Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 22 June 2016
இன்றைய புனிதர் 2016-06-22 புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus) ஆயர்
இன்றைய புனிதர் 2016-06-22 புனித நோலா பவுலீனுஸ் (St. Nola Paulinus) ஆயர்
பிறப்பு 355 போர்தோ(Portho), பிரான்ஸ்
இறப்பு 22 ஜூன் 431
இவர் பிரான்ஸ் நாட்டில் ஓர் உயர்குடியில் தோன்றிய வர். இவர் தமது 25 ஆம் வயதிலேயே திறமைமிக்க பே ச்சாளராகவும், கவிஞராகவும் விளங்கினார். அரச அவைக்கு மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்ப ட்டார். வலண்டீனியன் என்ற அரசன் இவரை கம்பா ஞ்ஞா(Companiya) மாநிலத்திற்கு ஆளுநராக நியமித்தார். இவர் மெய்மறையில் சேர்வதற்கு முன்னரே, திரேசியா என்ற ஒரு கிறிஸ்துவ பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர் 385 ஆம் ஆண்டு திருமுழுக்கு பெற்றார். அந்த ஆ ண்டில் அவரது ஒரே மகன் குழந்தை பருவத்திலேயே இறந்துவிட்டான். இதனால் நோலா பவுலீனுசும், அவரது மனைவி திரேசாவும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றனர். அங்கே பார்சலோனா நாட்டு மக்கள் அவருடைய ப க்தியை அறிந்து, குருத்துவத்தை தேர்ந்து கொள்ள தூ ண்டினர். அவரின் மனைவியும் இதற்கு சம்மதம் தெரி வித்தார். இருவரும் தங்களது உடைமைகள் அனை த்தையும் விற்றுவிட்டு, ஏழைகளுக்கு பகிர்ந்துகொடு த்தனர்.
பின்னர் பவுலீனூஸ் குருத்துவத்தை தெரிந்து கொ ண்டார். இதனால் அவரின் மனைவி மிலான் நாட்டிற்கு சென்று, அங்கு ஆயர் அம்புரோசை சந்தித்து, அவரின் அறிவுரைப்படி திரேசியாவும் ஓர் துறவற மடத்திற்கு சென்றார். துறவறத்தில் 20 ஆண்டுகள் திருப்பணியை திறம்பட செய்தார். பவுலீனுஸ் பேய்களை ஓட்டும் வ ல்லமை பெற்றிருந்தார். இவரை போல ஒரு புனிதத்துவ வாழ்வை எவராலும் வாழ முடியாது என்று புனித அகஸ்டின், புனித ஜெரோம், புனித அம்புரோஸ் ஆகி யோர் தங்களின் வரலாற்றில் குறிப்பிட்டுள்ளனர். புனித மார்ட்டின் இவரை, இயேசுவின் நல்லாயன் இவரே என்று குறிப்பிட்டுள்ளார்.
செபம்: அதிசயமானவரே எம் இறைவா! நீர் புனித பவுலீனுசை திருமண வாழ்வில் ஈடுபடுத்தியபின், உம் குருத்துவ வாழ்விற்கு தேர்ந்தெடுத்துள்ளீர். உமது புனிதத்துவ வாழ்வை அவரின் வழியாக இவ்வுலகிற்கு வெளிப்படு த்தியுள்ளீர். இதோ இன்றைய நாளில் திருமணம் செய்த ஒவ்வொருவரையும் உம் பதம் சமர்ப்பிக்கின்றோம். குடும்ப வாழ்வில் ஒருவரையொருவர் புரிந்து, சந்தோச த்துடனும், சமாதானத்துடனும் வாழ, நீர் அருள் தந்து காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment