Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 25 December 2015
இன்றைய புனிதர் 2015-12-25 சிர்மியும் மறைசாட்சி அனஸ்தாஸியா Anastasia von Sirmium
பிறப்பு 3 ஆம் நூற்றாண்டு, உரோம், இத்தாலி
இறப்பு 304, சிர்மியும் Sirmium, குரோஷியா Kroatien
பாதுகாவல்: தலைவலி, மார்பு நோயிலிருந்து
இவர் ஓர் மதிப்புமிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலேயே திருமணம் செய்து விரைவில் தன் கணவரை இழந்தவர். கணவரின் இறப்பிற்கு பின் நரக வாழ் வை சந்தித்தார். பின்னர் இவர் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்ததால் பகைவர்கள் பெருகினர். இவர் அப்பகைவர்களால் சிறைபிடித்து செல்லப்பட்டார். சிறையிலும் மிகவும் கொடுமை யாக நடத்தப்பட்டார். பலமுறை தீய ஆவியின் செயல்களுக்குட் படுத்தப்பட்டார்.
இவரை அரசன் தியோக்ளேசியன் Diokletians தன் பிடியில் வைத் து, கிறிஸ்துவை பின்பற்றக்கூடாது என்று கட்டளையிட்டான். அதனை எதிர்த்து கிறிஸ்துவை மட்டுமே தன் வாழ்வு என்று உரக்கக்கூறி, இடைவிடாமல் செபித்து வந்தார். இதனால் சினம் கொண்ட அரசன் இவரை உயிருடன் கொல்ல ஆணையிட்டான். இதனால் அனஸ்தாஸியாவை அரச படைவீரர்கள் வெடிமரு ந்தை வைத்து அவரை சுற்றி வெடிக்க வைத்து அவரையும் கொன்றனர்.
செபம்: கருணையும் இரக்கமும் நிறைந்த எம் இறைவா! பணத்திற்காக கொடியவர்களால் சிறைபிடிக்கப்பட்டு, உம்மை பற்றிக்கொண் டதற்காக உயிருடன் கொல்லப்பட்ட அனஸ்தாசியாவை நினைவுகூறும் இந்நாளில் அவரின் நாமத்தை தாங்கி நாம விழாவைக் கொண்டாடும் உள்ளங்களை ஆசீர்வதியும். நல்ல உடல், உள்ள ஆன்ம நலன்களை தந்து அபரிவிதமாக உம் ஆசீரை பொழிந்து என்றும் உம் சிறகுகளின் நிழலில் வைத்துக் காத்திடுமாறு இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment