Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 16 December 2015
இன்றைய புனிதர் 2015-12-16 அரசி ஆடெல்ஹைட் Adelheid
பிறப்பு 931, பூர்கண்ட் Burgund, பிரான்சு இறப்பு 16, டிசம்பர் 999, செல்ஸ் Selz, பிரான்சு
இவர் அரசர் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் 20 ஆம் வயதில் 951 ஆம் ஆண்டு அரசர் முதலாம் ஓட்டோ(Otto) என்பவரை மணந்தார். பின்னர் 962 ஆம் ஆண்டு திருத்தந்தை 12 ஆம் அருளப்பரால் அரசியாக முடிசூட்டப்பட்டார். 973 ஆம் ஆண்டு கணவர் முதலாம் ஒட்டோ இறந்துவிட்டார். இதனால் மகன் 2 ஆம் ஓட்டோவும் அவரின் மனைவியும் அரசர் பொறுப்பை ஏற்றனர். இதனால் அரசி ஆடெல்ஹைட் குடும்ப வாழ்விலிருந்து, சற்று விலகி ஆன்மீக காரியங்களில் கவனம் செலுத்தினார்.
இவர் எண்ணிலடங்கா துறவற மடங்களைக் கட்டினார். குளுனி துறவற மட சட்ட ஒழுங்குகளை சீர்திருத்த தேவையான உதவிகளையும் தாராளமாக செய்து வந்தார். குளுனி மடத்தை (Cluny) பிரான்சு நாடு முழுவதும் பரப்பினார். இவர் திருமணம் செய்தவராக இருந்தபோதும்கூட துறவியைப்போலவே வாழ்ந்தார். இவர் தனது வாழ்நாளின் இறுதிவரை துறவற இல்லத்திலேயே வாழ்ந்து இறந்தார்.
செபம்: இரக்கமே உருவான இறைவா! அரசி ஆடெல்ஹைடை எமக்கு கொடையாக தந்தமைக்காக உமக்கு நன்றி கூறுகின்றோம். இன்று துறவிகளுக்கெதிராக நடைபெறும் அநீதிகளை அகற்றி, உம் நீதியையும், விசுவாசத்தையும் இவ்வுலகில் நிலை நிறுத்திட நீர்தாமே அருள்புரிய வேண்டுமென்று அரசி ஆடெல்ஹைடின் வழியாக இறைவா உம்மை வேண்டுகின்றோம்.
No comments:
Post a Comment