Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 10 June 2016

இன்றைய புனிதர் 2016-06-11 புனித பர்னபா(St. Barnabas ) திருத்தூதர், மறைசாட்சி(Apostle, Martyr)

 

பிறப்பு  --     இறப்பு கி.பி. 61

இவர் 12 அப்போஸ்தலர்களில் ஒருவர் அல்லர். தொடக்க த் திருச்சபையின் தந்தையரும், லூக்கா நற்செய்தியா ளரும் இவரது அப்போஸ்தலிக்க ஆர்வம் நிறைந்த பணிகளின் பொருட்டு, அப்போஸ்தலர் என இவரை அழைத்தார்கள். சைப்பிரசு தீவைச் சேர்ந்த யோசேப்பு என்னும் லேவியர் ஒருவர் இருந்தார். திருத்தூதர்கள் இவருக்கு "ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்" என்று பொருள்படும் பர்னபா என்னும் பெயர் கொடுத்தார்க ள். அவர் தமது நிலத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு வந்து திருத்தூதர்களது காலடியில் வைத்தார் ( தி.ப. 4: 36-37)

பின்பு 3 ஆண்டுகள் கழித்து, மனந்திரும்பிய பவுல் யெருசலேமுக்கு வந்தார். சீடர்கள் அவர் மனந்திரும்பி யவர் என ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. இவ்வே ளையில்தான் "பர்னபா" அவருக்குத் துணை நின்று அவரை திருத்தூதர்களிடம் அழைத்து சென்றார். (தி.ப. 9:27). பின்னர் அந்தியோக்கியா நகரில் திருத்தூதர் பணியின் மூலம் பலரும் மனந்திரும்பினர் என்பதனால், யெருசலேம் நகரிலிருந்து , இந்த புதுக்கிறிஸ்தவர்களை ஊக்குவிக்க ஒருவரை அனுப்ப தீர்மானித்தார். தூய ஆவியால் நிரம்ப பெற்றவர், ஆழமான விசுவாசம் கொண்டவர் பர்னபா என்று சொல்லி அவரை அனுப்பினர். அவர் அங்குப்போய் நேரில் கண்டதும் ஒரே இன்பமும், மகிழ்ச்சியும் கொண்டவராய் பவுலின் ஒத்துழைப்பைப் பெற தார்சீஸ் நகர் சென்று அவரை அழைத்து வந்தார்.

பின்னர் யூதாவிலும், யெருசலேம் முழுவதும் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனால் பர்னபா அந்தியோக்கியத் திருச்சபையிடம் பொருள் உதவி பெற்று, அதை சவுல் வழியாக எருசலேமுக்கு அனுப்பி வைத்தார். லிஸ்திரா என்ற ஊரில் கால் ஊனமுற்ற ஒருவரை இயேசுவின் பெயரால் குணமாக்கினார். இதைக் கண்ட அவ்வூரினர் இவர்களை தெய்வங்களாக மதித்து, பலியிட முயன்றனர். அப்போது யூதர்கள் அம்மனிதர்களை தூண்டிவிட்டு பர்னபா மற்றும் பவுலுக்கு எதிராக கிளர்ச்சி செய்து , அவர்களை கல்லால் எறிந்தார்கள் (தி.ப. 14: 18-20).

பின்பு நற்செய்தியாளர் ஜான் மார்க்கை அழைத்து கொண்டு பர்னபாவும் பவுலும் சைப்ரஸ் சென்றார்கள். அங்கு போதித்த பின், பம்பிலியா நோக்கிப் புறப்படும்போது, ஜான் மார்க் அவர்களுடன் சேர்ந்து போகவில்லை. இதனால் பவுல் வருத்தமுற்றார். இதன்பின்னர் அந்தியோக்கியாவில் விருத்தசேதனம் பற்றி கடுமையாக கருத்து மோதல் எழுந்தது. இதை தீர்த்து வைக்க யெருசலேமில் முதல் பொதுச்சங்கம் கூடியது. யூதர்கள் விரித்த வலையில் பர்னபா விழுந்ததை எண்ணி பவுல் மிகவும் வருத்தப்பட்டார். அதன்பிறகு பர்னபாவுக்கும், பவுலுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஏற்கெனவே திருச்சபை தொடங்கப்பட்ட இடங்களுக்கு சென்று, அவ்விருவரும் பார்வையிட திட்டம் தீட்டியபொழுது, ஜான் மார்க்கையும் அழைத்து செல்வோம் என்று பர்னபா கூறியபோது, இதனை பவுல் ஏற்கவில்லை. இதனால் பவுல் தனியாக விடப்பட்டார். அப்போது பர்னபா ஜான் மார்க்குடன் சைப்ரஸ் சென்றார். கி.பி. 61 ல் பவுல் உரோமையில் சிறையிலடைக்கப்பட்டார். அப்போது ஜான் மார்க்கைத் தம்மிடம் அனுப்பி வைக்கக் கேட்டுக்கொண்டார். அவ்வேளையில்தான் பர்னபா கல்லால் எரிந்து கொல்லப்பட்டார். அவருடைய திருப்பண்டங்கள் சைப்ரஸில், சலாமிசுக்கு அருகில் கிடைத்தன என்றும், அக்கல்லறையில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட மத்தேயுவின் நற்செய்தி கிடைத்ததாகவும் நம்பப்படுகின்றது.

செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் தலைவா! நற்செய்தியை பறைசாற்றி, பலவித துன்பங்களை ஏற்று கல்லால் எரிந்து கொல்லப்பட்ட திருத்தூதர் பர்னபாவை நினைவுகூர்ந்து உமக்கு நன்றி கூறுகின்றோம். நாங்கள் எங்களின் அன்றாட வாழ்வில் நற்செய்தியை வாசிக்காமல் நிற்பதோடு இறைவார்த்தைகளை எமதாக்கி, உமது நற்செய்தியின்படி வாழ்ந்திட உமதருள் தாரும்.

No comments:

Post a Comment