Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Monday, 20 June 2016

இன்றைய புனிதர் 2016-06-21 புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga) இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

                     

             இன்றைய புனிதர் 2016-06-21

புனித அலோசியஸ் கொன்சாகா(St. Aloysius Gonzaga)

இளைஞர்களுக்கு பாதுகாவலர் , துறவி

பிறப்பு 1568மாந்துவா, இத்தாலி

இறப்பு1591மாந்துவா, இத்தாலி

புனிதர்பட்டம்: 1726, திருத்தந்தை 13ஆம் பெனடிக்ட்

இவர் ஓர் அரச குலத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, இவர் பேரும் புகழும் உள்ளவராக பிற்காலத்தில் திகழ வேண்டுமென விரும்பி, போர் வீரர்களின் தலைவரா கும் பயிற்சியை அலோசியசிற்கு கொடுத்தார். ஆனால் இவரின் தாய் ஊட்டிய சத்துள்ள ஞானப்பாலின் விளை வாக பிளாரன்ஸ் நகரில் ஒன்பது வயதிலேயே மரிய ன்னையின் பேராலயத்தில் கற்பு என்னும் வார்த்தை ப்பாட்டை இவர் எடுத்துக்கொண்டார். வாரத்தில் 3நா ட்கள் கடுந்தவம் மேற்கொண்டார். பல கடுமையான ஆன்மீக தவ முயற்சிகளையும் செய்து வந்தார். 13வய தில் இவர் தம் பெற்றோருடன் ஸ்பெயின் நாட்டிற்கு செ ன்றார். அங்கே 2ஆம் பிலிப்புவின் அரச அவையிலேயே முழு நேரம் தங்கினார், அரச குல மக்களில் ஒருவரா கவே நடத்தப்பட்டார். அங்கே நிலவிய சீர்கேடுகளில் சிக்காமல் இருக்க கடுமையான முயற்சிகளை மே  ற்கொண்டார். இவ்வேளையில் இயேசு சபையினர் இந்தியாவிற்கு சென்று நற்செய்தி பரப்பும் பணியில் ஈடுபாடு பற்றிய நூல் ஒன்று கிடைத்தது. அதை வாசித்த அவர் இயேசு சபையில் சேர எண்ணினார். இதனிடயே தன் தந்தையுடன் 4 ஆண்டுகள் பனிப்போராட்டம் நடத்தினார். இருப்பினும் மகனின் முடிவை தந்தை ஏற்க மறுத்தார். ஆனால் அலோசியஸ் இப்போரில் வெற்றி பெற்று, தனக்கு வரவேண்டிய சொத்தையெல்லாம் தன் தம்பியின் பெயரில் எழுதிவைத்தார்.
1587 ஆம் ஆண்டு இயேசு சபையில் சேர்ந்தார். பின்னர் குரு மாணவராக படிக்கும்போது, பிளேக் நோயாளிக்கு உதவி செய்து, தானும் அந்நோயால் பாதிக்கப்பட்டார். அச்சூழலில்தான் அக்கொடிய நோயால் தாக்கப்பட்டு இறந்தார். அப்போது அவரின் வயது 23. இளம் வயதிலேயே ஏராளமான புண்ணியங்களை செய்து வான்வீட்டிற்கு தயார் நிலையில் தன்னை ஆக்கிக்கொண்டார்.

இயேசு சபையில் புனிதராகவும், மறைவல்லுநராகவும் வாழ்ந்த புனித இராபர்ட் பெல்லார்மின் தான் இவரின் ஆன்ம குருவாய் இருந்தார். ஒருமுறை அலோசியசிடம் இவர் ஓர் ஆன்மா, உத்தரிக்கும் வேதனை அடையாமலேயே நேராக பேரின்பம் பெறமுடியும் என்று கூறினார். இதை கேட்ட அலோசியஸ் பரவசமடைந்தார். அந்நேரத்தில் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்த பெருவிழாவிற்கு எட்டு நாட்களுக்கு பின்னர் தான் இறக்க போவதாக உணர்ந்தாராம். அவ்வாறே "தெ தேயும்" என்ற நன்றி பாடலை இசைத்துக்கொண்டே தனது ஆன்மாவை இறைவனிடம் கையளித்தார். அலொசியஸ் தனது 23 ஆண்டுகால வாழ்வில் ஒருமுறை கூட சாவான பாவத்தில் விழவில்லை என்று அவரின் ஆன்ம குரு கூறியுள்ளார்.


செபம்:
குணப்பளிப்பவரே இறைவா! இதோ எம் சமுதாயத்தில் பிளேக் நோயால் பாதிக்கப்படும் மக்களை உம் பாதம் சமர்ப்பின்றோம். அவர்களின் நோயை நீரே குணமாக்கியருள வேண்டுமாய் உம்மை இறைஞ்சுகின்றோம். இவர்களை பராமரிக்கும் அனைவருக்கும் நல்ல உடல் உள்ள நலன் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை இறைஞ்சுகின்றோம்.

No comments:

Post a Comment