இன்றைய புனிதர் 2016-06-29
புனித பேதுரு, புனித பவுல் (St.Peter and St.Paul)
புனித பவுல்:இறைவன் மட்டுமே வீழ்ச்சியுற்ற மனிதனை மீட்க இயலும். மனி தனின் முயற்சி எத்தகையதாக இருந்தாலும், சட்டங்களை மிகக் கண்ணுங்கருத்துமாக கடைபிடித்தாலும் பாவத்தினின்றும், அலகையினின்றும், சாவினின்றும் விடுதலை அடைய மனிதன் தன்னை முழுவதும் இயேசுவின் அருள் ஆற்றலுக்கு ஒப்படை த்தாக வேண்டும் என்ற அசையாத நம்பிக்கை இவரிடம் வேரூ ன்றியிருந்தது.
தமஸ்கு நகருக்கருகே பவுல் கண்ட காட்சியில் உயிர்த்த இயேசு வுடன் கலந்துரையாடியது, அவரது வாழ்வில் ஒரு பெரும் மா ற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு, அவர் கிறிஸ்துவுக்காக உழைத்து, உயிர்த்த கிறிஸ்துவின் திரு த்தூதர் ஆனார். பலவிதமான எதிர்ப்புகள், அவமானங்கள், சாட்டையடிகள், கல்லடிகள், ஒடுக்கப்பட்ட நிலை, சிறைவாசம் இவை போன்ற இன்னும் பல கொடுமைகள் இவரை மேலும் மேலும் திருச்சபையின் அசையாத தூணாக்கியது. இவருடைய கடிதங்களில் காணப்படும் சில அரிய தொடர்கள், கிறிஸ்துவி ன்மீது இவர் கொண்டிருந்த பற்றுறுதியை காட்டுகின்றது. இவர் எழுதிய திருமுகங்களில் "கிறிஸ்துவில்" என்ற சொல் ஏறக்கு றைய 50 முறை வருகின்றது. இது அவரின் ஆன்மீகத்தையும், அப்போஸ்தலிக்க வாழ்வையும், வேத கலாபனையையும், பணி வாழ்வையும் வெளிப்படையாக காட்டுகின்றது. "எல்லோர்க்கும் எல்லாம் ஆனேன்" என்று இவர் குறிப்பிடுவது, நற்செய்திக்கு எவ்வித ஊறும் விளைவிக்காமல் எவரிடமும் கனிவுடனும், பாச த்துடனும் நடந்து, நான் கிறிஸ்துவை மாதிரியாக தேர்ந்து கொ ண்டதுபோல, என்னையும் உங்கல் மாதிரியாக எடுத்துகொள்ளு ங்கள் என்று குறிப்பிடுகின்றார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தூதரான புனித பேதுரு, பவுல் இவர்களை மேம்படுத்த இந்நாளை தந்ததற்காக நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். உம் மகன் வழியாக உம்மை வழிபட எங்களுக்கு முதன்முறையாக கற்றுத்தந்தனர். உமது திருச்சபை அவர்களது போதனையின்படி வாழ வரமரு ள்வீராக.
No comments:
Post a Comment