Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 7 April 2016

இன்றைய புனிதர் 2016-04-07 புனித. ஜான் பாப்டிஸ்ட் டெலாசால் (John Baptist De lasalle) மறைப்பணியாளர்

                 
                இன்றைய புனிதர் 2016-04-07
புனித. ஜான் பாப்டிஸ்ட் டெலாசால் (John Baptist De lasalle)
மறைப்பணியாளர்

பிறப்பு  1651ரெய்ம்ஸ்(Reims), பிரான்ஸ்

இறப்பு 07 ஏப்ரல் 1719ரூவான்(Rouen), பிரான்ஸ்

புனிதர் பட்டம்: 24 மே 1900 பதிமூன்றாம் லியோ
பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலராக 1950ஆம் ஆண்டு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.

பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலராக 1950ஆம் ஆண்டு திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டார்.

இவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள ரெய்ம்ஸ் நகரில் 1651 ஆம் ஆண் டில் பிறந்தார். இவர் தந்தை ஓர் நகர்மன்ற உறுப்பினர். இவர் சமூக பணியாளர். சமூகத்தில் துன்பப்படுகின்றவர்களுக்கு ஏராளமான உதவிகளைச் செய்து வந்தார். தன் மகனையும் சமூக செயல்களில் ஈடுபடுத்தினார். அப்போதிலிருந்தே ஏழைக் குழந்தைகள், இளைஞர்கள்போல் அக்கறை கொண்டு உதவி செய்து வந்தார். மிகவும் பக்தியான இவர் தம் 16 ஆம் வயதில் ரீம்ஸ் நகரின் பேராலயத்தில் மிக முக்கியப்பொறுப்புகளை ஏற்றுகொண்டு, 1678 ஆம் ஆண்டு, தம் 27 வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். பின்னர் 1679 ஆம் ஆண்டு இளைஞர் களுக்கென்று பள்ளியை நிறுவி, அப்பள்ளியின் ஆசிரியராக தாமே பொறுப்பேற்று நடத்தினார். பின்னர் 1684 ஆம் ஆண்டு தம்முடன் சேர்ந்து உழைத்த நண்பர்களை ஒன்று சேர்த்து ஓர் துறவற சபையை தோற்றுவிக்க எண்ணி, திட்டங்கள் தீட்டி, இத னால் பல துன்பங்களையும் அனுபவித்தார். இருப்பினும் தம் பணியில் இறைவனின் துணையோடு தம்மை முழுவது மாக அர்ப்பணித்தார். தாழ்ச்சியுடனும், ஏழைகளின் மீது கொண்ட பாசத்திலும் சிறந்து விளங்கிய இவர், தம் வாழ்நாள் முழுவதும் ஏழை மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு தம்மை முழு வதுமாக அர்ப்பணித்தார். அப்போது ஜான்சனிசம் (Johnsonism) என்ற நச்சுக் கலந்த கொள்கை பிரான்ஸ் நாட்டை அதிர வைத் தபோது, அண்டை நாடுகளுடன் ஓயாத போரும் ஏற்பட்டது. இவைகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாட்டில் கடுமையான பஞ்சத்தையும், பல்வேறு இன்னல்களையும் கொண்டுவந்தது. இதனால் கல்வியறிவு முழுவதும் இல்லாமல் போகவே, மீண் டும் ஏழை மாணவர்களுக்கென்று இரு பள்ளிகள் நிறுவி, நாள் தோறும் தவறாமல் ஆசிரியர்களுக்கு கற்று கொடுத்து, தங்கு வதற்கென்று இல்லமும், உணவையும் அளித்து, எல்லா வழி களிலும் ஊக்கமூட்டினார். காலத்திற்கேற்ப தொடக்க, மேல் நிலை பள்ளிகளை தொடங்கியதோடு ஆசிரியர் பயிற்சிப்பெ ரும் பள்ளிகளையும் தொடங்கி, பல யுத்திகளை கற்றுக்கொடுத் தார்.  குருக்களுக்கு இவரின் நிறுவனத்தில் பணிபுரிய இடமளிக் கவில்லை. இவர் கல்விப்பணியின் மூலம் "நேர்மையான கிறி ஸ்துவர்களை உருவாக்குதல்" என்பதை குறிக்கோளாக வைத் தார். இவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றிய டைந்து, ஓர் முடிவுக்கு வந்தபோது, இச்சபையை தொடர்ந்து வழிநடத்த, சபை சகோதரர் ஒருவரிடம் தம் முழுபணியையும் ஒப்படைத்தார். பின்னர் 1719 ஆம் ஆண்டு ஆஸ்துமா நோயால் தாக்கப்பட்டு, மூட்டுவலியால் பாதிக்கப்பட்டு பலவித உடல் வேதனைகளை அனுபவித்து ஏப்ரல் மாதம் 7 ஆம் நாள் பெரிய வெள்ளிக்கிழமையன்று பிரான்ஸில் ரூவான் என்ற இடத்தில் இறைவனால் வான்வீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இறக் கும் வரை மிக கடுமையான தவமுயற்சிகளை கைவிடவி ல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு 1900 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் நாள் திருத்தந்தை பதிமூன்றாம் லியோ அவர்களால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டு, 1950 ஆம் ஆண்டு புனிதர் ஜான் பாப்டிஸ்ட் டெலசால் ஓர் பள்ளி ஆசிரியர்களின் பாதுகாவலர் என்று அறிவிக்கப்பட்டார்


செபம்:
அன்பான ஆண்டவரே! கல்வி பணியின் மூலம் நேர்மையான, பக்தியுள்ள கிறித்தவர்களை உருவாக்கிய புனித ஜான் பாப்டிஸ்டைப் போல இவ்வுலகிலுள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் தங்களை முழுமையாக அர்ப்பணித்து, உமது இறையரசை இவ்வுலகில் கொண்டுவர நீர் உதவி செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment