக்கருகே பவுல் கண்ட காட்சியில் உயிர்த்த இயேசு வுடன் கலந்துரையாடியது, அவரது வாழ்வில் ஒரு பெரும் மா ற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு, அவர் கிறிஸ்துவுக்காக உழைத்து, உயிர்த்த கிறிஸ்துவின் திரு த்தூதர் ஆனார். பலவிதமான எதிர்ப்புகள், அவமானங்கள், சாட்டையடிகள், கல்லடிகள், ஒடுக்கப்பட்ட நிலை, சிறைவாசம் இவை போன்ற இன்னும் பல கொடுமைகள் இவரை மேலும் மேலும் திருச்சபையின் அசையாத தூணாக்கியது. இவருடைய கடிதங்களில் காணப்படும் சில அரிய தொடர்கள், கிறிஸ்துவி ன்மீது இவர் கொண்டிருந்த பற்றுறுதியை காட்டுகின்றது. இவர் எழுதிய திருமுகங்களில் "கிறிஸ்துவில்" என்ற சொல் ஏறக்கு றைய 50 முறை வருகின்றது. இது அவரின் ஆன்மீகத்தையும், அப்போஸ்தலிக்க வாழ்வையும், வேத கலாபனையையும், பணி வாழ்வையும் வெளிப்படையாக காட்டுகின்றது. "எல்லோர்க்கும் எல்லாம் ஆனேன்" என்று இவர் குறிப்பிடுவது, நற்செய்திக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் எவரிடமும் கனிவுடனும், பாச த்துடனும் நடந்து, நான் கிறிஸ்துவை மாதிரியாக தேர்ந்து கொ ண்டதுபோல, என்னையும் உங்கல் மாதிரியாக எடுத்துகொள்ளு ங்கள் என்று குறிப்பிடுகின்றார்.


செபம்:

என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தூதரான புனித பேதுரு, பவுல் இவர்களை மேம்படுத்த இந்நாளை தந்ததற்காக நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உம் மகன் வழியாக உம்மை வழிபட எங்களுக்கு முதன்முறையாக கற்றுத்தந்தனர். உமது திருச்சபை அவர்களது போதனையின்படி வாழ வரமரு ள்வீராக.

Tuesday, 28 June 2016

ன்றைய புனிதர் 2016-06-28 28 புனித இரேனியுஸ் (St. Irenaeus) ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

                           

                இன்றைய புனிதர் 2016-06-28

                          28 புனித இரேனியுஸ் (St. Irenaeus)

                            ஆயர், மறைவல்லுநர், மறைசாட்சி

இறப்பு 28 ஜூன் 200                  பிறப்பு 130

இரேனியுஸ் என்ற சொல்லுக்கு "அமைதி விரும்பி" எ ன்பது பொருள். இவர் தம் பெயருக்கேற்ப அமைதியின் மூலம் பல அருஞ்செயல்களை நிலைநாட்டி திருச்ச பைக்கு பேரும் புகழும் தேடித்தந்தார். இவர் 2 ஆம் நூற்றாண்டின் சிறப்பான மறைவல்லுநர். புனித போலிக்கார்ப்பின் சீடர் லயன்ஸ்(Lions) நகர்புறத்துக் கிறிஸ்தவர்களின் ஆயராயிருந்தார். இவர்களின் பொருட்டு ஒருமுறை உரோமை சென்றார். பிறகு ஒரு முறை சிறிய ஆசியாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்காக பரிந்துரைக்கவும் திருத்தந்தையை சந்திக்க சென்றார்.

இவர் ஆற்றிய திறமைமிக்க பெரும்பணி நாஸ்டிக் (Gnostic) என்று சொல்லப்பட்ட தப்பறையை தம் பெயரு க்கே உரிய அமைதியான முறையில் எடுத்துரைத்த தாகும். தொடக்கத்தில் உருவமற்ற பொருள் ஒன்று இருந்தது. இதிலிருந்தே தெய்வ தன்மையுடனிருந்த ஒருவரின் குறுக்கீட்டால் இவ்வுலகம் தோன்றியது என்பது இந்த தப்பறையின் சாரமாகும். 177 ஆம் ஆண்டு கொடுங்கோல் மன்னனும் மெய்மறை பகைவனுமான மார்க் அவுரேலியஸ்(Aurelias) ஆட்சியில் பயங்கரமான வேதகலாபனை தோன்றியது. இச்சூழலில்தான், சிறை யில் அகப்பட்ட குருக்கள் சிலர், சிறையில் அகப்படாத இவரை உரோமை நகருக்கு அனுப்பினார்கள். பிறகு இருவரும் பாப்பரசரிடம் உண்மை நிலையை எடுத்துக் கூறினர். இவர் உரோமையிலிருந்து வருவதற்குள் ஆயரான புனித போட்டினுசும்,(Botinus) அவரோடு குரு க்கள் பலரும் வேதத்திற்காக தங்கள் இரத்தத்தை சிந்தி சாட்சி பகர்ந்து, இவ்வுலகை விட்டு பிரிந்தனர். இச்சூ ழலில் இவர் திரும்பி வரவே ஆயராக நியமிக்கப்ப ட்டார். 24 ஆண்டுகள் ஆயராக பணியாற்றி பலரை மனந்திருப்பினார். பல மெய்மறை நூல்களை எழுதினார். இதன் வழியாகவும் பலரை இறைவன் பால் ஈர்த்தார்.


செபம்:
வழிகாட்டும் தெய்வமே எம் இறைவா! திருச்சபையையும், கிறிஸ்துவத்தையும் இவ்வுலகில் நிலைநாட்ட புனித இரேனியுஸ் அரும்பாடுபட்டுள்ளார். நீர் அவரோடு இருந்து, அவரை வழிநடத்தியுள்ளீர். இன்றைய எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்த ந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையி னரையும் நீர் ஆசீர்வதியும். உம் மந்தையின் ஆடுகளை வழிநடத்த தேவையான அருள் தந்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Sunday, 26 June 2016

இன்றைய புனிதர் 2016-06-27 அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria ) ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                 
                இன்றைய புனிதர் 2016-06-27

அலெக்சாண்டிரியா நகர் புனித சிரில் (St.Cyril of Alexandria )

                   ஆயர், மறைவல்லுநர்( Bishop & Doctor of the Church)

                       இறப்பு 444   பிறப்பு 370

புனிதர்கள் என்று கூறினால் குறையே இல்லாதவர்கள் என்று பொருளில்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்து க்காட்டு. இவர் கோபக்காரர். பொறுமையில்லாதவர். சற்று விவேகம் அற்றவர். இவர் நொவேஷியன்(Novesien) என்று பெயர் கொண்ட ஆலயங்களை இழுத்து மூடி னார். புனித ஜான் கிறிஸ்சோஸ்தம் மீது பழி சுமத்தி னார். யூதர்களின் செல்வங்களை பறித்தார். அவ ர்களை அலெக்சாண்டிரியா நகரினின்று வெளியேற்றி னார். எபேசு நகரில் கூடிய பொது சங்கத்தில் அந்தி யோக்கியா நகரின் பிதாப்பிதா, அரசு ஆணைப்படி தலைமை தாங்குமுன்னரே, ஆத்திரப்பட்டு நெஸ்டோ ரியசை வெளியேற்றினார்.

428 ஆம் ஆண்டில் அந்தியோக்கியாவை சார்ந்த துறவி நெஸ்டோரியஸ் கொன்ஸ்டாண்டினோபிளின் பேரா யராக நியமனம் பெற்றார். இவர் கிறிஸ்து இயேசுவிடம் 2 ஆட்கள் உண்டு என்ற தப்பறையை போதித்து வ ந்தார். சிரில் இவரது தப்பறையை சுட்டிக் காட்டினார். நெஸ்டோரியஸ் திருந்தவில்லை. இருவரும் திருத்தந்தை முதல் செலஸ்டீனிடம்(Celestine I) இந்த விவாதத்தை முன் வைத்தனர். உரோமை ஆயர் குழு இதனை ஆராய்ந்தது. "நெஸ்டோரியஸ் கூறுவது தவறு. இதனை 10 நாட்களுக்குள் அவர் நீக்கி கொள்ளவேண்டும்" என்று பணித்தது. நெஸ்டோரியஸ் அடம் பிடித்தார்.

இதன் விளைவாக தோன்றியதுதான் 341 ல் கூடிய எபேசு பொதுச்சங்கம். இதில் சிரில் தலைமை தாங்க, 200ஆயர்கள் கலந்துகொண்டனர். சிரில் தான் திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் நியமனம் பெற்றிருந்தார், நெஸ்டோரியஸ் இதில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதனால் நெஸ்டோரியஸ்ஸின் தவறு சுட்டிக்காட்டப்பட்டு, அவரும் திருச்சபைக்கு புறம்பாக்கப்பட்டார். இந்த பொதுச்சங்கத்தில் தான் முதன்முறையாக மரியன்னைக்குTheotokos என்ற சொல் பயன்படுத்தப்பட்டு, "இறைவனின் தாய்" என்பதே மரியன்னைக்கு பொருத்தமான அடைமொழி. நெஸ்டோரியஸ் கூறியதுபோல் "கிறிஸ்துவின் தாய்" என்பது மரியன்னைக்கு பொருந்தாது. தவறான பொருளை கொடுப்பதனால் அது தவறு என்று அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்து இறைத்தந்தையுடன் ஒரே பொருளாயிருந்து அதே வேளையில் மனிதனோடும் ஒன்றாக கலந்த ஆளாக இருந்தால் மட்டுமே, மனிதனை மீட்க இயலும். காரணம், இறைவனும், மனிதனும் சந்திப்பது. கிறிஸ்துவின் மனிதவதாரத்தில்தான். இது மனுவுறுவெடுத்த கடவுளின் தசையாக இருந்தால் மட்டுமே (மீட்பு பெறவேண்டிய) மனிதன் அவரது மனித இயல்பின் வழியாக கிறிஸ்துவின் தெய்வீகத்தை வந்தடைய முடியும்.


செபம்:
பாவிகளையே அழைக்கவந்த எம் இறைவா! பெரியவர், சிறியவர், திறமையானவர், திறமையற்றவர் என்று பாராமல் அனைவரையும் சமமாக நீர் அன்பு செய்கின்றீர். தவறும் நேரத்தில் உடனிருந்து வழிநடத்துகின்றீர். உம் வழியை பின்பற்றி வேறுபாடு இல்லாமல் அனைவரும் சமம் என்ற நிலையை நாங்கள் அடைய எம்மை வழிநடத்தியருளும்.

இன்றைய புனிதர் 2016-06-26 புனித.விஜிலியஸ் ஆயர், மறைசாட்சி

                           

                  இன்றைய புனிதர் 2016-06-26

              புனித.விஜிலியஸ் ஆயர், மறைசாட்சி

இறப்பு 405                                       பிறப்பு385

இவர் தனது இளம் வயது கல்வியை உரோம் நகரில் பயி ன்றார். பின்பு தனது 20 ஆம் வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து ஏதென்ஸ்(Athen) நகருக்கு சென்றார். அங்கு மிக கடுமையான, ஏழ்மையான வாழ்வை வா ழ்ந்தார். இவரின் வாழ்வு, பார்த்தவர்களை பரவசம டைய செய்தது. இவர் ஏழ்மையின் இளைஞர் என்று பெயர் பெற்றார். பிறகு குருமடத்தில் சேர்ந்து குருவா னார். அப்போது 384 ஆம் ஆண்டு டிரிண்டைன்(Trient) ஆயர் இறந்து போகவே விஜிலியஸ் டிரிண்டைன் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் ஆயர் பொறுப்பில் இருக்கும்போது, தன் மறைமாவட்டத்தில் எண்ணிலடங்கா ஆலயங்களை எழுப்பினார். பின்னர் அவ்வாலயங்களில் விசுவாசிகளை நிரப்ப, மறைமாவ ட்டம் முழுவதும் கால்நடையாகவே சென்று நற்செய்தி யை பறைசாற்றினார். அவ்வாறு மலைப்பகுதியில் சென்று நற்செய்தி போதிக்க சென்றபோது, மலை யிலிருந்து ஒரு பெரிய கல் அவரின் மீது விழவே, அதே இடத்திலேயே உயிர் துறந்தார்.

செபம்:
நற்செய்திக்கு சான்று பகரவே வந்தேன் என்று மொழிந்த இறைவா! நற்செய்தியின் மீது கொண்ட தாகத்தாலும், உம்மீது கொண்ட அன்பாலும் புனித விஜிலியஸ் தன் உயிரை நீத்தார். நாங்களும் நற்செய்தி யின் மீது ஆர்வம் கொண்டு, வார்த்தைகளை வாழ்வா க்கி வாழ்ந்திட இறைவா உம் வரம் தாரும்.

Friday, 24 June 2016

இன்றைய புனிதர் 2016-06-25 புனித.டோரட்டீ (St.Dorothea of Montau)

                                     


                    இன்றைய புனிதர் 2016-06-25
          புனித.டோரட்டீ (St.Dorothea of Montau)
                  
பிறப்பு  6 பிப்ரவரி 1347 ஒஸ்ட்புராய்சன், Germany

இறப்பு 25 ஜூன் 1394 மரியன்வேர்டர், Marienwerder

இவர் ஓர் விவசாய குடும்பத்தில் மகளாக பிறந்தார். தனது 16 வயதில் திருமணம் செய்தார். திருமண வா ழ்வில் ஓர் எடுத்துக்காட்டான வாழ்வு வந்தார். கணவ ருக்கு நல்ல மனைவியாகவும், குழந்தைகளுக்கு அ ன்பான, பண்பான தாயாக திகழ்ந்தார். தனது 44 ஆம் வயதிலேயே தன் கணவர் இறந்ததால், தான் பிறந்த ஊரில் இருந்த ஆலய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி க்கொண்டார். மரியன்வேர்டர்(Marienwerder) என்ற ஊரி லிருந்து பேராலயத்தில் Reklusin பணியையும், ஆன்மீக வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். உதவி கேட்டு வந்த எல்லா தரப்பு மக்களுக்கும் தன்னால் இயன்ற உத வியை செய்து, ஏராளமான மக்களின் வாழ்வில் ஒளியே ற்றினார். இவர் இறைவனிடமிருந்து பலமுறை தரிச னம் பெற்றதாக இவரின் பாவசங்கீர்த்தன ஆன்ம குரு கூறுகிறார். மனதாலும், உடலாலும் துன்பப்படுகிறவ ர்களும், தேர்வில் வெற்றி பெறுவதற்கும் இவர் துணை யாக இருந்து இறைவனிடம் பரிந்து பேசினார். இவை களில் எப்போதும் நற்பலன்களையும் பெற்றார். இவர் பொறுமையின் சிகரம் என்றழைக்கப்பட்டார்.

செபம்:
அன்பான இறைவா! இன்றைய குடும்பவாழ்வில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரையும் உம் பதம் அர்ப்ப ணிக்கின்றோம். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அன்பு செய்து, மன்னித்து, ஏற்றுக்கொண்டு வாழ நீர் அருள்புரியும், திருக்குடும்பத்தைபோல எமது குடும்பங்களும் திகழ நீர் வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-06-24 திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)

                     

               இன்றைய புனிதர்  2016-06-24

                      திருமுழுக்கு யோவானின் பிறப்பு

                              (The birthday of John the Baptist)

இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறி வித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலா தவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இய லாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிச பெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடு களை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாள ராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிச பெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44). மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சி யின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதரா க்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிற ந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43)

திருமுழுக்கு பெற வந்த கூட்டத்தினரில் ஒருவராக மீட்பர் இயேசுவும் வருகிறார். தாமும் திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு கேட்கும்போது யோவான் பதறி போகின்றார். இவரின் ஆழமான தாழ்ச்சியும் இறை இயேசுவிடம் கொண்டிருந்த வணக்கமும் இவரது சொற்களில் மிளிர்கின்றன. அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதியில்லை (மாற்கு 1:7). யோவான் நற்செய்தியாளரும் இதே மனப்பான்மையை வெளிக்கொணருகின்றார். எனக்கு பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரை பற்றியே சொன்னேன் என உரத்த குரலில் சான்று பகிர்ந்தார். (யோவான்1:5)

யோவானின் சீடர்கள் ரபி, யோர்தான் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே, நீரும் அவரை குறித்து சான்று பகர்ந்தீரே, இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடம் செல்கின்றனர் என்றார்கள் அப்போதும் யோவானின் பதில் அவரது ஆழமான ஆன்மீகத்தை காட்டுகின்றது. "நான் மெசியா அல்லேன், மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு மறைய வேண்டும் (யோவான் 3:25-30). இவருடைய சீடர் இவருக்கு மிகப்பெரிய இறைவாக்கினருக்குரிய மதிப்பு கொடுத்து நடந்து வந்தபோது, நான் மறையவேண்டும், அவர் வளரவேண்டும் என்ற பதில் அவரது ஆழமான தாழ்ச்சியை வெளிக்கொணர்கிறது.

இவ்வாறு எந்த அளவுக்கு தம்மையே அவர் தாழ்த்தினாரோ அந்த அளவுக்கு அவரை எல்லார் முன்னிலையிலும் இயேசு வானளாவ உயர்த்திவிட்டார். இறைவனின் பணியை செய்யும்போது இவரிடத்தில் வெளிப்பட்ட மனத்துணிவையும், முகத்தாட்சண்யம் இன்மையும் நாம் நினைவு கூர்வோம். இவர்தம் உயிரை நீதிக்காக தியாகம் செய்கின்றார். யோவான் ஏரோதிடம், நீர் அவளை (பிலிப்பின் மனைவியை) வைத்திருப்பது முறையன்று என்று சொல்லி வந்தார். இதன் விளைவாக, யோவான் சிறையிலடைக்கப்பட்டார். அவரது தலை கொய்யப்பட்டது. (மத். 14: 1-12)

புனித அகஸ்டின் இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தில் இவ்வாறு விளக்கம் தருகின்றார். செக்கரியா, யோவானின் பிறப்புக்குப்பிறகு மீண்டும் பேசும் ஆற்றல் பெற்றார். இதனையும், கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்டபொழுது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததையும் அகஸ்டின் இணைத்து பார்க்கிறார். திருமுழுக்கு யோவான் தமது வருகை பற்றியே அறிவித்திருந்தால், செக்கரியாவுக்கு மீண்டும் பேச நாவன்மை கிடைத்திருக்காது. நா கட்டவிழ்க்கப்பட்டதனால் குரலுக்கு வழிபிறந்தது. "நீர் யார்" என்று யோவானை கேட்டபோது " பாலைவனத்தில் எழும் குரலொளி நான்" என்றே விடையளிக்கின்றனர். யோவானின் குரல் சிறிது காலத்திற்கே நீடித்தது. வார்த்தையாம் கிறிஸ்து என்றென்றும் உள்ளவர்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உண்மையை உரைத்ததற்காக யோவான் தன் உயிரை ஈந்தார். இவரை போல இன்று ஏராளமான இறைப்பணியாளர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் பாவங்களை மன்னித்து, உம் வான் வீட்டில் சேர்த்தருளும்.

Thursday, 23 June 2016

இன்றைய புனிதர் 2016-06-23 புனித. எத்தல்டிரேடா (St.Etheldreda) இங்கிலாந்து நாட்டு பாதுகாவலர், துறவி


இன்றைய புனிதர் 2016-06-23

புனித. எத்தல்டிரேடா (St.Etheldreda)

                 இங்கிலாந்து நாட்டு பாதுகாவலர், துறவி                            

                       பிறப்பு 635

                         இறப்பு 23 ஜூன் 679

இவர் ஓர் அரசர் குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவ ரின் தாய் ஒஸ்டான்கிளியன்(Ostanglion) என்ற நாட்டின் அரசி அன்னா. இவரின் தந்தை ஸ்காட்லாந்து நாட்டி ன் அரசர் டோண்ட்பெர்த்(Tondberth). இவரின் இளம் வய திலேயே இவர் தந்தை இறந்துவிட்டார். இதனால் இவ ரும், தாயும் "ஏலி"(Ely) என்ற தீவுக்கு சென்றார்கள். தனது 25 ஆம் வயதில் அரசியல் வாழ்வில் தன்னை ஈடுபடுத்த வற்புறுத்தப்பட்டார். இதனால் 15 ஆண்டு கள் அரசியலில் வாழ்ந்த இவர் வட உம்பிரியன்(North Umbrien) நாட்டை சேர்ந்த அரசருக்கு திருமணம் செ ய்துவைக்கப்பட்டார். திருமண வாழ்வில் ஈடுபாடு இ ல்லாத எத்தல்டிரேடா தன் கணவரை விட்டு பிரிந்தார். 12 ஆண்டுகள் தன் கணவரை பிரிந்து வாழ்ந்த அவர், துறவற வாழ்வில் ஈடுபட விரும்பி, ஓர் துறவற இல்லம் நோக்கி சென்றார். உம்பிரியன் நாட்டு ஆயர் வில்பரட் (Wilfried) அவர்களின் உதவியுடன் ஓர் துறவற இல்ல த்தில் சேர்ந்தார். சில ஆண்டுகள் கழித்து தான் வா ழ்ந்த ஏலி தீவின்மேல் அளவுக்கு அதிகமான நினைவு வரவே, தீவிற்கு திரும்பி சென்றார். அப்போது அவ ரின் கணவர் இறந்துவிடவே, தன் நாட்களை அத்தீவி லேயே கழித்தார். 673 ஆம் ஆண்டு ஏலி தீவில் இரண்டு துறவற இல்லங்களை கட்டினார். இதுவே சில ஆண்டு கள் கழித்து பெண்களுக்கென்று தொடங்கப்பட்ட முதல் துறவற இல்லமானது. இவரே அத்துறவற இ ல்லத்தின் முதல் துறவி என்ற பெயரையும் பெற்றார். தன்னைமுழுவதும் இறைவனுக்கு அர்ப்பணித்த எத்தல்டிரேடா, தான் தொடங்கிய இல்லத்திலேயே இறந்தார். இவர் இறந்தபிறகு இவரின் கணவர் புதை க்கப்பட்ட கல்லறையிலேயே அடக்கம் செய்யப்ப ட்டார். இறந்த 16 ஆண்டுகள் கழித்து இவரின் கல்ல றையின் மேல் அத்துறவற இல்லத்தின் ஆலயம் கட்ட ப்பட்டது.

செபம்:
அன்பே உருவான இறைவா! உம்மீது தணியாத தாகம் கொண்டு வாழ்ந்து, மனிதர்களாக வாழ்ந்து, தங்களின் வாழ்க்கையால் புனிதராக வாழ்ந்தவர்க ளைப்போல், நாங்களும் உம்மீது நம்பிக்கை, விசுவாசம் கொண்டு, உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தாரும்.

Wednesday, 22 June 2016

இன்றைய புனிதர் 2016-06-22 புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus) ஆயர்

                   
                  இன்றைய புனிதர் 2016-06-22
புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus)
                                           ஆயர்

பிறப்பு 355 போர்தோ(Portho), பிரான்ஸ்

இறப்பு 22 ஜூன் 431

இவர் பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடியில் தோன்றிய வர். இவர் தமது 25 ஆம் வயதிலேயே திறமைமிக்க பே ச்சாளராகவும், கவிஞராகவும் விளங்கினார். அரச அவைக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்ப ட்டார். வலண்டீனியன் என்ற அரசன் இவரை கம்பா ஞ்ஞா(Companiya) மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார். இவர் மெய்மறையில் சேர்வதற்கு முன்னரே, திரேசியா என்ற ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவர் 385 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார். அந்த ஆ ண்டில் அவரது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டான். இதனால் நோலா பவுலீனுசும், அவரது மனைவி திரேசாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர். அங்கே பார்சலோனா நாட்டு மக்கள் அவருடைய ப க்தியை அறிந்து, குருத்துவத்தை தேர்ந்து கொள்ள தூ ண்டினர். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரி வித்தார். இருவரும் தங்களது உடைமைகள் அனை த்தையும் விற்றுவிட்டு, ஏழைகளுக்கு பகிர்ந்துகொடு த்தனர்.

பின்னர் பவுலீனூஸ் குருத்துவத்தை தெரிந்து கொ ண்டார். இதனால் அவரின் மனைவி மிலான் நாட்டிற்கு சென்று, அங்கு ஆயர் அம்புரோசை சந்தித்து, அவரின் அறிவுரைப்படி திரேசியாவும் ஓர் துறவற மடத்திற்கு சென்றார். துறவறத்தில் 20 ஆண்டுகள் திருப்பணியை திறம்பட செய்தார். பவுலீனுஸ் பேய்களை ஓட்டும் வ ல்லமை பெற்றிருந்தார். இவரை போல ஒரு புனிதத்துவ வாழ்வை எவராலும் வாழ முடியாது என்று புனித அகஸ்டின், புனித ஜெரோம், புனித அம்புரோஸ் ஆகி யோர் தங்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். புனித மார்ட்டின் இவரை, இயேசுவின் நல்லாயன் இவரே என்று குறிப்பிட்டுள்ளார்.


செபம்:
அதிசயமானவரே எம் இறைவா! நீர் புனித பவுலீனுசை திருமண வாழ்வில் ஈடுபடுத்தியபின், உம் குருத்துவ வாழ்விற்கு தேர்ந்தெடுத்துள்ளீர். உமது புனிதத்துவ வாழ்வை அவரின் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படு த்தியுள்ளீர். இதோ இன்றைய நாளில் திருமணம் செய்த ஒவ்வொருவரையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். குடும்ப வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து, சந்தோச த்துடனும், சமாதானத்துடனும் வாழ, நீர் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Monday, 20 June 2016

இன்றைய புனிதர் 2016-06-21 புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga) இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

                     

             இன்றைய புனிதர் 2016-06-21

புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga)

இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

பிறப்பு 1568மாந்துவா, இத்தாலி

இறப்பு1591மாந்துவா, இத்தாலி

புனிதர்பட்டம்: 1726, திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட்

இவர் ஓர் அரச குலத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, இவர் பேரும் புகழும் உள்ளவராக பிற்காலத்தில் திகழ வேண்டுமென விரும்பி, போர் வீரர்களின் தலைவரா கும் பயிற்சியை அலோசியசிற்கு கொடுத்தார். ஆனால் இவரின் தாய் ஊட்டிய சத்துள்ள ஞானப்பாலின் விளை வாக பிளாரன்ஸ் நகரில் ஒன்பது வயதிலேயே மரிய ன்னையின் பேராலயத்தில் கற்பு என்னும் வார்த்தை ப்பாட்டை இவர் எடுத்துக்கொண்டார். வாரத்தில் 3நா ட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். பல கடுமையான ஆன்மீக தவ முயற்சிகளையும் செய்து வந்தார். 13வய தில் இவர் தம் பெற்றோருடன் ஸ்பெயின் நாட்டிற்கு செ ன்றார். அங்கே 2ஆம் பிலிப்புவின் அரச அவையிலேயே முழு நேரம் தங்கினார், அரச குல மக்களில் ஒருவரா கவே நடத்தப்பட்டார். அங்கே நிலவிய சீர்கேடுகளில் சிக்காமல் இருக்க கடுமையான முயற்சிகளை மே  ற்கொண்டார். இவ்வேளையில் இயேசு சபையினர் இந்தியாவிற்கு சென்று நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபாடு பற்றிய நூல் ஒன்று கிடைத்தது. அதை வாசித்த அவர் இயேசு சபையில் சேர எண்ணினார். இதனிடயே தன் தந்தையுடன் 4 ஆண்டுகள் பனிப்போராட்டம் நடத்தினார். இருப்பினும் மகனின் முடிவை தந்தை ஏற்க மறுத்தார். ஆனால் அலோசியஸ் இப்போரில் வெற்றி பெற்று, தனக்கு வரவேண்டிய சொத்தையெல்லாம் தன் தம்பியின் பெயரில் எழுதிவைத்தார்.
1587 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். பின்னர் குரு மாணவராக படிக்கும்போது, பிளேக் நோயாளிக்கு உதவி செய்து, தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டார். அச்சூழலில்தான் அக்கொடிய நோயால் தாக்கப்பட்டு இறந்தார். அப்போது அவரின் வயது 23. இளம் வயதிலேயே ஏராளமான புண்ணியங்களை செய்து வான்வீட்டிற்கு தயார் நிலையில் தன்னை ஆக்கிக்கொண்டார்.

இயேசு சபையில் புனிதராகவும், மறைவல்லுநராகவும் வாழ்ந்த புனித இராபர்ட் பெல்லார்மின் தான் இவரின் ஆன்ம குருவாய் இருந்தார். ஒருமுறை அலோசியசிடம் இவர் ஓர் ஆன்மா, உத்தரிக்கும் வேதனை அடையாமலேயே நேராக பேரின்பம் பெறமுடியும் என்று கூறினார். இதை கேட்ட அலோசியஸ் பரவசமடைந்தார். அந்நேரத்தில் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு பின்னர் தான் இறக்க போவதாக உணர்ந்தாராம். அவ்வாறே "தெ தேயும்" என்ற நன்றி பாடலை இசைத்துக்கொண்டே தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். அலொசியஸ் தனது 23 ஆண்டுகால வாழ்வில் ஒருமுறை கூட சாவான பாவத்தில் விழவில்லை என்று அவரின் ஆன்ம குரு கூறியுள்ளார்.


செபம்:
குணப்பளிப்பவரே இறைவா! இதோ எம் சமுதாயத்தில் பிளேக் நோயால் பாதிக்கப்படும் மக்களை உம் பாதம் சமர்ப்பின்றோம். அவர்களின் நோயை நீரே குணமாக்கியருள வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம். இவர்களை பராமரிக்கும் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள நலன் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Sunday, 19 June 2016

இன்றைய புனிதர் 2016-06-20 புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)

                  
               இன்றைய புனிதர் 2016-06-20
  புனித.மர்கரீத் எப்னர்(St.Margarete Ebner)

பிறப்பு1291டோனவ்வோர்த்(Donauworth), அவுக்ஸ்பூர்க்(Augsburg)

இறப்பு 20 ஜூன் 1351

தில்லிங்கன் என்ற ஊரில் இவருக்கென்று ஓர் ஆலயம் உள்ளது. அங்குதான் இவர்தான் இறுதி நாட்களை கழி த்துள்ளார். பலவித கலாசாரத்தை கொண்ட மக்களிட த்தில் இவர் பணியாற்றினார். இவர் தனது 15 ஆம் வய தில் புனித டொமினிக்கன் சபையில் சேர்ந்து துறவியா னார். அவர் அச்சபையில் வாழ்ந்தபோது 1312 ஆம் ஆ ண்டிலிருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் ஆண்டவரின் காட்சிகளை பலமுறை கண்டார். இவர் மிகவும் கடு மையான நோயால் தாக்கப்பட்டு, படுக்கையிலேயே தன் வாழ்நாட்களை கழித்தார். நோயால் மிகவும் வேத னைக்குள்ளானார். இதனால் இறைவனின்மீது தன் முழு நம்பிக்கையையும் வைத்து, இடைவிடாது செபி த்தார். ஆண்டவரின் பாடுகளில் அவ்வப்போது பங்கெ டுத்தார். இவரின் ஆன்ம வழிகாட்டி தந்தை ஹென்றி அவர்களின் அறிவுரைப்படி, தொடர்ந்து ஆண்டவரின் பாடுகளில் பங்கெடுத்தார். ஒருநாள் ஆண்டவர் கொடு த்த காட்சியை கண்டுகொண்டிருக்கும்போதே, தன் கண்களை மூடியபடியே உயிர் நீத்தார். இவர் இறந்த பிறகு இவரின் கல்லறையை எண்ணிலடங்கா மக்கள் சந்திக்க வந்தனர். அங்கு வந்த அத்தனை பேருக்கும் ஏதாவது ஒரு வகையில் புதுமைகளை செய்தார். இவர் இறந்த சில ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறைமேல் இயேசு கிறிஸ்துவின் உருவம் கொண்ட ஒரு சுரூபம் தானாகவே வளர்ந்தது. 1751 ல் சாதாரணமாக இருந்த இவரின் கல்லறைமேல் 1751-1755 வரை ஓர் ஆலயம் கட்ட ப்பட்டு, இன்றும் அவ்வாலயத்தில் அவரின் பெயரால் வழிபாடுகள் நடக்கின்றது.

செபம்:
குணமளிப்பவரே எம் தந்தையே இறைவா! இவ்வுலகில் நோயினால் வாடும் மக்களை நீர் கண்ணோக்கியரு ளும். தங்களின் நோய்களை தாங்கும் உடல் பலத்தை யும், மனபலத்தையும் தந்து, வாழ்வில் மீண்டும் புத்து யிர் பெற்று வாழ நீர் வரம் தந்து வாழ்வை அளிக்குமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

Saturday, 18 June 2016

இன்றைய புனிதர் 2016-06-19 புனித ரோமுவால்ட் (St.Romuald ) ஆதீனத் தலைவர்



இன்றைய புனிதர்
2016-06-19

புனித ரோமுவால்ட் (St.Romuald )
ஆதீனத் தலைவர்

பிறப்பு19 நூற்றாண்டு இறுதி
ராவென்னா(Ravena), இத்தாலி

இறப்பு19 ஜூன் 1027

இவர் ஓர் அரச குலத்தில் தோன்றியவர். இவர் தம் 20 ஆம் வயது வரை மனம் போன போக்கில் வாழ்ந்தார். ஒருமுறை இவரது தந்தை தம் உறவினர் ஒருவரை சொத்து தகராறு காரணமாக, இவரின் கண்ணெதிரில் கொன்று போட்டார். இதற்கு பரிகாரமாக புனித ஆசீ ர்வாதப்பர் சபை ஒன்றில் சேர்ந்து, கடும் தவம் புரி ந்தார். அங்கு துறவிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி வாழ்ந்தது. இவருக்கு எரிச்சலை மூட்டியது. எனவே அந்த மடத்தை விட்டு வெளியேறி , முதலில் வெனிஸ் நகருக்கு அருகிலும், பின்னர் பிரன்னீஸ்(Franis) மலைப்ப குதியிலும் ஜெப, தவ வாழ்க்கையை மேற்கொண்டார். ஏறக்குறைய 30 ஆண்டுகள் வட இத்தாலி, தென் பிரான்சு, தென் ஸ்பெயின் பகுதிகளிலும் துறவு மடங்க ளில் ஒழுங்குமுறைகளை பற்றுறுதியுடன் கடைபிடிக்க வழிகாட்டியாக திகழ்ந்தார்.

தனிமையில் இறைவனுடன் நெருங்கிய தோழமை கொள்ள விரும்பியவர்களுக்கு, மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் குடிசைகள் அமைத்துகொடு த்தார். அவற்றில் ஒரு மடம் மட்டுமே கமல்டொலி (Kamaldoli)என்ற இடத்தில், அப்பினைன்(Apinain) என்ற மலையுச்சியில் 1012 ஆம் ஆண்டு 5 குடிசைகள் கொண்ட தாக அமைந்தது. புனிதர் தனிப்பட்ட ஒரு துறவு சபை யை தோற்றுவிக்க திட்டமிடவில்லை. இருப்பினும் கமல்டொலில் நிறுவப்பட்ட மடம்தான், கடுமையான ஒழுங்குகள் கொண்ட பெனடிக்டின் துறவற சபையாக பெயர் பெற்று காட்சியளிக்கிறது. இதுவே மேலை திருச்சபையில் தவ முனிவர்களுக்கான சபையாக மீண்டும் தோன்றியது. இது சுற்றுச்சுவர் எழுப்பப்பட்ட ஒரு சிற்றூர். இங்கே வாழும் ஒவ்வொரு துறவியும் ஒரு அறை, ஒரு பணித்தளம், ஒரு தோட்டம் இவற்றை பெ  ற்றுக்கொண்டு அங்கே மௌனம் , தனிமை, இவற்று க்கிடையே இறை பணிபுரிந்தார். வெளி உலக தொடர்பு இல்லாமல் வாழ்ந்தார். இவர் உலகம் முழுவதையும் ஒரு துறவற மடமாகவும், ஒவ்வொருவரையும் ஒரு துறவியாகவும் மாற்றும் திட்டம் வைத்திருந்தார். அமை தியும், கடுந்தவ முயற்சியும்தான் இச்சபையின் சிறப்பு க் கூற்றுகளாக அமைந்திருந்தது. 1086 ஆம் ஆண்டிலிரு ந்து, பெண்களுக்கும் அவரவர்களின் நிலைக்கேற்ப "கமல்டொலிஸ்" மடங்கள் தொடங்கப்பட்டது. இவர் இறந்தபிறகு, இவரின் கல்லறையில் பல புதுமைகள் நடந்தவண்ணமாய் இருந்தது. இதனால் இவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு, இவர் கல்லறையின்மேல் ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது.


செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித ரோமுவால்ட் அரசர் குலத்தில் பிறந்தபோதும், ஆடம்பர வாழ்வில், தன் வாழ்வை வாழாமல், கடுமையான செப, தவ வாழ்வை வாழ்ந்து உமக்குரிய நல்ல சீடனாக திகழ்ந்தார். நாங்களும் எங்களின் அன்றாட வாழ்வில் ஏழையாக வாழ்ந்து உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள உம் வரம் தாரும்.

இன்றைய புனிதர் 2016-06-18 ஸ்ஷோனவின் புனித எலிசபெத் (Elisabeth of Schönau) துறவி


                 

                இன்றைய புனிதர் 2016-06-18

         ஸ்ஷோனவின் புனித எலிசபெத்

                 (Elisabeth of Schönau) துறவி

பிறப்பு 1128 பிங்கன், ரைன்

இறப்பு 18 ஜூன் 1164 ஸ்ஷோனவ்

சிறுவயதிலிருந்தே இறைவனிடத்தில் மிகவும் பக்தி கொண்ட இவர், தம் 12ஆம் வயதிலேயே ஸ்ஷோனவ் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது 18 ஆம் வயதில் வார்த்தைப்பாடுகளை கொடுத்து துறவியானார். குழந்தை பருவத்திலிருந்தே தன்னை இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தார். இவர் பிறந்த ஊரிலிருந்த அனைவரிடத்திலும், மிகவும் அன்பாகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.

இளம் வயதிலேயே துறவியான இவர் மன நோய்க்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மிகவும் பயத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வந்தார். 1152 ஆம் ஆண்டிலிருந்து எலிசபெத், இறைவன் தரும் அருளை காட்சியாக பெற்றார். அவ்வாறு பலமுறை இறைவனின் காட்சியை பெறும்போது, ஒருநாள் மிகுந்த அச்சம் இவரை ஆட்கொண்டது, அன்று அவரை சுற்றி பேரோளி ஒன்று வீசியது. அப்போது அவர் மிகச் சரளமாக, தடுமாற்றம் இல்லாமல் அன்னிய மொழியான இத்தாலி மொழியை பேசினார். இம்மொழியை அவர் எப்போதும் கற்றுக்கொண்டதே இல்லை. எலிசபெத்தின் உடன்பிறந்த அண்ணன் ஏக்பர்ட்(Egbert Schönau) துறவியாக இருந்தார். இவர் எலிசபெத் கடவுளிடமிருந்து பெற்ற ஒவ்வொரு தரிசனத்தையும் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். தான் இறைவனிடம் இருந்து பெற்ற தரிசனங்களின் வழியாக இவர் ஏராளமான மக்களுக்கு நன்மை செய்து, வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.


செபம்:
அதிசயம் செய்பவரே எம் தந்தையே! நீர் பல அதிசயங்களை உம் மக்களுக்கு செய்து, உம் மக்களை குணமாக்கினீர். வழிநடத்தினீர். எங்களின் வாழ்வில் நீர் செய்கின்ற அற்புதங்களை நாங்கள் உணர எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்தருளும்.

Friday, 17 June 2016

இன்றைய புனிதர் 2016-06-17 புனித ராம்வோல்டு (St.Ramwold) துறவி

               

           இன்றைய புனிதர் 2016-06-17

           புனித ராம்வோல்டு (St.Ramwold)

                                        துறவி

பிறப்பு 901செயிண்ட் எம்மரெம்(St.Emmeram), ட்ரியர்(Trier), ஜெர்மனி

இறப்பு17 ஜூன் 1000 செயிண்ட் எம்மரெம், ட்ரியர்

இவர் செயிண்ட் எம்மரெம் என்ற தான் பிறந்த ஊரிலி லேயே தன்னை இறைவனுக்கு அர்ப்பணமாக்கிய முதல் துறவி என்ற பெயர் பெற்றார். துறவியான 25 ஆண்டுகளில் தன் இரத்தத்தை ஈந்து, பல துறவிகளை உருவாக்கினார். துறவிகளுக்கென்று செயிண்ட் எம்ம ரெமில் ஓர் இல்லத்தையும் தொடங்கினார். பின்னர் பல துறவறமடங்களையும், பல ஆன்மீக வழிகாட்டும் இல்ல ங்களையும் தொடங்கினார். பின்னர் 739 ஆம் ஆண்டு ரேகன்ஸ்பூர்க்கில்(Regensburg) ஆயராக இருந்த வோ ல்ப்காங்க்(Wolfgang) அவர்களால் ராம்வோல்டு அவர்கள் தொடங்கிய துறவற இல்லம் "புனித பெனடிக்ட் துறவற சபை" என்ற பெயர் வழங்கப்பட்டது. அதன்பிறகு 975ல் ரேகன்ஸ்பூர்க்கிலும் புனித ராம்வோல்டு புனித பெனடி க்ட் சபையை தொடங்கினார்.

பல ஆண்டுகள் ராம்வோல்டு ரேகன்ஸ்பூர்க்கிலிருந்த துறவற இல்லத்தில் தன் இறுதி நாட்களை கழித்து காலமானார். இவரின் கல்லறை அத்துறவற இல்லத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. சில வருடங்கள் கழித்து அவரின் கல்லறைமேல் ரிங் வடிவத்தில் ஒரு கெபி கட்டப்பட்டுள்ளது. இவருக்கென்று செயிண்ட் எம்மரெமில் ஓர் பேராலயமும் கட்டப்பட்டுள்ளது. செயிண்ட் எம்மரெம்மில் இவரின் வழியாகத்தான் துறவிகளும், துறவற சபைகளும் தோன்றியது.


செபம்:
"அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ குறைவு" என்று மொழிந்த எம் இறைவா! அன்று நீர் துறவறத்தை இன்றைய நாள் புனிதரின் வழியாக அறிமுகப்படுத்தினீர். இன்று துறவற வாழ்வுக்கென்று தங்களை அர்ப்பணிக்க பல இளைய பெண்களும், ஆண்களும் முன்வருவதில்லை, இந்நிலையை நீர்தாமே அகற்றி, உம் பணியை தொடர்ந்து இவ்வுலகில் ஆற்ற தேவையான வேலையாட்களை தந்தருளுமாய் உம்மை வேண்டுகிறோம்.

Wednesday, 15 June 2016

இன்றைய புனிதர் 2016-06-16 புனித.பெனோ(St.Benno) ஆயர்(Bishop)


இன்றைய புனிதர் 2016-06-16
புனித.பெனோ(St.Benno)
ஆயர்(Bishop)

பிறப்பு1010ஹில்டஸ்ஹைம் Hildesheim, Germany)

இறப்பு 16 ஜூன் 1106 பாதுகாவல்: பவேரியா(Bayern) & டிரேஸ்டன்(Dresden) மறைமாநிலத்தின் பாதுகாவலர்

இவர் ஷேக்கிசிஸ்(Sächsische) நாட்டு தம்பதிகளின் மக னாக பிறந்தார். 1040 ஆம் ஆண்டு குருவாக திருநிலை ப்படுத்தப்பட்டார். பின்னர் ஹில்டஸ்ஹைம் என்ற ஊருக்கு பணிபுரிய அனுப்பப்பட்டார். அங்கிருந்து மீண்டும் கோஸ்லர்(Goslar) என்ற ஊருக்கு பணிக்கு மறைபரப்பு பணிக்காக சென்று, 17 ஆண்டுகள் அப்ப ணியை செய்தார். அங்கு பணிபுரியும்போது, ஜெர்மனி யிலுள்ள டிரேஸ்டன் மறைமாவட்டத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆயரானபிறகு அம்மறைமாவ ட்டத்தில் பல ஆலயங்களையும், துறவறமடங்களையும் தொடங்கினார். ஏராளமான மக்களை இறைவன்பால் மனமாற்றி ஈர்த்தார். அப்போது சாக்சன் (Sachsen) நாட்டு அரசர் நான்காம் ஹென்றி ஆயருக்கு எதிராக போ ர்தொடுத்தான். இப்போரில் 1075-76 ஆம் ஆண்டு வரை ஆயரை அரசன் சிறைபிடித்து சென்று, தன் விருப்ப ப்படி அம்மறைமாநிலத்திற்கு வேறு ஒரு புதிய ஆயரை தேர்ந்தெடுத்தான். ஆனால் புதிய ஆயர் நீண்ட நாள் அப்பதவியில் நீடிக்கவில்லை. மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் பெனோ அவர்களே மீண்டும் தனது ஆயர் பொறுப்பை ஏற்றார். அப்போது அவர் பேராலய த்திற்கென்று ஓர் திறவுகோலை தயாரித்து, அத்திறவுகோலை எல்பே (Elbe) என்ற மாவட்டத்திலுள்ள ஓர் பேராலயத்தில் வைத்துவிட்டு, தன் ஆயர் பதவியிலிருந்து விலகினார். அத்திறவுகோலில் ஓர் மீனின் வயிற்றில் நதி ஓடுவதை போல செய்யப்பட்டிருந்தது. இவர் இறந்து பல ஆண்டுகள் கழித்து புனிதர்பட்டம் பெற்றபிறகு அரசர் ஐந்தாம் ஆல்பிரட்(Albrecht V) அவர்கள் இப்புனிதரின் கல்லறையை பவேரியா மறைமாவட்டத்திற்கு மாற்றினார். இன்றும் பவேரியாவில் இவர் பெயரால் புதுமைகள் நடந்துக்கொண்டிருக்கின்றது.

செபம்:
தியாகத்தின் மறு உருவே எம் இறைவா! கிறிஸ்துவத்தை ஜெர்மனி மண்ணில் பரப்பி, உமக்காக பல சிலுவைகளை சுமந்த புனித பெனோவிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம், அவர் காட்டிய வழியில் சென்ற எம் முன்னோர்களை பின்பற்றி நாங்கள் என்றென்றும், உம்மை எம் வாழ்வில் பிரதிபலிக்க உம் அருள் தந்து எம்மை காத்தருளும்.

இன்றைய புனிதர் 2016-06-15 புனித.பெர்னார்டு (Bernhard of Aosta) பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்

                    

              இன்றைய புனிதர் 2016-06-15

                      புனித.பெர்னார்டு (Bernhard of Aosta)

பாதுகாவல்: மலை ஏறுபவர்களுக்கும், ஆல்ப்ஸ் மலைவாழ் மக்களுக்கும்
இறப்பு  15 ஜூன் 1008 நோவரா(Novara)
புனிதர்பட்டம்: 1923, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

இவர் ஓர் சாதாரண குடும்பத்தில் மகனாக பிறந்தார். இவர் இறையியலையும், மெய்யியலையும், திருச்சபை சட்டங்களையும் கற்றுத் தேர்ந்தார். இவரது பெற்றோர் இவரின் கல்லூரி படிப்பை முடித்தபின், பணக்கார பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க எண்ணி னார். ஆனால் பெர்னார்டு இதை வெறுத்தார். இவரின் மனம் எப்போதும் ஆன்மீக வாழ்வையே நோக்கி செ  ன்றது. இதனால் தன்னுடைய மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் சேர்ந்து பணியாளராக செயல்பட்டார். இவரின் பணியால் அம்மறைமாவட்ட மக்கள் ஏரா ளமான பயனை பெற்றனர். இவர் இறக்கும் வரை மறைமாவட்ட குருக்களின் கல்லூரியில் பணியாற்றி னார். இவர் 1008 ல் அல்லது 1009 ல் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. இவர் நோவரா என்ற ஊரில் அடக்கம் செய்யப்பட்டு, அவர் கல்லறையின் மேல் பேராலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. பின்னர் இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் இவர் நோயாளிகளை பராமரிப்பதற்கென ஓர் இல்லம் தொட ங்கினார். நாளடைவில் இவ்வில்லத்தை புனித அகுஸ்தி னார் சபையை சார்ந்தவர்கள் கைப்பற்றினர். இப்போது அந்நாடுகளுக்கு சுற்றுலாவிற்கு வரும் மக்கள் அவ்வில்லத்தில் இலவசமாக தங்கி, தங்களின் சுற்றுலாவை மேற்கொள்கின்றனர்.

செபம்:
அன்பான இறைவா! புனித பெர்னார்டு இறைவன் மேல் தணியாத தாகம் கொண்டு வாழ்ந்தார். நாங்களும் எங்களின் சொல், செயல், சிந்தனைகளில் உம்மை பற்றிக்கொண்டு, என்றும் உமக்குரியவர்களாக வாழ வரம் தாரும்.

Monday, 13 June 2016

இன்றைய புனிதர் 2016-06-14 புனித.ஹாட்விக் ஆயர்

          

                   இன்றைய புனிதர் 2016-06-14

                             புனித.ஹாட்விக்

                                                              ஆயர்

பிறப்பு 955

இறப்பு14 ஜூன் 1023

இவர் ஜெர்மனி நாட்டிலுள்ள சால்ஸ்பூர்க் என்ற மறை மாநிலத்திற்கு ஆர்ச் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டா ர். இவர் அரசர் 3ஆம் ஓட்டோ (Otto III) அவர்களுடன் நெரு ங்கிய நண்பராக இருந்தார். இதனால் தனது மறைமா நிலத்திற்கு தேவையான அனைத்து பொருளுதவிக ளையும் அரசரிடமிருந்து பெற்று, தன் மறைமாநில ம க்களின் வாழ்வில் ஒளியேற்றினார். 993 ஆம் ஆண்டில் சால்ஸ்பூர்க்கில், மறைமாநில பேராலயத்தை எழு ப்பி னார். பல பள்ளிகளையும், மறைமாநிலத்திற்கென்று சில நிறுவனங்களையும் கட்டினார். புனித பெனடிக்ட் சபைக்கென்று துறவற இல்லத்தையும் கட்டினார். இவர் காலரா போன்ற தொற்று நோய் உள்ள மக்களிடத்தில் பணியாற்றினார். அம்மக்களின் ஆன்ம வழிகாட்டி யாக திகழ்ந்தார். இவரின் எளிமையான பணியாலும், வாழ்வாலும் பல நோயாளிகளின் மனிதர் என்னும் ஒளி யேற்றி வாழ்வளித்தார். தொற்றுநோய் உள்ள மக்க ளிடையே பணியாற்றும் போது, அந்நோயால் தாக்க ப்பட்டு இருந்தார். அவரால் கட்டப்பட்ட சால்ஸ்பூர்க் பேராலயத்தில் அவரின் உடல் அடக்கம் செய்ய ப்ப ட்டது. 1598இப்பேராலயமானது தீப்பிடித்து எரிந்ததால் அவரின் உடலை கண்டெடுக்க முடியாமல் போனது.

செபம்:
ஏழைகளின் தோழனே இறைவா! புனித ஹாட்விக் ஏழை எளிய மக்களின் வாழ்விற்கு வழிகாட்டினார். ஏழைகளின் தோழனாய் இருந்து, அவர்களில் ஒருவராகவே வாழ்ந்தார். தான் செய்த பணியின் வழியாக, தன் வாழ்வையே தியாகம் செய்து உயிர்நீத்தார். நாங்கள் எங்களால் இயன்றவரை, ஏழைகளோடு இருக்க, அவர்களுக்கு உதவிசெய்த எமக்கு வழிகாட்டி, உதவிசெய்தருளும்.

Sunday, 12 June 2016

இன்றைய புனிதர் 2016-06-13 புனித பதுவை அந்தோணியார்(St. Antony of Padua) மறைவல்லுநர்(Priest, Doctor of the Church)

                              

                    இன்றைய புனிதர் 2016-06-13

புனித பதுவை அந்தோணியார்(St. Antony of Padua)
மறைவல்லுநர்(Priest, Doctor of the Church)

பிறப்பு 1195லிஸ்பன், போர்த்துக்கல் (Lisbon, Portugal)

இறப்பு13 ஜூன் 1231

புனிதர்பட்டம்: 1232 மறைவல்லுநர்பட்டம்: 1946, திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர்.

இவர் திருமுழுக்கு பெயர் பெர்டினாண்ட். இவர் கப்பு ச்சின் சபையில் சேர்ந்தபோது இவருக்கு முன்னோ டியாக விளங்கிய வனத்து அந்தோணியார் பெயராக தமது பெயரை மாற்றிக்கொண்டார். பிரபு குலத்தில் தோன்றிய இவர் 15 வயதில் அகஸ்டினியன் துறவியா னார். 8 ஆண்டுகள் கொயிம்பராவில் தவ முயற்சிகளி லும் வேதக்கல்வி கற்றுக்கொள்வதிலும் செலவழி த்தார். 1220 ஆம் ஆண்டில் மொரோக்கோவில் கிறிஸ்து வுக்காக குருதி சிந்தி உயிர் துறந்த பிரான்சிஸ்கன் துறவிகளின் உடல்களை டான்பேட்ரோ கொண்டு வந்த தை புனிதர் பார்த்தார். பார்த்தபிறகு அவருக்குள் தா மும் போய் இயேசுவுக்க்காக குருதி சிந்த வேண்டும் என்ற தணியாத தாகம் ஏற்படவே, தற்செயலாக அவரது துறவு மடத்திற்கு வந்த கப்புச்சின் சபையாரிடம் தம்மை ஏற்றுக் கொள்ளுமாறு கெஞ்சினார். இதனால் 1221 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மொரோக்கோவுக்கு புறப்பட தம்மை தயாரித்து கொ ண்டார். புறப்படுமுன் கொடிய நோயினால் தாக்கப்ப ட்டு ஐரோப்பாவுக்கு திரும்பிவிட முயன்றார். ஆனால் அதற்கு மாறாக சிசிலியில் மெசினா நகருக்கு கப்பல் போய் சேர்ந்தது. நேரே அசிசி நகரை அடைந்தார். அ ப்போது போர்லி என்ற இடத்தில் ஒரு குருப்பட்டம் நிக ழவிருந்தது. அப்போது விழாவில் மறையுரை ஆற்ற ஒப்புகொண்டிருந்த டொமினிக்கன் சபைத் துறவி வர இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் மறையுரை ஆ ற்றும்படி நம் புனிதரை கேட்டுக்கொண்டனர். ஆனால் தன்னம்பிக்கையில்லாமலே அதற்கு ஒப்புக்கொ ண்டார், அவர் பேசத் தொடங்கியதும் அவரது திறமை, ஆழமான மறை நூல் அறிவு, நாவன்மை, மக்களின் நெஞ்சங்களை மேலே எழுப்பும் ஆற்றல் இவை அனை த்தையும் கேட்டவர் அனைவரையும் வியப்பில் ஆ ழ்த்தியது.

இதை நேரில் பார்த்த சபைத் தலைவர், லாம்பர்டி பகுதி முழுவதிலும் மறையுரை ஆற்றும் பணிப் பொறுப்பை அவரிடம் அளித்தார். அப்போது மறைக்கல்வியும் துறவிகளுக்கு அவர் கற்றுக்கொடுக்க வேண்டிய தாயிற்று. பாவிகள் நூற்றுக்கணக்கில் வந்து அவரிடம் அடைக்கலம் அடைந்தனர். பாறை மனம் கொண்ட பாவிகள், ஞான வாழ்வில் அக்கறை காட்டாதவர்கள், அவரை அணுகிய வண்ணம் இருந்தனர். இதனால் புனித அசிசியாரின் இறப்பிற்குப்பின் அந்தோணியார் இத்தாலிக்கு வரவழைக்கப்பட்டார். அதுமுதல் இறுதி  நாள் வரை பதுவையிலேயே அவர் தங்கினார். 1231 ஆம் ஆண்டு ஒரு காட்டுப்பகுதியில் தங்கி மறையுரை ஆற்றி வந்தார். அப்போது அவர் முற்றிலும் உடல் வலி மையிழந்து, சக்தியற்று காணப்பட்டார். இதனால் மருத்துவமனைக்கு பதுவை நகருக்கு எடுத்து செல்ல ப்படும் வழியில் இறைவனடி சேர்ந்தார். தம் இறுதி நாட்களை இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில் செல வழித்ததாலும், இவரின் கல்லறையானது இங்கே இருப்பதாலும், இவர் பதுவை அந்தோணியார் என்று அழைக்கப்படுகின்றார். இன்று திருச்சபையில் இவரை நினைவு கூறுவதற்கு முக்கிய காரணம், இவர் ஏழை களின் மேல் அளவற்ற அன்பும், இரக்கமும் கொண்டிரு ந்தார். இவர் பெயரால் இன்றும் ஏழைகளுக்கு பதுவை நகரில் உதவி செய்யப்படுகின்றது. இவர் இயேசுவின் மேல் கொண்ட அன்பால், குழந்தை இயேசுவே இவர் கைகளில் வந்து விளையாடியதாக கூறப்படுகின்றது. காணாமல் போன பொருட்களை கண்டுபிடிப்பதில் இவர் வல்லவர். இதனால் இன்றும் பல புதுமைகள் நடந்துக்கொண்டிருந்தது.


செபம்:
ஏழைகளின் நண்பனே எம் இறைவா! மறைபரப்புப் பணியில் வல்லவராக திகழ்ந்து, ஏழைகளின் ந ண்பராக வாழ்ந்தார். புனித அந்தோனியார். நாங்களும் எம் சமுதாயத்தில் ஏழைகளை இனங்கண்டு, அன்பு செய்து, எங்களிடம் உள்ளதை பகிர்ந்து வாழ உம் அருள் தாரும். ஆமென்.

Saturday, 11 June 2016

இன்றைய புனிதர் 2016-06-12 புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni) சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்

                             

                 இன்றைய புனிதர் 2016-06-12

                 புனித கஸ்பார் பெர்டோனி (St.Kaspar Bertoni)

                        சீன நாட்டின் விசுவாசத்தின் பாதுகாவலர்

பிறப்பு 1777 வெரோனா, இத்தாலி

இறப்பு 12 ஜூன் 1853 வெரோனா

முத்திபேறுபட்டம்: 1975, ஆறாம் பவுல்

கஸ்பார் ஏழைகளின் ஆன்ம வழிகாட்டியாகவும், க த்தோலிக்க பணியகம் ஒன்றில் திருச்சபையின் வர லாற்றை பற்றி எடுத்துரைப்பவராகவும் இருந்தார். பி ன்னர் கனானிய துறவற சபையில் இளைஞர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். அச்சபைக்கு தேவையான எல்லாவித உதவிகளையும் செய்தார். பின்னர் "கிறி ஸ்துவின் திருக்காயம்" என்றழைக்கப்படும் சபையை தோற்றுவித்தார். பல ஆயர்களின் உதவி கொண்டு அ ச்சபையை வளர்த்தெடுத்தார். இவர் தன் மறைமாவட்ட த்தில் மிஷினரியாக வேலை செய்து, பல மாவட்டங்க ளில் ஆன்மீக வழிகாட்டியாக திகழ்ந்து, பலரை தன் சபையில் சேர்த்து பணியாற்றினார்.

1855 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால் இவரின் சபை பாப்பரசரின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்ட பரிந்துரை செய்யப்பட்டு திரு த்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், 1925 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் நாள் பாப்புவின் அங்கீகாரம் பெற்ற சபை யாக அறிவிக்கப்பட்டது. இவர் இறக்கும் வரை பல ஆ ன்மாக்களுக்கு ஆன்ம வழிகாட்டியாகவே திகழ்ந்தார். இவர் சீன நாட்டில் மறைபரப்பு பணியை வளர்க்க பெரு ம்பாடுபட்டார்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உம்மீது கொண்ட நம்பிக்கை யால், பலரின் மனக்காயங்களை போக்கி, வழிகாட்டி யாக திகழ்ந்தார் புனித கஸ்பார். எம்மையும் உமது கருவியாய் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு ஆறுதல் அளிப்பவராக நாங்கள் வாழ வரம் வாரும்

Friday, 10 June 2016

இன்றைய புனிதர் 2016-06-11 புனித பர்னபா(St. Barnabas ) திருத்தூதர், மறைசாட்சி(Apostle, Martyr)

 

பிறப்பு  --     இறப்பு கி.பி. 61

இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்லர். தொடக்க த் திருச்சபையின் தந்தையரும், லூக்கா நற்செய்தியா ளரும் இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு, அப்போஸ்தலர் என இவரை அழைத்தார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்தார்க ள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் ( தி.ப. 4: 36-37)

பின்பு 3 ஆண்டுகள் கழித்து, மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வந்தார். சீடர்கள் அவர் மனந்திரும்பி யவர் என ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவ்வே ளையில்தான் "பர்னபா" அவருக்குத் துணை நின்று அவரை திருத்தூதர்களிடம் அழைத்து சென்றார். (தி.ப. 9:27). பின்னர் அந்தியோக்கியா நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால், யெருசலேம் நகரிலிருந்து , இந்த புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்ப தீர்மானித்தார். தூய ஆவியால் நிரம்ப பெற்றவர், ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்குப்போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும், மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சீஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

பின்னர் யூதாவிலும், யெருசலேம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பர்னபா அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று, அதை சவுல் வழியாக எருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திரா என்ற ஊரில் கால் ஊனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். இதைக் கண்ட அவ்வூரினர் இவர்களை தெய்வங்களாக மதித்து, பலியிட முயன்றனர். அப்போது யூதர்கள் அம்மனிதர்களை தூண்டிவிட்டு பர்னபா மற்றும் பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து , அவர்களை கல்லால் எறிந்தார்கள் (தி.ப. 14: 18-20).

பின்பு நற்செய்தியாளர் ஜான் மார்க்கை அழைத்து கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின், பம்பிலியா நோக்கிப் புறப்படும்போது, ஜான் மார்க் அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. இதனால் பவுல் வருத்தமுற்றார். இதன்பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றி கடுமையாக கருத்து மோதல் எழுந்தது. இதை தீர்த்து வைக்க யெருசலேமில் முதல் பொதுச்சங்கம் கூடியது. யூதர்கள் விரித்த வலையில் பர்னபா விழுந்ததை எண்ணி பவுல் மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு பர்னபாவுக்கும், பவுலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டியபொழுது, ஜான் மார்க்கையும் அழைத்து செல்வோம் என்று பர்னபா கூறியபோது, இதனை பவுல் ஏற்கவில்லை. இதனால் பவுல் தனியாக விடப்பட்டார். அப்போது பர்னபா ஜான் மார்க்குடன் சைப்ரஸ் சென்றார். கி.பி. 61 ல் பவுல் உரோமையில் சிறையிலடைக்கப்பட்டார். அப்போது ஜான் மார்க்கைத் தம்மிடம் அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார். அவ்வேளையில்தான் பர்னபா கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில், சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும், அக்கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகின்றது.

செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் தலைவா! நற்செய்தியை பறைசாற்றி, பலவித துன்பங்களை ஏற்று கல்லால் எரிந்து கொல்லப்பட்ட திருத்தூதர் பர்னபாவை நினைவுகூர்ந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்களின் அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாசிக்காமல் நிற்பதோடு இறைவார்த்தைகளை எமதாக்கி, உமது நற்செய்தியின்படி வாழ்ந்திட உமதருள் தாரும்.

இன்றைய புனிதர் 2016-06-10 புனித.பார்டோ (St.Bardo) மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)

                            

இன்றைய புனிதர்

2016-06-10

புனித.பார்டோ (St.Bardo)

மைன்ஸ் ஆயர்(Bishop of Mainz)


பிறப்பு980ஒப்பர்ஹோப்பன்(Oppershofen), ஹெஸன்(Hessen), ஜெர்மனி

இறப்பு10 ஜூன் 1051பாடர்போர்ன்(Paderborn), ஜெர்மனி

பார்டோ மிகவும் அமைதியானவராகவும் பக்தியானவ ராகவும் தன் வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். சிறுவய திலிருந்தே தான் பிறந்த ஊரிலிருந்த ஆலயத்திற்கு சென்று, ஆலய பணிகளில் ஈடுபட்டு வந்தார். பார்டோ புல்டாவில்(Fulda) இருந்த ஆசீர்வாதப்பர் சபையில்  சேர்ந்து  குருவானார். குருவானபிறகு ஹெர்ஸ்பெல்டு (Herzfeld) என்ற ஊரிலிருந்த துறவற மடத்தில் பணிபுரிய அனுப்பப்பட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக அ த்துறவற இல்ல தலைவர் இறந்துவிட்டார். இதனால் அவரை தொடர்ந்து, பார்டோ தலைவர் பொறுப்பேற்று, ஆலயப்பணிகளிலும் ஈடுபட்டார். அப்போதுதான் அவர் மைன்ஸ் என்ற மறைமாநிலத்திற்கு 1031 ஆம் ஆண்டு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மற்ற வர்களின் நல்வாழ்விற்காக தன் வாழ்வையே தியாக மாக்கினார். போதுமான அளவு உணவுகூட உண்ணா மல் வாழ்ந்தார். தன்னுடைய உணவையும், தனக்கு சொந்தமான அனைத்தையுமே ஏழைகளுக்கு கொடு த்துவிட்டு, மிகவும் ஏழ்மையான வாழ்வு வாழ்ந்தார். இதனால் திருத்தந்தை 9 ஆம் லியோ அவர்களால் கண்டிக்கப்பட்டார். பணியாற்ற உடலுக்கு சக்தி வேண்டுமென்று திருத்தந்தை அறிவுரை கூறினார். திருத்தந்தையின் ஆசீரையும் அறிவுரையும் பெற்ற பார்டோ, பாடர்போன் என்ற ஊருக்கு இறைபணிக்காக பயணம் செய்யும்போது காலமானார். அவரது கல்லறை ஜெர்மனியில் வைக்கப்பட்டுள்ளது. இவரது கல்லறையை ஏராளமானோர் பார்வையிட சென்றனர். அவர்கள் இவரிடம் மன்றாடும்போது, கேட்டவைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டனர். இன்றுவரை இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாக உள்ளது.


செபம்:
ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது என்று மொழிந்த இறைவா! ஏழைகளின் நல்வாழ்விற்காக, தன்னிடம் இருந்த அனைத்தையுமே புனித பார்டோ தியாகம் செய்தார். நாங்கள் அவரைப்போல எல்லாவற்றையுமே தியாகம் செய்யாவிட்டாலும், ஒருசிலவற்றையாவது பிறருடன் பகிர்ந்து வாழ, எங்களுக்கு நல்ல மனதை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Thursday, 9 June 2016

இன்றைய புனிதர் 2016-06-09 புனித எப்ரேம் (St.Ephrem) மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்

             
               இன்றைய புனிதர் 2016-06-09
                புனித எப்ரேம் (St.Ephrem)

மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்

பிறப்ப 306மெசப்பொட்டேமியா

இறப்பு 373கப்படோசியா

புனிதர்பட்டம்: திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்


இவரின் பெற்றோர்கள் பற்றியும், இவரது குருத்துவத்தைப்பற்றி யும் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றது. கிறிஸ்துவின் ஒளிபெறாத பெற்றோர் என்று கூறப்படினும், எப்ரேம், "உண்மையின் வழியில் பிறந்தவன் நான்" கூறுவதிலிருந்து, இவரின் பெற்றோர் ஞான ஒளி பெற்றவர்கள் என்று நம்ப இடமுண்டு, மேலும் இவர் தியோக்கான் என்று அழைக்கப்பட்டாலும், குருத்துவ மகிமை பெற்றிருந்ததாக அவர் எழுதியவற்றிலிருந்து தெரிகிறது. இவர் தமது 18 ஆம் வயதில் திருமுழுக்குப் பெற்றார். அன்று முதல் நிசிபிஸ் நகர் ஆயர் புனித ஜேக்கப்பின் கண்காணிப்பில் இருந்தார். ஆயர் 325 ல் நிசேயா என்ற பொது சங்கத்திற்கு போகும்போது எப்ரேம்மையும் தன் செயலராக அழைத்து சென்றார். அப்போது ஆயர் இறந்து போகவே நிசிபிசிலேயே தங்கினார். அங்கே பெர்சியர்கள் படையெடுத்து வந்த வேத கலாபனையை பாடல்களாக தொகுத்தார். பின்னர்350 ஆம் ஆண்டில் திருச்சபைக்கு இருந்த ஆபத்து நீங்கியது. வேதகலாபனை போரில் பெர்சியர் தோல்வி அடைந்தனர். 13 ஆண்டுகளுக்குப்பின் மன்னன் ஜோவியன் ஆட்சிக்காலத்தில் அமைதியின் பயனாக, நிசிபிஸ் நகரை பெர்சியாவுக்கு கொடுத்தார்.

இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.

எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகை க்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறை வனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழு ம்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட் டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லா ங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.


செபம்:

இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.

Tuesday, 7 June 2016

இன்றைய புனிதர் 2016-06-08 புனித.மேடர்டாஸ் (St. Medardaus) ஆயர் பிறப்பு 475வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா இறப்பு 560 பிரான்சு

                           

                    இன்றைய புனிதர் 2016-06-08

                          புனித.மேடர்டாஸ் (St. Medardaus) ஆயர்

பிறப்பு 475வாலெண்சியென்னா(Valencienne), ஆப்பிரிக்கா

இறப்பு 560 பிரான்சு

இவர் தன் இளம் வயதில், ஒரு நாள் புல்வெளியில் நட ந்து கொண்டிருக்கும்போது, இடி மின்னலுடன் கூடிய மழை வந்தது. அப்போது ஒரு பெரிய பருந்து வந்து இளைஞனை அப்படியே தூக்கிக்கொண்டு பிறந்தது. இளைஞன் மழையில் நனையாமல் இருக்க தன் சிற குகளை அடர்ந்து விரித்து, தன் சிறகுகளின் நிழலில் வைத்து காத்தது. இதனால் மழை இல்லாமல் இயற்கை வளம் கருகும்போது இவரின் பெயரை கூறி ஜெபித் தால் மழை வரும் என்ற நம்பிக்கை பரவியது. அதே போல் மக்கள் இவரின் பெயரால் ஜெபிக்கும்போது, பலமுறை மழையைபெற்று கொண்டனர். இதனால் ஜூன் 8 ஆம் நாள் மழைக்கான நாள் என்று குறிப்பிட்டு ள்ளனர். இறைவனின் அருளால் நிரப்பப்பட்டு இவர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். இவர் சிரி த்தாலே, இவரின் வாயில் உள்ள மொத்தப் பற்களையும் பார்க்கலாம். அவ்வாறு அவர் வாய்விட்டு சிரிப்பார்.

505 ஆம் ஆண்டு இவர் குருவாக திருநிலைப்படுத்தப்ப ட்டார். 530 ஆம் ஆண்டு பாரிசிலிருந்த நையன் (Noyon) என்ற மறைமாநிலத்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்க ப்பட்டார். இவர் ரைம்ஸ் (Reims) பேராயர் ரெமிஜியுஸ் என்பவரால் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டார். ஆயர் மேடர்டாஸ் – ன்(Medardaus) பணி அம்மறைமா நிலத்தில் ஆல் போல் தழைத்து வளர்ந்தது. அப்போது அவர் தூரின் நாட்டு அரசின் ராடேகுண்டீஸ் என்பவ ரால் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவரது உடல் "புனித மடோனா" என்ற துறவற மடத்திற்கு சொந்த மான கல்லறையில் புதைக்கப்பட்டது. இன்று இக்கல் லறையின் மேல் ஒரு சிறிய கெபி கட்டப்பட்டுள்ளது.


செபம்:
அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்து வரும் எம் இறைவா! உமது பெயரால் நம்பிக்கையோடு செபி க்கிறவர்களுக்கு எல்லாவிதங்களிலும் உதவி செய்து வருகின்றீர். ஆம் இறைவா! உம்மால் படைக்கப்பட்ட இயற்கை வாடும்போது, உமது வல்லமையில், அவை கள் மீண்டும் புத்துயிர் பெற உதவும்.

இன்றைய புனிதர் 2016-06-07 புனித மரிய தெரேசியா டி சோபிரான் (St. Maria Theresia de Soubiran) சபை நிறுவுனர்

                               

              இன்றைய புனிதர் 2016-06-07

                   புனித மரிய தெரேசியா டி சோபிரான் 

                                    (St. Maria Theresia de Soubiran)

                                                            சபை நிறுவுனர்

பிறப்பு 1834காஷ்டல்நாடரி(Castelnaudary)

இறப்பு7 ஜூன் 1889

முக்திபேறுபட்டம்: 1946, திருத்தந்தை 12 ஆம் பயஸ்

இவர் தனது 21 ஆம் வயதிலிருந்து அன்னைமரியிடம் கற்பு என் னும் வார்த்தைப்பாட்டை அர்ப்பணித்து துறவற வாழ்வை வாழ்ந் தார். தன்னுடன் 14 இளம் பெண்களையும் சேர்த்து அனைவரும் ஒரே குழுமமாக வாழ்ந்து வந்தனர். பின்னர் இக்குழுவை நாள டைவில் பல இளம் பெண்கள் இனங்கண்டு கொண்டு, தங்களை யும் அக்குழுவோடு இணைத்தார். இளம் பெண்களின் எண்ணி க்கை அதிகரிக்கவே, மரிய தெரேசியா டி சோபிரான், தன் பிற ந்த ஊரிலேயே ஒரு துறவற இல்லம் தொடங்கினார். இவ்வில்ல த்தை இயேசு சபையை சார்ந்த அருட்தந்தை மரியா அக்சீலியா டிஸ் (Maria Auxiliatrice) என்பவர் உதவிசெய்து, ஆன்ம குருவாக பணி யாற்றி வழிநடத்திவந்தார். இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஜெபித்து, அன்னையின் அருளால் "மரியன்னையின் உதவியாளர்கள்"(Mariens von der immer währenden Hilfe) என்று தங்களின் சபைக்கு பெயர் சூட்டினர்.

இச்சபையினர் தேவையில் இருக்கும் மனிதர்களை இனங்க ண்டு, ஏழைகளைத் தேடி சென்று உதவி செய்து வந்தனர். இவர்க ளின் பணி சிறக்கவே 1868 ஆம் ஆண்டு திருத்தந்தை 9 ஆம் பயஸ் அவர்களால், முறையான துறவற சபையாக அங்கீகரிக்கப்பட் டது. இதன்பின் தன் 34 ஆம் வயதில் அச்சபையின் முதல் சபை த்தலைவியாக மரிய தெரேசியா டி சோபிரான் அவர்கள் பொறு ப்பேற்று வழிநடத்தினார். அதன்பின் பல அவதூறுகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனு பவித்தார். இதனால் 1873ஆம் ஆண்டு சபைத்தலைவி பதவியிலி ருந்து தானே முன்வந்து விலகினார். அதன்பின் அச்சபையை விட்டே வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அச்சபையிலிருந்து வெளியேறி "இயேசுவின் இறை இரக்கத்தின் கன்னியர்கள்"(Barmherzigen Sisters) என்ற சபையில் சேர்ந்து, தான் இறக்கும்வரை அங்கேயே தன் வாழ்நாட்களை கழித்தார்.


செபம்:

அன்பான தந்தையே! தன்னுடைய சிறுவயதிலேயே அன்னை மரியிடம் தன் வாழ்வை அர்ப்பணமாக்கிய மரியா தெரேசியா வைப்போல, நாங்களும் அன்னையின்மேல் அன்பு கொண்டு, தங்களை எந்நாளும் அர்ப்பணித்து வாழ உமதருளைத் தந்த ருளும்.

Sunday, 5 June 2016

இன்றைய புனிதர் 2016-06-06 புனித நார்பெர்ட் (St. Norbert) ஆயர், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பாதுகாவலர்

                     

              இன்றைய புனிதர் 2016-06-06

                          புனித நார்பெர்ட் (St. Norbert)ஆயர், செக்கோஸ்லோவாக்கியா நாட்டின் பாதுகாவலர்

பிறப்பு  1082  க்சாண்டன் (Xanten)
இறப்பு  1134 மக்டேபூர்க்(Magdeburg)

புனிதர்பட்டம்: 1582, 13ஆம் கிரகோரி

இவர் அரச குலத்தில் தோன்றியவர். ஆழமான அறிவுத்திறமை உடையவர். ஆழ்ந்த தெய்வபக்தியின் காரணமாக இளமையி லேயே குருத்துவத்தை விரும்பினார். ஆனால் இவர் இளைஞரா னதும் அரண்மனையில் பிரபுக்கள் போன்ற உயர்ந்த குலத்தா ரோடு சேர்ந்து உலக இன்பங்களை அனுபவித்ததால், குருவாகும் ஆசை போய்விட்டது. ஒருமுறை இவர் குதிரையின் மேல் ஏறி வேறு ஊருக்கு செல்லும்போது, எதிர்பாராத விதமாக புயல்காற் றும், இடிமின்னலும் உண்டானது. இவருக்கு முன் இடிவிழவே, குதிரை நிலை தடுமாறி, அவரை கீழே தள்ளியது. அப்போது அவர் ஆண்டவரை நோக்கி, "நான் என்ன செய்ய வேண்டுமெ ன்று விரும்புகிறீர்?" என்று கேட்டு கதறி அழுதார். "தீமையை நீக்கு; நன்மை செய்ய புறப்படு; அமைதியைத் தேடி கண்டுபிடி" என்று உடனே ஓர் குரல் கேட்டது. அதன்பின் அவர், புனித பவுலைப் போல மனம் மாறினார். தன் வாழ்நாட்களை தேவ ஊழியத்தில் செலவழிக்க உறுதி பூண்டார். முறையான பயிற்சி பெற்று குருப்பட்டம் பெற்றார். தன் செல்வங்களை ஏழைகளுக்கு பகிர்ந்து கொடுத்தார். கடுந்தவம் புரிந்து, உபவாசம் இருந்து புனிதராக வாழ்ந்தார். இறை தூண்டுதலால் ஓர் துறவற சபை யைத் தொடங்கினார். இவர் ஆண்ட்வெர்ப் (Andwerf) என்ற நகரின் அப்போஸ்தலர் என்றழைக்கப்பட்டார். ஏனெனில் தவறான பாதையில் வாழ்ந்த அந்நகர் மக்களை அவர் பல வழிகளில் நல் வழிப்படுத்தினார். அதன்பின் அவர் மாக்டபர்க் (Makdeberg) என்ற நகரின் பேராயராக நியமனம் பெற்றார். அங்கே இருந்த பல ஊழல்களை நீக்கினார்.

பின்னர் ஜெர்மன் நாட்டு அரசர் லோத்தேர் (Lothar) என்பவருக்கு ஆலோசகராக பணியாற்றினார். மாக்டபர்க் நகரின் பேராயராக நியமிக்கப்பட்டபின், அந்நகருக்கு முதன்முறையாக சென்ற போது, தாழ்ச்சியின் பொருட்டு மிதியடியின்றிப் பேராலயத்திற் குள் நுழைந்தார். பின்னர் பேராயரின் இல்லத்திற்குள் நுழைந்த போது, வாயிற்காப்போன் இவர் யாரென்று தெரியாமல், உள்ளே நுழைய அனுமதி தர மறுத்தார். ஏனெனில் அவர் ஓர் ஏழை யைப்போல தோற்றமளித்தார். ஆயர் வாயிற் காப்போரை நோக் கி, உண்மையில் நீதான் என்னை புரிந்துக்கொண்டாய். எனது நிலையை அறிந்து கொள்ளாதவர்கள்தான் என்னை பேராயர் பதவிக்கு உயர்த்தி, இந்த இல்லத்திற்கு வரக்கட்டாயப்படுத்து கிறார்கள். நானோ தகுதியற்றவன், வறியவன் என்றார். பின்னர் வாயிற்காப்போன் தன் தவறை உணர்ந்து புனிதரிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆயர் நார்பெர்ட் ஏற்படுத்திய சபை "நார்பெர்டைன்" என்று அழைக்கப்படுகின்றது. இவர் திவ்விய நற்கருணை மீது தனி பெரும் பக்தி கொண்டிருந்தார். இப்பக்தியை இத்துறவற சபை யை நிறுவிய புனிதரே கற்றுத் தந்துள்ளார். இவர் இறந்த மறு நூற்றாண்டில் இவரது சபை 500 ஆக பெருகியது. பின்னர் பெண்களுக்கென்றும் ஓர் சபை நிறுவப்பட்டது. இதில் 3ஆம் சபையினரும் உள்ளனர்.


செபம்:

அன்பே உருவான இறைவா! ஆடம்பர வாழ்வில் தன் நாட்களை கழித்து, உம்மை அறியாமல் இருக்கும் ஒவ்வொரு மனிதரையும் நீர் உமது கருணை கண்கொண்டு பாரும். புனித நார்பெர்டைப்போல மனந்திரும்பி, உமக்கு சான்று புரியும் வாழ்வு வாழ, நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-06-05 புனித போனிபாஸ் மறைசாட்சி

                

             இன்றைய புனிதர் 2016-06-05

             புனித போனிபாஸ் மறைசாட்சி

பிறப்பு 673 டெவன்ஷயர், இங்கிலாந்து

இறப்பு 756

வின்பரட் (Winbarat) என்பது இவரது திருமுழுக்கு பெயர். இவர் தனது ஐந்தாம் வயதில் இருக்கும்போது துறவிகள் சிலர் இவரது குடும்பத்தை சந்திக்க வந்தனர். அப்போது வின்பரட் தான் ஓர் துறவியாக வேண்டுமென்று ஆசைபட்டார். தமது 7 ஆம் வயதில் வீட்டின் அருகிலிருந்த ஒரு துறவற மடத்தில் சேர்ந்து கல்வி கற் றார். சிறந்த அறிவாளியும், புனிதருமான துறவி வின்பரட் இவ ருக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். வின்பரட் (போனிபாஸ்) தமது படிப்பை முடித்தபின் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி னார். அப்போது முதன்முதலாக இலத்தின் இலக்கணத்தை ஆங் கிலேயருக்கெனத் தயாரித்தார். பின்னர் தமது 30 ஆம் வயதில் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். அதன்பின் வின்பரட் (போ னிபாஸ்) ஜெர்மனி நாட்டில் மறைபரப்பு பணிக்கு இறைவன் தம் மை அழைப்பதாக உணர்ந்தார். இதனால் 716 ல் ஜெர்மனி வந் தார். பின்னர் அங்கு மறைபரப்புபணிக்கான சூழ்நிலை இல்லை என்பதை மீண்டும் தாயகம் திரும்பினார். திருத்தந்தையின் ஆசீ ரோடு போனால் பயன் உண்டு என்று நினைத்து, உரோமை செ ன்று திருத்தந்தை இவரது பெயரை "போனிபாஸ்" என்று மாற்றி னார். புதிய பெயருடன் ஜெர்மனியில் உள்ள ஹெஸ்(Hess) என்ற பகுதிக்கு சென்றார். அவர் சென்ற நேரத்தில் கொடிய அரசன் ராட்போர்ட் என்பவன் இறந்தான். அவனை அடுத்து வந்த அர சன் இவரிடம் அதிக அன்பு காட்டினார். இதனால் 3 ஆண்டுகள் பிரிஸ்லாந்தில் கடுமையாக உழைத்து மறைபரப்பு பணியை ஆற்றினார். இவரின் புனிதமான பணியை பார்த்த குருக்கள் இவரை ஆயராக தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். ஆனால் போனிபாஸ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் இவர் 722 ல் உரோமுக்கு செல்ல இவருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அங்கே அவர் ஆயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். இவருக்கு மறை பரப்பு பணியை ஜெர்மனி முழுவதும் பரப்ப பொறுப்பு வழங்கப் பட்டது. திருத்தந்தை அரசர் சார்லஸ் மார்ட்டலுக்கு(Charles Martel) கொடுத்தனுப்பிய பரிந்துரைக்கடிதம் இதற்கு மிக உதவியாக இருந்தது. இதன் அடிப்படையில் ஜெர்மனி முழுவதும் இருந்த மூட நம்பிக்கைகளையும், தவறான கொள்கைகளையும் கூண் டோடு அழிக்க அவருக்கு துணிச்சல் ஏற்பட்டது. ஒருமுறை மக் கள் அனைவரையும் ஒன்றாக கூட்டி, அவர்கள் தெய்வமாக வழி பட்டு வந்த ஒரு வளர்ந்த மரத்தின் முன் நிற்க வைத்து, அம்மரத் தை ஒரு கோடாரி வைத்து வெட்டினார். அம்மரம் 4துண்டுகளாக பிரிந்து விழுந்தது. இதனால் கடவுளின் சினம் பேராபத்துடன் வர ப்போகிறது என்று அம்மக்கள் கதிகலங்கினர். எந்த வித ஆபத் தும் இல்லாமற் போகவே, அவர்கள் நம்பிய தெய்வங்கள் பயன ற்றவை என்ற முடிவுக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் கடவுள் ஒ ருவரே என்பதை உணர்ந்தனர். அம்மக்களை மனமாற்றியப் பி ன் அவர் அங்கிருந்து துரிஞ்சியா பகுதிக்கு மறைபரப்பு பணிக் கு சென்றார். அங்கிருந்த மக்கள் குருக்களுக்கு பல தொல்லை களை கொடுத்தனர். இதனால் இங்கிலாந்திலிருந்து ஏராளமான துறவிகளையும், கன்னியர்களையும் அழைத்து வந்தார். 731 ல் திருத்தந்தை 2 ஆம் கிரகோரி இறந்தார். அதன்பின் வந்த திருத் தந்தை 3ஆம் கிரகோரி, போனிபாசுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி, மறைபரப்பு பணியை திறம்பட தொட ஊக்கமூட்டி னார்.  741 ல் மன்னன் சார்லஸ் மார்ட்டலுக்குப்பின், அவரின் மக ன்கள் பெப்பின், கார்ல்மென் ஆட்சிக்கு வந்தனர். இவர்களும் போனிபாசுக்கு பல சலுகைகளை வழங்கினர். அப்போது இரு முறை ஆயர் பேரவைகளை கூட்டினார். அதன்வழியாக திருச்ச பையில் இருந்த பலதரப்பட்ட ஊழல்களை களைந்தார். திருச் சபையில் புதிய இரத்தத்தைப் பாய்ச்சினார். மைன்ஸ்-ஐ (Mainz) தலைநகராகக் கொண்டு, அவர் கர்தினால்களின் அதிகாரங்க ளுடன் பணியில் ஈடுபட்டார். போனிபாசுக்கு மறைபரப்பு பணி க்கு மிக உதவியாய் இருந்த மன்னன் கார்லமென் காலமானார். இதனால் மனமுடைந்த போனிபாஸ் துறவுமடம் போக விரும்பி, அங்கு தனிமையை நாடினார். அப்போது அரசன் பெப்பின் இரு நாடுகளையும் ஒன்றிணைத்தான்.

இப்பணி போனிபாசுக்கு தன் பணியை எளிதாக ஆற்ற மிகவும் உதவியாயிருந்தது. ஆயர் அப்போது வயது முதிர்ந்தவராக இரு ந்தார். இதனால் எல்லாவிதங்களிலும் தனக்கு உதவியாக இருந்த "லல்"(Lall) என்பவரிடம் தன் பொறுப்புகள் அனைத்தையும் ஒப் படைத்தார். பின்னர் தன் கையால் முதன்முதலாக திருமுழுக்கு பெற்ற பிரீஸ்லாந்து மக்களிடையே சென்று மறைபரப்பு பணி யை தொடர்ந்தார். பிரிஸ்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருள் மங்கிக்கிடந்தது. அம்மக்கள் ஆயரில்லா ஆடுகளை போல இரு ந்தனர். அப்போது தமது 73 ஆம் வயதில் அம்மக்களை ஒன்றாக கூட்டி கிறிஸ்து உயிர்ப்பு விழாவிற்கு அடுத்த ஞாயிறன்று ஞான ஸ்நானம், உறுதிபூசுதல் கொடுக்க "டொக்கு" என்ற இடத்தில் ஏற்பாடு செய்தார். புதிய கிறிஸ்துவர்களின் வருகைக்காக தம் குடிசையில் காத்துக்கொண்டிருக்கும்போது, சில முரடர்களால் தாக்கப்பட்டார். ஆயரின் உடன் பணியாளர்கள் அவரை காப் பாற்ற முயன்றனர். ஆனால் " கிறிஸ்துவுக்காக உயிரைக் கொடு ப்போம்" என்று ஆயர் போனிபாஸ் கூறும் போதே, முதல் அடி அவர் மேல் விழ, ஆயரின் உயிர் பிரிந்தது. அவரோடு இணைத்து உடன் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். இன்று இத்தனை நூற்றாண்டுகளாக ஜெர்மனியும், பிரான்சும் ஆழமான விசு வாசமுள்ள நாடுகளாக காட்சியளிக்கின்றன என்றால் அதற்கு அடித்தளமிட்டவர், இரத்தம் சிந்தி உரமிட்டவர். புனித போனி பாஸ் என்பதை எவராலும் மறக்க இயலாது.


செபம்:

விசுவாசத்தின் பரம்பொருளே! இரத்தம் சிந்தி, உயிரை விட்டு, உமது மறைபரப்பு பணியை ஆற்றியுள்ளார் புனித போனிபாஸ். இன்றைய மறைபரப்பு பணியாளர்கள் தைரியத்துடன், உம்மை பறைசாற்றி, உமது சாட்சிகளாய் வாழ இறைவா உம் வரம் தாரும்.

Saturday, 4 June 2016

இன்றைய புனிதர் 2016-06-04 புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo) நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்



                        

              இன்றைய புனிதர் 2016-06-04

புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)

                       நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்

பிறப்பு 13 அக்டோபர் 1563 சாந்தா மரியா (Sanra Maria)இறப்பு 4 ஜூன் 1608 நேயாப்பல்(Neapel)

புனிதர்பட்டம்: 1807, திருத்தந்தை 7 ஆம் பயஸ்

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார். இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார். அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார். குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளி க்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துட னும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளி களையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.
இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழை களை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கி னார். 1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திரு த்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர் களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ (Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவ ராக தேர்ந்தெடுத்தார். 1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட் டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.


செபம்:

குணமளிப்பவரே இறைவா! இவ்வுலகில் நோயினால் துன்பப்படும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் நோய்களை தாங்கிக் கொள்ள கூடிய உடல் பலத்தையும், மன வலிமையையும் தந்து காத்தருளும். மருத்துவர்க்கு மருத்துவராய் இருந்து, குணமளித்து வழிநடத்தியருளும்.

Friday, 3 June 2016

இன்றைய புனிதர் 2016-06-03 புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles) மறைசாட்சி, ஆப்ரிக்க இளைஞர்களின் பாதுகாவலர்

                     

               இன்றைய புனிதர் 2016-06-03

          புனித லுவாங்கா சார்லஸ் (St Luwanga Charles)

        மறைசாட்சி, ஆப்ரிக்க இளைஞர்களின் பாதுகாவலர்

பிறப்பு1879உகாண்டா, ஆப்ரிக்கா

இறப்பு31 அக்டோபர் 1885ஆப்ரிக்கா

முத்திபேறுபட்டம்: 1920, திருத்தந்தை 15ஆம் பெனடிக்ட்
புனிதர்பட்டம்: 18 அக்டோபர் 1964, திருத்தந்தை ஆறாம் பவுல்

"வெள்ளைக் குருக்கள்" என்றழைக்கப்படும் துறவற சபையினர் ஆப்ரிக்காவில் நைல் நதி மேற்குப்பகுதி யில் வாழ்ந்து வந்து மக்களிடையே 1878ல் மறைபரப்புப் பணியில் இறங்கினர். 1879 ஆம் ஆண்டு பெரிய சனிக்கி ழமையன்று முதன்முதலாக சிலர் திருமுழுக்கு பெற்ற னர். இவர்களில் சிலர் இஸ்லாம் மறையிலிருந்து புரோ ட்டஸ்டாண்டு சபைக்கு மாறி, அதிலிருந்து கத்தோலிக் கரானவர்கள். கத்தோலிக்க மெய்மறை மிக விரைவாக பரவுகிறதென்பதை உணர்ந்த இஸ்லாமியரின் தூண் டுதலால் 1886 ல் முவாஷ்கா(Muwashka) என்ற அரசன் கத் தோலிக்கர்களைத் துன்புறுத்த ஏவிவிட்டான். சார்லஸ் லுவாங்காவும் அவரின் தோழர்களும் அரச அவையில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் எல்லாரும் 13-30 வயது க்குட்பட்ட இளைஞர்கள். முவாஷ்கா ஓரின சேர்க்கை க்கு அடிமைப்பட்டவனாக இருந்தான். அவன் அரச அலு வல் புரிந்தவர்களைக் கெடுக்க சூழ்ச்சி செய்த போது, சார்லஸ் தம் தோழர்களிடம், "இது தீமையானது, கொடு மையானது" என்று அறிவுரை கூறி ஓரினசேர்க் கை ஈடு படாமல் காப்பாற்றி வந்தார். சார்லஸ் தான் புதிதாக பெற்றுக்கொண்ட விசுவாசத்திற்காக நமுகொஸ்கோ (Namukosco) என்ற இடத்தில் நெருப்பிலிடப்பட்டு கொல்ல ப்பட்டார்.

சார்லஸின் அறிவுரைப்படி மற்ற இளைஞர்கள் தங்கள் புனிதத்தில் நிலைத்து நின்றனர். 13 வயதான சிறு பெண் தனது கற்புக்காக மற்றவர்களைப்போல உயி ரைத் தியாகம் செய்தார். இந்த வேதகலாபனை முடிந்த மறு ஆண்டிலேயே ஆப்பிரிக்காவின் இந்தப் பகுதியில் மறைபரப்பு பணி மிக விரைவாக பரவியது. ஆப்பிரிக் காவில் இந்த மறைசாட்சிகளின் இரத்தம் சிந்தப்பட் டதன் பயனாக ஒரு புதுயுகம் தோன்றிவிட்டது. முழுமை யான சுதந்திரம் பெற்று மகிழும் ஆப்பிரிக்காவாக பொலிவுடன் வளர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் வேதனையில் புதிய யுகத்தை சார்ந்த ஆப்பிரிக்கா மக்களின் ஆன்மீக மேம்பாட்டுக்கான பாடங்கள் பல மிளிர்கின்றன.

மறைசாட்சிகள் தூண்களில் கட்டப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். சாட்டையடிப்பட்டனர். ஈட்டிகளால் குத்தப்பட்டனர், சுட்டெரிக்கப்பட்டனர். தலைவெட்ட ப்பட்டனர். இப்படி இருந்தும் ஆப்பிரிக்காவில் கிறிஸ்து வர்கள் பலுகி பெருகினர்.


செபம்:
இரக்கமே உருவான இறைவா! இரத்தம் சிந்தி மறைசாட்சிகளாக மரித்து, பல கிறிஸ்தவர்களை உருவாக்கிய புனித லுவாங்கா சார்லசை நினைத்து, அவரின் மகத்துவமிக்க, மேன்மையான பணிக்காக உம்மை நாங்கள் போற்றுகிறோம், புகழ்கின்றோம், ஆப்பிரிக்காவில் வாழும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும், நீர் நிறைவாக ஆசீர்வதியும். உமது மறைபரப்பு பணியை ஆற்றிக்கொண்டிருக்கின்ற உமது ஊழியர்களை, கண்ணின் இமைபோல நீர் காத்து வழிநடத்தியருள வேண்டுமாய், இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

Wednesday, 1 June 2016

இன்றைய புனிதர் 2016-06-02 புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter) மறைசாட்சிக


                        

                 இன்றைய புனிதர் 2016-06-02

      புனித மார்சலினஸ்,புனித பீட்டர் (St.Marcelinas, St.Peter)

மார்சலினஸ் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு, குருத்துவ நிலையை அடைந்தார். பீட்டர் திருச்சபை வழங்கும் "பேய்களை ஓட்டும்" அதிகாரம் பெற்றவராக தொண்டு புரிந்து வந்தார். இரு வரும் தங்களின் வேத விசுவாசத்திற்காக சிறையில் தள்ளப்பட் டனர். அங்கு ஏற்கெனவே விசுவாசத்திற்கு எதிராக செயல்பட்டவ ர்கள் சிலர் கிறிஸ்தவர்களை விசுவாசத்தின்பேரில் கொடுமைப் படுத்தி வந்தனர். அவர்களை இவர்கள் இருவரும் மனந்திருப்பி னர். அவர்களை கிறிஸ்துவின் விசுவாசிகளாக மாற்றினர். சிலரை புதிதாகவும் மனந்திருப்பினர். சிறைக் காவலன் ஆர்த்தியுஸ், அவர் மனைவி, மகள் ஆகியோர் கூட கிறிஸ்துவின் ஒளியை இவர்கள் மூலம் பெற்றுக்கொண்டனர்.

இவர்களின் வீரச்சாவு நாளன்று, நாயக்ரா என்றழைக்கப்படும் ஒரு காட்டிற்குள் கொண்டு போகப்பட்டனர். அங்கே இவர்கள் தலைகள் துண்டிக்கப்பட்டன. இவர்கள் வெட்டப்படும்முன் இவ ர்களை புதைக்க ஒரு குழித்தோண்டப்பட்டிருந்தது. உடனே இவ ர்கள் புதைக்கப்பட்டனர். இந்த இரகசியத்தை கொலை ஞனே வெளிக்கொணர்ந்துவிட்டார். இவரும் இறுதியில் திரு முழுக்கு பெற்றுக்கொண்டார். லூசில்லா, ஃபிர்மினா என்ற பக்தியுள்ள பெண்கள் இவர்களின் புனித உடல்களை எடுத்து "திபூர்சியஸ் புதைக்குழி"யில் அடக்கம் செய்தனர். மன்னன் கான்ஸ்டாண் டின் கிறிஸ்துவின் ஒளியை பெற்றுக்கொண்டவர். இவர் கல்ல றைமேல் பேராலயம் எழுப்பியதுடன், புனித எலேனா என்ற பெயர் கொண்ட தம் தாயையும் இங்கேயே அடக்கம் செய்தார். இவர்களின் வீரச்சாவு தொடக்கத் திருச்சபையில் எவ்வளவு போற்றப்பட்டதெனில் ரோமன் கேனன்(Roman Canon) என்று சொல் லப்படும். திருப்பலி வேளையில் பயன்படுத்தப்படும் "மாறாத ஜெபங்கள்" என்ற பகுதியில் இவர்களின் பெயர்கள் சேர்க்கப்ப ட்டு காலங்காலமாக நினைவு கூரப்பட்டனர்.

"நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. வான் வெளியில் திரியும் தீய ஆவிகளோடு போராடுகிறோம், எனவே பொல்லாத நாள் வரும்போது, எதிர்த்து நின்று அனைத்தின்மீது வெற்றி அடைந்து, நிலை நிற்க வலிமை பெறும்படி கடவுள் தரும் படைக்கலங்களை எடுத்துக்கொள்ளுங்கள்" (எபே 6:12) என்ற இறைவாக்கை வாழ்வாக வாழ்ந்தனர்.


செபம்:

விசுவாசத்தின் நாயகனே எம் இறைவா! உமது இறை விசுவாசத்தை இவ்வுலகில் நிலைநாட்ட புனித மார்சலினஸ்சும், புனித பீட்டரும் தங்கள் உயிரையே இழந்தனர். இவர்களைப் போல இறக்கின்ற ஒவ்வொருவரையும், உமது வான்வீட்டில் சேர்த்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

இன்றைய புனிதர் 2016-06-01 புனித ஜஸ்டின் (St.Justin) மறைசாட்சி(Martyr), தத்துவமேதை


இன்றைய புனிதர்2016-06-01

புனித ஜஸ்டின் (St.Justin)
மறைசாட்சி(Martyr), தத்துவமேதை

பிறப்பு 100 ஆம் ஆண்டுசிரியா

இறப்பு165

புனிதர்பட்டம்: 1035, திருத்தந்தை 9ஆம் பெனடிக்ட்

இவர் கிரேக்கமொழி பேசும் பெற்றோருக்கு மகனாக பிறந்தார். சிறு வயதிலிருந்தே தத்துவ கலையை ஆழ மாகக் கற்றுத்தேர்ந்தார். இவரது காலத்தில் இருந்த ப்ளேட்டோ(Plato) போன்ற தத்துவமேதைகளுடன் நெரு ங்கிய தொடர்புகொண்டிருந்தார். எல்லாம் வல்ல இறை வனைப்பற்றி இந்த தத்துவ ஞானம் தனக்கு முழுமை யான விளக்கம் அளிக்க இயலவில்லை என்றுணர்ந் தார். ஒருநாள் அலெக்சாண்டிரியா நகருக்கு அருகில் கடற்கரையில் நடந்து போய்கொண்டிருந்தார். தற் செயலாக ஒரு வயது முதிர்ந்த கிறிஸ்தவரை சந்தி த்தார்.. அவருடன் நெடுநேரம் உரையாடினார். அதன்பயனாக விவிலியத்தில், இறைவாக்கினர்கள் எழுதிய இறைவாக்குகளைப்படித்தார். நாளடைவில் மீட்பரின் முன்னறிவிப்பு இறைவாக்கை சரியாக புரிந்துகொண்டார்.

கிறிஸ்தவர்கள் எத்தனை மனவலிமையுடன் கிறிஸ்து விற்காக வேதனைகளை தாங்கிக்கொண்டார்கள். என்பதை உணர்ந்து வேதனைப்பட்டார். இறைவாக்கி னர்களை நினைத்து வியப்படைந்தார். சாவைத் தழுவினாலும், இந்த மறைசாட்சிகளிடம் காணப்பட்ட முகமலர்ச்சியும், ஆர்வமும் அவரை மிக ஆழமாகத் தொட்டது. இவர்களின் வீரச்சாவும் இவர் திருநூலைப் படித்ததன் பயனுமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். கிறிஸ்துவுக்காக வாழ முடிவெடுத்தார். பின்னர் தமது தத்துவமேதைக்குரிய உடையிலேயே பல பயணங்களை மேற்கொண்டு, இறுதியாக உரோம் நகரை அடைந்தார். 4 நற்செய்தியாளர்களும் எழுதிய இறைவாக்குகளைப் பற்றி தெளிவாகப்படித்தார். முடிவில் அவர்கள் எழுதியவைகள் அனைத்தும் உண்மை என்பதை உணர்ந்து ஏற்றுக்கொண்டார். இதன் பயனாக, இவரது நாட்களில் ஞாயிறு திருவழிபாடு எவ்வாறு நடைபெற்று வந்தது என்பதைப்பற்றி விரிவாக எழுதிவைத்தார். அனைத்திற்கும் மேலாக, திவ்விய நற்கருணையில் இறைப்பிரசன்னத்தை பற்றியும் அதில் நாம் கொண்டிருக்கவேண்டிய விசுவாசப் பற்றுறுதி பற்றியும் மிகவும் ஆழமாக விவரித்து எழுதியுள்ளார்.

147 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டது போல, இனியும் துன்புறுத்தப்படக்கூடாது. என்று மன்னன் ஆன்றோனினுஸ் பயஸ்(Androninus Pius) ஆணை பிறப்பித்தான். ஜஸ்டின் எழுதிய பல நூல்களில் ஒன்றில் "உலகில் எப்பகுதியிலும், எக்காலத்திலும் உண்மையை சுட்டிக்காட்டிய ஞானிகள் அனைவரும் கிறிஸ்துவ சமுதாயத்தை சார்ந்தவர்கள் என்று மிக அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டுள்ளார். 166 ல் ஜஸ்டின் எழுதிய மற்றொரு நூலில், நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பேருண்மைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார். இதனால் இந்நூல் அப்போதைய அரசன் மார்க்ஸ் அவுரேலியுசுக்கு(Marks Aureliyas) எரிச்சல் மூட்டியது. இதனால் கோபம்கொண்ட அரசன், கிறிஸ்துவ விசுவாசத்தையும், ஜஸ்டினையும் அழிக்க எண்ணி, அவரை சிறைப்பிடித்து சென்றான். அங்கு பல கொடுமைகளை அனுபவித்த ஜஸ்டின் தனது 67 ஆம் வயதில் தலைவெட்டப்பட்டு இறந்தான். அவர்தான் இறக்கும்வரை, எந்த ஒரு தத்துவக்கலையும், இறுதியில் கிறிஸ்துவிடம் மட்டுமே கொண்டு சேர்க்கமுடியும் என்பதை இடையூறாது போதித்தார்.


செபம்:
எங்கள் தந்தையாகிய இறைவா! இன்றைய உலகில் உள்ள தத்துவமேதைகளை நீர் கண்ணோக்கியருளும். ஒவ்வொருவரும் உம்மை மையமாக வைத்து செயல்படவும், தங்கள் பணிகளின் வழியாக உம்மை பறைசாற்றவும் புனித ஜஸ்டின் வழியாக உம் அருளைத்தந்து காத்து வழிநடத்தும்.