இன்றைய புனிதர் 2016-06-09
புனித எப்ரேம் (St.Ephrem)
மறைவல்லுநர், விசுவாசத்திற்கு பாதுகாவலர்
பிறப்ப 306மெசப்பொட்டேமியா
இறப்பு 373கப்படோசியா
புனிதர்பட்டம்: திருத்தந்தை 15 ஆம் பெனடிக்ட்
இதனால் மனமுடைந்த எப்ரேம் எடெஸ்ஸாவுக்கு அருகில் தனிமையை நாடிச்சென்று ஒரு குகையில் நாட்களை செலவழித்தார். அங்கு கடும் தவ முயற்சிகளை மேற்கொண்டார். திருவழிபாட்டில் மக்களின் மனதை இறைவன்பால் எழுப்பும் ஆற்றல் திருப்பாடல்களுக்கு நிறையவே உள்ளது என்பதை இவர் உணர்ந்தார். திருவழிபாட்டில் "திருப்பாடல்களின் தந்தை" என்ற பட்டம் இவருக்கு மக்களால் கொடுக்கப்பட்டது. இவர் பெண்களின் பாடற்குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இவர் இறுதிவரை தியாக்கோனாகவே இருந்தார். இவர் பல நூல்கள் எழுதினார். அனைத்திலுமே தான் ஓர் குருத்துவத்தை தேர்ந்துகொண்டதாகவே எழுதியுள்ளார். இவரின் நூல்கள் அனைத்தும் " இவருடைய நாட்களில் மக்கள் எப்படி விசுவாசத்தில் வளர்ச்சி அடைந்து வந்தனர். திருச்சபையில் எத்தகைய வழிபாட்டு முறைகள் நிலவி வந்தன என்பதை காட்டுகின்றது. அதேபோல் அன்னை மரியா எத்தகைய மாசு மறுவுமின்றி உற்பவித்தவர் என்று இவர் குறிப்பிடும்போது, அவரது நாட்களில் இவ்வுண்மையை விசுவாசிகள் தெரிந்து வைத்திருந்தனர். தாழ்ச்சியின் பொருட்டு, தமது அடக்க சடங்கின்போது, தம் உடலுக்கு தூபங்காட்ட வேண்டாம். இறைவனுக்கு மட்டுமே நறுமணத் தூபம் உரியது என்றும், ஆன்ம சாந்திக்காக திருப்பலி ஒப்புக்கொடுப்பது மட்டுமே சிறந்தது என்று கூறினார்.
எப்ரேம் 370 ஆம் ஆண்டில் கப்படோசியாவில் இருந்த புனித பாசிலை சந்தித்தார். ஏற்கெனவே பசிலியாரின் புகழ்பற்றி அவர் பலமுறை கேள்விப்பட்டிருந்தார். 372 ல் எப்ரேம் வாழ்ந்த பகுதிக்கருகில் மக்கள் கடும் பஞ்சத்தில் சிக்கினர். இவர் அம்மக்களை மீட்க அயராது உழைத்தார். எல்லாவிதமான முயற்சிகளையும் எடுத்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். பஞ்சத்தில் அடிப்பட்ட நோயாளிகளுக்கு தொண்டாற்றினார். இப்பணிகளின் மிகுதியால் மிகவும் களைத்து போனார். தொடர்ந்து பணியாற்ற இவரின் உடல் ஒத்துழைக்கவில்லை. வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தான் தங்கியிருந்த குகை க்குள் மெல்ல நகர்ந்து சென்றார். குகைக்குள் சென்றதுமே இறை வனடி சேர்ந்தார். இவர் ஓர் புகழ்மிக்க ஆசிரியர், தேன்சொட்டும் மறையுரையாளர், சிறந்த கவிஞர், விசுவாசத்தின் பாதுகாவலர், மறைநூலின் ஆழமான விளக்க உரையாளர் என்று இவர் வாழு ம்போதே, மக்கள் இவருக்கு புகழ் சூட்டினார்கள். இவர் சிரியன் ரீதியை சேர்ந்தவராக இருந்தபோதும் கூட "திருச்சபையின் மறைவல்லுநர்" என்ற பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே சூட் டப்பட்டது. திருவழிபாட்டில், திருப்பாக்களை சரளமாக புகுத்தும் பழக்கம் இவருக்கு இருந்ததால் இவரை "தூய ஆவியின் புல்லா ங்குழல்" என்று அழைக்கப்பட்டார்.
செபம்:
இன்னிசை நாயகனே எம் தலைவா! இசையின் வழியாகவும், பல பாடல்களின் வழியாகவும், புனித எப்ரேம் உம்மை போற்றி புகழ்ந்தார். பல மனிதர்களையும் ஆன்மீக வாழ்விற்கு அழைத்து சென்றார். திருவழிபாட்டை உயிரோட்டமுள்ளதாக மாற்றினார். நாங்களும் எங்கள் வாழ்நாட்களில், பக்தியோடு திருவழிப்பாட்டில் பங்கு பெற்று, உமது நற்பலன்களை பெற்று கொள்ள வரம் தாரும்.
No comments:
Post a Comment