Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 4 June 2016

இன்றைய புனிதர் 2016-06-04 புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo) நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்



                        

              இன்றைய புனிதர் 2016-06-04

புனித பிரான்ஸ் டி கராசியோலா (St. Franz de Caracciolo)

                       நேயாப்பல் நாட்டின் பாதுகாவலர்

பிறப்பு 13 அக்டோபர் 1563 சாந்தா மரியா (Sanra Maria)இறப்பு 4 ஜூன் 1608 நேயாப்பல்(Neapel)

புனிதர்பட்டம்: 1807, திருத்தந்தை 7 ஆம் பயஸ்

இவர் பிறந்த சில நாட்களிலேயே தோல் நோய்க்கு ஆளானார். இதனால் பலமுறை மக்களால் ஒதுக்கப்பட்டார். இவர் புரிந்த கடுந்தவத்தினாலும், ஜெபத்தினாலும் இவரது நோய் குணமாக்கப்பட்டது. நோயாளிகளை பராமரிக்கும் பணியை இவர் சிறுவயதிலேயே மிக ஆர்வத்தோடு செய்துவந்தார். அப்போது பணியாற்றும் போது, ஒருநாள் தான் ஓர் குருவாக வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் உதிக்கவே 1587 ஆம் தன் ஆசையை நிறைவேற்றி குருவானார். குருவான பிறகும் தொடர்ந்து நோயாளிகளை கவனிக்கும் பொறுப்பும், இறக்கும் தருவாயில் உள்ளவர்களை, அமைதியான மரணமடைய தயாரிக்கும் பொறுப்பும், இவருக்கு அளி க்கப்படவே, அப்பணியை இவர் மிகுந்த ஆர்வத்துட னும், புனிதத்துடனும் செய்தார். அதோடு மன்நோயாளி களையும் கவனித்து ஆறுதல் அளித்து வந்தார்.
இவரது பணி மிகவும் வளர்ச்சியடையவே நோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து பெரிய குழுவாக காட்சியளித்தது. எனவே அவர்களை கொண்டு ஏழை களை பராமரிப்பதற்கென ஒரு சபையைத் தொடங்கி னார். 1588 ஆம் ஆண்டு அச்சபை துறவற சபையாக, திரு த்தந்தை 5ஆம் சிக்டஸ்(Pope Sixtus V) அவர்களால் அவர் களால் அங்கீகரிக்கப்பட்டது. அச்சபையை தொடர்ந்து, மிகப் பொறுப்போடு கவனிக்க ஜியோவானி அடோர்னோ (Giovanni Adorno) என்பவரை சபைத்தலைவ ராக தேர்ந்தெடுத்தார். 1593 ஆம் ஆண்டு வரை அவர் பணியாற்றி இறந்துவிடவே, பிரான்ஸ் டி கராசியோலா சபைத்தலைவர் பொறுப்பை ஏற்றார். பின்னர் அவர் அச்சபைக்கு "ஏழைகளின் நண்பர்" என்று பெயரிட் டார். மிக விரைவாக அச்சபை ஸ்பெயின் மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளில் பரவியது. இவர் தனது துறவற குழுமங்களை பார்வையிட அடிக்கடி ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். இதனால் மீண்டும் நோய்தாக்கப்பட்டு தன் 44 ஆம் வயதில் இறந்தார்.


செபம்:

குணமளிப்பவரே இறைவா! இவ்வுலகில் நோயினால் துன்பப்படும் ஒவ்வொருவரையும் நீர் ஆசீர்வதியும். தங்களின் நோய்களை தாங்கிக் கொள்ள கூடிய உடல் பலத்தையும், மன வலிமையையும் தந்து காத்தருளும். மருத்துவர்க்கு மருத்துவராய் இருந்து, குணமளித்து வழிநடத்தியருளும்.

No comments:

Post a Comment