Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 1 April 2016

இன்றைய புனிதர் 2016-04-01 புனித.ஹியூகோ (Hugo) கிரனோபிள் ஆயர்

                       
                      இன்றைய புனிதர் 2016-04-01
      புனித.ஹியூகோ (Hugo)கிரனோபிள் ஆயர்

பிறப்பு 1053 வாலேன்சா (Valenza), பிரான்ஸ்

இறப்பு 01 ஏப்ரல் 1134 கிரனோபிள் (Grenoble)

                                           புனிதர் பட்டம் : 1134
          திருத்தந்தை 2 ஆம் இன்னொசென்ட்(Innocent II)

கி.பி. 1053 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள வாலேன்சா (Valenza) என்ற ஊரில் ஹியூகோ பிறந்தார். ஆழ்ந்த இறைப்பற்று க்கொண்ட இவர் பெற்றோர், தன் மகனை ஞானத்திலும், அறிவி லும், பக்தியிலும், வளர்த்தெடுத்தார்கள். சிறுவயதிலிருந்தே இறைவனை நாடி செபிப்பதில் இவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார். இவரது இறைப்பற்றும், ஆன்மீக தாகமும் இவருடன் படித்த மற்ற மாணவர்களுக்கும் ஊரில் உடன் வாழ்ந்த சிறுவர் களுக்கும் எடுத்துக்காட்டாய் இருந்தது. தன்னை துன்புறுத்திய வர்களை மன்னித்து அன்பு செய்வதிலும், மகிழ்ச்சிப்படுத்து வதிலும் சிறந்தவராக இருந்தார். தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு, ஆலய பணிகளில் ஈடுபட்டு புதிய பாடல்களை உருவா க்கி, திருப்பலியில் பக்தியோடு பாடி தனது வாழ்வை ஆலயத் திலேயே செலவழித்தார். அன்றாட கல்வாரி பலியில் பங்கெடு த்த ஹியூகோ தானும், ஓர் குருவாக வேண்டும் என்று ஆசைப்ப  ட்டு, இறைவனால் தூண்டப்பட்டு, தனது விருப்பத்தை அன் றைய நாளில் ஆயராக இருந்தவரிடம் தெரிவித்து, குருமடத் தில் சேர்ந்து குருவானார். குருவான நாளிலிருந்து இவரின் அற்புதமான மறையுரையால் பலரின் பாதைகளை மாற்றி இறைவன்பால் ஈர்த்தார். இதனையறிந்த மற்ற ஆயர்களும், குருக்களும் இவரை ஆயராக திருநிலைப்படுத்த தயார் செய்த னர். ஆனால் தான் ஓர் ஆயராக விருப்பமில்லை என்று தெரிவி த்தார். மீண்டும் பல ஆண்டுகள் சென்று தூய ஆவியானவரால் உந்தப்பட்டு, பலரின் விருப்பத்தை நிறைவேற்ற ஆயராக பொறு ப்பேற்க சம்மதித்தார்.

1082 ஆம் ஆண்டு இவர் ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரனோபிள் என்ற மறைமாநிலத்தில் 52 ஆண்டுகளாக பணியாற்றினார். ஆயர் பொறுப்பை ஏற்ற 2 ஆண்டுகளில் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்தார். இவற் றை சமாளிப்பதற்காக ஓர் ஆண்டுகாலமாக புனித பெனடிக்ட் நவதுறவகத்தில்(Novitiate) தங்கி இறைவேண்டுதலில் ஈடுப ட்டார். பின்னர் திருத்தந்தை ஏழாம் ஜார்ஜ் (George VII) அவர்க ளின் அனுமதி பெற்று, ஆயர் பொறுப்பிலிருந்து விலகி, கர்தாய்சர் (Kartaeuser) துறவறமடத்தில் தங்கி, பல மணிநேரம் இறைவனோடு ஒன்றிணைந்திருந்தார். கர்தாய்சர் சபையில், இவரும் ஒருவராக இருந்ததால் 1084-ல் புரூனோ (Bruno) என்ற பெயர் பெற்று அச்சபையின் உறுப்பினரானார். பின்னர் மீண்டும் இவர் பிரான்ஸிலுள்ள கிரனோபிள் மறைமாநிலத்திற்கு அனுப் பிவைக்கப்பட்டு, அங்கு ஓர் புதிய துறவற மடத்தை துவங்கி னார். அப்போதுதான் சபையிலுள்ள ஒவ்வொரு துறவிகளும் ஒரு சிறிய குகை போன்ற அறைகளில் தங்கி, மிகவும் ஏழ்மை யான, கடுமையான வாழ்வை வாழ்ந்து, அற்புத பாடல்களால் இறைவனை போற்றி புகழ்ந்தனர். இதனால் இவர் ஆயராக இருந்தபோது பலவிதங்களிலும் துன்பத்தை கொடுத்தவர்கள், மனந்திரும்பி, செபவாழ்வினால் ஈர்க்கப்பட்டு, அன்பினால் தூண்டப்பட்டு ஹியூகோவால் தொடங்கப்பட்ட துறவற மடத் தில் சேர்ந்து இறைவனின் சாட்சியானார்கள். பின்னர் கிரனோபிள் என்ற நகரம்தான் கர்தாய்சர் சபையின் மிகப்பெரி ய துறவற இல்லமாக விளங்கியது.

பிறகு 1132 ஆம் ஆண்டு ஆயர் ஹியூகோ அவர்கள் இறைவனின் வானக வீட்டை அடைந்தார். இவர் இறக்கும் நிமிடம்வரை கர்தாய்சர் சபைக்காகவும், தனது மறைமாநில கிரனோபிள் மக்களாகவும் கடுமையான ஒருத்தல்களைச் செய்து, இடைவிடாது செபித்தார். கிரனோபிள் மக்கள் விரும்பியதால் இவர் அங்குள்ள பேராலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். மிகுந்த வறட்சியாலும், பசியாலும் வாடிய மக்கள் இவரை அண்டி வந்து செபித்தபோது, பல விதமான அற்புதங்களையும், அதிசயங்களையும் கண்டனர். இவர் இறந்த இரண்டாண்டுகளுக்குப்பிறகு ஏப்ரல் மாதம் முதல் நாள் 1132 ஆம் ஆண்டு புனிதர் பட்டம் கொடுக்கலாம் என்று திருஅவையால் பேசப்பட்டது. கி.பி. 1134 ஆம் ஆண்டு திருத்தந்தை 2 ஆம் இன்னொசென்ட் (Pope Innocent II) அவர்களால் புனிதராக உயர்த்தப்பட்டார்.


செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! நாங்கள் மற்றவர்களால் துன்புறுத்தப்படும்போது, புனித ஹியூகோவைப் போல உம்மை இறுகப்பற்றிக்கொண்டு, மற்றவர்களை மன்னித்து, அன்பு செய்து, உம்மை மகிமைப்படுத்தி, உமக்காக வாழ வரம் தாரும்.

No comments:

Post a Comment