Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 2 April 2016

இன்றைய புனிதர் 2016-04-03 புனித ரிச்சர்ட் (Richard) சிசெஸ்டர் ஆயர் (Bishop of Chichester)

                       
                      இன்றைய புனிதர் 2016-04-03

                          புனித ரிச்சர்ட் (Richard)
         சிசெஸ்டர் ஆயர் (Bishop of Chichester)

  

பிறப்பு 1197 பாக்கின்டைன் (Backindine)

இறப்பு 03 ஏப்ரல் 1253 சாசெக்ஸ் (Sasex)

இவர் 1197 ஆம் ஆண்டு பாக்கின்டைனில் பிறந்தார். இவர் பிறந் தவுடன் பெற்றோர் இறந்துவிட்டதால், ஒரு செவிலித்தாய் (Nurse ) அவரை தனது வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுத்து வளர்த்தார். ரிச்சர்ட் மற்றவர்களால் அதிகம் நேசிக்கப்பட்டார். இவர் ஓர் மிகவும் அமைதியான , அழகான, அறிவான குழந்தையாக வள ர்ந்தார். இவரை இவரது வளர்ப்புத்தாய் பாரிசிலுள்ள ஆக்ஸ் போர்டு பள்ளியில் (Oxford school) படிக்க வைத்தார். இவர் ஓர் சிற ந்த போதகராகவும், ஆசிரியராகவும், சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். பின்னர் 1235 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு கல்லூரி யின் வேந்தராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது உயர்பதவி யிலிருந்த பேராயர் எட்மண்ட் கேண்டர்பரி அவர்கள் ரிச்சர்டை சந்தித்து மாவட்டத்தை சீர்திருத்தும் பொறுப்பையும், அந்நாட்டு அரசரால் திருச்சபைக்கு இழைக்கப்படும் தீங்கை எதிர்ப்பத ற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகா ரத்தை வழங்கினார்.

இந்நிலையில் திடீரென்று பேராயர் எட்மண்ட் இறந்துவிட்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ரிச்சர்டு, தானும் ஓர் குருவாக விரும்பி திருச்சபை சட்டத்தையும், இறையியலையும் படித்து, "கெண்ட்"(Gent) என்ற ஓர் சிறிய ஊரில் பங்கு குருவாக செயல்ப ட்டார். இறந்துபோன எட்மண்ட் கேண்டர்பரி ஆயருக்கு பதிலாக மீண்டும் புதிய ஆயரை தேர்ந்தெடுக்க ஏற்பாடுகள் நடந்ததை அரசர் மூன்றாம் ஹென்றி (Henry III) எதிர்த்தார். தன் விருப்பப்படி ஆயர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்று கட்டளை பிறப்பித்தார். இதனையறிந்த ரிச்சர்டு திருச்சபையை மையமாக வைத்து அரசர் நடத்தும் அநீதிகளை பார்த்து தானே ஆயர் வேட்பாளராக நின்றார். இதை ஏற்றுக்கொள்ளாத அரசர் ஹென்றி, கிறித்தவ மக்களுக்கு எந்தவித நலன்களையும் செய்ய விடாமல் தடுத்தார். அப்பாவி மக்களுக்கு உதவி செய்த ரிச்சர்டை தங்குவதற்கு இடமில்லாமல், உணவு கொடுக்காமல் பிச்சைக்காரனைப்போல அலையவிட்டான். இருப்பினும் கிறித்தவத்தை அம்மண்ணில் நிலைநாட்ட பல ஆலயங்களைக் கட்டியெழுப்பினார். ஆனால் அரசர் மூன்றாம் ஹென்றி ஆலயங்களையும், பல புனித இடங்களையும், கிறித்தவர்களையும் போரிட்டு அழித்தான். புனித தலங்களை மீட்பதற்காக சிலுவைப்போர் தொடர திருத்தந்தையால் ரிச்சர்ட் நியமிக்கப்பட்டார்.

1253-ல் சாசெக்ஸ் மற்றும் கெண்ட் (Gent) வழியாக பயணம் செய்யும்போது கடுமையான நோயால் தாக்கப்பட்டு ஏப்ரல் 3 ஆம் நாள் இறந்தார். அவர் மரணப்படுக்கையில் இருக்கும்போது, சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் படத்தை தழுவிக்கொண்டு, "ஆண்டவராகிய இயேசுவே உம்மை நான் நேசிக்கிறேன்" என்று உச்சரித்துக்கொண்டே உயிர் நீத்தார். அவரது உடல் டோவர் (Dowar) என்ற இடத்தில் புதைக்கப்பட்டு, பின்னர் சிசெஸ்டருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. 1262 மற்றும் 1276 ஆம் ஆண்டு ஜுன் 16-ல் அரசர் எட்வர்ட் அவர்களின் முன்னிலையில் புனிதருக்கென்று ஓர் ஆலயம் எழுப்பப்பட்டது. இவ்வாலயம் மிகப்பெரிய யாத்திரை தலங்களில் ஒன்றாக அமைந்தது. இதனையறிந்த அரசர் மூன்றாம் ஹென்றி தனது தவறுகளை உணர்ந்து மனமாறினார்.

புனித ரிச்சர்ட் இறக்கும்வரை சிறந்த மேய்ப்புப்பணியாளராகவும், போதனையாளராகவும் திகழ்ந்தார். தனது போதனையால் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். ஏழை மக்களுக்கும், வாழ்வில் சோர்ந்தவர்களுக்கும் தனது தனி அன்பையும், பாசத்தையும் பொழிந்து வாழ்விற்கு வழிகாட்டினார்.


செபம்:
அன்பான இறைவா! திருச்சபைக்கெதிராக தீங்கு விளைப்பவர்களை நீர் நிறைவாக ஆசீர்வதியும், புனித ரிச்சர்டைப் போல நாங்களும் உண்மை, நேர்மை, நீதியோடு வாழ்ந்து எங்களை சுற்றியுள்ள ஏழை எளியவரை நேசித்து அன்பு செய்து வாழ உமது வரம் தாரும்

No comments:

Post a Comment