Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 24 June 2016

இன்றைய புனிதர் 2016-06-24 திருமுழுக்கு யோவானின் பிறப்பு (The birthday of John the Baptist)

                     

               இன்றைய புனிதர்  2016-06-24

                      திருமுழுக்கு யோவானின் பிறப்பு

                              (The birthday of John the Baptist)

இவரது பிறப்பை லூக்கா நற்செய்தியாளர் முன்னறி வித்தார். யோவானின் தாய் எலிசபெத் கருவுற இயலா தவர். இவரும் செக்கரியாவும் வயது முதிர்ந்தவர்கள். வானதூதர் யோவானின் பிறப்பை செக்கரியாவிடம் அறிவித்தார்கள். ஆனால் அவர் ஆண்டவரின் செயலை நம்பவில்லை. அது நிறைவேறும் வரை அவர் பேச இய லாதவராக தண்டனை பெற்றார். கருவுற்றிருந்த எலிச பெத்தை அவரின் உறவினரும் தெய்வ வல்லமையால் கருவுற்றருந்தவருமான மரியா சந்தித்தார். மலை நாடு களை கடந்து முதன்முறையாக மறைபரப்பு பணியாள ராக எலிசபெத்திடம் நற்செய்தி அறிவித்தார். எலிச பெத் மரியாவின் வாழ்த்துரையை கேட்ட நேரத்தில், அவள் வயிற்றினுள் இருந்த குழந்தை பேருவகையால் துள்ளிற்று. (லூக். 1:42-44). மறைவல்லுநர்கள் இந்நிகழ்ச்சி யின் மூலம் மீட்பர் இயேசுவின் வருகையினால் தாயின் வயிற்றிலிருந்த யோவான் பாவ மீட்பு பெற்று புனிதரா க்கப்பட்டார் என்பார்கள். திருமுழுக்கு யோவான் பிற ந்தபின் இறைவனால் குறிக்கப்பட்ட நாட்களில் பாலை நிலத்தை நாடி மீட்பரின் வழியை ஆயத்தம் செய்யவும், பாவ மன்னிப்பு அடைய மனம் மாறி திருமுழுக்கு பெறவும், மக்களை ஆயத்தம் செய்கிறார். (மாற்கு 1:2-43)

திருமுழுக்கு பெற வந்த கூட்டத்தினரில் ஒருவராக மீட்பர் இயேசுவும் வருகிறார். தாமும் திருமுழுக்கு பெற வேண்டும் என்று இயேசு கேட்கும்போது யோவான் பதறி போகின்றார். இவரின் ஆழமான தாழ்ச்சியும் இறை இயேசுவிடம் கொண்டிருந்த வணக்கமும் இவரது சொற்களில் மிளிர்கின்றன. அவருடைய மிதியடிவாரை அவிழ்க்க கூட எனக்கு தகுதியில்லை (மாற்கு 1:7). யோவான் நற்செய்தியாளரும் இதே மனப்பான்மையை வெளிக்கொணருகின்றார். எனக்கு பின்வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர். ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரை பற்றியே சொன்னேன் என உரத்த குரலில் சான்று பகிர்ந்தார். (யோவான்1:5)

யோவானின் சீடர்கள் ரபி, யோர்தான் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே, நீரும் அவரை குறித்து சான்று பகர்ந்தீரே, இப்போது அவரும் திருமுழுக்கு கொடுக்கிறார். எல்லோரும் அவரிடம் செல்கின்றனர் என்றார்கள் அப்போதும் யோவானின் பதில் அவரது ஆழமான ஆன்மீகத்தை காட்டுகின்றது. "நான் மெசியா அல்லேன், மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன் என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். அவரது செல்வாக்கு பெருக வேண்டும். எனது செல்வாக்கு மறைய வேண்டும் (யோவான் 3:25-30). இவருடைய சீடர் இவருக்கு மிகப்பெரிய இறைவாக்கினருக்குரிய மதிப்பு கொடுத்து நடந்து வந்தபோது, நான் மறையவேண்டும், அவர் வளரவேண்டும் என்ற பதில் அவரது ஆழமான தாழ்ச்சியை வெளிக்கொணர்கிறது.

இவ்வாறு எந்த அளவுக்கு தம்மையே அவர் தாழ்த்தினாரோ அந்த அளவுக்கு அவரை எல்லார் முன்னிலையிலும் இயேசு வானளாவ உயர்த்திவிட்டார். இறைவனின் பணியை செய்யும்போது இவரிடத்தில் வெளிப்பட்ட மனத்துணிவையும், முகத்தாட்சண்யம் இன்மையும் நாம் நினைவு கூர்வோம். இவர்தம் உயிரை நீதிக்காக தியாகம் செய்கின்றார். யோவான் ஏரோதிடம், நீர் அவளை (பிலிப்பின் மனைவியை) வைத்திருப்பது முறையன்று என்று சொல்லி வந்தார். இதன் விளைவாக, யோவான் சிறையிலடைக்கப்பட்டார். அவரது தலை கொய்யப்பட்டது. (மத். 14: 1-12)

புனித அகஸ்டின் இத்திருநாளுக்குரிய கட்டளை செபத்தில் இவ்வாறு விளக்கம் தருகின்றார். செக்கரியா, யோவானின் பிறப்புக்குப்பிறகு மீண்டும் பேசும் ஆற்றல் பெற்றார். இதனையும், கிறிஸ்து சிலுவையில் உயிர்விட்டபொழுது ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்ததையும் அகஸ்டின் இணைத்து பார்க்கிறார். திருமுழுக்கு யோவான் தமது வருகை பற்றியே அறிவித்திருந்தால், செக்கரியாவுக்கு மீண்டும் பேச நாவன்மை கிடைத்திருக்காது. நா கட்டவிழ்க்கப்பட்டதனால் குரலுக்கு வழிபிறந்தது. "நீர் யார்" என்று யோவானை கேட்டபோது " பாலைவனத்தில் எழும் குரலொளி நான்" என்றே விடையளிக்கின்றனர். யோவானின் குரல் சிறிது காலத்திற்கே நீடித்தது. வார்த்தையாம் கிறிஸ்து என்றென்றும் உள்ளவர்.


செபம்:
இரக்கத்தின் இறைவா! உண்மையை உரைத்ததற்காக யோவான் தன் உயிரை ஈந்தார். இவரை போல இன்று ஏராளமான இறைப்பணியாளர்கள் தங்கள் உயிரை இழக்கின்றனர். இவர்களின் பாவங்களை மன்னித்து, உம் வான் வீட்டில் சேர்த்தருளும்.

No comments:

Post a Comment