Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 29 April 2016
இன்றைய புனிதர் 2016-04-30 புனித ஐந்தாம் பத்திநாதர் திருத்தந்தை
முத்திபேறுபட்டம்: 1 மே 1672 திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
புனிதர் பட்டம்: 22 மே 1712 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து, குரு ப்பட்டம் பெற்றபின் கல்லூரிகளில் மறைக்கல்வி கற்று க்கொடுத்தார். பின்னர் இவர் ஆயராகவும், கர்தினாலா கவும், 1566 ஆம் ஆண்டில் திருத்தந்தையாகவும் உயர்த்த ப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருச்சபையில் திரிதெ ந்தின் பொதுசங்கம் மிகவும் புகழ் பெற்றதாக இருந் தது. இச்சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரும்பங்கு வகித்தார்.
இன்றைய புனிதர் 2016-04-29 சியன்னா நகர் புனித கேத்தரின் (Catherine of Siena) மறைவல்லுநர்

இன்றைய புனிதர் 2016-04-29
சியன்னா நகர் புனித கேத்தரின் (Catherine of Siena)
பிறப்பு 1347 சியன்னா(Siena), இத்தாலி
இறப்பு 29, ஏப்ரல் 1380
புனிதர் பட்டம்: 1461
திருத்தந்தை இரண்டாம் பயஸ்
கேத்தரின் மிகச்சிறுமியாக இருந்தபோது பக்தி முயற் சிகளில் பேரார்வம் கொண்டிருந்தார். இவர் பெற்றோர் க்கு 25 பிள்ளைகள். கேத்ரின் கடைசிப்பிள்ளை. அவரின் வீடு ஓர் அரண்மனை. கேத்தரின் அறிவிலும், ஞானத்தி லும் சிறந்து விளங்கினார். கேத்ரின் ஆடம்பரங்களை விரும்பாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்து வந்தார். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல், தன் னுடைய அழகை குறைத்துக்கொள்ள, தனது நீளமான முடியையும் வெட்டியுள்ளார். கேத்ரின் டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவற உடையைப் பெற் றுக் கொண்டு துறவியானார்.
1366 ஆம் ஆண்டு தம் அறையில் கேத்ரின் தனிமையாக செபித்துக்கொண்டிருந்தார். அப்போது இறைமகன் இயேசு தம் தாயுடனும் இன்னும் பல வானத்தூதர்களு டனும் கேத்ரினுக்கு காட்சியளித்தார். அன்னை மரி கேத்ரின் கையை பிடித்துக்கொள்ள, ஆண்டவர் அவ ரின் விரலில் மோதிரத்தை அணிவித்தார். அப்போது ஆண்டவர் "துணிவு கொள். அலகையின் சோதனை களை வெல்ல உனக்கு வரம் அளிக்கின்றேன்" என்று கூறினார். இந்த மோதிரம் கேத்ரின் கண்களைத் தவிர மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை.
1375 ஆம் ஆண்டு பிப்ரவரி பீசா நகர் சென்றார். அங் கிருந்த ஆலயத்தில் திருப்பலியில் பங்கேற்று, திவ்விய நற்கருணையை உட்கொண்ட பின், இறை இயேசு வோடு இணைந்து செபித்து, பாடுபட்ட சுரூபத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அச்சுரூப த்திலிருந்து ஐந்து இரத்த நிறக்கதிர்கள் புறப்பட்டு வந்து கேத்ரினின் கைகள், கால்கள் மற்றும் இதயத்தை துளைத்தது. இதன் வலியையும், வேதனையும் தாங்க முடியாமல் கேத்ரின் கீழே விழுந்தார். வாழ்நாள் முழு வதும் இவை ஆறாத புண்ணாக அளவிடமுடியாத வேத னையை அளித்தது. இந்த 5 காயங்களையும் மற்றவர் களின் கண்களுக்கு கேத்ரின் இறந்த பிறகே தெரிந்தது.
பிளாரன்ஸ் நகர் மற்றும் திருத்தந்தை பீடத்திற்கும் இடையே இருந்த பிரச்சினையை தனது பேச்சுவார்த் தையால் சமாதானம் செய்துவைத்தார். திருத்தந்தை க்கு கேத்ரீன் உதவியும், ஆறுதலும் தேவைப்பட்டது. இத னால் இவரை ரோம் வந்து தங்கும்படியாக அழைத்தார். ரோம் சென்ற கேத்ரின் உடல் நலம் பாதிக்கப்பட்டார். தன் உடல் வேதனைகளை திருச்சபையின் நலன்களுக் காக தாங்கிக் கொண்டார். பல தியாகங்கள் செய்தார். இருப்பினும் அவர் அடைந்த துன்பங்கள் பெருகி, ஏப்ரல் 21 ஆம் நாள் தன் உடலில் வலிப்பு நோய் ஏற்பட்டு, 8 நாட் கள் தாங்கள் முடியாத வேதனைப்பட்டு, 1380 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் ரோமில் இறந்தார். இவர் இரண்டாம் பெண் மறைவல்லுநர்.
செபம்:
புனிதர்களுக்கு மேன்மையளிக்கும் அன்பின் தந்தை யே! புனித கத்தரீனம்மாள் உமது ஐந்து காயங்களைப் பெற்று, மறு கிறிஸ்துவாக திகழ்ந்தார். அவரது முன் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் இப்பரிசை பெற்றுக்கொள்ள செய்தருளும்.
Wednesday, 27 April 2016
இன்றைய புனிதர் 2016-04-28 புனித பீட்டர் ஷானல்(Peter Chanel) குரு, மறைசாட்சி

இன்றைய புனிதர் 2016-04-28
புனித பீட்டர் ஷானல்(Peter Chanel)
குரு, மறைசாட்சி
பிறப்பு 1803 குவேட்(Cuet), பிரான்ஸ்
இறப்பு 1841 புத்துனா தீவு(Island of Futuna)
புனிதர் பட்டம்: 13 ஜூன் 1954 திருத்தந்தை பனிரெண்டாம் பயஸ்
பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புது நன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறை பரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னை யிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி யைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடு பட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர் ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந் தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைப ரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசி பிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட் டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணி யை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரை யேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த் தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக் கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளி கூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய் தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாச த்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரிய ன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப் பார்.
பீட்டர் ஷானல் தன் பிறந்த ஊரில், சிறுவயதிலேயே புது நன்மை வாங்கினார். அன்றிலிருந்தே மறை பரப்புப் பணியில் ஈடுபட்டார். ஆனால் இவர் தொடர்ந்து கல்வி கற்க வேண்டுமென்பதால் மறைபரப்புப் பணியை விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மரியன்னை யிடம் இடைவிடாமல் செபித்தார். இதன் பயனாக கல்வி யைக் கற்றுக்கொண்டே, மறைபரப்புப் பணியில் ஈடு பட்டார். பின்னர் தம் 16 ஆம் வயதில் குருமடத்தில் சேர் ந்து குருவானார். அதன்பிறகு நான்காம் ஆண்டுகள் கழித்து "மேரிஸ்ட் குருக்கள் துறவற சபையில் சேர்ந் தார். பின்னர் 1837 ஆம் ஆண்டு தனது 34 ஆம் வயதில் தம் சபைத்தோழர் ஒருவருடன் ஒசினியாத் தீவுக்கு மறைப ரப்பு பணிக்காக புறப்பட்டுஸ் சென்றார். அப்போது பசி பிக் பெருங்கடலை ஒட்டிய புத்தினா தீவை அடைந்தார். அங்கு தட்பவெப்ப நிலையினால் மிகவும் கஷ்டப்பட் டார். கடுமையான வெயிலால் சுட்டெரிக்கப்பட்டார். உணவின்றி பட்டினியால் தவித்தார். மறைபரப்பு பணி யை முடித்துவிட்டு வீடு திரும்பும்போது, தன் உடலில் வலுவிழந்தவராக காணப்பட்டார். இருப்பினும் தன் பணியை மகிழ்ச்சியோடு செய்தார். மக்களுக்கு போதிப்பது சிரமமாக இருந்தபோதிலும் ஒரு சிலரை யேனும் மனந்திருப்பி கிறிஸ்துவின் பாதையில் சேர்த் தார். இதனால் நம்பிக்கையின் மீது வெறுப்புக் கொண்ட கொலைகாரர்களால் மிகவும் மோசமாக வதைக்கப்பட்டார். ஆனால் இவர்களின் மேல் சிறுதுளி கூட வெறுப்பு காட்டாமல் அவர்களையும் அன்பு செய் தார் பீட்டர் ஷானல். இதனை அறிந்து, இவரின் பாச த்தை சுவைத்த புத்தினா தீவினர் இவரை "உயர்ந்த உள்ளம் கொண்ட பீட்டர்" என்றே அழைத்தனர். இவர் மறையுரை ஆற்றும் போது "விதைப்பவன் ஒருவன், அறுப்பவன் ஒருவன்" என்பதை அடிக்கடி கூறுவார். மரியன்னை பக்தியில் சிறந்து விளங்கிய இவர், மரிய ன்னையின் முன் பல மணிநேரம் மண்டியிட்டு செபிப் பார்.
அப்போது புத்துனாதீவை ஆட்சி செய்த அரசனின் மகன் அருட்தந்தையிடம் அதிகம் பாசமாக இருந்தான். இதனால் தானும் ஞானஸ்நானம் பெற விரும்பினான். இதனால் கோபமுற்ற தீவின் அரசன், தன் படையாட் களை அனுப்பி பீட்டர் ஷானலை கொடுமையாக கொல் லக்கூறினான். அதனால் அக்கொடிய மனிதமிருகங் கள் அருட்தந்தை பீட்டர் ஷானலை 1842 ஆம் ஆண்டு தடிகளால் அடித்தே கொன்றனர். இவரோடு சேர்ந்து புத்தினா தீவில் கிறிஸ்தவம் அழிந்துவிடும் என்று அர சன் கருதினான். ஆனால் இதற்கு எதிர்மாறாக அருட்த ந்தை இறந்த இரண்டே ஆண்டுகளில் புத்தினா தீவு முழுவதும் கிறிஸ்தவ மறை பரவியது. ஒசியானியாத் தீவுகள் (Ozeanien) முழுவதும் இன்றுவரை கிறித்தவ மறை செழித்து வளர்ந்து வருகிறது. இப்புனிதரை இப்பகுதி யில் வாழ்பவர்கள் தங்களின் முதல் மறைசாட்சி என்று கூறி வாழ்த்தி மகிழ்கின்றனர்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழியாக நாங்கள் உமதன்பையும், பராமரி ப்பையும், உணர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்களால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எமக்கு உம் அருளையும், வழிகாட் டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.என்றும் வாழும் எல்லாம் வல்ல் இறைவா! புனித பீட்டர் ஷானலின் வழி யாக நாங்கள் உமதன்பையும், பராமரிப்பையும், உண ர்கின்றோம். இப்புனிதரைப் போல, நாங்களும் எங்க ளால் இயன்றவரை மறைபரப்பு பணியில் ஈடுபட, எம க்கு உம் அருளையும், வழிகாட்டுதலையும் தந்து வழிநடத்தியருளும்.
இன்றைய புனிதர் 2016-04-27 பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச. குரு, மறைவல்லுநர்

இன்றைய புனிதர் 2016-04-27
பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.
குரு, மறைவல்லுநர்
பிறப்பு 8 மே 1521நிம்வேகன்(Nimwegen), ஹாலந்து
இறப்பு 21 டிசம்பர் 1597 சுவிட்சர்லாந்து
புனிதர் பட்டம்: 21 மே 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
இவர் ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில் பள்ளி சென்று தன் படிப்பை முடித்தார். அதன்பிறகு இயேசு சபையில் சேர்ந்து குருவாக பயிற்சி பெற்று 1546 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பிறகு இறையியல் மற்றும் மெய்யியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி நாட்டிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு இடங்களில் ஆன்மீக குருவாக பணியாற்றி, சிறப்பான மறையுரைகளை வழங்கினார். இவரின் மறையுரை மக்களின் விசுவாசத்தை காக்கவும், உறுதிப்படுத்தவும் உதவியாக இருந்தது. இப்பணியில் இருந்தபோது பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய "மறைக்கல்வி" என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால், புனித கனிசியுஸ் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார். இவர் எழுதிய "ஆன்மீகப் பயிற்சிகள்" என்னும் நூல் இயேசு சபையில் பயிற்சியில் இருந்தவர்களுக்கு, தியானம் செய்ய பெரிதும் உதவியது. அப்போதுதான் இவர் இயேசு சபையில் "ஒரு மாத தியான முறையை" அறிமுகப்படுத்தினார்.
திருத்தந்தை பதினோறாம் பயஸ்
இவர் ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில் பள்ளி சென்று தன் படிப்பை முடித்தார். அதன்பிறகு இயேசு சபையில் சேர்ந்து குருவாக பயிற்சி பெற்று 1546 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பிறகு இறையியல் மற்றும் மெய்யியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி நாட்டிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு இடங்களில் ஆன்மீக குருவாக பணியாற்றி, சிறப்பான மறையுரைகளை வழங்கினார். இவரின் மறையுரை மக்களின் விசுவாசத்தை காக்கவும், உறுதிப்படுத்தவும் உதவியாக இருந்தது. இப்பணியில் இருந்தபோது பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய "மறைக்கல்வி" என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால், புனித கனிசியுஸ் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார். இவர் எழுதிய "ஆன்மீகப் பயிற்சிகள்" என்னும் நூல் இயேசு சபையில் பயிற்சியில் இருந்தவர்களுக்கு, தியானம் செய்ய பெரிதும் உதவியது. அப்போதுதான் இவர் இயேசு சபையில் "ஒரு மாத தியான முறையை" அறிமுகப்படுத்தினார்.
அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள, இங்கோல்ஸ்டாட் என்ற இடத்திலுருந்த பல்கலைக்கழகத்தில் இறையியல், மெய்யியல் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பணி யாற்றினார். அப்போது நாட்டை ஆண்டு வந்த அரசி, இவரை ஆஸ்திரிய நாட்டிற்கு பேராயராக உயர்த்த முயன்றார். இதற்கு கனிசியுசும், இவரின் சபைத்தலை வர் இனிகோவும் இணங்கவில்லை. இதனால் அரசி கோபமுற்று வியன்னாவில் குருமட பயிற்சியில் இருந்த மாணவர்களை, குருவாகக்கூடாது என்று கட்டளைப் பிறப்பித்தார். இதன் விளைவாக 20 ஆண்டுகள் எவரா லும் குருவாக முடியவில்லை. அப்போது இச்சிக்கலை தவிர்க்கவே குருமட மாணவர்களை பல நூல்களை எழு த வேண்டினார். அவர்களும் பல நல்ல ஞான நூல்களை எழுதினார்கள். நூல் எழுதும் ஒவ்வொருவரும் 10பேராசி ரியர்களுக்கு சமமானவர்கள் என்று கூறி அம்மாணவர் களை இறைவழியில் கொண்டு சென்றார். பிறகு சுவிட் சர்லாந்தில் புகழ் வாய்ந்த ப்ரைபூர்க் பல்கலைக்கழக த்திற்கு அடித்தளமிட்டார்.
அப்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளி யில் பிரிந்துபோன கிறிஸ்தவர்களிடம் உரையாடல் நடத்தவும், கிறிஸ்துவ ஒற்றுமையைக் காக்கவும், "எங் கும் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்" என்ற நிலை நடைமுறைக்கு வரும் நாளுக்காகவும் திருச் சபை மிகு தியாகஸ் செபிக்கும்படி, திருத்தந்தை அழைப்பு விடுத் துக்கொண்டே இருந்தார். இதனால் புனித கனிசியுஸ் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்தி, தான் தொடங்கிய புதிய கல்லூரியில் புரொட்டாஸ்டாண்டு கிறிஸ்துவர் களுக்கும் இடமளித்து அனைவரையும் ஒன்று சேர்த் தார். அப்போது 1557 -ல் வேர்ம்ஸ் என்ற நகரில் நடை பெற்ற புரொட்டாஸ்ட்ண்ட், கத்தோலிக்க கலந்து ரையாடலுக்கு அழைப்புப்பெற்றார். இவ்வுரையாடலில் கனிசியுஸ் திருச்சபைக்காகவும், குருமடமாணவ ர்களுக்காகவும் பரிந்து பேசினார். ஆனால் இதனால் பயனேதும் இல்லாமல் போனது. தொடர்ந்து தனது மறையுரையாலும், கல்வி கற்றுகொடுக்கும் பணியா லும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். இவர் தனது இறுதி நாட்களை தான் தொடங்கிய கல்லூரியில் இருந்த ஆலயத்திலேயே கழித்து உயிர்துறந்தார்.
செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித கனிசியுசை, மறையுரைகளால் உமது நற்செய்தியை போதிக்க தேர்ந்தெடுத்து, உயர்த்தினீர். அவருடைய போதனையால் நாங்களும் ஆன்ம வளர்ச்சி பெற்று, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம்பிக்கையுடன் நடக்குமாறு செய்தருளும்.
Monday, 25 April 2016
இன்றைய புனிதர் 2016-04-26 ட்ரூட்பெர்ட் (Trutpert) மறைசாட்சி

இன்றைய புனிதர் 2016-04-26
ட்ரூட்பெர்ட் (Trutpert) மறைசாட்சி
பிறப்பு அயர்லாந்து அல்லது ஜெர்மனி
ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல் டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறை பரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலு ள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப் போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரை பூர்க் ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத் தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.
இறப்பு 607 அல்லது 644
ஏழாம் நூற்றாண்டில் பிறந்த இவர் ஜெர்மனியில் ஒரு மதபோதகராக இருந்தார். இவர் அயர்லாந்தில் செல் டிக் துறவி (Celtic monk) என்றழைக்கப்பட்டார். இவர் மறை பரப்பு பணியை தொடர்ந்து செய்ய, திருத்தந்தையின் அதிகாரம் பெற ரோம் சென்றார். அங்கிருந்து மீண்டும் ஜெர்மனிக்கு திரும்பி வர ப்ரெய்ஸ்கவ்(Breisgau) நாட்டிலு ள்ள ஆலமனி (Alamanni) வழியாக நாடு திரும்பினார். அப் போது ரைனில்(Rhein) பயணம் செய்யும்போது, ப்ரை பூர்க் ( Freiburg) சேர்ந்த ஒருவர் தன்னிடம் இருந்த நிலத் தில், சுமார் 25 கிலோமீட்டர், மறைபரப்பு பணிக்காக கொடுத்தார்.
அப்போது ட்ரூட்பெர்ட் அந்நிலத்திலிருந்த மரங்களை அழித்துவிட்டு புனித பீட்டர் மற்றும் பவுல் தேவாலய த்தை கட்டினார். அங்கு ஓர் வேலையாள் போலவே, துறவி ட்ரூட்பெர்ட் உழைத்தார். ஒரு நாள் வேலை முடி த்துவிட்டு களைப்பாக தூங்கும்போது, தெரியாத நபர் ஒருவர் வந்து அவரை கொன்ற்விட்டான். பின்னர் ஓட் பெர்க்(Otbert) என்பவரால், ட்ரூட்பெர்ட் புதைக்கப்பட்ட இடத்தில், அவர் பெயரில் ஒரு பேராலயத்தை கட்டி னார். இவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் குழந்தைப் பருவத்திலிருந்தே எண்ணிலடங்கா, வேலையை செய் துள்ளார். அவர் 640 - 643 வரை ப்ரெய்ஸ்கவ்-இல் வாழ்ந் தார் என்று வரலாறு கூறுகின்றது. ஆனால் இவ்வாண்டு களில் அங்கே வாழ்ந்த பவர் (Baur) என்பவர் ட்ரூட்பெர்ட் 607 - ல் இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.
அதன்பிறகு 815 ஆம் ஆண்டு அவரின் எலும்புகள் கண் டுபிடிக்கப்பட்டது. அவர் வாழும் போது எழுதிய அவ ரின் வாழ்க்கை வரலாற்றை 10 மற்றும் 13 ஆம் நூற்றா ண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டு, அதை சரிசெய்து பாதுகாக்கப்படுகின்றது. முன்ஸ்டரில் (Münster) உள்ள ஆசீர்வாதப்பர் மடத்தில் இவரது எலும்புகளும், வரலா ற்று ஆவணங்களும் வைக்கப்பட்டது. அங்கு இப்புனி தருக்கென்று பேராலயமும் உள்ளது
செபம்:
அன்பின் உருவமே எம் இறைவா! உமது சாட்சியாக மரித்த ட்ரூட்பெர்ட்டைப்போல, நாங்களும் எங்கள் வாழ்வின் வழியாக உமக்கு சான்று பகிர்ந்திட உம் அருள் தந்து எம்மை வழிநடத்தும்.
Sunday, 24 April 2016
இன்றைய புனிதர் 2016-04-25 புனித மாற்கு நற்செய்தியாளர்
இறப்பு ---
திருத்தூதர் பணியில் நாம் சந்திக்கும் ஜான் மாற்கும், புனித பேதுரு தமது முதல் திருமுகம் 5:13 -ல் குறிப்பிடும் மாற்கும் ஒருவரே. புனித பவுல் (கொலோ 4:10, 2 தீமோத் தேயு 4:11, பிலோமோனுக்கு எழுதிய திருமுகம் 2:4) இவற் றில் குறிப்பிடும் மாற்கும் இவரே. இவர் பர்னபாவுக்கு நெருங்கிய உறவினர். திருத்தூதரான புனித பவுலின் முதல் பயணத்தில் அவரோடு கூட சென்றவர் மூன்றாம் பயணத்தில் உரோமை வரை பின் தொடர்ந்தவர். பேது ருடைய சீடரும், அவருடைய மொழிபெயர்ப்பாளருமாக மாற்கு தமது நற்செய்தியில் காணப்படுகின்றனர். எகி ப்தில் உள்ள அலெக்சாந்திரியா நகர் திருச்சபையை நிறுவியவராகக் கருதப்படுகிறார். எருசலேம் திருச் சபையில் புனித பேதுருவுக்கு மிக உதவியாகவும், புதுக் கிறிஸ்துவர்கள் தமது வீட்டில் வந்து தங்கிப்போக உத வியாகவும், இருந்த மரியா என்பவர் மாற்கின் தாய். முதன்முறையாகப் பவுல் சைப்ரஸ் நாட்டிற்கு போகும் போது இவரை உடன் அழைத்துச்சென்றார். அவர்கள் பம்பிலியா நாட்டில் பெர்கா என்ற இடத்தில் தங்கியிரு ந்தபோது, மாற்கு அவர்களை விட்டுப்பிரிந்துவிடுவார் என்று அச்சம்கொண்ட பவுல், சிலிசியா, சிறிய ஆசியா விலிருந்த திருச்சபைகளை சந்திக்க சென்றபோது, பர்ணபாஸ் பரிந்துரைத்ததால், பவுல் மாற்கை அழைத் து செல்லவில்லை. இதனால் பர்ணபாவும் பவுலைவிட் டுப்பிரிந்தார். உரோமை நகரில் பவுல் சிறைப்படுத்தப் பட்டிருந்தபோது, மாற்கு பவுலுக்கு உதவி செய்தார். பவுல் தான் இறக்கும்முன்பு, உரோமை சிறையில் இருந் தார். அப்போது எபேசு நகரிலிருந்த திமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் மாற்கு தன்னோடு இருப்பார் என்று எழுதியுள்ளார்.
பின்னர் மாற்கு, புனித பேதுருவின் நண்பனானார். அலெக்சாண்டிரியா நகர் கிளமெண்ட், இரனேயுஸ், பாப்பியாஸ் ஆகியோர் மாற்கைப் பேதுருவின் விளக்க வுரையாளர் என்று காட்டுகிறார்கள். மாற்கு இயேசுவை சந்திக்காதவர் என்று பாப்பியஸ் கூறுகிறார். இன்று விரிவுரையாளர் பலர் மாற்கு நற்செய்தியில் நாம் சந்தி க்கும் இளைஞன் ஆண்டவர் கைதியாக்கப்பட்ட நிலை யில் அவரைப் தொடர்ந்தவர். இதே மாற்குதான் என்று ஏற்றுக்கொள்கின்றனர். பேதுரு தாம் எழுதிய முதல் திருமுகத்தில் (1 பேதுரு 5:13) "என் மைந்தன் மாற்கு" என்று குறிப்பிடுவதன் மூலம் மாற்கு பேதுருவுடைய மிக நெருக்கமான நண்பர் என்பதை இவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
மாற்கு, அலெக்சாண்டிரியா நகரின் முதல் ஆயர். இவர் ஆயராக இருக்கும்போது அலெக்சாண்டிரியா நகரில் இறந்தார். இவரது உடல் 830 ஆம் ஆண்டில் அங்கிருந்து கொண்டுவரப்பட்டு வெனிஸ் நகரிலுள்ள மாற்கு பேராலயத்தில் வைக்கப்பட்டது என்று கூறப்படுகின்றது. மாற்கு வெனிஸ் நகரின் பாதுகாவலர் என்று போற்றுப்படுகின்றார். சிங்கம் மாற்குவின் சின்னமாக உள்ளது. "பாலைவனத்தில் ஒலிக்கும் குரலொலி" (மாற்கு1:3) எனப் புனித திருமுழுக்கு யோவானை இவர் குறிப்பிடுகின்றார். எனவே ஓவியர்கள் இவ்வாறு வரைந்துள்ளனர், நற்செய்தியில் காணப்படும் "எப்பேத்தா" என்ற சொல் இவருக்கே உரியது. புதிதாக மனந்திரும்பிய உரோமைப் புற இனத்தவர்க்கு இவரது நற்செய்தி எழுதப்பட்டது. மாற்கு நற்செய்தி கி.பி. 60 - 70 க்குள் எழுதப்பட்டிருக்கலாம். என்று வரலாறு கூறுகின்றது. ஒரு நிகழ்வை கண்ணால் காண்பதுபோல் சித்தரிப்பதில் இவர் வல்லவராக இருந்தார். "இயேசு கிறிஸ்து கடவுளின் மகன் என்ற நற்செய்தியை புறவினத்தார்க்கு அறிக்கையிடுவதே இவரது நற்செய்தியின் குறிக்கோள். கோப்த்து, பிசாந்தின் வழிபாட்டு முறையாளர் புனித மாற்குவின் திருவிழாவை ஏப்ரல் 25 ஆம் நாளன்று கொண்டாடுகின்றனர்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! புனித மாற்கு நற்செய்தியை எழுதி, உம்மை பற்றி இம்மண்ணிலுள்ள மக்களுக்கு அறிவித்தார். புனித மாற்கு நற்செய்தியினை நாங்களும், எங்களின் வாழ்க்கையில் ஏற்று, வார்த்தையை வாழ்வாக்கிட உம் அருள்தாரும்.
Saturday, 23 April 2016
இன்றைய புனிதர் 2016-04-24 புனித சிக்மரிங்கன் பிதேலிஸ் (Fidelis of Sigmaringen) குரு, மறைசாட்சி

இன்றைய புனிதர் 2016-04-24புனித சிக்மரிங்கன் பிதேலிஸ் (Fidelis of Sigmaringen)குரு, மறைசாட்சி
பிறப்பு1578சிக்மரிங்கன், ஜெர்மனி
இறப்பு 24 ஏப்ரல் 1622சீவிஸ்(Seewis), சுவிட்சர்லாந்து |
இவர் ஜெர்மனி நாட்டில் சிக்மிரிங்கன் என்ற ஊரில் பிறந்து, மிகத்திறமையுடன் கல்விக்கலைகளைக் கற்று வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். 1611 ஆம் ஆண்டு பிரான்ஸில் தனது மறைவல்லுநர் படிப்பை முடித்தார்.
வழக்கறிஞராக பணியாற்றும்போது, ஏழைகளின் கொடுமைகளை நீக்க, பணம் எதுவும் வாங்காமல் நீதிமன்றங்களில் வழக்காடுவார். இதனால் இவருக்கு "ஏழைகளின் வழக்கறிஞர்" என்று பெயர். இவர் இறைவனின் இறை உணர்வால் தூண்டப்பட்டு நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றார். அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று, திருவிருந்தில் பங்குபெற்றார். இதனால் இறைவனின் ஆசீரையும், அருளையும் பெற்று, ஏழைகளிடத்தில் இரக்கம் காட்டி, அவர்களுக்கு பல உதவிகளை செய்தார். அதன்பிறகு ஜெர்மனி நாட்டிலுள்ள பிரைபூர்க்(Freiburg) என்ற இடத்திலுருந்த கப்பூச்சின் சபையில் சேர்ந்து, துறவற வார்த்தைப்பாடுகளைப்பெற்று, பிதேலிஸ் என்று பெயர் பெற்று 1613 ஆம் ஆண்டு துறவியானார். இவர் குருவானபிறகு தனது மறையுரையிலும், ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தை கொடுப்பதன் வழியாகவும், பல மக்களை மனந்திருப்பி இறைவனை அண்டி வரச் செய்தார்.
அப்போது மார்ட்டின் லூதர் சபையினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நடந்த முப்பது ஆண்டு போரை, இறைவனின் சிறப்பான அருளை பெற்று பிதேலிஸ் தீர்த்து வைத்தார். இப்போர் நிறைவடைய வேண்டுமென்பதற்காக கண்ணீர் விட்டு ஜெபித்து, கொடுமையாக தன்னை அடித்துக் கொள்வார். இவர் கப்பூச்சின் மடத்தின் தலைவராயிருந்தபோது கூட மிகவும் தாழ்ந்த வேலையைத் தேடி மகிழ்வுடன் செய்தார்.
இதனால் இவர் பொறாமை கொண்ட சிலர், பிதேலிஸை வதைத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது இவரை சுட்டான். ஆனால் கடவுளின் அருளால் பிதேலிஸ் தப்பினார். மற்றொரு நாள் இவர் வழியில் நடந்து செல்லும்போது, 20 கொடியவர்களையும், சில குருக்களும் சேர்ந்து இவரை மிரட்டினர். ஆனால் இதற்கெல்லாம் பிதேலிஸ் அஞ்சாமல், மேலும் இறைவனிடம் அவர்களுக்கு செபித்தார். இதனால் ஆத்திரமடைந்த அக்கொடியவர்கள் பிதேலிஸை 1622 ஆம் ஆண்டு அடித்துக் கொன்றார்கள். இவர் இறந்த 5 மாதங்களில் அக்கொடியவர்கள் அனைவருமே மனந்திருந்தி கடவுளை நம்பினார்கள்.
கப்பூச்சின் சபையில் முதல் மறைசாட்சியாக இறந்த முதல் குரு புனித பிதேலிஸ்தான். அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட்டில் (Stuttgart) இப்புனிதருக்கென்று பேராலயம் கட்டப்பட்டது. இப்பேராலயத்திற்கு அன்றாடம் வந்து போகும் மக்களின் மனங்களில் இன்றுவரை வாழ்ந்துவருகிறார். இவ்வுலக இன்பங்களை மறந்து, கிறிஸ்துவுக்காக மட்டுமே எப்போதும் வாழவேண்டும் என்பதை இவர் தன் வாழ்வின் வழியாக மற்றவர்களுக்கு விட்டுச்சென்றார்.
செபம்:
உள்ளத்தை ஊடுருவிப் பாயும் தந்தையே! புனித பிதேலிசைப் போல, இவ்வுலக இன்பத்தை நாடாமல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து, இவர்களில் உம்மை காண உதவி செய்தருளும்.
இன்றைய புனிதர் 2016-04-23 புனித ஜார்ஜ்

இன்றைய புனிதர் 2016-04-23
புனித ஜார்ஜ்
பிறப்பு 280
லிடா(Lydda), சிரியா பாலஸ்தீனா (Syria Palastina)
இறப்பு 23 ஏப்ரல் 303
நிக்கோமேடீயா(Nicomedia), பெர்த்தீனியா (Birthynia)
இவர் பாலஸ்தீன நாட்டில், விட்டா என்ற ஊரில் கொனிஸ்டாட்டின் அரசன் காலத்திற்கு முன்பு மறை சாட்சியாக இறந்தார். இவர் எப்படி இறந்தார் என்பதை ப்பற்றி தெளிவாக அறியமுடியவில்லை. இருப்பினும் சில வரலாறுகள் இவ்வாறு கூறுகின்றது. புனித ஜார்ஜ் முதலில் ஒரு படைவீரராக பணியாற்றினார். பின்னர் கிறிஸ்துவ படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அவர் முதலிலிருந்த படையில், தான் வகித்த பெரிய பதவியைக் கிறிஸ்துவுக்காக உதறி தள்ளிவிட்டு, தன் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வந்துள்ளார். பின்பு தமக்கென்று எதையும் வைத் துக்கொள்ளாமல், உலக கவலைகளுக்கு இடம் கொடுக் காமல், விசுவாசம் என்ற மார்பு கேடயத்தை அணிந்து கொண்டார். பிறகு கிறிஸ்துவுக்காக தன் உயிரை தியா கம் செய்யவும் துணிந்தார். கிறிஸ்துவின் துணிச்ச லான போர்வீரரான இவர், தூய ஆவியால் உந்தப்பட்டு, அன்பு என்னும் நெருப்பால் ஈர்க்கப்பட்டார். சிலுவை யின் வெற்றிக்கொடியை ஏந்தி இறுதிவரை விசுவாசத் திற்காக போராடினார். தீமையின் இருப்பிடமாகிய அலகையை வெற்றி கொண்டார். தன்னுடன் இருந்த தோழர்களையும் பாடுகளை துணிவுடன் ஏற்று போரிட ஊக்குவித்தார், அவர் உடல் எதிரிகளிடம் ஒப்படைத்த போது, அவரின் ஆன்மாவை மட்டும் இறைவன் பாதுகா த்தார் என்பதில் தான் இவர் கிறிஸ்துவின் மீது கொண் டிருந்த விசுவாசம் வெளிப்பட்டது.
இவரது உருவம் உலகின் பல்வேறு நாடுகளில் அஞ்சல் துறையினரால் பயன்படுத்தப்படுவதுபோல் மற்ற யாருடைய உருவமும் வெளிவருவதில்லை. இவ்வாறு அஞ்சல்தலை மூலமும் இவருக்கு வணக்கம் செலுத் தப்படுகின்றது. இந்த முத்திரைகளில் புனிதர் குதிரை மீது அமர்ந்து அலகையுடன் போரிடுவதை பார்க்க லாம். இதில் அவர் பொய்மைக்கு எதிராக பெற்ற வெற் றியை காணலாம். இவர் வாழும்போதே இறைவன் இவர்வழியாக ஏராளமான அற்புதங்களை செய்து ள்ளார்.
செபம்:
பாவங்களை போக்கும் எம் இறைவா! எச்சூழலிலும் பாவத்தில் விழாமல், அதற்கெதிராக போரிட்ட புனித ஜார்ஜைப்போல, நாங்களும் எங்களின் பாவ வாழ்விலி ருந்து விடுபட்டு, விசுவாசம் என்னும் கேடயத்தை அணி ந்து வாழ எமக்கு உதவி செய்தருளும்.
Thursday, 21 April 2016
இன்றைய புனிதர் 2016-04-22 இயேசு சபையின் அன்னை

இன்றைய புனிதர் 2016-04-22
இயேசு சபையின் அன்னை
பிறப்பு கி.மு 20
இறப்பு கி.பி 41
இனிகோ (லயோலா இஞ்ஞாசியார்) ஸ்பெயின் நாட்டி ற்கும், பிரான்சு நாட்டிற்கும் இடையே நடந்த போரில், ஸ்பெயின் நாட்டுப் படைத்தளபதியாக பணிபுரிந்தார். அப்போது போரில் அவரின் காலில் குண்டு துளைத்தது. இதனால் இவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டார். அப்போது பொழுதுபோக்கிற் காக வாசிப்பதற்காக இரண்டு புத்தகங்களை பெற் றார். அந்நூல்களில் ஒன்று புனிதர்களின் வரலாறு. அதை வாசிக்கும்போது அவரை அறியாமல் மனமாறி னார். இச்சூழ்நிலையில் ஆகஸ்டு 1521-ல் ஒருநாள் மாலைப்பொழுதில், அவர் தனிமையில் அவரின் அறை யில் இருக்கும்போது மரியன்னை குழந்தை இயேசு வைக் கையில் தாங்கிக்கொண்டு வந்து காட்சியளித் தார். இக்காட்சியைக் கண்ட இனிகோ அளவில்லா ஆனந்தம் அடைந்தார். தனிப்பட்ட ஆறுதலை உணர்ந் தார். இந்த வேளையில்தான் இனிகோ மனமாற்றத்தின் ஆரம்பநிலையை அடைந்தார். தனது பாவ வாழ்க்கை யின் மீது வெறுப்பும், புனிதர்களின் பாதையில் நடை போட வேண்டுமென்ற ஆவலும் ஏற்பட்டது.
1522 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இனிகோவின் வலது காலின் காயம், போதுமான அளவு குணமடைந்தது. இத னால் இனிகோ புனித நாட்டு பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். தன் குடும்பத்தினரிடமிருந்து மறைவாக விலகி பார்சலோனா சென்றடைந்தார். அப்போது அரு கிலிருந்த மரியன்னையின் சிற்றாலயத்தை நோக்கிப் புறப்படுமுன், மான்செராற் (Manserar) என்ற இடத்திற்குச் சென்று, திருப்பயணிகள் அணியும் உடை ஒன்றை வாங்கினார். இவ்வுடை சாக்கு போன்று முரடாக இருந் தது. நீளமான அங்கி போன்று காணப்பட்டது. இந்நிலை யில் மார்ச் 21 -ல் அன்னையின் ஆலயத்தை அடைந்தார். அங்கு சென்றவுடன் குருவானவரை சந்தித்து பாவ மன் னிப்பு பெற்றார். பொது பாவமன்னிப்பு அருட்சாதனத் தைப் பெற்ற பிறகுதான் மன அமைதி அடைந்தார்.
பின்னர் மார்ச் 24-ல் மரியன்னையின் மங்கள வார்த்தை தினத்தன்று, தனது உயர்தர ஆடைகளை எடுத்து ஓர் ஏழைக்குத் தானம் அளித்துவிட்டு, தான் வாங்கியிருந்த திருப்பயணியின் ஆடையை உடுத்திக்கொண்டார். அந்த இரவில் அன்னையின் ஆலயத்திலிருந்த பலி பீடத்தை விரைந்து ஓடினார். அந்தக்காலத்தில் படைவீரர்கள் தங்களின் வீரத்தில், மேலும் முன்னேற்றம் அடைய, மரியன்னையின் முன் இரவு நேரத்தை செலவழித்த முறையில், முழந்தாளிட்டும் எழுந்துநின்றும், மாறி மாறி இரவு முழுவதும் செலவிட்டு, வைகறையில் தனது படைத்தளபதிக்குரிய அடையாளங்களான போர்வாளை அன்னையின் பாதங்களில் வைத்தார். அபோதிலிருந்தே இனிகோ "மரியன்னையின் மாவீரர்" என்றே தன்னைப்பற்றி நினைத்துக் கொண்டார்.
இனிகோ அன்னையின் திருநாளன்று காலையில் பார்சிலோனா நகரை நோக்கி விரைந்தார். போகும் வழியில் கார்டனேர் (Cardaner) ஆற்றங்கரையில் இருந்த மன்ரேசாவில் சுமார் 10 மாதங்கள் தங்கிவிட்டார். இங்குதான் இனிகோ முழுமையான, நிரந்தரமான மனமாற்றம் அடைந்தார். அதன்பிறகு "ஆன்மீகப் பயிற்சிகள்" என்ற நூலையும் எழுதினார். சுமார் 2 ஆண்டுகள் அங்கேயே தங்கியபிறகு, புதிய மனிதனாக உருமாற்றம் பெற்று, திருத்தந்தை நான்காம் ஏட்ரியன் அவர்களின் அனுமதி பெற்று, புனித நாட்டை அடைந்தார். சிலகாலம் அங்கேயே தங்கிவிட்டு, தனது 33 ஆம் வயதில் குருவாக எண்ணினார். இதனால் இனிகோ பல எதிர்ப்புகளை சந்தித்தார். 22 நாட்கள் டொமினிக்கன் துறவியர்களை சிறைபடுத்தப்பட்டார். இவர் சேவையும், போதனைகளும் சரியானவையே என்று சான்று கிடைத்தபின் 02.02.1528 - ல் பாரீஸ் நகரை அடைந்தார்.
அங்கு இனிகோ, கல்லூரி படிக்கும்போது, பீட்டர், பேபர், பிரான்சிஸ் சவேரியார் தங்கி படித்த அறையில் தங்க வாய்ப்பு கிடைத்தது. அச்சமயத்தில் இம்மூவரையும் தனது ஆன்மீக பயிற்சிகளின் மூலம் தன் பக்கம் ஈர்த்து இணைபிரியா நண்பர்களாக்கி கொண்டார். அப்போது இவர்கள் அனைவரும், குருவாகி மக்களை இறைவனிடம் ஈர்த்து செல்ல வேண்டுமென்பதை குறிக்கோளாக கொண்டனர்.
இதனால் 1534 -ல் ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாளில் 7 பேரும் கற்பு, ஏழ்மை என்னும் இரண்டு வார்த்தைப்பாடுகளை எடுத்துக்கொண்டனர். இவர்கள் வார்த்தைப்பாடு பெற்ற அந்நாள் மரியன்னையின் விண்ணேற்பு பெருவிழா நாள். எனவே இனிகோ மனமாற்றம் பெற்று, புதிய இயேசு சபையைத் தோற்றுவிக்க உடனிருந்து வழிநடத்திய மரியன்னை "இயேசு சபையின் அன்னை" என்று கூறி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.
செபம்:
அம்மா மரியே! விண்ணேற்பு தாயே! சேசு சபை உருவெடுப்பதற்கு முதல் காரணமாய் இருந்தவர் நீர். தொடர்ந்து இச்சபையை நீர் ஆதரித்து, வழிநடத்திடுவீர்.
Wednesday, 20 April 2016
2016-04-21 புனித ஆன்ஸ்லெம்(St.Anselm ஆயர், மறைவல்லுநர்
|
ஆன்ஸ்லெம் அவர்களின் தாய் இறந்தபிறகு, இவருக்கும், இவரின் தந்தைக்குமிடையே விரிசல் ஏற்பட்டது. இதனால் ஆன்ஸ்லெம் பிரான்சிலுள்ள தன் தாயின் உறவினர் வீட்டில் சென்று தங்கியிருந் தார். பின்னர் இத்தாலி நாட்டில் தன் படிப்பை தொடர்ந்தார். தன் தொடக்க பள்ளியை முடித்தபிறகு, இறையியலையும், மெய்யியலை யும் கற்றார். இப்படிப்பில் இவர் மிகவும் வல்லவராக திகழ்ந்தார். படிப்பை முடித்தபிறகு தம் 27ஆம் வயதில் 1060 ஆம் ஆண்டு நார்மண் டில் பெக் என்ற நகரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந் தார். தனது துறவற சபையை வழிநடத்திய சபை அதிபர் இறந்த பிறகு 1078 ஆம் ஆண்டு சபையின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆன்ஸ்லெம் ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபை யில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு 1089 ஆம் ஆண்டு காண்டர்பரி ஆர்ச் பிஷப் இறந்துவிட் டார். இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்ஸ்லெம் வலுகட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடவு ளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்க ளின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமை யான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண் டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார். அப்போது காண் டர்பெரியில் அரசராக இருந்த இரண்டாம் வில்லியம் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டார். இறையியலையும், திருச்சபை சட்டத்தை யும் நன்கு கற்றிருந்த பேராயர், தான் கற்ற திருச்சபை சட்டங்களை கொண்டு அரசரின் தவறை சுட்டிகாட்டினார். இதனால் அரசருக்கும், பேராயருக்குமிடையே பெரிய சண்டை மூண்டது. இதனால் ஆத்திர மடைந்த அரசர் இரண்டாம் வில்லியம், பல சூழ்ச்சிகளை செய்து 1097 ஆம் ஆண்டு பேராயரை நாடு கடத்தினான். பேராயரை நாடு கடத்திய மூன்றாம் ஆண்டுகளில் அரசர் இரண்டாம் வில்லியம் இறந்துவிட்டார். இதனால் இவரைத் தொடர்ந்து முதலாம் ஹென்றி அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசர் முதலாம் ஹென்றி 1103 ஆம் ஆண்டு பேராயரை மீண்டும் காண்டர்பரிக்கு அழைத்து வந்தான்.
அதன்பிறகு அரசர் முதலாம் ஹென்றி பேராயரை, தன் அரசியல் வாழ்வோடு இணைந்து போக வற்புறுத்தினார். அரசன் தன் கண்முன்னாலேயே திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்ட பேராயர், மீண்டும் அரசனிடம் திருச்சபைக்காக பரிந்து பேசினார். இதனால் மீண்டும் பேராயர் 1103-1106 வரை நாடுகடத்தப்பட்டார், இருப்பினும் உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.
இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடி கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்பியதால் இன்றும் இங்கிலாந்தில் பல பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் வாழ்கின்றனர். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்துவ ஆலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.
செபம்:
உள்ளத்தில் ஒளிரும் ஆண்டவராகிய கடவுளே! திருச்சபையின் வளர்ச்சிக்காக புனித ஆன்ஸ்லெம் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் சொல், செயல், சிந்தனை எல்லாம் உம்மை பற்றியதாகவே இருந்தது. இப்புனிதரைப் போல, இறைவனின் மீது தாகம் கொண்டு வாழ எமக்கு உமதருளையும் அன்பையும் தாரும்.
ஆன்ஸ்லெம் ஆசீர்வாதப்பர் சபையின் தலைவரானதால், இச்சபை யில் இருந்த அனைத்து குழுமங்களையும் சந்திக்க வேண்டியதாக இருந்தது. இதனால் துறவற இல்லங்களை பார்வையிட இங்கிலாந்து நாட்டிற்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அச்சமயத்தில் இவருக்கும், காண்டர்பரி ஆயருக்கும் நல்ல தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு 1089 ஆம் ஆண்டு காண்டர்பரி ஆர்ச் பிஷப் இறந்துவிட் டார். இதனால் காண்டர்பெரி மறைமாநிலத்திற்கு ஆன்ஸ்லெம் வலுகட்டாயமாக பேராயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் கடவு ளின் சிறப்பான அருள் வரங்களை பெற்றிருந்தார். இதனால் மக்க ளின் மனங்களில் மிக விரைவில் இடம் பிடித்தார். தனது எளிமை யான வாழ்வினாலும், தாழ்ச்சியினாலும், கல் போன்ற மனம் கொண் டவர்களையும் கவர்ந்து, இறைவன்பால் ஈர்த்தார். அப்போது காண் டர்பெரியில் அரசராக இருந்த இரண்டாம் வில்லியம் திருச்சபைக்கு எதிராக செயல்பட்டார். இறையியலையும், திருச்சபை சட்டத்தை யும் நன்கு கற்றிருந்த பேராயர், தான் கற்ற திருச்சபை சட்டங்களை கொண்டு அரசரின் தவறை சுட்டிகாட்டினார். இதனால் அரசருக்கும், பேராயருக்குமிடையே பெரிய சண்டை மூண்டது. இதனால் ஆத்திர மடைந்த அரசர் இரண்டாம் வில்லியம், பல சூழ்ச்சிகளை செய்து 1097 ஆம் ஆண்டு பேராயரை நாடு கடத்தினான். பேராயரை நாடு கடத்திய மூன்றாம் ஆண்டுகளில் அரசர் இரண்டாம் வில்லியம் இறந்துவிட்டார். இதனால் இவரைத் தொடர்ந்து முதலாம் ஹென்றி அரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசர் முதலாம் ஹென்றி 1103 ஆம் ஆண்டு பேராயரை மீண்டும் காண்டர்பரிக்கு அழைத்து வந்தான்.
அதன்பிறகு அரசர் முதலாம் ஹென்றி பேராயரை, தன் அரசியல் வாழ்வோடு இணைந்து போக வற்புறுத்தினார். அரசன் தன் கண்முன்னாலேயே திருச்சபைக்கு செய்யும் கொடுமைகளை கண்ட பேராயர், மீண்டும் அரசனிடம் திருச்சபைக்காக பரிந்து பேசினார். இதனால் மீண்டும் பேராயர் 1103-1106 வரை நாடுகடத்தப்பட்டார், இருப்பினும் உத்தம நன்நெறியிலும், தளரா ஊக்கத்துடனும் பேராயர் முன்னேறிச் சென்றார். தொடர்ந்து திருச்சபையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். அப்போது பல இறையியல் நூல்களை திறம்பட எழுதினார்.
இவர் இறந்தபிறகு இவரின் உடல் காண்டர்பெரி பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இங்கிலாந்து அரசர்களிடம் திருச்சபைக்காக போராடி கிறிஸ்துவை அந்நாட்டில் பரப்பியதால் இன்றும் இங்கிலாந்தில் பல பக்தியுள்ள கிறிஸ்துவர்கள் வாழ்கின்றனர். இன்று வரை பேராயரின் பெயர் இங்கிலாந்து நாட்டின் கிறிஸ்துவ ஆலயங்களில் கூறப்பட்டு வருகின்றது.
செபம்:
உள்ளத்தில் ஒளிரும் ஆண்டவராகிய கடவுளே! திருச்சபையின் வளர்ச்சிக்காக புனித ஆன்ஸ்லெம் பல துன்பங்களை அனுபவித்தார். அவரின் சொல், செயல், சிந்தனை எல்லாம் உம்மை பற்றியதாகவே இருந்தது. இப்புனிதரைப் போல, இறைவனின் மீது தாகம் கொண்டு வாழ எமக்கு உமதருளையும் அன்பையும் தாரும்.
Tuesday, 19 April 2016
இன்றைய புனிதர் 2016-04-20 புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)

இன்றைய புனிதர் 2016-04-20
புனித ஹில்டேகுண்ட் ஷொய்னவ் (Hildegund Schoenau)
பிறப்பு 1170 கொலோன் (Cologne)
இறப்பு 20 ஏப்ரல் 1188 ஷொய்னவ் (Schoenau)
ஹில்டேகுண்ட் 1170 ஆம் ஆண்டு கொலோன் மறைமாவ ட்டத்தில் பிறந்தார். இவருக்கு 12 வயது இருக்கும்போது, தன் தந்தையுடன் புண்ணிய பூமிக்கு(Holy Land) திருயாத் திரை சென்றார். கப்பலில் பயணம் செய்யும்போது இவ ரின் தந்தை மிகவும் நோய்வாய்ப்பட்டார். இதனால் ஹில்டேகுண்ட் புனித பயணத்தை நிறைவேற்ற முடி யாத நிலை ஏற்பட்டது. அப்போது அவரின் தந்தை ஹில் டேகுண்ட்-ஐ அழைத்து, தனக்கு நல்ல உடையுடு த்தி, தன் ஊருக்கு அழைத்துக் கொண்டு போக சொன் னார். அதோடு ஹில்டேகுண்ட்-இன் பெயரை யோசேப்பு என்று மாற்றச் சொன்னார். ஆனால் ஹில்டேகுண்டால் தன் தந்தையின் ஆசையை கப்பலில் நிறைவேற்ற முடியாமல் போனது. கப்பல் எருசலேமை அடைந்தது.
அப்போது ஹில்டேகுண்ட் தன் தந்தையின் விருப்ப த்தை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்தில் செபவழி பாடு வைத்து செபித்தார். ஆலயத்தை விட்டு ஹில்டேகு ண்டும், அவரின் தந்தையும் வெளியே வந்தபோது யாரென்று அடையாளம் தெரியாத ஒருவர், இவர்களு க்கு ஆடையையும் இன்னும் அங்கு தங்குவதற்கு தேவை யான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து, உடன் அழைத்துச் செல்ல காத்துக்கொண்டிருந்தார். பின்னர் தந்தையும், ஹில்டேகுண்ட்டும் அம்மனித ரோடு சென்றனர். முன்பின் தெரியாத அம்மனிதரின் உதவியால் தன் தந்தையின் நோய் குணமாக்கப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்த ஊர் திரும்பினர்.
அதன்பிறகு ஹில்டேகுண்ட் பல காரணங்களால் துறவி யாக வேண்டுமென்று விரும்பினார். தன் தந்தையின் அனுமதி பெற்று 1187 ஆம் ஆண்டு ஜெர்மனி நாட்டிலு ள்ள ஹைடல்பெர்க் –இல் (Heidelberg) இருந்த சிஸ்டர்சி யன் துறவற சபையில்(Cistercian) சேர்ந்தார். அவர் துறவி யாவதற்குமுன் பயிற்சி பெறுவதற்காக ஷொய்னவ் விலிருந்த பயிற்சி இல்லத்திற்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் நவதுறவகத்தில் இருக்கும்போது "யோசேப்பு" என்னும் பெயர்மாற்றம் பெற்று, புதிய துறவற உடையும் பெற்றுக்கொண்டார். யோசேப்பு நவதுறவகத்தில் இருக்கும்போது பல்வேறு சோதனை களுக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர் தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு நோய் முற்றி ப்போனதால், உயிரை காப்பாற்ற முடியாமல், நவதுற வகத்திலேயே 1188 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் நாள் இறந்தார்.
சிஸ்டர்சியன் துறவறசபையில் நவதுறவகத்தில் இறந் தவர்களில் இவரே முதலானவர். இவரின் ஆன்மீக வாழ்வு இன்று வரை சிஸ்டர்சியன் சபையில் பயிற்சியகத்தில் உள்ளவர்களுக்கு ஓர் முன்மாதிரி யாக உள்ளது.
செபம்:
குணமளிக்கும் வள்ளலே எம் இறைவா! துறவிகளாக தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு, பயிற்சி இல்லத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிற ஒவ்வொரு இளம் உள்ளங்களையும் நீர் நிறைவாக ஆசீர்வதியும். நல்ல உடல் உள்ள நலன்களை பெற்று, உம் பாதையை தொடர உம் வரம் தாரும்!
Monday, 18 April 2016
இன்றைய புனிதர் 2016-04-19 புனித ஒன்பதாம் லியோ, திருத்தந்தை

இன்றைய புனிதர் 2016-04-19
புனித ஒன்பதாம் லியோ, திருத்தந்தை
பிறப்பு 21 ஜூன், 1002எஜிஸ்ஹைம்(Egisheim), தாக்ஸ்பெர்க்( Dagsburg)
இறப்பு 19 ஏப்ரல், 1054 ரோம்
திருத்தந்தை ஒன்பதாம் லியோ அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவர் பெற்றோர் இவருக்கு புரூனோ (Bruno) என்று பெயர் சூட்டினர். புரூனோ பிரான்சு நாட்டிலுள்ள தூல்(Toul) என்ற ஊரில் கல்வி பயின்றார். இவர் படிக் கும்போதிலிருந்தே இவருக்கு ஏராளமான நண்பர்கள் இருந்தார்கள். புரூனோ சிறு வயதிலிருக்கும் போதிலி ருந்தே பூசை உதவி செய்வதிலும் பாடல் குழுவோடு இணைந்து திருப்பலியில் பாடல் பாடுவதிலும், ஆடம் பர திருப்பலியில் பங்கெடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டிவந்தார். இறைவன் மீது அளவற்ற அன்பு கொண் டிருந்தார். தினமும் திருப்பலியில் பங்கெடுத்த புரூனோ தானும் குருவாக வேண்டுமென்று ஆசைப்ப ட்டு குருவானார். புரூனோ குருவான பிறகு ஜெர்மனி யிலிருந்த அரசர் இரண்டாம் கோன்ராட்(Konrad II) அவர்களின் குடும்பத்திற்கு ஆன்மீக வழிகாட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது இவர் திருச்சபை யில் இருந்த அரசியலைப் பற்றியும் படித்தார். அதன் பிறகு பிரான்சு நாட்டிற்கு இறையியல் படிப்பதற்காக அனுப்பப்பட்டார்.
அப்போது இவர் அப்போஸ்தலர் சீமோனின் வாழ்க்கை வரலாற்றை படித்து, அவரால் ஈர்க்கப்பட்டார். பின்னர் இறையியல் படிப்பை முடித்தபிறகு இத்தாலி நாட்டில் இருந்த அரசர் குடும்பத்திற்கு மீண்டும் ஆன்மீக வழி காட்டியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இத்தாலி நாட்டின் ஆயரின் உதவியாளராக பணியாற்றினார். அப்போது இத்தாலி மறைமாநிலத்திலிருந்த ஏழை எளி யவர்க்கு ஆயரின் உதவியுடன் பலவிதமான உதவி களை செய்தார். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். அப்போது திருச் சபையில் இருந்த கத்தோலிக்க ஆலயங்களின் வழியா கவும், துறவற இல்லங்களின் வழியாகவும், நாள்தோ றும் ஏழைகளுக்கு உணவு கொடுத்தும், அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் வந்தார். இவரின் தாராள குணத்தை அறிந்த ஜெர்மனி மற்றும் பிரான் சிலுள்ள ஆயர்களும் புரூனோவுக்கு ஏழைகளை பராம ரிக்க தேவையான உதவிகளை செய்தனர். பின்னர் இவர் பிரான்சிலுள்ள லையன்(Lyon) என்ற மறைமாநில த்திற்கு ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புரூனோ ஆயராக இருந்தபோது திருத்தந்தை தமாசுஸ் (Damasus) திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 23 நாட்கள் மட்டுமே திருத்தந்தையாக இருந்தவர் கடுமை யான காய்ச்சலால் தாக்கப்பட்டு இறந்துப்போனார். அதனால் அவரைப் பின்பற்றி திருச்சபையை வழி நட த்த புரூனோ அவர்களை திருத்தந்தையாக தேர்ந்தெடு த்தனர். 1049 ஆம் ஆண்டு புரூனோ "ஒன்பதாம் லியோ" என்று பெயர் மாற்றம் பெற்று திருத்தந்தையானார். திருத்தந்தை ஒன்பதாம் லியோ திருச்சபையின் மோச மான நிலையைப் பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் திருத்தந்தையான சிறிது நாட்களிலேயே ஆயர்களின் மாநாட்டை கூட்டினார். இம்மாநாட்டிற்கு பொது மக்களையும் வரவழைத்தார். இதில் பங்கு பெற்ற ஒவ்வொருவருமே திருச்சபையில் இருக்கும் குறை, நிறைகளைப் பற்றி பகிர்ந்து கொள்ள வலியுறு த்தப்பட்டது. அம்மாநாட்டின் இறுதியில் தனிப்பட்ட முறையில் ஐரோப்பாவிலிருந்த ஒவ்வொரு கிறிஸ்துவ ஆலயங்களையும், அரசர்களையும், மக்களையும் திருத் தந்தை சந்தித்து உரையாடினார். ஆடம்பர திருப்பலி நிறைவேற்றி, அருமையான மறையுரை வழங்கினார். புதிய ஆலயங்களும், துறவற மடங்களும் கட்ட அடிக் கல் நாட்டினார்.
ஐரோப்பிய நாடுகளைப் பார்வையிட்டபோது, அரசர் களால் மக்கள் படும் வேதனையை, திருத்தந்தை கண் கூடாக பார்த்து மிகவும் வேதனைப்பட்டார். இதனால் மக்களின் பசியையும், அவர்களின் அவல நிலையை யும் போக்க தன் சொந்த வீட்டு பணத்தை எடுத்து உதவி செய்தார். மக்களை வழிநடத்த நல்ல குருக்களை உரு வாக்கினார். இதனால் ஐரோப்பிய அரசர்கள் மிகவும் ஆத்திரமடைந்து திருத்தந்தை ஒன்பதாம் லியோவை பிடித்து சிறையில் அடைத்தார்கள். ஏறக்குறைய ஒன் பது மாதங்கள் கழித்து சிறையிலிருந்து விடுவித்தனர். ஆனால் இவர்மேல் தொடர்ந்து பல பொய்குற்றங்கள் சாட்டப்பட்டது.
பின்னர் 1054 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் உரோம் சென்று திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார். 52 வயதான திருத்தந்தை ஒன்பதாம் லியோ வெறும் ஐந்து ஆண்டுகள் மட்டுமே திருத்தந்தையாக பதவி வகித் தார். ஆனால் இவ்வைந்து ஆண்டுகளில் கத்தோ லிக்க திருச்சபைக்கு இவர் ஆற்றிய பணி எண்ணிலட ங்காது. பின்னர்1054 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் உரோமில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் இறந் தார். இவரது உடல், பேதுரு பேராலயத்திலுள்ள, திருத் தந்தையர் களை அடக்கம் செய்துள்ள கல்லறையில், புனித யோசேப்பு பலிபீடத்தின் வலதுபுறத்தில் அடக் கம் செய் யப்பட்டுள்ளது. இவர் இறந்தாலும் மக்களின் மனங்க ளில் புனிதராகவே வணங்கப்பட்டு வருகின்றார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! திருச்சபையை வழிநடத்தும் எம் திருத்தந்தையை நீர் நிறைவாக ஆசீர்வதியும். உம் பணியை செய்யும் போது வருகின்ற இடையூறுகளை உமக்காக ஏற்றுக்கொண்டு, உம் மந்தையின் ஆடு களை நல்வழியில் பராமரிக்க, எம் திருத்தந்தைக்கு உம் அருள் தாரும்.
Sunday, 17 April 2016
இன்றைய புனிதர் 2016-04-18 புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried) துறவி

இன்றைய புனிதர் 2016-04-18
புனித.ஹெர்லூக்கா பெர்ன்ரீட் (Herluka of Bernried) துறவி
பிறப்பு 1060 ஸ்டுட்கார்ட்(Stuttgart), ஜெர்மனி
இறப்பு 1127 பெர்ன்ரீட்(Bernried)
ஹெர்லூக்கா இளமையாக இருக்கும்போது, தன் ஊரில் வில்லியம் என்ற துறவி ஆன்மீக வழிகாட்டியாக இருந் தார். அப்போது துறவி வில்லியம் அவர்களின் பணி வாழ்வினால் தூண்டப்பட்டு, எப்போதும் அவருடன் சென்று மக்களை சந்தித்தார். அப்போது கண்பார்வை இழந்த ஒருவருக்கு ஹெர்லூக்கா வழிகாட்டினார். அவ ரின் மேல் அதிக அன்பு வைத்து, தன் ஜெபத்தினால் கண்ணிழந்தவருக்கு உதவி செய்தார். பின்னர் 1086-ல் ஜெர்மனியிலுள்ள பவேரியா (Baveria) மறைமாவட்ட த்தி லிருந்த ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து துறவியா னார்.
துறவியான பிறகு ஆக்ஸ்பூர்க் (Augsburg) ஆயராக இருந்த விக்கிட்ரீப் (Wikterp) அவர்களுக்கு எல்லா விதங்களிலும் அவரின் பணிவாழ்விற்கு தேவையான ஏராளமான உத விகளை செய்தார். அப்போது தனது செபத்தாலும், தியாக வாழ்வினாலும், கிறிஸ்துவ பக்தியை பரப்ப பவேரியாவில் மிகவும் பாடுபட்டார். அப்போது மிக கொடூரமான துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் ஹெர்லூக்கா அங்கிருந்து தப்பி ஓடி ஜெர்மனி யிலுள்ள ஸ்டன்பெர்கர் (Starnberger) ஆற்றின் அருகிலு ள்ள அகஸ்டினா துறவற மடத்தில் தங்கி இருந்தார். 1122 ஆம் ஆண்டு வரை பெர்ன்ரீட் என்ற ஊரில் இருந்த, துறவற இடத்தில் வாழ்ந்து, துறவியாகவே இறந்தார்.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! கிறிஸ்துவை இவ்வுலகில் பரப்ப உமது அரசை இம்மண்ணில் கொண்டுவர, புனித ஹெர்லூக்கா பெர்ன்ரீட் அனுபவித்த துன்பங்களை நினைத்து, நாங்கள் உமக்கு நன்றி கூறுகின்றோம். இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு துறவியையும் நீர் காத்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Saturday, 16 April 2016
இன்றைய புனிதர் 2016-04-17 புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)

இன்றைய புனிதர் 2016-04-17
புனித.காதேரி டேக்காக்விதா (Kateri Tekakwitha)
பிறப்பு 1657 நியூயார்க்
இறப்பு 17 ஏப்ரல் 1680
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
காதேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். இத னால் இவர் தன் பெற்றோரால் கைவிடப்பட்டுஅனாதை குழந்தையாக விடப்பட்டார். இவர் நியூயார்க்கில் கிறி ஸ்துவ ஆலயத்தில் கேத்ரின் டேக்காக்விதா என்று பெயர் மாற்றி ஞானஸ்நானம் பெற்றார். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். இவர் ஓர் உலகப் பெண்ணாக இருந்தாலும், கற்பு என்னும் துற வற வார்த்தைப்பாட்டை, தன் உயிருள்ளவரை ஒழுக்க மாய் கடைபிடித்து வாழ்ந்தார். இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
கானாவெக்(Kahnawake), கியூபெக் (Quebec), கனடா முத்திபேறுபட்டம்:22 ஜூன்,1980 திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் புனிதர் பட்டம்: 21அக்டோபர் 2012, திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்
சுற்றுசூழல், கைவிடப்பட்டோர், வெளிநாட்டில் வாழ்வோரின் பாதுகாவலர்
காதேரி டேக்காக்விதா 1657 -ல் நியூயார்க்கில் பிறந்தார். இவர் பிறந்தவுடன் பெரியம்மை என்ற நோயால் தாக் கப்பட்டு முகம், உடல் முழுவதிலும் பெரிய வடுக்கள் ஏற்பட்டு மிகவும் அழகு குறைந்தவளாக இருந்தார். இத னால் இவர் தன் பெற்றோரால் கைவிடப்பட்டுஅனாதை குழந்தையாக விடப்பட்டார். இவர் நியூயார்க்கில் கிறி ஸ்துவ ஆலயத்தில் கேத்ரின் டேக்காக்விதா என்று பெயர் மாற்றி ஞானஸ்நானம் பெற்றார். இவர் மோகாக் (Mohawk) மக்களின் "லில்லி" என்றழைக்கப்பட்டார். இவர் மிகவும் பொறுமையானவராக திகழ்ந்தார். இவர் ஓர் உலகப் பெண்ணாக இருந்தாலும், கற்பு என்னும் துற வற வார்த்தைப்பாட்டை, தன் உயிருள்ளவரை ஒழுக்க மாய் கடைபிடித்து வாழ்ந்தார். இவர் தனது 24 ஆம் வய தில் கனடாவிலுள்ள கியூபெக் மாவட்டத்தில், மாண்ட்ர லின் அருகிலுள்ள கானாவெக் என்ற இடத்தில் 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் நாள் இறந்தார். இவர் இறந்தபின் அண்டிவந்து செபித்தோர்க்கு ஏராளமான நன்மை களை செய்தார். 1980 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜான் பவுல் அவர்களால் முத்திப்பேறு பட்டம் கொடுக்கப்பட்டது. பின்னர்2012 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
எம்மை பாதுகாத்து, வழிநடத்தும் எம் மூவொரு இறைவா! இவ்வுலகில் அனாதைகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் நீரே அரணும், கோட்டையுமாய் இருந்து பாதுகாத்திட வேண்டி உம்மை மன்றாடுகின்றோம்
Friday, 15 April 2016
இன்றைய புனிதர் 2016-04-16 புனித. லூர்து நகரின் பெர்னதெத்

இன்றைய புனிதர் 2016-04-16
புனித. லூர்து நகரின் பெர்னதெத்
பிறப்பு 7 ஜனவரி 1844பிரான்ஸ்
இறப்பு 16 ஏப்ரல் 1879 பிரான்ஸ்
முத்திபேறுபட்டம்: 14 ஜூன் 1925 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
புனிதர் பட்டம்: 8 டிசம்பர் 1933 திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்
1844 ஆம் ஆண்டு ஜனவரி ஏழாம் நாள் பிரான்சிலுள்ள ஹவுட்டஸ் பைர்னஸ் என்ற ஊரில் பிரான்ஸ் மில்லர், லூயிஸ் என்பவரின் முதல் மகளாக பிறந்தார். இவர் பிறந்த இரண்டாம் நாள் அங்கிருந்த உள்ளூர் ஆலய த்தில் பெர்னதெத் என்ற பெயர் வழங்கப்பட்டு திரு முழுக்கு கொடுக்கப்பட்டது. இவர் திருமுழுக்கு பெற்ற அந்த நாள் தன் பெற்றோரின் திருமண நாள். இவரின் ஞானத்தாய் தன் தாய் லூசியாவின் உடன்பிறந்த சகோ தரி. இவர் ஓர் விதவைப் பெண். ஆனால் அதிகம் பணம் படைத்தவராகவும், மிகுந்த பக்தியுள்ளவராகவும் இரு ந்தார். சிறுமி பெர்னதெத் பிறந்தபோது, இவரின் பெற் றோர் மிகவும் வறுமையில் இருந்தனர். தீவிர வறுமை யால் குழந்தை பெர்னதெத் நோயால் தாக்கப்பட்டார். இவர் வாழ்நாள் முழுவதும் குறுநடை போடும் குழந் தையாகவும், ஆஸ்துமா, காலரா போன்ற கடுமையான நோயாலும் பாதிக்கப்பட்டு வாழ்ந்தார்.
பெர்னதெத், நெவேர் என்ற ஊரில் Sisters of Charity என்ற ழைக்கப்படும் அருட்சகோதரிகளால் நடத்தப்பட்ட பள்ளியில் படித்தார். பெர்னதெத்தின் குடும்பம், வறு மையால் வாடியதால் தாய் லூயிசின் உறவினர், குகை யின் அருகிலிருந்த ஒரு சிறிய சிறை போன்ற அறை யை இலவசமாக தங்குவதற்கென கொடுத்தனர். பெர்னதெத் தன் குடும்பத்தின் வறுமையால், தன் ஊரிலிருந்த குகையின் அருகிலிருந்த காட்டுப்பகுதி க்கு சென்று விறகு சேகரித்து வருவார். அப்போது தன் 14 ஆம் வயதில் 1858 ஆம் ஆண்டு பிப்ரவரி பதினோராம் நாள் தன் உறவினர் மற்றும் தன் சகோதரி மேரியுடன் விறகு சேகரிக்க மசபியேல் குகைக்கு அருகில் சென் றனர். விறகு சேகரித்து வீட்டிற்கு திரும்பும்போது ஆற் றை கடந்து செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் பெர்னதெத் நடக்கமுடியாமல் மிகவும் மெதுவாக நட ந்து சென்றார். நண்பர் ஆண்ட்ரே மற்றும் சகோதரி மேரி இருவரும் சில அடிகள் தூரம் பெர்னதெத்துக்கு முன்னால் நடந்து சென்றனர். அப்போதுதான் பெர்ன தெத் முதல் காட்சி கண்டார். இதமான காற்று பெர்னதெத்தை சுற்றிவளைத்தது. மென்மையான மிகவும் அழகுவாய்ந்த ஒளிவந்து சென்றது. இயற்கையான ரோஜா மலர்கள் கொட்டியது. லேசான இருட்டாக இருந்த இடத்தில், வெண்மையான உருவம் வந்து சென்றது. இது போன்று 18 முறை மிகக் குறுகிய காலத்தில் காட்சி கண்டார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவர் மட்டுமே அம்மாபெரும் பேரொளியை கண்டார். நண்பர் ஆண்ட்ரோ மற்றும் மேரி எப்போதும் உடனிருந்தபோதும் இக்காட்சியை அவர்களால் காண முடியவில்லை.
1866 பிப்ரவரி 14 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடித்துவிட்டு, சகோதரி மேரி மற்றும் சில பெண்கள் குகைக்குச் சென்றனர். அப்போது பெர்னதெத் மீண்டும் அவ்வுருவத்தைப் பார்த்தார். உடனே முழந்தாள் படியி ட்டு வணங்கினார். அப்போது உடன் வந்த பெண்கள் கையில், ஆலயத்திலிருந்து தாங்கள் கொண்டுவந்த ஆசீர்வதிக்கப்பட்ட புனித நீரை ஒருவர் மேல் ஒருவர் தெளித்து விளையாடினர். புனித தண்ணீர் தரையில் பட்டவுடன் அவ்வுருவம் காணாமல் போனது. உடன் வந்த பெண்கள் தான், அவரை கொன்றுவிட்டனர் என் றெண்ணி, பெர்னதெத் அதிர்ச்சி அடைந்தார். அதன் பிறகு பிப்ரவரி 18 ஆம் நாள் மீண்டும் அதே உருவத்தை கண்டார். அப்போது அவ்வுருவம் பெர்னதெத்தை "தின மும் குகைக்கு வா" என்று கூறியது. அதன்பிறகு தினந் தோறும் குகையில் ஒரு காட்சியை கண்டார். மீண்டும் 1858 ல் பிப்ரவரி 11 மற்றும் ஜூலை 16 ஆம் தேதிகளில் காட்சி அளித்தார். பின்னர் மீண்டும் அன்னையின் மசபியேல் என்னும் குகையில் தோன்றி, "நானே அமல உற்பவம்" என்று கூறி, தனக்கு ஓர் ஆலயம் எழுப்பும்படி மரியன்னை சிறுமியிடம் கூறினார். மீண்டும் பிப்ரவரி 24 ஆம் நாள் 18 ஆவது முறையாக அன்னை காட்சிய ளித்து " உபவாசம் இருந்து செபம் செய்ய சொல்லிக் கூறினார். முதலில் பெர்னதெத் கூறியதை யாரும் நம்பவில்லை. ஆனால் நாளடைவில் இது வேகமாக பரவியது. பிறகு திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களால் அன்னைக்கென்று ஓர் ஆலயம் எழுப்பப்பட்டு, உலகின் முக்கிய கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றாக உள்ளது.
அதன்பிறகு தனது 35 ஆம் வயதில் கடும் நோயால் இறந்தார். அவரின் உடல் St.Gildard Convent -ல் அடக்கம் செய்யப்பட்டது. இவர் நோயாளிகளுக்கும், வறுமையில் வாடுவோர்க்கும், கால்நடை மேய்ப்போர்க்கும் பாதுகாவலியாக உள்ளார்.
செபம்:
அன்புத் தந்தையே இறைவா! புனித பெர்னதெத் அன்னையின் மேல் பாசமும், பக்தியும் கொண்டு வாழ்ந்தது போல, நாங்களும் அன்னையின் பக்தர்களாய் வாழ்ந்திட உமது வரம் தாரும்!
Thursday, 14 April 2016
இன்றைய புனிதர் 2016-04-15 முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus) சபை நிறுவுனர்

இன்றைய புனிதர் 2016-04-15
முத்திபேறுபெற்ற. சீசர் பஸ் (Caesar by bus)
சபை நிறுவுனர்
பிறப்பு 3 பிப்ரவரி 1544 கவைலன் (Cavailon), பிரான்சு
இறப்பு 15 ஏப்ரல் 1607 அவஞ்நான்(Avignon), பிரான்சு
முத்திபேறுபட்டம்: 1975 திருத்தந்தை ஆறாம் பவுல்
சீசர் 1544 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி பிரான்சு நாட்டிலுள்ள கவைலன் என்ற ஊரில் பிறந்தார். இவர் பல ஆண்டுகள் ஓர் அரசனின் படையில் சேர்ந்து, படை வீரராக பணியாற்றினார். போர் முடிந்து வீடு திரும்பிய விடுமுறை நாட்களில், கவிதை எழுதுவதிலும், ஓவியம் வரைவதிலும் தன் நேரத்தை செலவழித்தார். பின்னர் பிரான்சு நாட்டின் மேற்கு கடற்கரை பகுதியை முற்றுகையிட பிரெஞ்சு இராணுவத்தினர் ஏற்பாடு செய்தனர். அப்போது சீசர் பஸ் தானும், கடற்படை இராணுவத்தில் சேரவேண்டுமென்று முடிவு செய்தார். ஆனால் இவர் ஒவிங்ஸ்(Owings) என்ற தீவிர நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் இம்முயற்சியை கைவிட்டார். மூன்று ஆண்டுகள் வரை, போரில் பங்கேற்க கூடாது என்றும், முழுமையான ஓய்வு எடுக்க வேண்டுமென்றும் இராணுவ படை அதிகாரி உத்தரவிட்டார். இந்த மூன்று ஆண்டுகளில் போரில் மக்களை கொன்று குவித்ததை நினைத்த சீசர் பஸ் மிகவும் மன வேதனைப்பட்டார். இப்பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, பல பக்தி முயற்சிகளை மேற்கொண்டார். தன் வாழ்வின் பாதையை மாற்றி அமைத்தார். தான் வைத்திருந்த பணத்தைக் கொண்டு, ஏழைகள் பலருக்கு உதவினார். பலரின் நோய்களை குணமாக்க பணம் செலவழித்தார்.
பின்னர் தன் சொந்த ஊரான கவைலன்-க்கு திரும்பினார். அப்போது குருவாக பணியாற்றிய தன் உடன்பிறந்த சகோதரர் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். இதனால் அதிர்ச்சி அடைந்த சீசர் பஸ், தான் குருவாக விரும்பி, தன் அண்ணன் ஆற்றிய இயேசுவின் சீடத்துவ பணியை தொடர விருப்பம் தெரிவித்து, உலக ஆசைகளை வெறுத்து, குருமடத்தில் சேர்ந்து 1582 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். குருவான பிறகு மறையுரை ஆற்றுவதிலும், மறைக்கல்வி போதிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
பிறகு 1592 -ல் குருமட மாணவர்கள் இறையியல் படிக்கவேண்டுமென்று, பிரான்சிலுள்ள பாரீசில், இறையியல் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதன் பிறகு அக்கல்லூரியில் படித்த சில மாணவர்களைக் கொண்டு "மதச்சார்பற்ற கிறிஸ்துவ குருக்கள்" (Secular priests of Christian Doctrine) என்ற சபையை பிரான்சிலுள்ள அவிஞ்நானிலும், சுவிட்சர்லாந்திலும் நிறுவினார். திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்கள் 1597 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள், இச்சபை ஓர் மதசார்பற்ற சபை என்ற அங்கீகாரத்தை வழங்கினார். தொடக்கத்தில் ஆண்களுக்கு மட்டுமே இச்சபை நிறுவப்பட்டது. பின்னர் பெண்களுக்காகவும் கிறித்தவர்களின் மகள்கள்(Daughters of Christians) என்ற சபை நிறுவப்பட்டது. இச்சபையே சில வருடங்கள் கழித்து உருசுலின்ஸ்(Ursulines) என்று பெயர் மாற்றம் பெற்று, இன்று வரை இயங்கிவருகிறது.
சீசர் பஸ் 1607 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் பிரான்சிலுள்ள அவிஞ்நான் என்ற ஊரில் இறந்தார். 1975ஆம் ஆண்டு வத்திகானிலுள்ள புனித பீட்டர் பேராலயத்தில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் முத்திபேறு பட்டம் கொடுக்கப்பட்டது.
செபம்:
மன்னிப்பின் நாயகனே! தான் செய்த பாவங்களை நினைத்து மனந்திரும்பி, உம் பாதையை தொடர்ந்த சீசர் பஸ்சை போல, நாங்களும் எம் பாவங்களிலிருந்து விடுப்பட்டு, மனந்திருந்தி வாழ உம் அருளைத் தாரும்.
Wednesday, 13 April 2016
இன்றைய புனிதர் 2016-04-14 புனித லிட்வினா (Lidwina)

இன்றைய புனிதர்
2016-04-14
புனித லிட்வினா (Lidwina)
பிறப்பு 1380 ரோட்டர்டாம், நெதர்லாந்து
இறப்ப 14 ஏப்ரல் 1433 ஷீடாம், நெதர்லாந்து
புனிதர் பட்டம்: 1890
புனித லிட்வினா 1380 ஆம் ஆண்டு குருத்து ஞாயிறன்று, ஓர் ஏழை பெற்றோருக்கு மகளாக, நெதர்லாந்திலுள்ள ரோட்டர் டாமில் பிறந்தார். இவர் பிறக்கும்போதே மிகுந்த அழகுள்ளவ ளாக பிறந்தார். லிட்வினா தனது 15 ஆம் வயதில் பனிச்சறுக்கல் விளையாட்டில் பங்கேற்றபோது, கால் வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதில் இவரின் விலா எலும்புகள் முற்றிலும் நொறு ங்கி விட்டது. இதனால் மிகுந்த வலியால் துன்பப்பட்டார். தனது 38 ஆம் வயது வரை பெரும் வேதனையை அனுபவித்து படுக் கையிலேயே தன் காலத்தை கழித்தார். லிட்வினாவிற்கு ஏற்ப ட்ட இவ்விபத்தில் தன் வலது கண் பார்வையை இழந்தார். தன் தலையையும், இடது கையையும் மட்டுமே இவரால் அசைக்க முடிந்தது. பற்கள் வலியால் உணவு உட்கொள்ள முடியாமலும், தூங்க முடியாமலும் வேதனைப்பட்டார். உணவு உட்கொள்ள முடியாததால், வயிற்று பசியாலும், வயிற்று வலியாலும் துடித் தார். இதனால் அல்சர் நோயால் தாக்கப்பட்டார். இவரின் மூக்கி லிருந்தும், வாயிலிருந்தும் இரத்தம் கசிந்து கொண்டே இருந் தது. நோய்களின் வலியை தாங்கமுடியாமல் எப்போதும் அழுது கொண்டே இருந்தார். அன்னைமரியிடமும், இயேசுவிட மும் இடைவிடாது செபித்தார். தன் வாழ்நாள் முழுவதும் இயேசுவின் பாடுகளை அனுபவித்தார்.
செபத்தின் வழியாக வலியைத் தாங்கக்கூடிய சக்தியையும், பொறுமையையும், குணம் பெறுவேன் என்ற நம்பிக்கையை யும் பெற்றார். தனது இருபதாம் வயதில் படுக்கையிலிருந் தபடியே புது நன்மை, உறுதிபூசுதலைப் பெற்றார். இதிலிருந்து நாள்தோறும் நற்கருணையைப் பெற்று வந்தார். ஒவ்வொரு நாளும் திவ்விய நற்கருணையை உட்கொண்டபிறகு, இயேசு வின் பாடுகளை, காட்சியாக கண்டார். அவ்வப்போது உயிர்த்த இயேசு, இவருக்கு மலர்களை கொடுத்தார் என்றும், அதன்பிறகு அவரிடமிருந்து புத்தொளியைப் பெற்றதாகவும் லிட்வினாவின் பெற்றோர்கள் கூறியுள்ளார்கள். லிட்வினா இயேசுவோடு இணைந்து பாடுகளில் பங்குக்கொண்டார்.
திவ்விய நற்கருணையின் வழியாக, தன் உடலுக்கு தேவை யான் சக்தியைப் பெற்று, தம் 38 ஆம் வயதில் உடல் முழுவதும் இருந்த நோய்கள் குணமாக்கப்பட்டு புதுவாழ்வு பெற்றார். இவருக்கு உடல் அளவிலும், மன அளவிலும் இருந்த நோய் முற்றிலும் குணமானது. குணம்பெற்ற லிட்வினா, இயேசுவின் சாட்சியாக வாழ்ந்து, தம் வாழ்வின் வழியாக இறைவனின் சீடத்தியானாள்.
இவர் 1433 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் நாள் நெதர்லாந்திலுள்ள ஷீடாம் (Schiedam) என்ற ஊரில் தன் பெற்றோரின் இல்லத்தில் இறந்தார். இவரது உடல் ப்ரூசல் (Brussel) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவர் 1890 ஆம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்டார்.
செபம்:
நம்பிக்கையின் நாயகனே எம் இறைவா! புனித லிட்வினா வைப் போல, உம்மீது நம்பிக்கை வைத்து வாழ வரம் தாரும். எங்களின் உடல் மன நோய்களை, உமக்காக ஏற்றுக் கொண்டு, உம்மை எம் வாழ்வில் பற்றிக்கொண்டு வாழ உமதருள் தாரும்
Tuesday, 12 April 2016
இன்றைய புனிதர் 2016-04-13 புனித முதலாம் மார்ட்டின் திருத்தந்தை

இன்றைய புனிதர் 2016-04-13
புனித முதலாம் மார்ட்டின் திருத்தந்தை
பிறப்பு டோடி(Todi), உம்பிரியா மாவட்டம்(Umbria), இத்தாலி
இறப்பு 16 செப்டம்பர், 655 கெர்சொன் (Cherson)
மார்ட்டின் இத்தாலி நாட்டிலுள்ள உம்பிரியா மாவட்டத்தில் டோடி என்ற ஊரில் பிறந்தார். இவர் 649-653ஆண்டுகளில் உரோ மையில் திருத்தந்தையாக இருந்தார். இவர் மறைசாட்சியாக விண்ணகம் அடைந்த பாப்பரசர்களில் கடைசியானவர். கால ங்காலமாக பின்பற்றி வரும் கத்தோலிக்க விசுவாசத்தை உயி ரைக் கொடுத்து பாதுகாத்தவர். கான்ஸ்டாண்டிநொபிளுக்கு திருத்தந்தையின் தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திருத்தந்தையான பிறகு பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்தார். அந்நாட் களில் திருச்சபையில் ஒரு குழப்பம் உண்டானது. கிறிஸ்துவி டம் இரு தன்மையா? அல்லது ஒரு தன்மை உண்டா? என்ற வாதம் எழுந்தது. கிறிஸ்துவிடம் மனிதத் தன்மை மட்டுமே உண்டு என்ற தவறான கருத்துக்கு அடிமையாக இருந்த இரண் டாம் கான்ஸ்டான்ஸ் அரசன், இதையே அறிவிப்புச் செய்ய வேண்டுமென்று திருத்தந்தையைக் கேட்டுத் தொல்லை செய் தான். இதனால் திருத்தந்தை முதலாம் மார்ட்டின் 649-ல் உரோ மையில் விரைவாக லாத்தரன் பொதுச் சங்கத்தைக் கூட்டி னார். இச்சங்கத்தின் முடிவில் கிறிஸ்துவில் இரண்டு தன்மை கள் உண்டு என்ற மிகத்தெளிவான முடிவை லாத்ரன் பொது சங்கம் அறிவித்தது.
இதன் விளைவாக மார்ட்டின் கான்ஸ்டைன்ஸ் மன்னரால் 653-ல் கைதியாக கெர்சோன் என்ற இடத்தில் சிறைப்படுத்தப்ப ட்டார். திருத்தந்தைக்குரிய அடையாளங்கள் அனைத்தையும் அரசன் வெளிப்படையாகவே பறித்துக் கொண்டான். திருத்தந் தை பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பட்டினி யாக விடப்பட்டார். "எனக்கு அறிமுகமானவர்கள் கூட எனது இடுக்கண் வேளையில் என்னை மறந்துவிட்டனர். நான் இன் னும் உயிரோடிருக்கிறேனா, செத்து மடிந்துவிட்டேனா என்று பார்க்கக்கூட யாருமில்லை. இருப்பினும் எல்லா மனிதரும் மீட்படைய வேண்டுமென்று விரும்பும் எல்லாம் வல்ல கடவுள், புனித பேதுருவின் வேண்டுதலால் அனைவரும் கத்தோலிக்க விசுவாசத்தில் நிலைத்து நிற்க அருள்புரிவாராக" என்று திருத்தந்தை மார்ட்டின் அடிக்கடி கூறிக் கொண்டே இருந்தார். இறுதியாக, கிரிமியாத் தீவில் உள்ள கெர்சொனுக்கு நாடுகடத்தப்பட்டு655-ல் செப்டம்பர் 16 -ல் இறந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! திருத்தந்தையும், மறைசாட்சியுமான புனித முதலாம் மார்ட்டினைப் போல, அச்சுறுத்தல்களுக்கு அஞ்சவோ, தோல்வியுறவோ விடாமல் எதிர்ப்புகளை மனதார ஏற்று, உமக்கு சான்று பகர்ந்து வாழ, எம் ஆயர்களுக்கும், திருத்தந்தைக்கும் உமதருள் தாரும். ஆமென்.
Monday, 11 April 2016
இன்றைய புனிதர் 2016-04-12 புனித.ஜூலியஸ் (Julius I) ஆயர்

இன்றைய புனிதர் 2016-04-12
புனித.ஜூலியஸ் (Julius I) ஆயர்
பிறப்பு மேற்கு உரோம பேரரசு (Western Roman Empire)
இறப்பு 12 ஏப்ரல் 352 உரோம்
ஜூலியஸ் 337ஆம் ஆண்டு முதல் 352 ஆம் ஆண்டு வரை உரோமில் ஆயராக இருந்தார். உரோமில் பிறந்தவரான இவர் மார்க் என்ற ஆயரின் வாரிசாக தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆரியன் (Arian)திருச்சபையைப் பற்றி நன்கு அறிந்திருந்தார். கான்ஸ்டான் டி நோபிள் பேராயராக இருந்தபோது, 341 ல் அந்தியோக்கியாவில் பேராயர்களின் மாநாடு நடைபெற்றது.. இதனால் உரோமின் பிரதிநிதியாக அம்மாநாட்டிற்கு ஆயர் ஜூலியஸ் சென்றார். அங்கு நடைப்பெற்ற சில விவாதங்களு க்கு ஆயர் ஜூலியஸ் மறுப்பு தெரிவித்தார். இதனால் பேராயர் கள் நடுவில் இரு பிரிவு ஏற்பட்டது. அத்தனாசியுஸ் ஒரு பிரி வாகவும், ஜூலியஸ் மறுபிரிவாகவும் பிரிந்தனர். அத்தனாசியஸ், ஆயர் ஜூலியஸ் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் உரோம் ஆயராக, அத்தனாசியுஸ் பொறுப்பேற்றார். ஆயர் அத்தனாசியுஸ், தன் மீது கூறிய வழக்குகள் அனைத் தும் பொய் என்று கூறி, ஜூலியஸ், அலெக்சாண்டரின் பேர வைக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்தை அலெக்சாண்டரின் பேராயர் திருத்தந்தைக்கு அனுப்பினார். திருத்தந்தையால் இக்கடிதம் வாசிக்கப்பட்டு, ஆயர்களின் குழுக்களையும் அழைத்து விசாரித்தார். அப்போது ஆயர் ஜூலியஸ் குற்றமற் றவர் என்று நிரூபிக்கப்பட்டது.
அதன்பிறகு ஆயர் ஜூலியஸ் தொடர்ந்து திறமையாக செயல் பட்டார். அப்போது 76 ஆயர்களை கொண்டு பிலிப்போபோலிஸில் (Philoppopolis) மாநாடு நடைப்பெற்றது. இம்மாநாட்டை ஆயர் ஜூலியஸ் தலைமை தாங்கி நடத்தி னார். இதில் ஆயர் அத்தனாசியாரும் கலந்து கொண்டார். அதன்பிறகு 300 மேற்கு உரோம் ஆயர்களை கொண்டு, மீண் டும் ஓர் மாநாடு நடைப்பெற்றது. இதற்கு முன் நடந்த 3,4 மற்றும் 5 ஆவது மாநாடுகளில் பேசப்பட்ட விவாதங்கள் அனைத்தும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வாறாக ஆயர் ஜூலியஸ் பல மாநாட்டை தலைமையேற்று நடத்தி, திருச்சபையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார்.
ஆயர் ஜூலியஸ் 352 ஆம் ஆண்டு, ஏப்ரல் 12 ஆம் நாள் உரோமையில் இறந்தார். இவர் இறந்தபிறகு மக்களால் புனிதராக வணங்கப்பட்டார். ஜூலியஸ் தான் ஆயராக உரோமில் இருந்தபோதுதான் கிறித்துப்பிறப்பு விழாவையும், மூன்று அரசர்கள் பெருவிழாவையும் தொடர்ந்து கொண்டாடப்பட வேண்டுமென்று, மாநாடுகளில் வலியுறுத்தினார். திருச்சபை காலண்டரில் தேதியை குறிப்பிட்டு, விழாக்களை இணைத்தார். அன்றிலிருந்து இவ்விரு விழாவும் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! உமது இறையரசை இவ்வுலகில் நிலைநாட்ட, எம் ஆயர்களோடு இருந்து, எம்மை வழிநடத்தியருளும்
Sunday, 10 April 2016
இன்றைய புனிதர் 2016-04-11 புனித.தனிஸ்லாஸ் ஆயர், மறைசாட்சி
இன்றைய புனிதர் 2016-04-11
புனித.தனிஸ்லாஸ்ஆயர், மறைசாட்சி
பிறப்பு 26 ஜூலை 1030 ஜெசப்பனா (Szcepanow)
இறப்பு11 ஏப்ரல் 1079போலந்து
புனிதர் பட்டம்: 1253திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட்
இவர் போலந்து நாட்டில் ஜெசப்பனாவிலுள்ள, போக்கினா (Bochina) என்ற ஊரில் 1030 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் நாள் ஓர் அரசர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பல வருடங்கள் குழந்தைப்பேறு இல்லாமலிருந்தபோது, பல ஜெப, தவ முயற்சிகளை மேற்கொண்டு, இறைவனின் அருளால் அற்புதமாக, ஓர் அதிசய குழந்தையாக இவர் பிறந்தார். இவர் பெற்றோர் இவரை அறிவிலும், ஞானத்திலும், பக்தியிலும் சிறந்த குழந்தையாக வளர்த்தார்கள். அதன்பின் பிரான்சிலுள்ள ஓர் கன்னியர்களின் பள்ளியில் இளம் வயது படிப்பை முடித்துவிட்டு, போலந்து நாட்டிற்கு சென்று குருமடத்தில் சேர்ந்து குருவானார்.
பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின்(Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.
ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.
ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.
செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.
பின்பு 1072 ஆம் ஆண்டு கிராக்காவ்(Krakau) மறைமாவட்டத்தில் ஆன்ம குருவாக பணியாற்றியபின் ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது போலந்து நாட்டின் அரசராக இருந்த இரண்டாம் பொலோஸ்லாஸின்(Boleslaw) தாய் தனிஸ்லாசின் உறவினர். இவர் பல நோய்களால் தாக்கப்பட்டு இறந்து போனார். இவரின் இறுதி சடங்கை ஆயர் தனிஸ்லாஸ் அவர்கள் நிறைவேற்றிவைத்தார். இதனால் அரசர் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டது. இப்பிரச்சினைகளை ஆயர் தனிஸ்லாஸ் அவர்களே தீர்த்து வைத்தார். பண ஆசை பிடித்தவனாகவும், இன்னும் பல தீய செயல்களுக்கும் அடிமைப்பட்டவனாகவும் வாழ்ந்த அரசர் இரண்டாம் பொலோஸ்லாசை மனந்திருப்பினார்.
ஆனால் மீண்டும் அரசர் பாவ நிலைக்கே திரும்பினான். ஆயர் தனிஸ்லாஸ் மீண்டும் அவரைக் கண்டித்தார். இதனால் அரசன் கோபம் கொண்டு திருச்சபைக்கு எதிராகச் செயல்பட்டான். ஆயர் திருப்பலியாற்றிக் கொண்டிருந்தபோது, அவரை கொல்ல ஆள் அனுப்பினான். ஆனால் ஆயரிடமிருந்து பேரொளி ஒன்று வெளிப்பட்டதால், அவரை படையாட்கள் கொல்லாமல் விட்டுச் சென்றார்கள். இதனால் அரசனே வந்து ஆயரை1079 ஆம் ஆண்டு ஏப்ரல் பதினொன்றாம் தேதி வெட்டிக் கொன்றான். இப்பெரிய பாவத்தை செய்ததால் போலந்து நாட்டை விட்டு விரட்டப்பட்டான். பின்னர் ஹங்கேரி நாடு சென்று, ஓசியாக் என்ற ஊரிலிருந்த புனித ஆசீர்வாதப்பர் சபையில் சேர்ந்து, தன் பாவங்களுக்கு பரிகாரம் செய்தான்.
ஆயர் தனிஸ்லாஸ் ஓர் நல்ல ஆயனாக இருந்து திருச்சபையை வழிநடத்தினார். ஏராளமான ஏழைகளுக்கு உதவிசெய்தார். தம் மறைமாவட்டதிலிருந்த மறைபரப்பு பணியாளர்களை ஆண்டுதோறும் சந்தித்து இறைப்பணியை திறம்பட செய்ய ஊக்கமூட்டினார். 1253 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் இன்னோசென்ட் அவர்களால், அசிசி நகரில் புனிதராக உயர்த்தப்பட்டார். ஆயர் தனிஸ்லாஸ் போலந்து நாட்டிற்குப் பாதுகாவலராக உள்ளார்.
செபம்:
அன்பான இறைவா! உமது மாட்சிமைக்காக தம் உயிரை இழந்த புனித தனிஸ்லாஸைப் போல, எம் திருச்சபையிலுள்ள ஒவ்வொரு ஆயர்களும் உமது மகிமைக்காக வாழ வரம் தாரும்.
இன்றைய புனிதர் 2016-04-10 புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), சபை நிறுவுனர்

இன்றைய புனிதர் 2016-04-10
புனித. மக்தலேனா கனோசா (Magdalena Conassa), சபை நிறுவுனர்
பிறப்பு 02 மார்ச் 1774 வெரோனா, இத்தாலி
இறப்பு 10 ஏப்ரல் 1835 வெரோனா, இத்தாலி
முத்திபேறுப்பட்டம்: 1941 திருத்தந்தை 12 ஆம் பயஸ்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்
புனிதர் பட்டம்: 2 அக்டோபர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்புனித மக்தலேனா கனோசா 1774 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் நாள் இத்தாலி நாட்டிலுள்ள வெரோனாவில் பிறந்தார். மார்க்கிராப்பின் ஒக்டோவியூஸ், தெரேசா ஸ்லூவா இவரின் பெற்றோர். மக்தலேனா ஐந்து வயதாக இருக்கும்போது அவரின் தந்தை விபத்தில் இறந்துவிட்டார். இதனால் தன் தாய் மீண்டும் ஓர் மறுமணம் செய்துகொண்டார். புதிய தந்தையால் மக்தலேனா பல துன்பங்களை அனுபவித்தார். தாழ்ச்சியிலும், பக்தியிலும் சிறந்து விளங்கிய மக்தலேனா குழந்தையாக இருந்த போதே துறவியாக வேண்டுமேன்று ஆசைப்பட்டார். மக்தலேனா தன் ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு சென்று அவ்வப்போது ஜெபித்து வந்தார். சிறுவயதில் பெற்றோரின் கொடுமை தாங்க முடியாமல் கார்மேல் மடத்திற்கு சென்று தஞ்சம் அடைந்தார். அங்கு மக்தலேனா கார்மேல் மட கன்னியர்களால் வளர்க்கப்பட்டார். தம் பள்ளிப்படிப்பை முடித்தபின், தம் பதினைந்தாம் வயதில் கார்மேல் மடத்தில் துறவற பயிற்சியில் சேர்ந்தார். எட்டு மாதங்கள் கழித்து, தன் சொந்த ஊரிலிருந்து, ற்றோவிசோ(Treviso) என்ற ஊரிலிருந்த கார்மேல் மடத்திற்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் அங்கிருந்து சில மாதங்களிலிலேயே விரைவில் வெரொனா திரும்பினார். அப்போது அரசர் நெப்போலியன் வடக்கு இத்தாலியை ஆக்கிரமித்தான். இதனால் மக்தலேனா தன் சொந்த வீட்டு நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதாக இருந்தது. நெப்போலியனின் ஆக்கிரமிப்பால் தன் அரண்மனையிலிருந்த பல குழந்தைகள் காயப்பட்டு, அனாதைகளாக விடப்பட்டனர். இதனால் மக்தலேனா தன் அரண்மனையிலே, ஓர் இல்லத்தில் குழந்தைகளை தங்க வைத்து, பராமரித்து அவர்களுக்கு கல்வியை வழங்கினார். 1808 ஆம் ஆண்டு கைவிடப்பட்ட குழந்தைகளை தொடர்ந்து பராமரிக்க வேண்டி, உதவிக்காக ஜெனோவா மாவட்டத்திலிருந்து ஓர் அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் பயனாக 1808 ஆம் ஆண்டு அன்பின் மகள்கள்(Daughters of Love) என்ற சபையை நிறுவினார். பிறகு 1810 மற்றும் 1812 ஆம் ஆண்டுகளில் வெனிஸ் நகரிலிருந்த தெருகுழந்தைகளுக்கு, வெனிஸில் 2 சபையையும், 1816 ஆம் ஆண்டு மிலானிலுள்ள பெர்காமோவிலும்(Bergamo) சபைகளை நிறுவினார். இச்சபைகளை தொடர்ந்து பராமரிக்க அப்போது ஆஸ்திரிய நாட்டில் அரசராக இருந்த முதலாம் பிரான்ஸ் அவர்களால் ஆதரவு கொடுக்கப்பட்டது. அரசர் தொடர்ந்து எல்லா விதங்களிலும் உதவிகளை வழங்கினார். 1828 ஆம் ஆண்டு திருத்தந்தை பன்னிரெண்டாம் லியோ அவர்களால், இச்சபை திருத்தந்தையின் அதிகாரத்திற்குட்பட்ட சபையாக அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு இச்சபை இத்தாலி, இந்தியா, இந்தோனிசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா என பல நாடுகளில் பரவியது.
மக்தலேனா 1835 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் வெரோனாவில் இறந்தார். 1941 ஆம் ஆண்டு திருத்தந்தை12 ஆம் பயஸ் அவர்களால் முத்திபேறுப்பட்டம் கொடுக்கப்பட்டது. திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் அவர்களால்1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் புனிதராக அறிவிக்கப்பட்டார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! புனித மக்தலேனாவைப் போல, நாங்களும் ஏழை, எளியவர்களின் மேல் அக்கறை கொண்டு வாழ உமதருள் தாரும்.
Saturday, 9 April 2016
இன்றைய புனிதர் 2016-04-09 புனித வால்ட்ரூட் (St.Waltrude)

இன்றைய புனிதர் 2016-04-09
புனித வால்ட்ரூட் (St.Waltrude)
பிறப்பு ---
இறப்பு 9 ஏப்ரல் 688
இவர் ஓர் திருமணமான பெண். நான்கு குழந்தைகளுக்குத் தாய். அவர் கணவர் "அபே" என்பவர் ஓய்வு பெற்றபின் 656 ல் ஓர் துறவியாக முடிவு செய்து துறவியானார். இவர் வாழ்ந்த அக்காலத்தில் அரசர்கள் கைதிகளை மலைகளுக்கு அனுப்பி தண்டனை கொடுத்தார்கள். கைதிகள் தங்கள் வாழ்நாட்களை மலைபகுதிகளிலே கழிக்க வேண்டியதாக இருந்தது. அப்போது வால்ட்ரூட் பெல்ஜியத்தில் மலைகளில் வாழ்ந்த கைதிகளுக் காக போராடி, உதவி செய்து வந்தார். நாளடைவில் கைதிகளை கொண்டு, வால்ட்ரூட் தானே சொந்தமாக, தனது பெயரிலேயே ஓர் சபையை நிறுவினார். பெல்ஜியத்திலுள்ள மோன்சில் புனித வால்ட்ரூட் சபை உள்ளது.
688 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் வால்ட்ரூட் பெல்ஜியத்திலு ள்ள மோன்ஸ் (Mons) மலையில் இறந்தார். பெல்ஜியத்தில் புனித வால்ட்ரூட் மலையில் இவர் பெயரில் பேராலயமும், கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வோர் ஆண்டும் பெல்ஜிய மலை களில் இன்றுவரை புனித வால்ட்ரூட் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவர் மலைகளின் பாதுகாவலர் என்றழைக்கப்படுகின்றார்.
செபம்:
வாழ்வளிக்கும் வள்ளலே எம் இறைவா! மலைகளில் வாழ்கின்ற ஒவ்வொரு மக்களையும் ஆசீர்வதியும். விஷ பூச்சிகளிடமிருந்து காத்து வழிநடத்தியருளும். இயற்கையின் வழியாக உம்மைப் புகழ்ந்திட வரம் தாரும்.
Friday, 8 April 2016
இன்றைய புனிதர் 2016-04-08 புனித.மரிய ரோசா ஜூலியா பிலியர்ட் (Maria rosa Julia biliart) சபை நிறுவனர்
இன்றைய புனிதர் 2016-04-08
புனித.மரிய ரோசா ஜூலியா பிலியர்ட் (Maria rosa Julia biliart)
சபை நிறுவனர்
பிறப்பு 1751 பிரான்ஸ்
இறப்பு 8 ஏப்ரல் 1816 நம்மூர்(Namur), பெல்ஜியம்
புனிதர் பட்டம்: 1969 ஆறாம் பவுல்(Pope Paul VI)
1751 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். இவர் பிறந்ததிலிருந்தே மறைக்கல்வியை நன்கு கற்று தேர்ந்து, கனிவான இதயத்தையும், திறந்த மனதையும் கொண்டு மற்ற குழந்தைகளிடத்தில் மிகவும் அன்பானவராக இருந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போது, இவர் ஊரிலிருந்த நடக்கமுடியாமல் கஷ்டப்பட்ட குருவானவர்க்கு உதவி செய்து வந்தார்.
1774 ஆம் ஆண்டு இவரின் தந்தை முடக்கவாத நோயால் தாக்கப்பட்டதால், தன் தந்தையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டார். இச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டு அரசால் கைவிடப்பட்ட, நோய்வாய்பட்ட குருக்களையும், மற்றவர்களையும் யாரும் முறையாக கவனிக்காததால் தானாகவே முன்வந்து, தன் தந்தையோடு சேர்த்து இவர்களையும் கவனித்துவந்தார். இதனால் பிரான்ஸ் அரசால் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட தீட்டப்பட்ட திட்டத்தை அறிந்து, தன் நண்பர்கள் சிலரின் உதவியுடன் சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் மறைந்த வாழ்வு வாழ்ந்தார். அப்போது தன் தந்தை இறந்துவிட்ட செய்தியை அறிந்து, அவரை அடக்கம் செய்த பின்னர், பிரான்ஸிலுள்ள அமீன்ஸ்(Amiens) என்ற ஊரில் 1804 ஆம் ஆண்டில் ஓர் சபையை தொடங்கி, பல பெண்குழந்தைகளை பராமரித்து, பாடம் கற்பித்து வந்தார். பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இவர்களை கொண்டு பல இடங்களில் இச்சபையை விரிவடையச் செய்தார். இதனால் பல துன்பங்களும், இடையூறுகளும் இவரை விடாமல் தொடர்ந்தது. அப்போதுதான் பெல்ஜியத்திற்கு சென்று, நம்மூர் என்ற இடத்தில் மிஷினரியாக பணிபுரிந்தார். பணியாற்றும்போது பல துன்பங்கள் தொடரவே நோய்வாய்பட்டார். இருப்பினும் பல தடைகளைத் தாண்டி, அநீதிகளை அகற்றி, துணிவோடும், இறைவனின் பராமரிப்போடும், பெல்ஜியம் நம்மூரில் மீண்டும் ஓர் சபையைத் தொடங்கினார். சபையை நிறுவிய சில மாதங்களில் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, 1816 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் இறந்தார். இவரது உடல் பெல்ஜியத்திலுள்ள நம்மூரில் அடக்கம் செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! இச்சமுதாயத்தில் எத்தனையோ குழந்தைகள் கைவிடப்பட்டு வாழ்கின்றார். இத்தகைய குழந்தைகளுக்கு வழிகாட்டும் நல்ல மனதை எங்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
1774 ஆம் ஆண்டு இவரின் தந்தை முடக்கவாத நோயால் தாக்கப்பட்டதால், தன் தந்தையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டார். இச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டு அரசால் கைவிடப்பட்ட, நோய்வாய்பட்ட குருக்களையும், மற்றவர்களையும் யாரும் முறையாக கவனிக்காததால் தானாகவே முன்வந்து, தன் தந்தையோடு சேர்த்து இவர்களையும் கவனித்துவந்தார். இதனால் பிரான்ஸ் அரசால் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட தீட்டப்பட்ட திட்டத்தை அறிந்து, தன் நண்பர்கள் சிலரின் உதவியுடன் சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் மறைந்த வாழ்வு வாழ்ந்தார். அப்போது தன் தந்தை இறந்துவிட்ட செய்தியை அறிந்து, அவரை அடக்கம் செய்த பின்னர், பிரான்ஸிலுள்ள அமீன்ஸ்(Amiens) என்ற ஊரில் 1804 ஆம் ஆண்டில் ஓர் சபையை தொடங்கி, பல பெண்குழந்தைகளை பராமரித்து, பாடம் கற்பித்து வந்தார். பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இவர்களை கொண்டு பல இடங்களில் இச்சபையை விரிவடையச் செய்தார். இதனால் பல துன்பங்களும், இடையூறுகளும் இவரை விடாமல் தொடர்ந்தது. அப்போதுதான் பெல்ஜியத்திற்கு சென்று, நம்மூர் என்ற இடத்தில் மிஷினரியாக பணிபுரிந்தார். பணியாற்றும்போது பல துன்பங்கள் தொடரவே நோய்வாய்பட்டார். இருப்பினும் பல தடைகளைத் தாண்டி, அநீதிகளை அகற்றி, துணிவோடும், இறைவனின் பராமரிப்போடும், பெல்ஜியம் நம்மூரில் மீண்டும் ஓர் சபையைத் தொடங்கினார். சபையை நிறுவிய சில மாதங்களில் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, 1816 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் இறந்தார். இவரது உடல் பெல்ஜியத்திலுள்ள நம்மூரில் அடக்கம் செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! இச்சமுதாயத்தில் எத்தனையோ குழந்தைகள் கைவிடப்பட்டு வாழ்கின்றார். இத்தகைய குழந்தைகளுக்கு வழிகாட்டும் நல்ல மனதை எங்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
Thursday, 7 April 2016
இன்றைய புனிதர் 2016-04-07 புனித. ஜான் பாப்டிஸ்ட் டெலாசால் (John Baptist De lasalle) மறைப்பணியாளர்

இன்றைய புனிதர் 2016-04-07
புனித. ஜான் பாப்டிஸ்ட் டெலாசால் (John Baptist De lasalle)
மறைப்பணியாளர்
பிறப்பு 1651ரெய்ம்ஸ்(Reims), பிரான்ஸ்
இறப்பு 07 ஏப்ரல் 1719ரூவான்(Rouen), பிரான்ஸ்
புனிதர் பட்டம்: 24 மே 1900 பதிமூன்றாம் லியோ
பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலராக 1950ஆம் ஆண்டு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.
பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலராக 1950ஆம் ஆண்டு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.
இவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் நகரில் 1651 ஆம் ஆண் டில் பிறந்தார். இவர் தந்தை ஓர் நகர்மன்ற உறுப்பினர். இவர் சமூக பணியாளர். சமூகத்தில் துன்பப்படுகின்றவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வந்தார். தன் மகனையும் சமூக செயல்களில் ஈடுபடுத்தினார். அப்போதிலிருந்தே ஏழைக் குழந்தைகள், இளைஞர்கள்போல் அக்கறை கொண்டு உதவி செய்து வந்தார். மிகவும் பக்தியான இவர் தம் 16 ஆம் வயதில் ரீம்ஸ் நகரின் பேராலயத்தில் மிக முக்கியப்பொறுப்புகளை ஏற்றுகொண்டு, 1678 ஆம் ஆண்டு, தம் 27 வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1679 ஆம் ஆண்டு இளைஞர் களுக்கென்று பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் ஆசிரியராக தாமே பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1684 ஆம் ஆண்டு தம்முடன் சேர்ந்து உழைத்த நண்பர்களை ஒன்று சேர்த்து ஓர் துறவற சபையை தோற்றுவிக்க எண்ணி, திட்டங்கள் தீட்டி, இத னால் பல துன்பங்களையும் அனுபவித்தார். இருப்பினும் தம் பணியில் இறைவனின் துணையோடு தம்மை முழுவது மாக அர்ப்பணித்தார். தாழ்ச்சியுடனும், ஏழைகளின் மீது கொண்ட பாசத்திலும் சிறந்து விளங்கிய இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மை முழு வதுமாக அர்ப்பணித்தார். அப்போது ஜான்சனிசம் (Johnsonism) என்ற நச்சுக் கலந்த கொள்கை பிரான்ஸ் நாட்டை அதிர வைத் தபோது, அண்டை நாடுகளுடன் ஓயாத போரும் ஏற்பட்டது. இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டில் கடுமையான பஞ்சத்தையும், பல்வேறு இன்னல்களையும் கொண்டுவந்தது. இதனால் கல்வியறிவு முழுவதும் இல்லாமல் போகவே, மீண் டும் ஏழை மாணவர்களுக்கென்று இரு பள்ளிகள் நிறுவி, நாள் தோறும் தவறாமல் ஆசிரியர்களுக்கு கற்று கொடுத்து, தங்கு வதற்கென்று இல்லமும், உணவையும் அளித்து, எல்லா வழி களிலும் ஊக்கமூட்டினார். காலத்திற்கேற்ப தொடக்க, மேல் நிலை பள்ளிகளை தொடங்கியதோடு ஆசிரியர் பயிற்சிப்பெ ரும் பள்ளிகளையும் தொடங்கி, பல யுத்திகளை கற்றுக்கொடுத் தார். குருக்களுக்கு இவரின் நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக் கவில்லை. இவர் கல்விப்பணியின் மூலம் "நேர்மையான கிறி ஸ்துவர்களை உருவாக்குதல்" என்பதை குறிக்கோளாக வைத் தார். இவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றிய டைந்து, ஓர் முடிவுக்கு வந்தபோது, இச்சபையை தொடர்ந்து வழிநடத்த, சபை சகோதரர் ஒருவரிடம் தம் முழுபணியையும் ஒப்படைத்தார். பின்னர் 1719 ஆம் ஆண்டு ஆஸ்துமா நோயால் தாக்கப்பட்டு, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு பலவித உடல் வேதனைகளை அனுபவித்து ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று பிரான்ஸில் ரூவான் என்ற இடத்தில் இறைவனால் வான்வீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இறக் கும் வரை மிக கடுமையான தவமுயற்சிகளை கைவிடவி ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிறகு 1900 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டெலசால் ஓர் பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார்
செபம்:
அன்பான ஆண்டவரே! கல்வி பணியின் மூலம் நேர்மையான, பக்தியுள்ள கிறித்தவர்களை உருவாக்கிய புனித ஜான் பாப்டிஸ்டைப் போல இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, உமது இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Tuesday, 5 April 2016
இன்றைய புனிதர் 2016-04-06 முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா (Michael Rua SDB)

இன்றைய புனிதர் 2016-04-06
முத்திபேறுபெற்ற. மிக்காயேல் ரூவா (Michael Rua SDB)
பிறப்பு 9 ஜூன் 1837 தூரின், இத்தாலி
இறப்பு 6 ஏப்ரல் 1910 தூரின், இத்தாலி
முத்திபேறு பட்டம்: 29 அக்டோபர் 1972 திருத்தந்தை ஆறாம் பவுல்
இவர் 1837 ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள தூரின் (Turin) என்ற இடத்தில் ஜூன் 9 ஆம் நாள் பிறந்தார். இவர் தனது 15-ம் வயதில் தனது படிப்புகளை முடித்துவிட்டு, புனித தொன் போஸ்கோ அவர்கள் குருவாக இருந்தபோது, அவரால் தொடங் கப்பட்ட இளைஞரணியில் சேர்ந்தார். அப்போது மிக்காயேல் ரூவாவும், தொன்போஸ்கோவும் நண்பர்கள் ஆனார்கள். 1861 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ தொடங்கிய சலேசிய சபையில் இளைஞர்களுக்குப் பணியாற்றும் பணியில் ஈடுபட்டார். புனித சலேசிய சபை உருவாவதற்கு தொன்போஸ்கோவிற்கு பெரும ளவில் உதவிசெய்தார். அப்போது இளைஞர்களுக்கு எல்லாவி தங்களிலும் தாயாக இருந்து உதவிசெய்த தொன்போஸ்கோ வின் அம்மா இறந்ததால், இளைஞர்களுக்கு தாய் இல்லை என்ற எண்ணத்தைப் போக்க ரூவா தன் தாயை, இளைஞர்களு க்கு தாயாக இருந்து பணிபுரிய அர்ப்பணித்தார்.
இந்த இளைஞரணியானது திருச்சபையால் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதை உண ர்ந்து, தொன்போஸ்கோவிற்கு துணையாக, தனது 22-ம் வயதில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் நாளன்று குருப்பட்டம் பெற்று இளைஞர்களுக்கு ஞானமேய்ப்பராக பணியாற்றினார். அதன் பிறகு தொன்போஸ்கோவிடமிருந்து விலகி சென்று 1885-ல் பார்சிலோனாவில் இளைஞர்களுக்கான சீடத்துவத்தை தொட ங்கினார். தமது 26 ஆம் வயதில் அழகு துணை வால்டோக்கோ (Mirabello) என்ற குழுவை தொடங்கி, அதற்கு முதல்வராக பொறுப்பேற்றார். பின்பு கத்தோலிக்க அவைகளின் மேலாள ராக பணியாற்றினார். 1865 -ல் போஸ்கோ அவர்களால் சலேசிய சபைகளுக்கு துணைமுதல்வராக அறிவிக்கப்பட்டார். பிறகு 1872 ஆம் ஆண்டு கிறித்தவர்களின் சகாயமாதா சபையை தொட ங்கினார். (Daughter of Mary Help of Christians)
1888 ஆம் ஆண்டு தொன்போஸ்கோ இறந்தவுடன் இச்சபையை வழிநடத்தும் பொறுப்பை மிக்கா யேல் ரூவா ஏற்றுக்கொண்டார். பின்பு திருத்தந்தை பதிமூன் றாம் லியோ (Pope Leo XIII) அவர்களால் இச்சபை சலேசிய சபை யாக அறிவிக்கப்பட்டது. பின்பு உலகம் முழுவதிலும் சென்று இச்சபை தொடங்கப்பட்டது. பிறகு தனது 73ஆம் வயதில் 1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் இத்தாலியிலுள்ள தூரின் என்ற நகரில் இறந்தார். தொன்போஸ்கோ இறந்தபோது 57 ஆக இருந்த சபைக்குழுமங்களை (communities) ரூவா 345 சபை க்குழுமங்களாக பெருக்கினார். 773 ஆக இருந்த சலேசியர்களை 4000-மாக பெருக்கினார். 6 ஆக இருந்த சபை மாநிலங்களை 34 மாநிலங்களாக (Provincialate) 33 உலக நாடுகளில் தொடங்கி வைத்தார். இவர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் 1972 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் நாள் முத்திபேறு பட்டம்(Blessed) கொடுக்கப்பட்டது. இன்று வரை "Don" என்ற பெய ரிலேயேதான் சலேசிய குழுமங்கள் அழைக்கப்படுகின்றது.
செபம்:
உமது சிறகுகளின் நிழலில் வைத்து எம்மை பாதுகாத்து வழிநடத்திவரும் எம் அன்பு இறைவா! எங்களால் இயன்றவரை ஓர் நல்ல இளைய சமுதாயத்தை உருவாக்க, எமக்கு உமது அருளையும், ஞானத்தையும் தந்து வழிநடத்தியருளும்.
Monday, 4 April 2016
இன்றைய புனிதர் 2016-04-05 புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)

இன்றைய புனிதர் 2016-04-05
புனித வின்சென்ட் பெரர், (Vincent Ferrer) குரு(Priest)
பிறப்பு 23 ஜனவரி 1350 வாலன்சியா(Valencia), ஸ்பெயின்
இறப்பு 05 ஏப்ரல் 1418 ஸ்பெயின்
இவர் ஓர் பக்தியான, உன்னதமான குடும்பத்தில், ஆங்கிலேயர் வில்லியம் பெரர் (William Ferrer) மற்றும் ஸ்பானிஸ் பெண் கான்ஸ்டான்ஷியா(Canstantia) என்பவருக்கும் மகனாக பிறந்தார். பிறந்த நாளிலிருந்தே இவரது வாழ்வு ஆரம்பமானது. இவர் பிறந்த அதே நாளில் வாலென்சியாவில் ஞானஸ்நானம் பெற்றார். இவர் தம் ஐந்தாம் வயதில் தீவிர நோயால் பாதிக்கப் பட்டார். குழந்தை பருவத்திலேயே ஓர் அழகிய சிறுவனாகவும், மிகவும் உயர்ந்த குணங்களையும் இயற்கையிலே பெற்றிருந் தார். இவரது பெற்றோர் இவரை, அன்னைமரியிடமும். ஏழை களிடத்திலும் மிகுந்த பக்தியும், பாசமும் கொண்டவராக வளர் த்தனர். இவர் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைக ளில் விரதமிருந்து, தான் பெறும் இறைச்சி மற்றும் உயர்தர உணவுகளை தான் உண்ணாமல் மற்றவர்களுக்கு கொடுத்தார். வின்சென்ட் ஏழைகளை கடவுளின் நண்பர்களாக கருதி, அவர் கள்மேல் மிகுந்த பாசம் வைத்தார். இதைப் பார்த்த இவர் பெற் றோர் தன் குழந்தையின் தர்ம செயல்களால் ஈர்க்கப்பட்டு, தங் களுக்கென்று இருந்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதியை ஏழை களுக்கென்று ஒதுக்கி தன் குழந்தையுடன் சேர்ந்து தாங்களும் தர்மம் செய்தார்கள். வின்சென்ட் எட்டாம் வயதில் படிப்பைத் தொடங்கினார். பன்னிரண்டு வயதில் தத்துவயியலையும் (philosophy), பதினான்காம் வயதில் இறையியலையும்(theology) யாரும் எதிர்பார்க்காத விதமாக திறமையாக படித்து முடித்தார்.
பின்னர் 1367 ஆம் ஆண்டு பிப்ரவரி ஐந்தாம் நாள் வாலன்சியா விலுள்ள தொமினிக்கன் ப்ரையரில் (Dominican priory) சேர்ந்து, தன்னை கடவுளுக்கு அர்ப்பணமாக்கினார். ஆனால் அவர் சாத் தானின் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மிகவும் வேதனை அடைந்து சபையைவிட்டு வெளியேறி தனியாக செயல்பட நினைத்தார். ஆனால் பெற்றோர் இவரை செபத்தின் வழியாக மீண்டும் மீண்டும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி துறவறமடத் திலேயே, அன்னை மரியாவின் துணையால் தனது துன்பங் களை தாங்கிக்கொண்டு நவதுறவு வரை(Novitiate) பயிற்சிகளை பெறவைத்தனர்.
அதன்பிறகு அவர் பார்சிலோனாவிற்கு(Barcelona) பிரபலமான தத்துவயியல் ஆசிரியராக பணிபுரிய அனுப்பிவைக்கப்பட்டார். அதன்பிறகு 1373 ல் பார்சிலோனாவில் மறைபரப்பு பணிக்காக அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு அவர் மிகவும் பஞ்சத்தில் அடி ப்பட்டு, மக்களால் ஒதுக்கப்பட்டார். ஆனாலும் அவர் இரவு பகலென்று பாராமல் கப்பலில் பயணித்து போதித்தார். இதை கவனித்த கப்பலில் பயணம் செய்த சிலர், இவரை வதைத்து, கேலி செய்வதற்காக உயிருடனிருந்த ஒருவரை இறந்தது போல நடிக்கச்செய்தனர். இவர் இறந்த பிணத்தின் முன் செபித்தார். இதை கண்டு அவரைச்சுற்றியிருந்தவர்கள் பரிகா சம் செய்து சிரித்தனர். ஆனால் இவரின் வல்லமையை வெளிப் படுத்த இறைவன் உண்மையிலேயே அவரை இறக்கச் செய் தார். இதையறிந்த பரிகாசம் செய்தோர் பயம் கொண்டு, தவ ற்றை உணர்ந்து, தாங்கள் கூறிய பொய்யை மன்னிக்கும்படி வேண்டி, மனம்மாறி கிறிஸ்துவை பின் தொடர்ந்தார்கள்.
பின்னர் 1376 ல் மீண்டும் வின்சென்ட் தூலூஸ் (Toulouse) என்ற இடத்திற்கு ஓர் ஆண்டு கல்வியை தொடர அனுப்பப்பட்டார். அங்கு எபிரேய மொழியில் விவிலியத்தை ஆய்வுசெய்தார். அதன்பின்னர் 1379 ல் பார்சிலோனாவில் குருவானார். பிறகு மீண்டும் 1385 - 1390 களில் வாலென்சியாவிற்கு வரவழைக் கப்பட்டு பேராலயத்தில் போதித்தார். அப்போது ஏறக்குறைய 30,000 யூதர்களை மனமாற்றினார். அங்கு இவரது போதனையை கண்ட சில கர்தினால்கள் இவரை பழிவாங்கும் நோக்குடன் இவர்மேல் சில பொய்குற்றங்களைச் சுமத்தி நீதிமன்றத்திற்கு அனுப்பினர். அங்கு அவர்மேல் சுமத்தப்பட்ட குற்றங்களை பீட்டர் டி லூனா(Peter De Luna) என்ற திருத்தந்தை விசாரித்தார். ஆனால் வின்சென்ட் கூறிய உண்மைகள் ஏற்றுக் கொள்ளப் படாத நிலையில், அவர் குருவாக இருக்கக்கூடாது என்றும், துறவறத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றும் பேச ப்பட்ட போது, வின்சென்ட் இடைவிடாது இறைவேண்டலில் ஈடுபட்டார். இதன்வழியாக உண்மைகள் வெளிக்கொணரப் பட்டது. இதன்பிறகு இவர் தனது குருத்துவ வாழ்வில் பலவித மான நோய்களை குணமாக்கி, இறைசக்தியை இவ்வுலகில் வெளிப்படுத்தினார்.
21 ஆண்டுகளில் சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பாவிகள் தம் பாவ நிலையை முற்றிலும் விட்டகலும் முறையில் போதித்து, செய்யும் செயல்களில் "உன்னை நினைப்பதற்கு மாறாக இறை வனை நினைத்துக்கொள்" என்ற இப்புனிதரின் வார்த்தை மற்ற வர்களை ஆழமாக சிந்தித்து செயல்பட தூண்டியது. தனது இறுதிமூச்சுவரை ஓர் சிறந்த குருவாகவே வாழ்ந்து, ஏப்ரல் 5 ஆம் நாள் 1418 ஆம் ஆண்டு இறந்தார்.
இவரது வாழ்க்கை திருமறையை போதிக்கும் குருக்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாக உள்ளது. மறையுரைகளில் எளிய நடைமுறையைப் பின்பற்றி, இயன்ற அளவிற்கு சான்றுகளை கொடுத்து, பாவம் செய்தவர்களை மனந்திருப்பி, பயனளிக்கும் வாழ்வு வாழ வேண்டும் என்பதை தன் வாழ்வின் வழியாக நமக்கு விட்டுச்சென்றார்.
செபம்:
அன்பின் பரம்பொருளே எம் இறைவா! நீர் ஒவ்வொரு கிறித்தவர்களையும் நல்ல நற்செய்தியாளராகவே படைத்துள்ளீர் என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். தூய ஆவியின் வல்லமையால் நீர் எங்களோடும், எங்களை வழிநடத்தும் குருக்களோடும் நாவிலிருந்து பேசி, நாங்களும் புனித வின்சென்ட் பெரரைப் போல நற்செய்தி பரப்புபவர்களாக வாழ்ந்து, ஒரு சிலரையேனும் பாவ வாழ்விலிருந்து மீட்டு, எல்லார்க்கும் எல்லாமுமாக வாழ வரம் தாரும்.
Sunday, 3 April 2016
இன்றைய புனிதர் 2016-04-04 புனித இசிதோர்(Isidor) ஸ்பெயின் நாட்டு மறைவல்லுநர்

இன்றைய புனிதர் 2016-04-04
புனித இசிதோர்(Isidor)
ஸ்பெயின் நாட்டு மறைவல்லுநர்
பிறப்பு 560 ஸ்பெயின்
இறப்பு 04 ஏப்ரல் 636
புனிதர் பட்டம் : 1598
திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்(Clement VII)
திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்(Benedict XIII)ஆல் 1722 ஆண்டு மறைவல்லுநர் பட்டம் வழங்கப்பட்டது
இவர் ஸ்பெயினிலுள்ள செவில் (Sevil) நகரில் ஏறத்தாழ கி.பி. 560 ல் பிறந்தார். இவர் ஓர் உயர்குலத்தைச் சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதர, சகோதரிகள். இவருடன் பிறந் தவர்கள் மூவருமே புனிதர் பட்டம் பெற்றவர்கள் (லியாண்டர், புல்ஜென்சியஸ், புளோரண்டீனா). பெற்றோர் இவர்களை பக் தியிலும், ஆன்மீகத்திலும் சிறப்பாக வளர்த்தார்கள். பெற்றோ ரின் இறப்பிற்குப் பின் சகோதரர் லியாண்டரால் இசிதோர்க்கு கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.
இவர் சிறுவயதில் படிக்கும்போது, படிப்பில் ஆர்வம் இல்லாத தாலும் இவரின் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருந்த தாலும் பள்ளியைவிட்டு ஓடிப்போனார். பின்னர் என்ன செய்வ தென்று அறியாமல் தனிமையில் ஓர் பாறையின் மீது அமர்ந்தி ருந்தார். அப்போது மழைத்துளிகள் விழுந்து விழுந்து துளை கள் ஏற்பட்டிருப்பதை உற்று பார்த்த அவர், விடாமுயற்சியை ப்பற்றி தெளிவாக புரிந்துகொண்டார். இதனால் மீண்டும் தனது ஆசிரியரை அணுகி தவற்றிற்கு மன்னிப்பு வேண்டி மீண்டும் பள்ளியில் சேர்ந்து புலமை பெற்றார்.
இசிதோர் தன் இளம் வயதிலிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். இவர் பல நூல்களை எழுதினார். இந்த நூல்களில் பல, பல நூற்றாண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் பயன்படு த்தப்பட்டு வந்தன. லத்தீன் மறைவல்லுநர்களில் இவரும் ஒரு வராக இருந்தார்.
இவர் பல புத்தகங்களை வாசிப்பதிலும், செபிப்பதிலும், தன் நேரங்களை செலவழித்து, தான் படித்தவைகளை வாழ்வாக வாழ்ந்தார். இதனால் இறைவனோடும், மக்களோடும் அதிக தொடர்பு கொண்டிருந்தார். மறைநூல் வாசிக்கும்போது, நாம் இதுவரை பெற்றுக்கொள்ளாத வரங்களையும், அறிவையும், உறவையும் பெறுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு போதி த்தார். 599 ஆம் ஆண்டு செவில் நகரின் ஆயராக இருந்த தன் உடன்பிறந்த அண்ணன் இறந்தபிறகு, தாமே ஆயர் பொறுப்பை ஏற்று 37 ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றினார். ஸ்பெயினில் ஆயர்களின் பேரவையை பலமுறை கூட்டி தலைமைத் தாங்கி நடத்தினார். இப்பேரவையால் பல சிறந்த காரியங்கள் ஒழுங்கு ப்படுத்தப்பட்டது. 200 ஆண்டுகள் ஆரியபதிதத்தில் (Arianism) ஊறிக்கிடந்த ஸ்பெயினை ஆட்டிப்படைத்த விசிகாத் என்ற மக்களை முற்றிலும் மனம்மாற்றினார். இவர் 636 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் இறந்தார். இவர் சிறந்த மறைவல்லுநராக, திருச்சபையின் ஒளி விளக்காக, கடவுள் திட்டத்தை அன்பு செய்து நிறைவேற்றுபவராக தன் வாழ்நாளின் இறுதிவரை இருந்தார். செபத்தின் வழியாக, நாம் கற்காததையெல்லாம் கற்றுக்கொள்கிறோம் என்பதை இவ்வுலக மக்களுக்கு வலியுறுத்திச் சென்றார்.
1598-ல் திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்களால் இசிதோ ருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1722ஆம் ஆண்டு திருத் தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் அவர்களால் புனித இசிதோர் ஸ்பெயின் நாட்டுத் திருச்சபை மறைவல்லுநர் என்று அறிவிக்கப்பட்டது.
செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! நீர் எங்களுக்கு கொடுத்து ள்ள அனைத்து கொடைகளுக்கும் நன்றி கூறுகின்றோம். அதே வேளையில் உம்மால் எமக்களிக்கப்பட்ட அறிவை பயன்படு த்தி உமது இறையாட்சியை இவ்வுலகில் பரப்பி, நாங்கள் என் றென்றும் உம்மோடு இணைந்து வாழ வரம் தாரும்.
Saturday, 2 April 2016
இன்றைய புனிதர் 2016-04-03 புனித ரிச்சர்ட் (Richard) சிசெஸ்டர் ஆயர் (Bishop of Chichester)

இன்றைய புனிதர் 2016-04-03
புனித ரிச்சர்ட் (Richard)
சிசெஸ்டர் ஆயர் (Bishop of Chichester)
பிறப்பு 1197 பாக்கின்டைன் (Backindine)
இறப்பு 03 ஏப்ரல் 1253 சாசெக்ஸ் (Sasex)
இவர் 1197 ஆம் ஆண்டு பாக்கின்டைனில் பிறந்தார். இவர் பிறந் தவுடன் பெற்றோர் இறந்துவிட்டதால், ஒரு செவிலித்தாய் (Nurse ) அவரை தனது வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுத்து வளர்த்தார். ரிச்சர்ட் மற்றவர்களால் அதிகம் நேசிக்கப்பட்டார். இவர் ஓர் மிகவும் அமைதியான , அழகான, அறிவான குழந்தையாக வள ர்ந்தார். இவரை இவரது வளர்ப்புத்தாய் பாரிசிலுள்ள ஆக்ஸ் போர்டு பள்ளியில் (Oxford school) படிக்க வைத்தார். இவர் ஓர் சிற ந்த போதகராகவும், ஆசிரியராகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். பின்னர் 1235 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு கல்லூரி யின் வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உயர்பதவி யிலிருந்த பேராயர் எட்மண்ட் கேண்டர்பரி அவர்கள் ரிச்சர்டை சந்தித்து மாவட்டத்தை சீர்திருத்தும் பொறுப்பையும், அந்நாட்டு அரசரால் திருச்சபைக்கு இழைக்கப்படும் தீங்கை எதிர்ப்பத ற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகா ரத்தை வழங்கினார்.
இந்நிலையில் திடீரென்று பேராயர் எட்மண்ட் இறந்துவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரிச்சர்டு, தானும் ஓர் குருவாக விரும்பி திருச்சபை சட்டத்தையும், இறையியலையும் படித்து, "கெண்ட்"(Gent) என்ற ஓர் சிறிய ஊரில் பங்கு குருவாக செயல்ப ட்டார். இறந்துபோன எட்மண்ட் கேண்டர்பரி ஆயருக்கு பதிலாக மீண்டும் புதிய ஆயரை தேர்ந்தெடுக்க ஏற்பாடுகள் நடந்ததை அரசர் மூன்றாம் ஹென்றி (Henry III) எதிர்த்தார். தன் விருப்பப்படி ஆயர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். இதனையறிந்த ரிச்சர்டு திருச்சபையை மையமாக வைத்து அரசர் நடத்தும் அநீதிகளை பார்த்து தானே ஆயர் வேட்பாளராக நின்றார். இதை ஏற்றுக்கொள்ளாத அரசர் ஹென்றி, கிறித்தவ மக்களுக்கு எந்தவித நலன்களையும் செய்ய விடாமல் தடுத்தார். அப்பாவி மக்களுக்கு உதவி செய்த ரிச்சர்டை தங்குவதற்கு இடமில்லாமல், உணவு கொடுக்காமல் பிச்சைக்காரனைப்போல அலையவிட்டான். இருப்பினும் கிறித்தவத்தை அம்மண்ணில் நிலைநாட்ட பல ஆலயங்களைக் கட்டியெழுப்பினார். ஆனால் அரசர் மூன்றாம் ஹென்றி ஆலயங்களையும், பல புனித இடங்களையும், கிறித்தவர்களையும் போரிட்டு அழித்தான். புனித தலங்களை மீட்பதற்காக சிலுவைப்போர் தொடர திருத்தந்தையால் ரிச்சர்ட் நியமிக்கப்பட்டார்.
1253-ல் சாசெக்ஸ் மற்றும் கெண்ட் (Gent) வழியாக பயணம் செய்யும்போது கடுமையான நோயால் தாக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் நாள் இறந்தார். அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் படத்தை தழுவிக்கொண்டு, "ஆண்டவராகிய இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்" என்று உச்சரித்துக்கொண்டே உயிர் நீத்தார். அவரது உடல் டோவர் (Dowar) என்ற இடத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் சிசெஸ்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 1262 மற்றும் 1276 ஆம் ஆண்டு ஜுன் 16-ல் அரசர் எட்வர்ட் அவர்களின் முன்னிலையில் புனிதருக்கென்று ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றாக அமைந்தது. இதனையறிந்த அரசர் மூன்றாம் ஹென்றி தனது தவறுகளை உணர்ந்து மனமாறினார்.
புனித ரிச்சர்ட் இறக்கும்வரை சிறந்த மேய்ப்புப்பணியாளராகவும், போதனையாளராகவும் திகழ்ந்தார். தனது போதனையால் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். ஏழை மக்களுக்கும், வாழ்வில் சோர்ந்தவர்களுக்கும் தனது தனி அன்பையும், பாசத்தையும் பொழிந்து வாழ்விற்கு வழிகாட்டினார்.
செபம்:
அன்பான இறைவா! திருச்சபைக்கெதிராக தீங்கு விளைப்பவர்களை நீர் நிறைவாக ஆசீர்வதியும், புனித ரிச்சர்டைப் போல நாங்களும் உண்மை, நேர்மை, நீதியோடு வாழ்ந்து எங்களை சுற்றியுள்ள ஏழை எளியவரை நேசித்து அன்பு செய்து வாழ உமது வரம் தாரும்
Friday, 1 April 2016
இன்றைய புனிதர் 2016-04-02 புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola) வனத்துறவி
இன்றைய புனிதர்
2016-04-02
புனித பவோலா பிரான்சிஸ்(Francis of Paola)
வனத்துறவி
பிறப்பு 1416 கலாப்பிரியா (Calabria
இறப்பு 02 ஏப்ரல் 1507 தூர்ஸ் (Tours)
புனிதர் பட்டம் : 1529
திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)
இத்தாலியில் கலாப்பிரியா என்னும் பகுதியில் பவோலா என் னுமிடத்தில் 1416 ஆம் ஆண்டில் பிறந்தார். மிகவும் பக்தியுள்ள இவரது பெற்றோர், ராபர்ட் என்ற பெயரை இச்சிறுவனுக்குச் சூட்டினர். புனித அசிசியாரின் மன்றாட்டினால் பிறந்த இவரை அவருடைய மடத்தில் ஓர் ஆண்டு ஒப்படைத்திருந்தபோது, இச்சிறுவனுக்கு அசிசியார் துறவு உடைஉடுத்தியிருந்தார்கள். அப்போது இச்சிறுவனுக்கு வயது 13. செபத்தில் ஆழ்ந்த பற்றும், மிகவும் தாழ்ச்சியும், ஒறுத்தலும் கொண்டு விளங்கினார். உரோமை நகர், அசிசி திருத்தலங்களுக்குச் சென்று திரும்பிய பின் தன்பெயரை "பிரான்சிஸ்" என்று மாற்றிக்கொண்டார். அதன்பிறகு 6 ஆண்டுகள் வரை தனிமையை நாடி குகைக்குச் சென்று அங்கு தவவாழ்வில் தன் நாட்களைச் செலவழித்தார். இவரின் தவவாழ்வினால் தூண்டப்பட்டு மேலும் இரு தோழ ர்கள் 1435-ல் இவரை வந்தடைந்தனர். 1454-ல் பலரும் இவரைப் பின்பற்றியதால் ஒரு துறவு மடமும், ஆலயமும் கட்டப்பட்டன. இப்பணியை சிறப்பான முறையில் நிறைவேற்ற, சாதாரண மக் களும், அதிகம் பணம் கொண்டவர்களும், தாராளமான முறை யில் உதவினர். பிரான்சிஸ், மக்களின் இதயச் சிந்தனைகளை அறியும் வரத்தையும், இறைவாக்குரைக்கும் வரத்தையும் பெற் றிருந்தார். பாறை போன்ற இதயம் படைத்த பல ஆன்மாக்களை மனந்திருப்பி இறைவனை நாடச் செய்தார். பிளேக் நோய் அதி கம் இருந்த அக்காலத்தில், இந்நோய்க்கு முற்றுப்புள்ளி வைப் பதற்கு இடைவிடாமல் செபித்ததில் இப்புனிதரின் புனிதம் காணப்பட்டது.
இப்புனிதரால் தொடங்கப்பட்ட புதிய துறவற சபைக்கு " இறை வனின் இல்லத்தில் மிகச்சிறியோர்" என்று பொருள் தரும் "மினிம்ஸ்" (Minims) என்ற பெயரைச் சூட்டினார். இது “மிகத் தாழ்நிலையினரின் சபை” என்று பிற்காலத்தில் பெயர் பெற் றது. இச்சபையைத் திருத்தந்தை பீடம் 1506 ஆம் ஆண்டில் உறுதி ப்படுத்தியது. பிறரன்பு, தாழ்ச்சி, கடுமையான ஏழ்மை இவை களே இச்சபைக்கு ஆணிவேராக அமைந்தது. இப்புனிதர் பெண் களுக்கென்றும் 3 ஆம் சபையை நிறுவினார்.
இவர் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன் தனிமையில் இருந்து செபித்தார். இறுதியில் தனது 91 ஆம் வயதில் 1507 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் நாள் புனித வெள்ளிக்கிழமையன்று பிரான்சிலுள்ள தூர்ஸ் (Tours)நகரில் இறைவனடி சேர்ந்தார். இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு திருத்தந்தை 10 ஆம் சிங்கராயர் (Leo X)அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்க ப்பட்டது. இவரது இறப்பிற்குப்பின், மிக விரைவில் இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளில் 400 துறவற மடங் கள் பலுகிப் பெருகின. 1562-ல் இவரது உடல் அழியாதிருந்த நிலையில் காட்டுமிராண்டிகளான யூகனாட்ஸ் (Youganats) என்றழைக்கப்பட்டவர்கள், இவரது கல்லறையைத் தோண்டி புனிதரின் உடலை வெளிக்கொணர்ந்து அதைச் சுட்டெரித்தனர்.
செபம்:
எங்கள் தாயும், தந்தையுமான மூவொரு இறைவா! புனித பவோலா பிரான்சிஸைப் போல நாங்களும் செப, தவ வாழ்வினால் தூண்டப்பட்டு, அவரின் உன்னதமான முன்மாதிரியைப் பின்பற்றி, பல ஆன்மாக்களை மனந்திருப்பி, உமக்கு சான்று பகர்ந்து வாழ வரம் தாரும்.
Subscribe to:
Posts (Atom)