Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Sunday, 3 April 2016

இன்றைய புனிதர் 2016-04-04 புனித இசிதோர்(Isidor) ஸ்பெயின் நாட்டு மறைவல்லுநர்


                       
                   இன்றைய புனிதர் 2016-04-04
                          புனித இசிதோர்(Isidor)
            ஸ்பெயின் நாட்டு மறைவல்லுநர்


பிறப்பு 560 ஸ்பெயின்

இறப்பு 04 ஏப்ரல் 636

புனிதர் பட்டம் : 1598
திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட்(Clement VII)
திருத்தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட்(Benedict XIII)ஆல் 1722 ஆண்டு மறைவல்லுநர் பட்டம் வழங்கப்பட்டது

இவர் ஸ்பெயினிலுள்ள செவில் (Sevil) நகரில் ஏறத்தாழ கி.பி. 560 ல் பிறந்தார். இவர் ஓர் உயர்குலத்தைச் சேர்ந்தவர். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதர, சகோதரிகள். இவருடன் பிறந் தவர்கள் மூவருமே புனிதர் பட்டம் பெற்றவர்கள் (லியாண்டர், புல்ஜென்சியஸ், புளோரண்டீனா). பெற்றோர் இவர்களை பக் தியிலும், ஆன்மீகத்திலும் சிறப்பாக வளர்த்தார்கள். பெற்றோ ரின் இறப்பிற்குப் பின் சகோதரர் லியாண்டரால் இசிதோர்க்கு கல்வி பயிற்சி அளிக்கப்பட்டது.

இவர் சிறுவயதில் படிக்கும்போது, படிப்பில் ஆர்வம் இல்லாத தாலும் இவரின் ஆசிரியர் மிகவும் கடுமையானவராக இருந்த தாலும் பள்ளியைவிட்டு ஓடிப்போனார். பின்னர் என்ன செய்வ தென்று அறியாமல் தனிமையில் ஓர் பாறையின் மீது அமர்ந்தி ருந்தார். அப்போது மழைத்துளிகள் விழுந்து விழுந்து துளை கள் ஏற்பட்டிருப்பதை உற்று பார்த்த அவர், விடாமுயற்சியை ப்பற்றி தெளிவாக புரிந்துகொண்டார். இதனால் மீண்டும் தனது ஆசிரியரை அணுகி தவற்றிற்கு மன்னிப்பு வேண்டி மீண்டும் பள்ளியில் சேர்ந்து புலமை பெற்றார்.

இசிதோர் தன் இளம் வயதிலிருந்தே சிறந்த அறிவாளியாக திகழ்ந்தார். இவர் பல நூல்களை எழுதினார். இந்த நூல்களில் பல, பல நூற்றாண்டுகளாக பல்வேறு கல்லூரிகளில் பயன்படு த்தப்பட்டு வந்தன. லத்தீன் மறைவல்லுநர்களில் இவரும் ஒரு வராக இருந்தார்.

இவர் பல புத்தகங்களை வாசிப்பதிலும், செபிப்பதிலும், தன் நேரங்களை செலவழித்து, தான் படித்தவைகளை வாழ்வாக வாழ்ந்தார். இதனால் இறைவனோடும், மக்களோடும் அதிக தொடர்பு கொண்டிருந்தார். மறைநூல் வாசிக்கும்போது, நாம் இதுவரை பெற்றுக்கொள்ளாத வரங்களையும், அறிவையும், உறவையும் பெறுகிறோம் என்பதை மற்றவர்களுக்கு போதி த்தார். 599 ஆம் ஆண்டு செவில் நகரின் ஆயராக இருந்த தன் உடன்பிறந்த அண்ணன் இறந்தபிறகு, தாமே ஆயர் பொறுப்பை ஏற்று 37 ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றினார். ஸ்பெயினில் ஆயர்களின் பேரவையை பலமுறை கூட்டி தலைமைத் தாங்கி நடத்தினார். இப்பேரவையால் பல சிறந்த காரியங்கள் ஒழுங்கு ப்படுத்தப்பட்டது. 200 ஆண்டுகள் ஆரியபதிதத்தில் (Arianism) ஊறிக்கிடந்த ஸ்பெயினை ஆட்டிப்படைத்த விசிகாத் என்ற மக்களை முற்றிலும் மனம்மாற்றினார். இவர் 636 ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் நாள் இறந்தார். இவர் சிறந்த மறைவல்லுநராக, திருச்சபையின் ஒளி விளக்காக, கடவுள் திட்டத்தை அன்பு செய்து நிறைவேற்றுபவராக தன் வாழ்நாளின் இறுதிவரை இருந்தார். செபத்தின் வழியாக, நாம் கற்காததையெல்லாம் கற்றுக்கொள்கிறோம் என்பதை இவ்வுலக மக்களுக்கு வலியுறுத்திச் சென்றார்.
 1598-ல் திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் அவர்களால் இசிதோ ருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. 1722ஆம் ஆண்டு திருத் தந்தை பதிமூன்றாம் பெனடிக்ட் அவர்களால் புனித இசிதோர் ஸ்பெயின் நாட்டுத் திருச்சபை மறைவல்லுநர் என்று அறிவிக்கப்பட்டது.


செபம்:
ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! நீர் எங்களுக்கு கொடுத்து ள்ள அனைத்து கொடைகளுக்கும் நன்றி கூறுகின்றோம். அதே வேளையில் உம்மால் எமக்களிக்கப்பட்ட அறிவை பயன்படு த்தி உமது இறையாட்சியை இவ்வுலகில் பரப்பி, நாங்கள் என் றென்றும் உம்மோடு இணைந்து வாழ வரம் தாரும்.

No comments:

Post a Comment