இன்றைய புனிதர் 2016-04-08
புனித.மரிய ரோசா ஜூலியா பிலியர்ட் (Maria rosa Julia biliart)
சபை நிறுவனர்
பிறப்பு 1751 பிரான்ஸ்
இறப்பு 8 ஏப்ரல் 1816 நம்மூர்(Namur), பெல்ஜியம்
புனிதர் பட்டம்: 1969 ஆறாம் பவுல்(Pope Paul VI)
1751 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் பிறந்தார். இவர் பிறந்ததிலிருந்தே மறைக்கல்வியை நன்கு கற்று தேர்ந்து, கனிவான இதயத்தையும், திறந்த மனதையும் கொண்டு மற்ற குழந்தைகளிடத்தில் மிகவும் அன்பானவராக இருந்தார். இவர் குழந்தையாக இருக்கும்போது, இவர் ஊரிலிருந்த நடக்கமுடியாமல் கஷ்டப்பட்ட குருவானவர்க்கு உதவி செய்து வந்தார்.
1774 ஆம் ஆண்டு இவரின் தந்தை முடக்கவாத நோயால் தாக்கப்பட்டதால், தன் தந்தையை கவனிக்கும் பொறுப்பில் ஈடுபட்டார். இச்சமயத்தில் பிரான்ஸ் நாட்டு அரசால் கைவிடப்பட்ட, நோய்வாய்பட்ட குருக்களையும், மற்றவர்களையும் யாரும் முறையாக கவனிக்காததால் தானாகவே முன்வந்து, தன் தந்தையோடு சேர்த்து இவர்களையும் கவனித்துவந்தார். இதனால் பிரான்ஸ் அரசால் குற்றம்சாட்டப்பட்டு, தண்டிக்கப்பட்டு உயிருடன் எரித்து கொல்லப்பட தீட்டப்பட்ட திட்டத்தை அறிந்து, தன் நண்பர்கள் சிலரின் உதவியுடன் சில ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டில் மறைந்த வாழ்வு வாழ்ந்தார். அப்போது தன் தந்தை இறந்துவிட்ட செய்தியை அறிந்து, அவரை அடக்கம் செய்த பின்னர், பிரான்ஸிலுள்ள அமீன்ஸ்(Amiens) என்ற ஊரில் 1804 ஆம் ஆண்டில் ஓர் சபையை தொடங்கி, பல பெண்குழந்தைகளை பராமரித்து, பாடம் கற்பித்து வந்தார். பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், இவர்களை கொண்டு பல இடங்களில் இச்சபையை விரிவடையச் செய்தார். இதனால் பல துன்பங்களும், இடையூறுகளும் இவரை விடாமல் தொடர்ந்தது. அப்போதுதான் பெல்ஜியத்திற்கு சென்று, நம்மூர் என்ற இடத்தில் மிஷினரியாக பணிபுரிந்தார். பணியாற்றும்போது பல துன்பங்கள் தொடரவே நோய்வாய்பட்டார். இருப்பினும் பல தடைகளைத் தாண்டி, அநீதிகளை அகற்றி, துணிவோடும், இறைவனின் பராமரிப்போடும், பெல்ஜியம் நம்மூரில் மீண்டும் ஓர் சபையைத் தொடங்கினார். சபையை நிறுவிய சில மாதங்களில் கடுமையான நோயால் தாக்கப்பட்டு, 1816 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் நாள் இறந்தார். இவரது உடல் பெல்ஜியத்திலுள்ள நம்மூரில் அடக்கம் செய்யப்பட்டு, 1969 ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.
செபம்:
அன்பின் ஊற்றே எம் இறைவா! இச்சமுதாயத்தில் எத்தனையோ குழந்தைகள் கைவிடப்பட்டு வாழ்கின்றார். இத்தகைய குழந்தைகளுக்கு வழிகாட்டும் நல்ல மனதை எங்களுக்கு தர வேண்டுமென்று இறைவா உம்மை வேண்டுகின்றோம்.

No comments:
Post a Comment