Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 18 June 2016
இன்றைய புனிதர் 2016-06-18 ஸ்ஷோனவின் புனித எலிசபெத் (Elisabeth of Schönau) துறவி
இன்றைய புனிதர் 2016-06-18
ஸ்ஷோனவின் புனித எலிசபெத்
(Elisabeth of Schönau) துறவி
பிறப்பு 1128 பிங்கன், ரைன்
இறப்பு 18 ஜூன் 1164 ஸ்ஷோனவ்
சிறுவயதிலிருந்தே இறைவனிடத்தில் மிகவும் பக்தி கொண்ட இவர், தம் 12ஆம் வயதிலேயே ஸ்ஷோனவ் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்தார். தனது 18 ஆம் வயதில் வார்த்தைப்பாடுகளை கொடுத்து துறவியானார். குழந்தை பருவத்திலிருந்தே தன்னை இறைவனிடம் அர்ப்பணித்து வாழ்ந்தார். இவர் பிறந்த ஊரிலிருந்த அனைவரிடத்திலும், மிகவும் அன்பாகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார்.
இளம் வயதிலேயே துறவியான இவர் மன நோய்க்கு ஆளாக்கப்பட்டார். இதனால் மிகவும் பயத்துடனேயே எப்போதும் வாழ்ந்து வந்தார். 1152 ஆம் ஆண்டிலிருந்து எலிசபெத், இறைவன் தரும் அருளை காட்சியாக பெற்றார். அவ்வாறு பலமுறை இறைவனின் காட்சியை பெறும்போது, ஒருநாள் மிகுந்த அச்சம் இவரை ஆட்கொண்டது, அன்று அவரை சுற்றி பேரோளி ஒன்று வீசியது. அப்போது அவர் மிகச் சரளமாக, தடுமாற்றம் இல்லாமல் அன்னிய மொழியான இத்தாலி மொழியை பேசினார். இம்மொழியை அவர் எப்போதும் கற்றுக்கொண்டதே இல்லை. எலிசபெத்தின் உடன்பிறந்த அண்ணன் ஏக்பர்ட்(Egbert Schönau) துறவியாக இருந்தார். இவர் எலிசபெத் கடவுளிடமிருந்து பெற்ற ஒவ்வொரு தரிசனத்தையும் தன் கைப்பட எழுதி வைத்துள்ளார். தான் இறைவனிடம் இருந்து பெற்ற தரிசனங்களின் வழியாக இவர் ஏராளமான மக்களுக்கு நன்மை செய்து, வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
செபம்: அதிசயம் செய்பவரே எம் தந்தையே! நீர் பல அதிசயங்களை உம் மக்களுக்கு செய்து, உம் மக்களை குணமாக்கினீர். வழிநடத்தினீர். எங்களின் வாழ்வில் நீர் செய்கின்ற அற்புதங்களை நாங்கள் உணர எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்தருளும்.
No comments:
Post a Comment