Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 29 April 2016

இன்றைய புனிதர் 2016-04-29 சியன்னா நகர் புனித கேத்தரின் (Catherine of Siena) மறைவல்லுநர்

                 
               இன்றைய புனிதர் 2016-04-29
               சியன்னா நகர் புனித கேத்தரின் (Catherine of Siena)
   

பிறப்பு 1347 சியன்னா(Siena), இத்தாலி

இறப்பு 29, ஏப்ரல் 1380

புனிதர் பட்டம்: 1461
திருத்தந்தை இரண்டாம் பயஸ்


கேத்தரின் மிகச்சிறுமியாக இருந்தபோது பக்தி முயற் சிகளில் பேரார்வம் கொண்டிருந்தார். இவர் பெற்றோர் க்கு 25 பிள்ளைகள். கேத்ரின் கடைசிப்பிள்ளை. அவரின் வீடு ஓர் அரண்மனை. கேத்தரின் அறிவிலும், ஞானத்தி லும் சிறந்து விளங்கினார். கேத்ரின் ஆடம்பரங்களை விரும்பாமல் மிகவும் எளிமையான வாழ்வு வாழ்ந்து வந்தார். திருமணம் செய்துகொள்ள விரும்பாமல், தன் னுடைய அழகை குறைத்துக்கொள்ள, தனது நீளமான முடியையும் வெட்டியுள்ளார். கேத்ரின் டொமினிக்கன் மூன்றாம் சபையில் சேர்ந்து துறவற உடையைப் பெற் றுக் கொண்டு துறவியானார்.

1366 ஆம் ஆண்டு தம் அறையில் கேத்ரின் தனிமையாக செபித்துக்கொண்டிருந்தார். அப்போது இறைமகன் இயேசு தம் தாயுடனும் இன்னும் பல வானத்தூதர்களு டனும் கேத்ரினுக்கு காட்சியளித்தார். அன்னை மரி கேத்ரின் கையை பிடித்துக்கொள்ள, ஆண்டவர் அவ ரின் விரலில் மோதிரத்தை அணிவித்தார். அப்போது ஆண்டவர் "துணிவு கொள். அலகையின் சோதனை களை வெல்ல உனக்கு வரம் அளிக்கின்றேன்" என்று கூறினார். இந்த மோதிரம் கேத்ரின் கண்களைத் தவிர மற்றவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை.

1375 ஆம் ஆண்டு பிப்ரவரி பீசா நகர் சென்றார். அங் கிருந்த ஆலயத்தில் திருப்பலியில் பங்கேற்று, திவ்விய நற்கருணையை உட்கொண்ட பின், இறை இயேசு வோடு இணைந்து செபித்து, பாடுபட்ட சுரூபத்தையே உற்று பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அச்சுரூப த்திலிருந்து ஐந்து இரத்த நிறக்கதிர்கள் புறப்பட்டு வந்து கேத்ரினின் கைகள், கால்கள் மற்றும் இதயத்தை துளைத்தது. இதன் வலியையும், வேதனையும் தாங்க முடியாமல் கேத்ரின் கீழே விழுந்தார். வாழ்நாள் முழு வதும் இவை ஆறாத புண்ணாக அளவிடமுடியாத வேத னையை அளித்தது. இந்த 5 காயங்களையும் மற்றவர் களின் கண்களுக்கு கேத்ரின் இறந்த பிறகே தெரிந்தது.

பிளாரன்ஸ் நகர் மற்றும் திருத்தந்தை பீடத்திற்கும் இடையே இருந்த பிரச்சினையை தனது பேச்சுவார்த் தையால் சமாதானம் செய்துவைத்தார். திருத்தந்தை க்கு கேத்ரீன் உதவியும், ஆறுதலும் தேவைப்பட்டது. இத னால் இவரை ரோம் வந்து தங்கும்படியாக அழைத்தார். ரோம் சென்ற கேத்ரின் உடல் நலம் பாதிக்கப்பட்டார். தன் உடல் வேதனைகளை திருச்சபையின் நலன்களுக்  காக தாங்கிக் கொண்டார். பல தியாகங்கள் செய்தார். இருப்பினும் அவர் அடைந்த துன்பங்கள் பெருகி, ஏப்ரல் 21 ஆம் நாள் தன் உடலில் வலிப்பு நோய் ஏற்பட்டு, 8 நாட் கள் தாங்கள் முடியாத வேதனைப்பட்டு, 1380 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் ரோமில் இறந்தார். இவர் இரண்டாம் பெண் மறைவல்லுநர்.


செபம்:
புனிதர்களுக்கு மேன்மையளிக்கும் அன்பின் தந்தை யே! புனித கத்தரீனம்மாள் உமது ஐந்து காயங்களைப் பெற்று, மறு கிறிஸ்துவாக திகழ்ந்தார். அவரது முன் மாதிரியைப் பின்பற்றி, நாங்களும் இப்பரிசை பெற்றுக்கொள்ள செய்தருளும்.

No comments:

Post a Comment