Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 23 April 2016

இன்றைய புனிதர் 2016-04-23 புனித ஜார்ஜ்

             
             இன்றைய புனிதர் 2016-04-23
                           புனித ஜார்ஜ்

பிறப்பு 280
லிடா(Lydda), சிரியா பாலஸ்தீனா (Syria Palastina)

இறப்பு 23 ஏப்ரல் 303
நிக்கோமேடீயா(Nicomedia), பெர்த்தீனியா (Birthynia)

இவர் பாலஸ்தீன நாட்டில், விட்டா என்ற ஊரில் கொனிஸ்டாட்டின் அரசன் காலத்திற்கு முன்பு மறை சாட்சியாக இறந்தார். இவர் எப்படி இறந்தார் என்பதை ப்பற்றி தெளிவாக அறியமுடியவில்லை. இருப்பினும் சில வரலாறுகள் இவ்வாறு கூறுகின்றது. புனித ஜார்ஜ் முதலில் ஒரு படைவீரராக பணியாற்றினார். பின்னர் கிறிஸ்துவ படையில் சேர்ந்து பணியாற்றியுள்ளார். அவர் முதலிலிருந்த படையில், தான் வகித்த பெரிய பதவியைக் கிறிஸ்துவுக்காக உதறி தள்ளிவிட்டு, தன் உடைமைகள் அனைத்தையும் ஏழைகளுக்கு கொடுத்து விட்டு வந்துள்ளார். பின்பு தமக்கென்று எதையும் வைத் துக்கொள்ளாமல், உலக கவலைகளுக்கு இடம் கொடுக் காமல், விசுவாசம் என்ற மார்பு கேடயத்தை அணிந்து கொண்டார். பிறகு கிறிஸ்துவுக்காக தன் உயிரை தியா கம் செய்யவும் துணிந்தார். கிறிஸ்துவின் துணிச்ச லான போர்வீரரான இவர், தூய ஆவியால் உந்தப்பட்டு, அன்பு என்னும் நெருப்பால் ஈர்க்கப்பட்டார். சிலுவை யின் வெற்றிக்கொடியை ஏந்தி இறுதிவரை விசுவாசத் திற்காக போராடினார். தீமையின் இருப்பிடமாகிய அலகையை வெற்றி கொண்டார். தன்னுடன் இருந்த தோழர்களையும் பாடுகளை துணிவுடன் ஏற்று போரிட ஊக்குவித்தார், அவர் உடல் எதிரிகளிடம் ஒப்படைத்த போது, அவரின் ஆன்மாவை மட்டும் இறைவன் பாதுகா த்தார் என்பதில் தான் இவர் கிறிஸ்துவின் மீது கொண் டிருந்த விசுவாசம் வெளிப்பட்டது.

இவரது உருவம் உலகின் பல்வேறு நாடுகளில் அஞ்சல் துறையினரால் பயன்படுத்தப்படுவதுபோல் மற்ற யாருடைய உருவமும் வெளிவருவதில்லை. இவ்வாறு அஞ்சல்தலை மூலமும் இவருக்கு வணக்கம் செலுத் தப்படுகின்றது. இந்த முத்திரைகளில் புனிதர் குதிரை மீது அமர்ந்து அலகையுடன் போரிடுவதை பார்க்க லாம். இதில் அவர் பொய்மைக்கு எதிராக பெற்ற வெற் றியை காணலாம். இவர் வாழும்போதே இறைவன் இவர்வழியாக ஏராளமான அற்புதங்களை செய்து ள்ளார்.


செபம்:
பாவங்களை போக்கும் எம் இறைவா! எச்சூழலிலும் பாவத்தில் விழாமல், அதற்கெதிராக போரிட்ட புனித ஜார்ஜைப்போல, நாங்களும் எங்களின் பாவ வாழ்விலி ருந்து விடுபட்டு, விசுவாசம் என்னும் கேடயத்தை அணி ந்து வாழ எமக்கு உதவி செய்தருளும்.

No comments:

Post a Comment