Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 29 April 2016

இன்றைய புனிதர் 2016-04-30 புனித ஐந்தாம் பத்திநாதர் திருத்தந்தை


                

            இன்றைய புனிதர்   2016-04-30

                 புனித ஐந்தாம் பத்திநாதர்திருத்தந்தை

பிறப்பு  7 ஜனவரி 1504  இத்தாலி

இறப்பு 1 மே 1572ரோம்

முத்திபேறுபட்டம்: 1 மே 1672 திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட்
புனிதர் பட்டம்: 22 மே 1712 திருத்தந்தை ஆறாம் பவுல்

புனிதர் பட்டம்: 22 மே 1712 திருத்தந்தை ஆறாம் பவுல்

இவர் தொமினிக்கன் குருத்துவ சபையில் சேர்ந்து, குரு ப்பட்டம் பெற்றபின் கல்லூரிகளில் மறைக்கல்வி கற்று க்கொடுத்தார். பின்னர் இவர் ஆயராகவும், கர்தினாலா கவும், 1566 ஆம் ஆண்டில் திருத்தந்தையாகவும் உயர்த்த ப்பட்டார். 16 ஆம் நூற்றாண்டில் திருச்சபையில் திரிதெ ந்தின் பொதுசங்கம் மிகவும் புகழ் பெற்றதாக இருந் தது. இச்சங்கத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை செயல்படுத்துவதில் இவர் பெரும்பங்கு வகித்தார்.

இதோடு துருக்கி நாட்டு மக்களால் திருச்சபைக்கு ஏரா ளமான பாதிப்புகள் ஏற்பட்டது. இவர்களின் சீற்றத்தை யும், வெறியையும் திருத்தந்தை சந்திக்க வேண்டிய தாக இருந்தது. அப்போது குருமடங்களுக்குள் இவர் பெரிய பெரிய சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அப்போது புதிதாக திருத்தம் பெற்ற திருப்பலி நூல்க ளையும் வெளியிட்டார். இத்தோடு புதிய திரிதெந்தின் மறைக்கல்வி நூல் ஒன்றையும் வெளியிட்டார். இந்நூல்b களின் மூலம் திருச்சபையின் வழியாக தோன்றிய குறைபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இவர் நோயாளிகளுக்கென்று பல மருத்துவமனை களை கட்டினார். உணவின்றி தவித்து, வறுமையில் வாடுவோரின் கண்ணீரைத் துடைத்தார். இதனால் இங்கிலாந்து அரசி முதல் எலிசபெத்திடமிருந்தும், இத்தாலி நாட்டு அரசன் மாக்சிமில்லியானிடமிருந்தும், ஹாலந்து நாட்டிலும் துருக்கியர்களால் கடும் போர் மூண்டது. இந்த போரின் மூலம் வந்த கடுமையான எதிர்ப்புகளையும் தைரியத்துடன் சந்தித்தார். இதனால் ஒரு பெரிய கடற்படையை திரட்டி, லெப்பான்றோ என்ற வளைகுடாவில் துருக்கியர்களோடு போரிட்டு வெற்றி யும் பெற்றார். இறைவனோடு இடைவிடாமல் பல மணி நேரம் இணைந்து செபித்த திருத்தந்தை, திருச்சபை யில் பல சீர்த்திருத்தங்களை கொண்டுவந்து, அதில் வெற்றியும் பெற்றார், இவர் கடுமையான உண்ணா நோன்புகள் இருந்து செபித்தார். இவர் திருத்தந்தை யாய் இருந்தபோதிலும், தமது தொமினிக்கன் சபை ஒழுங்குகளை விடாமல் கடைபிடித்து வந்தார்.


செபம்:
விண்ணுக்கும், மண்ணுக்கும் ஆண்டவராகிய கடவுளே! நம்பிக்கையை பாதுகாக்கவும், இறைப்பணியை மேன்மைப்படுத்தவும் புனித ஐந்தாம் பயசை தேர்ந்தெடுத்தீர். உமது பராமரிப்பினால் அவர் வழியாக திருச்சபையை வளர செய்தீர். அவருடைய வேண்டுதலின் பயனாக நாங்கள், உமது உயிருள்ள நம்பிக்கை பெற்று, திருச்சபையை வளரச்செய்ய எமக்கு உம் வரம் தாரும்.

No comments:

Post a Comment