Enter your username and password to enter your Blogger Dasboard
Tuesday, 1 December 2015
இன்றைய புனிதர் 2015-12-02 துறவி ஆஞ்சலா அஸ்டோர்க் Angela Astorch
பிறப்பு01 செப்டம்பர் 1592,பார்சிலோனா Barcelona, ஸ்பெயின்
இறப்பு02 டிசம்பர் 1665,முர்சியா Murcia, ஸ்பெயின்
முத்திபேறுபட்டம்: 25 மே 1982, திருத்தந்தை 2 ஆம் ஜான்பவுல்
இவர் பார்சிலோனாவில் இருந்த புனித கப்புச்சின் துறவற சபையில் தனது 17 ஆம் வயதில் துறவற வார்த்தைப்பாடுகளைப் பெற்றார். தான் துறவியான 8 ஆண்டுகள் கழித்து, சரகோசா (Saragossa) என்ற ஊரில் துறவற மடம் ஒன்றைக்கட்டினார். அதன்பிறகு அவ்வில்லத்திற்கு தானே தலைமை பொறுப்பையும் ஏற்றார். ஞானத்தாலும், அறிவாலும் சிறந்து விளங்கி தன் மடத்தை வழிநடத்தினார். அதன்பின் அச்சபையை ஸ்பெயின் நாட்டில் முர்சியா (Murcia) என்ற இடத்திலும் நிறுவினார். இவர் அம்மடத்திலிருந்தபோது எண்ணிலடங்கா இயேசுவின் திருக்காட்சிகளை பெற்றார். அவைகளை தானே தன் கைப்பட எழுதியும் வைத்தார். இவர் முர்சியா ஊரிலிருந்த ஆலயங்களில் செப வழிபாட்டை நடத்தி, அவைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தார்.
செபம்: புதுமைகளை செய்பவரே எம் கடவுளே! புனித கப்புச்சின் சபை துறவிகளையும், குருக்களையும் ஆசீர்வதித்தருளும். அவர்களோடு எச்சூழலிலும் உடனிருந்து காத்து வழிநடத்தியருள வேண்டுமென்று, இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment