Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 23 April 2016

இன்றைய புனிதர் 2016-04-24 புனித சிக்மரிங்கன் பிதேலிஸ் (Fidelis of Sigmaringen) குரு, மறைசாட்சி

                                   
                                 இன்றைய புனிதர் 2016-04-24புனித சிக்மரிங்கன் பிதேலிஸ் (Fidelis of Sigmaringen)குரு, மறைசாட்சி

பிறப்பு1578சிக்மரிங்கன், ஜெர்மனி

இறப்பு 24 ஏப்ரல் 1622சீவிஸ்(Seewis), சுவிட்சர்லாந்து

இவர் ஜெர்மனி நாட்டில் சிக்மிரிங்கன் என்ற ஊரில் பிறந்து, மிகத்திறமையுடன் கல்விக்கலைகளைக் கற்று வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார். 1611 ஆம் ஆண்டு பிரான்ஸில் தனது மறைவல்லுநர் படிப்பை முடித்தார்.

வழக்கறிஞராக பணியாற்றும்போது, ஏழைகளின் கொடுமைகளை நீக்க, பணம் எதுவும் வாங்காமல் நீதிமன்றங்களில் வழக்காடுவார். இதனால் இவருக்கு "ஏழைகளின் வழக்கறிஞர்" என்று பெயர். இவர் இறைவனின் இறை உணர்வால் தூண்டப்பட்டு நாள்தோறும் திருப்பலியில் பங்கேற்றார். அடிக்கடி ஒப்புரவு அருட்சாதனம் பெற்று, திருவிருந்தில் பங்குபெற்றார். இதனால் இறைவனின் ஆசீரையும், அருளையும் பெற்று, ஏழைகளிடத்தில் இரக்கம் காட்டி, அவர்களுக்கு பல உதவிகளை செய்தார். அதன்பிறகு ஜெர்மனி நாட்டிலுள்ள பிரைபூர்க்(Freiburg) என்ற இடத்திலுருந்த கப்பூச்சின் சபையில் சேர்ந்து, துறவற வார்த்தைப்பாடுகளைப்பெற்று, பிதேலிஸ் என்று பெயர் பெற்று 1613 ஆம் ஆண்டு துறவியானார். இவர் குருவானபிறகு தனது மறையுரையிலும், ஒப்புரவு என்னும் திருவருட்சாதனத்தை கொடுப்பதன் வழியாகவும், பல மக்களை மனந்திருப்பி இறைவனை அண்டி வரச் செய்தார்.

அப்போது மார்ட்டின் லூதர் சபையினருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் நடந்த முப்பது ஆண்டு போரை, இறைவனின் சிறப்பான அருளை பெற்று பிதேலிஸ் தீர்த்து வைத்தார். இப்போர் நிறைவடைய வேண்டுமென்பதற்காக கண்ணீர் விட்டு ஜெபித்து, கொடுமையாக தன்னை அடித்துக் கொள்வார். இவர் கப்பூச்சின் மடத்தின் தலைவராயிருந்தபோது கூட மிகவும் தாழ்ந்த வேலையைத் தேடி மகிழ்வுடன் செய்தார்.

இதனால் இவர் பொறாமை கொண்ட சிலர், பிதேலிஸை வதைத்து கொலை செய்ய முயன்றனர். அப்போது ஒருநாள் இவர் பயணம் செய்யும்போது இவரை சுட்டான். ஆனால் கடவுளின் அருளால் பிதேலிஸ் தப்பினார். மற்றொரு நாள் இவர் வழியில் நடந்து செல்லும்போது, 20 கொடியவர்களையும், சில குருக்களும் சேர்ந்து இவரை மிரட்டினர். ஆனால் இதற்கெல்லாம் பிதேலிஸ் அஞ்சாமல், மேலும் இறைவனிடம் அவர்களுக்கு செபித்தார். இதனால் ஆத்திரமடைந்த அக்கொடியவர்கள் பிதேலிஸை 1622 ஆம் ஆண்டு அடித்துக் கொன்றார்கள். இவர் இறந்த 5 மாதங்களில் அக்கொடியவர்கள் அனைவருமே மனந்திருந்தி கடவுளை நம்பினார்கள்.

கப்பூச்சின் சபையில் முதல் மறைசாட்சியாக இறந்த முதல் குரு புனித பிதேலிஸ்தான். அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள ஸ்டுட்கார்ட்டில் (Stuttgart) இப்புனிதருக்கென்று பேராலயம் கட்டப்பட்டது. இப்பேராலயத்திற்கு அன்றாடம் வந்து போகும் மக்களின் மனங்களில் இன்றுவரை வாழ்ந்துவருகிறார். இவ்வுலக இன்பங்களை மறந்து, கிறிஸ்துவுக்காக மட்டுமே எப்போதும் வாழவேண்டும் என்பதை இவர் தன் வாழ்வின் வழியாக மற்றவர்களுக்கு விட்டுச்சென்றார்.


செபம்:
உள்ளத்தை ஊடுருவிப் பாயும் தந்தையே! புனித பிதேலிசைப் போல, இவ்வுலக இன்பத்தை நாடாமல், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து, இவர்களில் உம்மை காண உதவி செய்தருளும்.

No comments:

Post a Comment