Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 27 April 2016

இன்றைய புனிதர் 2016-04-27 பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச. குரு, மறைவல்லுநர்

                                    
                                   இன்றைய புனிதர் 2016-04-27 

                           பீட்டர் கனிசியுஸ்(Peter Kanisius), சே.ச.

                                        குரு, மறைவல்லுநர்

பிறப்பு 8 மே 1521நிம்வேகன்(Nimwegen), ஹாலந்து

இறப்பு  21 டிசம்பர் 1597  சுவிட்சர்லாந்து

புனிதர் பட்டம்: 21 மே 1925
திருத்தந்தை பதினோறாம் பயஸ்

இவர் ஜெர்மனியிலுள்ள கொலோன் நகரில் பள்ளி சென்று தன் படிப்பை முடித்தார். அதன்பிறகு இயேசு சபையில் சேர்ந்து குருவாக பயிற்சி பெற்று 1546 ஆம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். பிறகு இறையியல் மற்றும் மெய்யியல் படித்து பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனி நாட்டிலும், சுவிட்சர்லாந்திலும் பல்வேறு இடங்களில் ஆன்மீக குருவாக பணியாற்றி, சிறப்பான மறையுரைகளை வழங்கினார். இவரின் மறையுரை மக்களின் விசுவாசத்தை காக்கவும், உறுதிப்படுத்தவும் உதவியாக இருந்தது. இப்பணியில் இருந்தபோது பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய "மறைக்கல்வி" என்ற நூல் மிகவும் புகழ் பெற்றது. புனித போனிப்பாஸ் ஜெர்மனியின் முதல் அப்போஸ்தலர் என்றால், புனித கனிசியுஸ் இரண்டாம் அப்போஸ்தலர் ஆவார். இவர் எழுதிய "ஆன்மீகப் பயிற்சிகள்" என்னும் நூல் இயேசு சபையில் பயிற்சியில் இருந்தவர்களுக்கு, தியானம் செய்ய பெரிதும் உதவியது. அப்போதுதான் இவர் இயேசு சபையில் "ஒரு மாத தியான முறையை" அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு ஜெர்மனியிலுள்ள, இங்கோல்ஸ்டாட் என்ற இடத்திலுருந்த பல்கலைக்கழகத்தில் இறையியல், மெய்யியல் கற்றுக்கொடுக்கும் பேராசிரியராக பணி யாற்றினார். அப்போது நாட்டை ஆண்டு வந்த அரசி, இவரை ஆஸ்திரிய நாட்டிற்கு பேராயராக உயர்த்த முயன்றார். இதற்கு கனிசியுசும், இவரின் சபைத்தலை வர் இனிகோவும் இணங்கவில்லை. இதனால் அரசி கோபமுற்று வியன்னாவில் குருமட பயிற்சியில் இருந்த மாணவர்களை, குருவாகக்கூடாது என்று கட்டளைப் பிறப்பித்தார். இதன் விளைவாக 20 ஆண்டுகள் எவரா லும் குருவாக முடியவில்லை. அப்போது இச்சிக்கலை தவிர்க்கவே குருமட மாணவர்களை பல நூல்களை எழு த வேண்டினார். அவர்களும் பல நல்ல ஞான நூல்களை எழுதினார்கள். நூல் எழுதும் ஒவ்வொருவரும் 10பேராசி ரியர்களுக்கு சமமானவர்கள் என்று கூறி அம்மாணவர் களை இறைவழியில் கொண்டு சென்றார். பிறகு சுவிட் சர்லாந்தில் புகழ் வாய்ந்த ப்ரைபூர்க் பல்கலைக்கழக த்திற்கு அடித்தளமிட்டார்.

அப்போது இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் ஒளி யில் பிரிந்துபோன கிறிஸ்தவர்களிடம் உரையாடல் நடத்தவும், கிறிஸ்துவ ஒற்றுமையைக் காக்கவும், "எங் கும் ஒரே மந்தையும், ஒரே மேய்ப்பனும்" என்ற நிலை நடைமுறைக்கு வரும் நாளுக்காகவும் திருச் சபை மிகு தியாகஸ் செபிக்கும்படி, திருத்தந்தை அழைப்பு விடுத் துக்கொண்டே இருந்தார். இதனால் புனித கனிசியுஸ் இவ்வறிய வாய்ப்பை பயன்படுத்தி, தான் தொடங்கிய புதிய கல்லூரியில் புரொட்டாஸ்டாண்டு கிறிஸ்துவர் களுக்கும் இடமளித்து அனைவரையும் ஒன்று சேர்த் தார். அப்போது 1557 -ல் வேர்ம்ஸ் என்ற நகரில் நடை பெற்ற புரொட்டாஸ்ட்ண்ட், கத்தோலிக்க கலந்து ரையாடலுக்கு அழைப்புப்பெற்றார். இவ்வுரையாடலில் கனிசியுஸ் திருச்சபைக்காகவும், குருமடமாணவ ர்களுக்காகவும் பரிந்து பேசினார். ஆனால் இதனால் பயனேதும் இல்லாமல் போனது. தொடர்ந்து தனது மறையுரையாலும், கல்வி கற்றுகொடுக்கும் பணியா லும் கிறிஸ்துவை இவ்வுலகிற்கு எடுத்துரைத்தார். இவர் தனது இறுதி நாட்களை தான் தொடங்கிய கல்லூரியில் இருந்த ஆலயத்திலேயே கழித்து உயிர்துறந்தார்.

செபம்:
எல்லாம் வல்ல இறைவா! புனித கனிசியுசை, மறையுரைகளால் உமது நற்செய்தியை போதிக்க தேர்ந்தெடுத்து, உயர்த்தினீர். அவருடைய போதனையால் நாங்களும் ஆன்ம வளர்ச்சி பெற்று, கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நம்பிக்கையுடன் நடக்குமாறு செய்தருளும்.

No comments:

Post a Comment