Login
Enter your username and password to enter your Blogger Dasboard
Wednesday, 30 March 2016
இன்றைய புனிதர் 2016-03-31 சபைத்தலைவர் கிளமென்ஸ் பூல் Clemens Fuhl
இவர் மிக சாதாரணமான வாழ்வை வாழ்ந்து வந்தார். தன் சபை வளர்வதற்காக கடினமாக உழைத்தார். தனது19 ஆம் வய திலேயே குருப்பட்டம் பெற்று துறவியானர். 1920 ஆம் ஆண்டு ஏழ்மையான வாழ்வை தேர்ந்து கொண்டு, ஆன்ம குருவாக பணியாற்றினார். பிறகு 1929 ஆம் ஆண்டு பிரான்சிஸ்கன் சபை யின் மறைமாநிலத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் னர் 1931 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் தென் அமெரிக்காவில் தன் சபைகளை பார்வை யிட சென்ற போது, பயணத்தின்போது நுரையீரல் பாதிப்பால் நோய்வாய்ப்பட்டார். அந்நோயை குணமாக்க முடியாமல் இற ந்து அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1953 ஆம் ஆண்டு அங்கிருந்து வூர்ட்ஸ்பூர்க்கில் உள்ள புனித அகஸ்டின் பேராலயத்திற்கு கொண்டுவரப்பட்டு, மரியாதை செலுத்தப்ப ட்டுவருகின்றது.
Tuesday, 29 March 2016
இன்றைய புனிதர் 2016-03-30 சபை நிறுவுநர் கசோரியா நகர் லூட்விக் Ludwig von Casoria OFM
இன்றைய புனிதர் 2016-03-30
சபை நிறுவுநர் கசோரியா நகர் லூட்விக் Ludwig von Casoria OFM
பிறப்பு 11 மார்ச் 1814, நேயாப்பள் Neapel, இத்தாலி
இறப்பு 30 மார்ச் 1885, நேயாப்பல், இத்தாலி
இவர் பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருவானார். இவர் ஏழைகளையும் வயது முதிர்ந்தோரையும் நோயாளிகளையும் தன் இதயத்தில் தாங்கி பராமரித்தார். எண்ணிலடங்கா மருத்து வமனைகளையும் வயோதிகர் இல்லங்களையும் சாகும் தரு வாயில் உள்ளவர்களுக்கென இல்லங்களையும் பள்ளிக்கூடங் களையும் கட்டினார். காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோ ரக்கும் பள்ளிகளை நிறுவினார். அவர்கலை பராமரிப்பதற்கென இல்லங்களையும் கட்டினார்.
இவர் பிரான்சிஸ்கன் மூன்றாம் சபை ஒழுங்குகளைக் கடைப்பி டித்தார். அச்சபையை உயிரோட்டமுள்ளதாக் வளர்த்தெடுத் தார். இவர் ஆப்ரிக்காவில் மறைபரப்பு பணியை பரவச் செய்ய ஊக்கமூட்டினார். ஆப்ரிக்கா குழந்தைகளுக்கென இரண்டு இல் லங்களை கட்டினார். அக்குழந்தைகளை அடிமைத்தனங்களி லிருந்து மீட்டு, சுதந்திரமான வாழ்வை வாழ வழிகாட்டினார். பிறகு கிரவ்வன் சகோதரர்கள், கிரவ்வன் சகோதரிகள் Grauen Brüder, Grauen Schwester என்ற இரு சபைகளை ஆப்ரிக்காவில் தொடங்கினார்.
செபம்:
நம்பினோர்க்கு மனத்திடன் அளிக்கும் ஆண்டவரே! துறவி லூட்விக்கின் வேண்டுதல்களுக்கு நீர் கனிவாய் செவிசாய்த்தீர். அவரின் வழியாக பல ஏழைகளை பயனடைய செய்தீர். விடுதலையற்றவர்களுக்கு சுதந்திரத்தை கொடுத்தீர். அவர் செய்த செயல்கள் அனைத்திலும் நலன்களின் பிறப்பிடத்தை மற்றவர்கள் பெறச் செய்தீர். அவர் ஏற்படுத்திய அனைத்து நிறுவனங்கள், சபைகள் அனைத்தையும் நீர் பராமரித்து வழிநடத்தும். அச்சபையில் வாழும் ஒவ்வொருவரும், அவர்களின் பணிவிடைகளைப் பெறும் அனைவரும் சொல்லாலும் செயலாலும் உமக்குகந்தவர்களாக வாழ செய்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய புனிதர் 2016-03-29 கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien

இன்றைய புனிதர் 2016-03-29
கலாபிரியன் நகர் துறவி பெர்ட்ஹோல்டு Berthold von Kalabrien
பிறப்பு 1100, லிமோகெஸ் Limoges, பிரான்சு
இறப்பு1195,n கார்மேல் மலை |
இவர் கார்மேல் சபையைத் தொடங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். இவர் தன்னுடன் பல சகோதரர்களை இணைத்துக் கொண்டு, பல துறவற இல்லங்களை கட்டினார். இவர் பலமுறை திருக்காட்சிகளை பெற்று தீர்க்கதரிசிகளைப் போல வாழ்ந்தார். இவர் மிக அர்த்தமுள்ள வகையில் தனது துறவற வாழ்வை வாழ்ந்தார். எப்போதும் இறைவனுடன் ஒன்றித்து செபித்தார். தனது சபைத் தலைவருக்கு பலவிதங்களிலும் உடனிருந்து உதவினார். இவர் இறந்தபிறகு இவரின் சபை எருசலேமிலும் பரவியது. தனது சபை பல இன்னல்களை சந்தித்து அப்போதெல்லாம் இவர், இறைவனின் அருளால் மிகத் திறமையுடன் செயல்பட்டு தன் சபையை துன்பத்திலிருந்து மீட்டார்.
செபம்:
பரிவன்புமிக்க ஆண்டவரே! உமக்கு ஊழியம் புரிகின்ற எங்கள்மேல் மனமிரங்கி உம் அருள்கொடைகளை பொழிந்தருளும். நாங்கள் துறவி பெரட்ஹோல்டை போல நம்பிக்கை, எதிர்நோக்கு, இறையன்பினால் பற்றியெரிந்து உம் கட்டளைகளை கடைபிடித்து வாழ்வதில் கண்ணும் கருத்துமாய் நிலைத்திருக்க செய்தருளும். கார்மேல் சபை துறவிகளை நீர் ஆசீர்வதித்து அவர்களின் அற்புதமான செப வாழ்வினால் இவ்வுலகை பாவத்திலிருந்து மீட்டருளும்
Monday, 28 March 2016
இன்றைய புனிதர் 2016-03-28 துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab
இன்றைய புனிதர் 2016-03-28
துறவி இங்பெர்ட் நாப் Ingbert Naab
பிறப்பு 5 நவம்பர் 1885, டான் Dahn, ஜெர்மனி
இறப்பு 28 மார்ச் 1935, ஸ்ட்ராஸ்பூர்க் Straßburg, பிரான்சு
கார்ல் என்பது இவரின் திருமுழுக்கு பெயர். இவர் நேஷனல் சோசலிசத்தை (Nationalsozialismus) எதிர்த்து போரிட்டார். 1932 ஆம் ஆண்டு ஆடோல்ஃப் ஹிட்லரை எதிர்த்து கடிதம் எழுதினார். இந்நிகழ்ச்சி ஜெர்மனி முழுவதும் பரவியது. மேலும் ஹிட்லருக்கு எதிராக செயல்பட பல கடிதங்களை எழுதி கிறிஸ்துவ மக்களை ஒன்று சேர்த்து போராடினார். ஹிட்லரையும் அவரின் ஆட்சியில் நடந்த அநியாயங்களையும் எதிர்த்து போரிட்டார். இதனால் 1 ஜூலை 1934 ஆம் ஆண்டு ஹிட்லரின் கூட்டாளிகளால் அடிமையாக பிடித்துக் கொண்டு செல்லப்பட்டார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் கப்புசின் சபை குருக்களால் எடுத்துச் செல்லப்பட்டு கப்புச்சின் சபைக்கு சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து பவேரியாவிற்கு கொண்டு வரப்பட்டு ஐஷ்டேட் என்ற ஊரில் வைத்து வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.
செபம்:
எங்கள் பொருட்டு உம் தந்தையிடம் உம்மையே கையளித்த எம் இறைவா! சீரழிந்த இவ்வுலகத்தை உம் மகனின் பாடுகளினாலும் இறப்பினாலும் சீர்ப்படுத்தினீர். அவர் எங்களுக்காகப் பெற்றுத்தந்த பாவ விடுதலையில் மகிழ்ந்திருக்க அருளைத் தந்தருளும். எம்மைச் சுற்றியிலும் நடக்கும் அநீதிகளை தட்டிக்கேட்டும் தைரியத்தை தாரும். தீமைகளை அகற்றி நன்மை புரிந்திடச் செய்தருளும். இவைகளையெல்லாம் எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
Saturday, 26 March 2016
இன்றைய புனிதர் 2016-03-27 சபைநிறுவுநர் மேரி யூஜின் கிரியாலோ Marie Eugene Grialou

இன்றைய புனிதர் 2016-03-27
சபைநிறுவுநர் மேரி யூஜின் கிரியாலோ Marie Eugene Grialou
பிறப்பு 2 டிசம்பர் 1894, லாகுவா La Gua, பிரான்சு
இறப்பு 27 மார்ச் 1967, பிரான்சு
இவருக்கு ஹென்றி Henry என்று இவரின் பெற்றோர் பெயரிட்டனர். இவர் முதலில் நோட்டர்டாமே டீவீ Notre Dame de vie என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தனர். நாளடைவில் அந்நிறுவனத்தை துறவறச் சபையாக மாற்றினார். 1962 ஆம் ஆண்டு துறவற சபை என்ற திருத்தந்தையின் அங்கீகாரத்தையும் அச்சபை பெற்றது. இச்சபையான கார்மேல் சபை போலவே செயல்பட்டது, இச்சபையினர் குறிப்பிட்ட துறவற உடையணியாமல் சாதாரணமான உடையையே அணிந்தனர். இவர்கள் துறவிகளைப் போலவே தங்களின் வாழ்வை வாழ்ந்தனர். ஆனால் சமுதாயத்தோடு இணைந்து பணியாற்றினார். 1973 ஆம் ஆண்டிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் இச்சபைப் பரவியது.
செபம்:
பொறுமையுள்ளவரும், ஊக்கமளிப்பவருமான எம் தந்தையே! உலகோடு இணைந்து பணிபுரியும் போது எங்கள் மனதை உலக நாட்டங்களில் ஈடுபடாமல் செய்தருளும். எச்சூழலிலும் நெறி தவறாமல் வாழ வழிகாட்டியருளும். உமக்குகந்தவற்றையே நாட நல்மனதை தாரும். கிறிஸ்துவின் முன்மாதிரியை பின்பற்றி நாங்கள் ஒருவரோடு ஒருவர் ஒருமனப்பட்டு வாழ வழிகாட்டியருளும். மற்றவர்களின் நலனின் அக்கறைக் கொண்டு வாழ தாராள மனம் தந்தருளுமாறு தந்தையே உம்மை இறைஞ்சுகின்றோம்.
Friday, 25 March 2016
இன்றைய புனிதர் 2016-03-26 ஆயர் லியூட்கர் Liudger

இன்றைய புனிதர் 2016-03-26
ஆயர் லியூட்கர் Liudger
பிறப்பு 742, பிரீஸ்லாண்ட் Friesland
இறப்பு 26 மார்ச் 809, பில்லர்பெக் Billerbeck, ஜெர்மனி
பாதுகாவல் : முன்ஸ்டர் Münster மற்றும் எஸ்ஸன் Essen மறைமாவட்டத்தின் 2 ஆம் பாதுகாவலர்
இவர் ஓர் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். 777 ஆம் ஆண்டு கொலோனில் தனது குருப்பட்டம் பெற்றார். பிறகு சாக்சன் சென்று மறைப்பணியாற்றினார். தான் ஆயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு முன்ஸ்டரில் பேராலயம் ஒன்றை கட்டினார். அத்துடன் சில ஆலயங்களையும் எழுப்பினார். ஏறக்குறைய 40அருட்தந்தையர்களைக் கொண்டு பல துறவற மடங்களை யும் கட்டினார். 40 பங்குகளையும் உருவாக்கினார். சில பெனடிக்ட்டீனர் துறவற மடங்களையும் கட்டினார். இவர் ஒருமுறை திருப்பலியில் மறையுரையாற்றிக் கொண்டிரு க்கும் வேளையில் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்தார். இவர் பல துறவற இல்லங்களில் ஆன்ம குருவாக பணியாற்றி னார். இன்றும் முன்ஸ்டர் மறைமாவட்டத்தில் இவருக்கென்று தனி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.
செபம்:
ஆண்டவராகிய நானே உங்களின் இதயச் சிந்தனைகளை அறிபவர் என்று மொழிந்த இறைவா! நாங்கள் அன்பின் ஆர்வத்தால் தூண்டபட்டு எப்பொழுதும் அனைத்திற்கும் மேலாக உம்மையும் உம் பொருட்டு எம் சகோதர சகோதரிக ளையும் அன்பு செய்ய வரம் தாரும். ஆயர் லியூட்கர் எழுப்பிய உம் இல்லங்களுக்கு வந்து உம்மை தரிசிக்கும் அனைவருக் கும் ஆறுதலையும் அன்பையும் பொழிந்தருளும். உம் இல்லத்தி ற்கு நாங்கள் வரும் போது உமது சாட்சிகளாக மாறிட வரம் தாரும். முழு மனதுடன் உம்மை போற்றி புகழ்ந்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Thursday, 24 March 2016
இன்றைய புனிதர் 2016-03-25 சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini
இன்றைய புனிதர் 2016-03-25
சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini
புனிதர்பட்டம்: 22 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigoஎன்பவரின் உதவியுடன் இவ ரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.
பிறப்பு ஜனவரி 1672, உரோம்
இறப்பு 25 மார்ச் 1732, மோண்டேபியாஸ்கோனே Montefiascone, இத்தாலி
இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigoஎன்பவரின் உதவியுடன் இவ ரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.
செபம்:
தாழ்நிலையில் இருப்போரை பரிவன்புடன் நோக்கும் எம் இறைவா! நீர் ஒருவரே அருஞ்செயல்களை செய்கின்றீர். உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றீர். தேவையிலிருப்போருக்கு பல துறவற சபைகளின் மூலம் உதவுகின்றீர். புனித லூசியா பிலிப்பீனியின் வழியாக நீர் ஏற்படுத்திய சபையை, அதன் நோக்கத்துடன் என்றும் செயல்பட உதவி செய்தருளும். இச்சபையினரின் வழியாக துயர் நிறைந்தோர்க்கு ஆறுதலாகவும், உள்ளம் உடைந்தோர்க்கு உறுதுணையாகவும், அழுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவராகவும் இருந்தருளும்.
Wednesday, 23 March 2016
இன்றைய புனிதர் 2016-03-24 ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden

இன்றைய புனிதர் 2016-03-24
ஸ்வீடன் நாட்டுத் துறவி கத்தரீனா Katharina von Schweden
பிறப்பு 1331 ஸ்வீடன்
பாதுகாவல் : குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள்
இவர் பிரிகிட்டா Brigitta, உல்ஃப் Ulf என்பவரின் மகளாகப் பிறந்தார். தனது 14 வயதிலேயே எக்கார்ட் Eggartஎன்பவரை திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் திருமணம் ஆனபிறகும் தாம்பத்திய உறவு இல்லாமல் வாழ வேண்டுமென்று தங்களுக்குள் முடிவெடுத்தனர். இருவரும் சேர்ந்து கற்பு என்னும் வார்த்தைப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அப்போது மிரிகிட்டாவின் தாய் 1349 ஆம் ஆண்டு உரோம் சென்று அங்கு ஓர் சபையை நிறுவினார். கத்தரீனா 20 வயதிலிருக்கும் தன் கணவர் இறந்துவிட்டார். இதனால் கத்தரீனாவும் உரோம் சென்று தன் தாய்க்கு உதவினார். இவர் தான் வாழும் வரை தன் தாயுடன் வாழ்வதாக உறுதி செய்தார். கத்தரீனாவும், தாயும் சேர்ந்து 1372 மற்றும் 1373 ம் ஆண்டுகளில் புனித நாட்டிற்குப் பயணம் ஒன்றை மேற்கொண்டனர். அப்போது 1373 ஜூலை 23 ல் தாய் இறந்துவிட்டார். கத்தரீனா தன் தாயின் உடலை ஸ்வீடனில் உள்ள வாட்ஸ்டேனாவிற்கு Vadstena கொண்டு சென்று அடக்கம் செய்தார். அதன்பிறகு கத்தரீனா தனது 30 ஆம் வயதில் துறவற இல்லம் ஒன்றை கட்டினார். அத்துறவற மடத்தையே தன் வீடாகக் கொண்டார். நாளடைவில் இவரே அம்மடத்தின் தலைவியாகவும் பொறுப்பேற்றார்.
செபம்:
வார்த்தை மனுவுருவானவரே! எம்மை உமது இறைவார்த்தைகளால் நிரப்பியருளும். இறைவார்த்தைகளை எம் உள்ளத்தில் உள்வாங்கி அவற்றின் படி நடக்கச் செய்தருளும். நாங்கள் கொடுத்துள்ள கற்பு என்னும் வார்த்தைப்பாட்டில் இறுதிவரை பிரமாணிக்கமாய் வாழச் செய்தருளும், இதன் வழியாக உமது மேலான வியத்தகு மறைப்பொருளை மனிதர்களுக்கு எடுத்துரைக்க உதவி புரியும். எம்வாழ்வில் தொடர்ந்து உம்மை வழிபடவும், உம்மீது பற்றுக்கொண்டு, இன்றைய புனிதரைப் போல, இறுதிவரை உமக்காகவும் வாழ செய்தருளும்.
Tuesday, 22 March 2016
இன்றைய புனிதர் 2016-03-23 லிமா நகர் பேராயர் தோரிபியோ Toribio von Lima

இன்றைய புனிதர்2016-03-23
லிமா நகர் பேராயர் தோரிபியோ Toribio von பிறப்பு 16 நவம்பர் 1538, மயோர்கா Mayorga, ஸ்பெயின்
இறப்பு 23 மார்ச் 1606, லீமா Lima, பெரு
பாதுகாவல் : பெரு, லீமா நகர்
இவர் ஓர் கிறிஸ்துவ விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். சலமங்காவில் Salamanca சட்டம் பயின்றார். பின்னர் பெரு என்னும் நாட்டிலிருக்கும் லீமா நகரின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1580 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவுக்கு சென்றார். திருத்தூது ஆர்வத்தினால் பற்றியெரிந்தார். மறைப்பணியாளர் மன்றங்களையும் ஆட்சிமுறைப் பேரவைகளையும் அடிக்கடி ஒன்று சேர்த்து வழிநடத்தினார். இவ்வொன்றிப்பு மற்ற மாவட்டமெங்கும் கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்ப மிகவும் உதவின. திருச்சபையின் உரிமைகளைக் காப்பதில் இவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
இவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மக்களை மிகுந்த அன்போடு வழிநடத்தினார். அவர்களின் தேவைகலை அறிந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார். மக்களின் மேல் எப்போதும் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். தன் மறைமாவட்டம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து, தவறாமல் நலம் விசாரித்து வந்தார். வேறுபாடின்றி அனைவருடனும் சமமாக பழகினார். இவர் ஏறக்குறைய 8,00,000 மக்களுக்கு ஒரே நேரத்தில் உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனத்தைக் கொடுத்தார். இவர் மக்கலை சந்திக்க பயணம் மேற்கொண்டபோது வழியிலேயே உயிரிழந்தார்.
செபம்:
பேசுபவர் நீங்கள் அல்ல, மாறாக உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவோர் என்றுரைத்த எம் தந்தையே! மறைபரப்பு பணியில் நாட்டமும் உம்மீது கொண்டிருந்த ஆர்வத்தாலும் புனித தேரிபியோவை பெரு நாடு முழுவதும் உமது திருச்சபையைப் பெருக செய்தீர், புனிதப்படுத்தபட்ட உம் மக்களாகிய நாங்களும் உம் நம்பிக்கையிலும் புனிதத்திலும் எந்நாளும் தொடர்ந்து வளம் பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.
Monday, 21 March 2016
இன்றைய புனிதர் 2016-03-22 காலன் நகர் கர்தினால் கிளமென்ஸ் அகுஸ்ட் கிராஃப் Clemens August Graf von Galen

இன்றைய புனிதர் 2016-03-22
காலன் நகர் கர்தினால் கிளமென்ஸ் அகுஸ்ட் கிராஃப் Clemens August Graf von Galen
பிறப்பு 16 மார்ச் 1878, பூர்க் டின்க்லாக Burg Dinklage, நீடர்சாக்சன் Niedersachsen
இறப்பு 22 மார்ச் 1946, முன்ஸ்டர் Münster, ஜெர்மனி
இவரின் தந்தை பெர்ட்னாண்ட் ஹெரிபெர்ட் Ferdinand Heribert. தாய் எலிசபெத் என்பவர் ஆவர். இவர் 11 வது குழந்தையாக பிறந்தவர். இவரின் உடன் பிறந்தவர்கள் 12 பேர். இவரின் பெற் றோர் செல்வந்தர். இவர் தனது இளம்வயது கல்வியை முடித் தப்பின், தன் சகோதரர் பிரான்ஸ் என்பவருடன் இணைந்து 1897 ல் பிரைபூர்க்கில்Freiburg மேற்படிப்பிற்காக சென்றார். இவர் 1898 ல் உரோம் நகருக்கு பயணம் ஒன்றை மேற்கொண்டார். அப் போது திருத்தந்தை 13 ஆம் லியோ அவர்களின் உதவியினால் குருவாக ஆசைக்கொண்டு குருமடத்தில் சேர்ந்தார். 28 மே 1904 ஆம் ஆண்டு காலனில் உள்ள பேராலயத்தில் தனது குருப்பட் டம் பெற்றார். 2வருடங்கள் பேராலயத்தில் பணியாற்றினார். 1906 ல் பெர்லினிலுள்ள ஸ்சோன்பெர்க் Schönberg என்ற ஊரிலி ருந்த மத்தியாஸ் ஆலயத்தில் உதவி பங்குத்தந்தையாகப் பணியாற்றினார்.
பின்னர் 1912 ல் பெர்லினிற்கு மாற்றப்பட்டார். அங்கு கிளமென்ஸ் St.Clemens ஆலயத்தில் பணியாற்றினார்.1919 - 1929 வரை மீண்டும் புனித மத்தியாஸ் ஆலயத்தில் பணியாற்றினார். பின்னர் செயிண்ட் லம்பெர்டிLamberti ஆலயத்தில் பங்கு தந்தை யாக பணிபுரிந்தார். 27 ஆண்டுகள் அங்கு ஆன்ம குருவாகவும் இருந்தார். பிறகு 1933 ல் முன்ஸ்டர் மறைமாவட்டத்திற்கு ஆய ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மிகச் சிறப்பான முறையில் மறையுரை ஆற்றும் திறமை கொண்டவர். தவறுகளை கண்டி த்து எவருக்கும் அஞ்சாமல் மறையுரை ஆற்றுபவர். இவர் கரு ணைக்கொலையை Euthanasie பற்றி மிகச் சிறப்பான விவாதங் களை மேற்கொண்டார். அதற்குப் பிறகு இவரின் பெயர் எத்தி சையிலும் பேசப்பட்டது. இவர் சோசலிசத்தை கடுமையாக எதி ர்த்தார். இதனால் இவர் சாக வேண்டுமென்ற தண்டனையைப் பெற்றார். இவர் மீது பல பொய்குற்றங்கள் சுமத்தப்பட்டது,. இத னால் சில வாரங்கள் ஆயர் பதவியிலிருந்து விலக வேண்டிய தாயிற்று. பிறகு மீண்டும் 1945 ஆம் ஆண்டின் இறுதியில் 1946 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை 12 ஆம் பயஸ் அவர்களால் காலனிற்கு Galen கர்தினாலாக தேர்ந்தெடுத்தார். 1946 ல் 21 பிப்ரவரி மாதம் உரோமில் தனது கர்தினால் பட்டத் தைப் பெற்றார். இவரின் கர்தினால் பட்டமளிப்பு விழாவிற்கு ம்யூனிக்கிலிருந்துMünchen மட்டுமே 20,000 மக்கள் சென்றனர். பின்னர் முன்ஸ்டரில் மிகப் பிரமாண்டமான முறையில் இவ ரின் பதவியேற்பு விழா சிறப்பிக்கப்பட்டது. இவ்விழா முடிந்த ஆறு நாட்கள் கழித்து அப்பண்டிசைட்டிஸ் Apendixஎன்ற நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இவரின் உடல் லியூட்கர் Liudger ஆலயத்தில் புதைக்கப்பட்டது.
செபம்:
நல்ல ஆயனாம் இறைவா! தவறுகளை கண்டிக்கும் தைரியத்தையும் எதிர்த்து போராடத் துணிவையும் கர்தினால் கிளமென்ஸிற்கு அளித்தீர். நாங்களும் தவறுகளை கண்டு ஒதுங்காமல் அவற்றைத் தட்டி கேட்கும் தைரியத்தை பெற உதவியருளும். உம் மக்களை நீதியோடும் நேர்மையோடும் வழிநடத்த வரம் தாரும்
இன்றைய புனிதர் 2016-03-21 திருக்காட்சியாளர் எமிலி ஷ்னைடர் Emilie Schneider

இன்றைய புனிதர் 2016-03-21
திருக்காட்சியாளர் எமிலி ஷ்னைடர் Emilie Schneider
பிறப்பு 6 செப்டம்பர் 1820, ஹாரன், ஜெர்மனிஇறப்பு 21 மார்ச் 1859, ட்யூசல்டோர்ஃப் Düsseldorf, ஜெர்மனி
இவரின் திருமுழுக்குப் பெயர் ஜூலி. இவர் 1845 ல் திருச்சிலு வையின் மகள் என்றழைக்கப்பட்ட துறவறச் சபையில் சேர்ந்தார். 1851 ல் அஸ்பல் Aspel என்ற ஊரில் நவத்துறவிகளை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றார். 1852 ல் ட்யூசல்டோர்ஃபில் உள்ள துறவற மடத்தில் தலைவியாக நியமிக்கப்பட்டார். அப் போது அவர் தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகளுடன் சுமூக மான உறவின்றி வாழ்ந்தார். பலவித பிரச்சினைகளை சந்தித் தார்.
இவர் எல்லா எதிர்மறையான சூழல்களையும் சந்திக்க இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். இயேசுவின் திரு இதயத்தின் அன்பை சுவைத்தார். தேவையான சக்தியை திருச்சிலுவையிலிருந்து பெற்றார். இவர் அடிக்கடி ஆண்டவரிடமிருந்து திருக்காட்சிகளை பெற்றார். இவர் இறந்த பிறகு ட்யூசல்டோர்ஃபில் உள்ள தெரேசியன் மருத்துவமனையில் அடக்கம் செய்யப்பட்டார். அங்குதான் இன்றுவரை அவரின் கல்லறை உள்ளது.
செபம்:
அன்புத் தந்தையே இறைவா! உமது இறையழைப்பின் குரலைக் கேட்டு உம்மை பின் தொடர வந்த உள்ளங்களை வழிநடத்தும் பொறுப்பை திருக்காட்சியாளர் எமிலியிடம் ஒப்படைத்தீர். இன்றும் நவத்துறவிகளை வழிநடத்தும் ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் நீர் ஆசீர்வதியும். தூய ஆவியின் துணையுடன் செயல்பட்டு, தெளிவான பாதையில் நேர்மையான முறையில் இளைஞர்களை வழிநடத்த துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Saturday, 19 March 2016
இன்றைய புனிதர் 2016-03-20 லிண்டிஸ்பார்னே நகர் ஆயர் கிஸ்பெர்ட் Gisbert von Lindisfarne
இன்றைய புனிதர் 2016-03-20லிண்டிஸ்பார்னே நகர் ஆயர் கிஸ்பெர்ட் Gisbert von Lindisfarne
பிறப்பு 620, இங்கிலாந்து
இறப்பு 20 மார்ச் 687,ஃபார்னா Farna, ஐஸ்லாந்து Island
பாதுகாவல் : ஆயர்கள், கடல்வாழ் மக்கள்
இவர் ஓர் நாகரீகமான குடும்பத்தில் பிறந்தவர். 651 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவற மடத்தில் சேர்ந்து குருவானார். 662 ல் அம்மடத்தின் தலைவரானார்.. இவர் 664 ல் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஓஸ்ட்குஸ்டேOstküste என்ற தீவிற்குச் சென்று பணியாற்றினார். அத்தீவில் இவர் "மக்களின் போதனையாளர்" என்றழைக்கப்பட்டார். பிறகு இவர் 676 ஆம் ஆண்டு அங்கிருந்து ஃபார்னா என்றழைக்கப்பட்ட தீவிற்கு சென்றார். அங்கு 6 ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்தார்.
அங்கிருந்து அவர் திரும்பிய பின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஆயர் பதவியிலிருந்து மாற்றம் பெற விரும்பினார். அப்போதுதான் அத்தீவிலியே இறந்துவிட்டார். முதலில் இவரின் உடல் ஃபார்னே தீவில் அடக்கம் செய்ய்யப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறையை திறக்கும்போது, உடல் அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது/ அன்றிலிருந்து இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாய் இருந்தது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! இன்றைய திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் ஆசீர்வதியும். தான் செய்யும் பணிகள். அனைத்திலும் உம்மை மையமாக வைத்து பணியாற்ற உம் வரம் தாரும். காலத்தின் சூழ்நிலைக்கேற்ப, தங்களை மாற்றிக் கொண்டு, உம் மந்தையின் ஆடுகளை பராமரிக்க நீர் துணை வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Friday, 18 March 2016
இன்றைய புனிதர் 2016-03-19 தூய கன்னிமரியாவின் கணவர் புனித யோசேப்பு
இன்றைய புனிதர்2016-03-19
தூய கன்னிமரியாவின் கணவர் புனித யோசேப்பு
பிறப்பு நாசரேத்து
இறப்பு முதலாம் நூற்றாண்டு
10 ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்றிசை நாடுகளின் பல திருவிழாக்கள் பட்டியல்களின்படி புனித யோசேப்பு மார்ச் 19 ஆம் நாள் நினைவுகூரப்படுகின்றார். இத்திருவிழா அதே தினத்தன்று கொண்டாடப்பட வேண்டுமென்று1479 ஆம் ஆண்டு உரோமையில் ஏற்றுகொள்ளப்பட்டது. பின்னர் 1621 ஆம் ஆண்டு இத்திருவிழா எல்லார்க்கும் என்றுமுள்ள பொது உரோமைப் பட்டியலில் இடம்பெற்றது.
இவர் தாவீதின் மகன். இவர் ஓர் தச்சர். இவர் மரியாவிற்கு மணம் ஒப்பந்தமானவர். அவர்கள் கூடிவாழும் முன்பே மரியா கருவுற்றிருந்தது. தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார். இவ்வாறு அவர் சிந்திக்கும்போது வானதூதர் அவரின் கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்கு பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். குழந்தையை ஏரோது கொல்லத் தேடும்போது, ஆண்டவரின் தூதர் யோசேப்பின் கனவில் தோன்றி குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடும்படி கூறினார். தூதர் கனவில் உரைத்தவாறே யோசேப்பு செய்தார். மீண்டும் ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி ஏரோது காலமானதும் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும் என்றார். யோசேப்புன் அத்தூதர் கூறியவாறே செய்தார்.
செபம்:
எல்லாம் வல்லக் கடவுளே! எம் மீட்பின் தொடக்கக் காலத்தில் மரியா கருவுற்று இயேசுவை இவ்வுலகிற்குக் கொணர்ந்தபோது புனித யோசேப்பின் நம்பிக்கைக்குரிய காவலில் அவர்களை வைத்தீர். இவரது வேண்டுதலினால், உமது திருச்சபை உம் மறைப்பொருள்களின் நம்பிக்கைக்குரிய கண்காணிப்பாளராக விளங்கவும் செய்தீர். இவரின் வேண்டுதலில் எம்மையும் நீர் உடனிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Thursday, 17 March 2016
இன்றைய புனிதர் 2016-03-18 ஆயர் மறைவல்லுநர் எருசலேம் நகர் சிரில் Cyrill von Jerusalem

இன்றைய புனிதர் 2016-03-18
ஆயர் மறைவல்லுநர் எருசலேம் நகர் சிரில் Cyrill von Jerusalem
பிறப்பு 315, எருசலேம்
இறப்பு 18 மார்ச் 386, எருசலேம்
இவர் ஓர் கிறிஸ்துவ பெற்றோரின் மகனாகப் பிறந்தார். எருசலேமின் மறைமாவட்டத் தலைமைக்கோலிலில் மாக்சிமுஸ்சிற்கு Maximus அடுத்து 350 ஆம் ஆண்டு ஆயரானார். கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையை தவறாகப் புரிந்து கொண்ட ஆரியுசின் ஆதரவாளர்களோடு நிகழ்ந்த விவாதங்களில் புனிதர் சிக்கவைக்கப்படு பன்முறை நாடு கடத்தப்பட்டார். கலப்படமற்ற போதனையையும் விவிலியத்தையும் பாரம்பரியங்களையும் அவர் மெய்யடியார்களுக்கு விளக்கிக் காட்டிய உரைகள் எல்லாம் அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்குச் சான்று பகர்கின்றன.
செபம்:
எம் தந்தையாம் ஆண்டவராகிய கடவுளே! புனித சிரில் உம் அருளால் உம் திருச்சபையை திருமுழுக்கு நற்கருணை என்னும் மறைப்பொருளின் ஆழமான புரிதலுக்கு இட்டுச் சென்றார். அவருடைய வேண்டலின் பயனாக நாங்கள் உம் மகனை மேன்மேலும் நன்கறிந்து ஆன்மீக வாழ்வை மிகுதியாகப் பெற்று கொள்ளச் செய்தருளும்.
இன்றைய புனிதர் 2016-03-17 மறைப்பணியாளர் ஆயர் பேட்ரிக் Patrick

இன்றைய புனிதர் 2016-03-17
மறைப்பணியாளர் ஆயர் பேட்ரிக் Patrick
பிறப்பு 385,இங்கிலாந்து
இறப்பு 461, அயர்லாந்து
பாதுகாவல் : அயர்லாந்து, முடி திருத்துவோர், மலைவாழ் மக்கள், வீட்டு விலங்குகள்
இவரின் தந்தை தியாக்கோனாக இருந்தவர். பேட்ரிக் குழந்தை யாக இருக்கும்போதே நாடு கடத்தப்பட்டார். ஏறக்குறைய 6 வருடங்கள் அகதியாக வாழ்ந்தார். அப்போது இவரின் மனதில் ஏதோ ஒரு நெருடல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தது. இவர் தன் மனதிற்குள் ஏற்பட்ட தூண்டுதலின் பேரில் மீண்டும் தன் இல்ல த்திற்கு வந்து சேர்ந்தார். அதன்பிறகு மீண்டும் தன் மனதிற்குள் ஒரு ஒலி பேசுவதை உணர்ந்தார். அவ்வொலி பேட்ரிக்கை அயர்லாந்து நாட்டிற்கு மறைபரப்பு பணியை செய்யும்படி வலியுறுத்தியது. அதன்பேரில் பேட்ரிக் ஃபெஸ்லாண்ட் Festland சென்று சில வருடங்கள் அங்கேயே வாழ்ந்து வந்தார். அங்கிரு ந்து 432 ஆம் ஆண்டு மீண்டும் அங்கிருந்து அயர்லாந்து சென் றார். அங்கு மிகச் சிறப்பான முறையில் மறைப்பணியாற் றினார். இவரை திருத்தந்தை முதலாம் கொலஸ்டின் Cölestin I அயர்லாந்தின் முதல் ஆயராகத் தேர்ந்தெடுத்தார். இவர் மிகச் சிறப்பாக இறைப்பணியை ஆற்றினார். இவர் அயர்லாந்து நாடு முழுவதும் சென்று மறைப்பரப்பு பணியாற்றினார். இவர் அந்நா ட்டு மக்களிடையே மிகுந்த ஆர்வத்துடன் நற்செய்தியைப் போதித்தார். பலரைத் திருமுறைக்கு மனந்திருப்பினார். அயர்லாந்து திருச்சபையை ஒழுங்குப்படுத்தினார்.
செபம்:
மாட்சி மிகுந்த எல்லாம் வல்ல கடவுளே! அயர்லாந்து நாடு மக் களூக்கு உமது மாட்சியை போதிக்க ஆயராம் புனித பேட்ரி க்கை அனுப்பியதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின் றோம். கிறித்துவர் என அழைக்கப்படுவதில் பெருமை கொள்ளும் நாங்கள் மீட்பின் நற்செய்தியை உலகெங்கும் பறைசாற்றத் தொடர்ந்து உழைக்க உமதருள் தாரும்.
Wednesday, 16 March 2016
இன்றைய புனிதர் 2016-03-16 கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln

இன்றைய புனிதர் 2016-03-16
கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln
பிறப்பு 970, வோர்ம்ஸ் Worms, ஜெர்மனி
இறப்பு 16 மார்ச் 1021,கொலோன் Köln, ஜெர்மனி
இவர் அரசர் ஹூயூகோபின் Hugo மகன். அரசர் 3 ஆம் ஒட்டோ அவர்களால் 994 ல் இவரின் 24 ஆம் வயதில் இத்தாலி நாட்டில் பேராலயக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அப்பொறுப்பை ஜெர்மனி நாட்டிலும் ஏற்றார். இவர் அரசர் ஒட்டோவின் நெருங்கிய நண்பரானார். பின்னர் இவர் 995 ல் குருப்பட்டம் பெற்றார். பிறகு999 ஆம் ஆண்டு கொலோன் நகரின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஒருமுறை 1002 ஆம் ஆண்டு ஒட்டோ பயணம் ஒன்றை மேற்கொண்டபோது, திடீரென்று இறந்து போனார்.
இவ்விறப்பால் பேராயர் ஹெர்பெர்ட் பெரிதும் பாதிக்கபட்டார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். பல்வேறுபட்ட பிரச்சனைகளைச் சந்தித்தார். இவர் ஒட்டோவின் உடலை ஆஹனிற்கு Aachen கொண்டு வரப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டார். ஒட்டோ இறந்ததால் அரசர் 2 ஆம் ஹென்றி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இதனால் ஆயரை கவுன்சிலர் பதவியிலிருந்து விலக வைத்தான்.
ஆயர் ஹெரிபெர்ட் தான் மேற்கொண்ட அனைத்து துன்பங்களையும் இறைவனின் அருளால் பொறுமையோடு ஏற்றார். தன் பணியை தளராமல் சிறப்பாக ஆற்றினார். ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டுச் செயல்பட்டார். இவர் இறந்தபிறகு கொலொனிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
செபம்:
குறைவில்லா நிறைபொருளாம் ஆண்டவராகிய இறைவா! உமது அன்பின் வழியில் இன்றைய புனிதரை வழிநடத்தினீர். உம் மகன் இயேசுவின் பெயரால் அவர் செய்த அனைத்து பணிகளிலும் நிறைவைத் தந்தீர். வாழ்வு முழுவதும் உடனிருந்து பாதுகாத்தீர். அவரின் வழியாக வோர்ம்ஸ் நகரில் வாழும் மக்களையும் கொலோன் நகரில் உள்ள மக்களையும் ஆசீர்வதித்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Monday, 14 March 2016
இன்றைய புனிதர் 2016-03-15 பயஸ் கெல்லர் Pius Keller

இன்றைய புனிதர் 2016-03-15
பயஸ் கெல்லர் Pius Keller
பிறப்பு 25 செப்டம்பர் 1825, பாலிங்ஹவ்சன் Nallinghausen, பவேரியா
இறப்பு 15 மார்ச் 1904, முனர்ஸ்டாட் Münnerstadt, பவேரியா
இவர் ஓர் விவசாயியின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர் இவருக்கு யோஹானஸ் Johannes என்று பெயரிட்டனர். இவர் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே 1849 ஆம் ஆண்டு அகஸ்டின் துறவற இல்லத்திற்குச் சென்றார். இவர் அவ்வில்லத்திற்குச் சென்ற ஒரு சில ஆண்டுகளில் அவ்வில்லத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தனது 53 ஆம் வயதில் அச்சபையின் மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு இவர் மீண்டும் முனர்ஷ்டட் திரும்பினார்.
இவர் அங்கு எண்ணிலடங்கா துறவற இல்லங்களைக் கட்டினார். அத்துடன் குருமடங்களையும் நிறுவினார். இவர் ஒப்புரவு அருட்சாதனம் கேட்கும் பணியை எப்போதும் தவறாமல் செய்தார். இவர் தன் வாழ்வின் எல்லாச் சூழலிலும் மிகக் கடுந்தவ வாழ்வை வாழ்ந்தார். இவர் புனித அகஸ்டின் துறவற இல்லத்தின் வாழும் புனிதர் என்றழைக்கப்பட்டார். 1934 ல் ஆண்டு முத்திபேறுபட்டம் அளிப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிந்ததும் எழுத்தில் வடிவமைத்து அறிக்கைகள் அனைத்தும் உரோமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இவரின் உடல் அகஸ்டின் துறவற இல்லத்தில் அமைந்துள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லவரே! பயஸ் கெல்லரை நீர் உம் மகனாகத் தேர்ந்தெடுத்தீர். உம் பணியை பரப்ப ஆசீர் வழங்கினீர். அவரின் வழியாக துறவற மடங்களை கட்டி எழுப்பினீர். உம் அழகிய பணி இம்மண்ணில் பரவ அவரை உமது கருவியாக பயன்படுத்தினீர். அவரின் வழியாக அச்சபையை உம் சிறகுகளின் நிழலில் வைத்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
இன்றைய புனிதர் 2016-03-14 காட்ரஸ் நகர் ஆயர் லியோபின் Leobin von Chartres
இன்றைய புனிதர் 2016-03-14
காட்ரஸ் நகர் ஆயர் லியோபின் Leobin von Chartres
பிறப்பு 6 ஆம் நூற்றாண்டு
இறப்பு 14 மார்ச் 557, காட்ரஸ், பிரான்சு
இவர் நாட்டிலுள்ள லூபின் Lubin என்ற ஊரில் இளைஞர்களை வழிநடத்தும் ஆயனாக இருந்தார். இவர் நன்றாக படிக்கக் கூடியவராகவும், வாசிக்க்க் கூடியவராகவும் இருந்தார். இவர் படிப்பறிவில்லாதவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் ஒருமுறை படிப்பறிவில்லா துறவி ஒருவருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார். அத்துறவி ஒருமுறை லியோபினை தன் துறவற இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது லியோபின் துறவியர்களின் வாழ்வால் கவரப்பட்டார். இதனால் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். காட்ரஸ் என்ற மறைமாவட்டத்தின் பக்கத்து மாவட்டமான பிரவ்வில் Brau இருந்த, ஓர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். 544 ஆம் ஆண்டு சில்டேபெர்ட் Childebert என்றழைக்கப்பட்ட அரசன் ஒருவன், காட்ரஸ் நகரின் அரசனாக இருந்தார். அரசன் லியோபினை 544 ல் காட்ரஸ் மறைமாநிலத்தின் ஆயராக தேர்ந்தெடுத்தான். லியோபின் ஆயராக இருக்கும்போது மக்கள் அவரைப் புனிதராக கருதினார். இவர் செய்த மறைப்பணியே இவர் புனிதர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. இவர் இறந்தப் பிறகு காட்ரசிலுள்ள பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். செபம்: ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! தான் பெற்ற கல்வியறிவின் வழியாக மற்றவர்களுக்கும், கல்வியைக் கற்று கொடுத்து சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த புனித லியோபின் அவர்களின் மகத்துவமிக்க செயல்களுக்காக நன்றி கூறுகின்றோம். கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் வழிநடத்தும். காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாணவர்களை புரிந்துக்கொண்டு வழிகாட்ட நீர்தாமே உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Sunday, 13 March 2016
இன்றைய புனிதர் 2016-03-13 செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB

இன்றைய புனிதர் 2016-03-13
செவிலா நகர் பேராயர் லேயாண்டர் Leander von Sevilla OSB
பிறப்பு 540, கார்டாகெனா Cartagena, ஸ்பெயின்
இறப்பு 13 மார்ச், 600, செவிலா Sevilla, ஸ்பெயின்
பாதுகாவல் : செவிலா நகர், மூட்டுவலியிலிருந்து
இவர் உரோமையர் ஒருவரின் குடும்பத்தில் பிறந்தார். இவரின் சகோதரர் புனித இசிதோர் Isidor. லேயாண்டர் புனித பெனடிக்ட சபையில் சேர்ந்து குருவானார். இவர் அரசர் மகன் ஒருவனுக்கு ஆலோசகராக இருந்தார். அரசரின் மகனின் உதவியுடன், அந்நாடு முழுவதும் விசுவாசத்தை பரப்பினார். இவர் கான்ஸ்டாண்டிநோபிளில் இறைவார்த்தையை எடுத்துரைத்தார். பிறகு திருத்தந்தை பெரிய கிரகோரி அவர்களின் நட்பைப் பெற்றார்.
இவர் ஏறக்குறைய 583 ஆம் ஆண்டில் செவிலா நகரின் பேராயராக திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் தனது பதவி காலத்தில் தன் மறைமாவட்ட மக்களை கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவ விசுவாசத்தில் வளரச் செய்தார். இவர் ஆரியன் கொள்கைகளை எதிர்த்து போரிட்டார். சில பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு வெளிப்படையாகவே கிறிஸ்துவைப்பற்றி போதித்தார்.
செபம்:
உலகை படைத்து பராமரித்தாளும் பரம்பொருளே எம் இறைவா! உம்மை இவ்வுலகில் பறைசாற்ற, பலவிதங்களில் பணியாற்றிய உம் இறையடியார்களை நினைவுகூறும். உமக்கெதிராக செயல்படும் மக்களை ஆசீர்வதியும். உம் மக்களை நீர் ஆசீர்வதியும். தூய ஆவியால் நிரப்பியருளும். உம்மேல் அன்பும் அக்கறையும் கொண்டு வாழச் செய்தருளும்.
Friday, 11 March 2016
இன்றைய புனிதர் 2016-03-12 கன்னி ஃபீனா Fina

இன்றைய புனிதர் 2016-03-12
கன்னி ஃபீனா Fina
பிறப்பு 1238, சான் கிமிக்னானோ San Gimignano, இத்தாலி
இறப்பு 12 மார்ச் 1253, இத்தாலி
பாதுகாவல் : சான் கிமிக்னானோ நகர்
இவர் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர். ஒருவேளை உணவு கூட வயிறார உண்ணமுடியாத அளவிற்கு ஏழ்மையாக வாழ்ந்தவர். அவ்வாறு இருந்தபோதிலும், தன்னிடம் உள்ள உணவில் சிறிதளவை மற்ற ஏழைகளுடன் பகிர்ந்து வாழ்ந்தார். இவர் நோயால் தாக்கப்பட்டு, மிகக் கொடுமையான வேதனைகளை அனுபவித்தார். தாங்கமுடியாமல் நோயால் துடித்தபோதும், பொறுமையை இழக்காமல், இறைவனை இறுக பற்றி வாழ்ந்தார். தான் பெறும் வலிகளை இறைவனுக்காக அனுபவிக்கிறேன் என்று புன்னகையோடு ஏற்றார். இவர் வாழும் போதே புனிதர் என்று போற்றப்பட்டார். இவர் தனது இறுதி நாட்களை சான் கிமிக்னானோவில் இருந்த பேராலயத்தில் கழித்தார். இவர் இறந்தபிறகும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். அப்பேராலயத்தின் அருகில் இவர் பெயரில் ஆலயம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.
செபம்:
மருத்துவர் நோயற்றவர்க்கு அன்று, மாறாக நோயுற்றவர்க்கே என்று மொழிந்த எம் இறைவா! நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நண்பர்களை ஆசீர்வதியும். புனித ஃபீனாவைப் போல தங்களின் வலியிலும் உம்மை பற்றுக்கொண்டு, பொறுமையைக் கடைபிடிக்க செய்தருளும். நீரே குணமளிப்பவராக இருந்து, உமக்கு விருப்பமானால் நோய்களை குணமாக்கி நலமளித்திட வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய புனிதர் 2016-03-11 குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM

இன்றைய புனிதர் 2016-03-11
குரு யோஹானஸ் பாப்டிஸ்டா ரீகி Johannes Baptista Righi OFM
பிறப்பு 1469, பாப்ரியானோ Fabriano, இத்தாலி
இறப்பு 11 மார்ச் 1539, அன்கோனா Ancona, இத்தாலி
இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தார். இவர் இவ்வுலக வாழ்வில் சிறிதும் ஈடுபாடு இல்லாமல் வாழ்ந்தார். இவர் தான் ஓர் குருவாக வேண்டுமென்று சிறுவயதிலிருந்தே ஆசைக்கொண்டார். இதனால் இவர் தனது 15ஆம் வயதில் புனித பிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்து குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு பிரான்சிஸ்கன் சபையிலும் முழு திருப்தி இல்லாமல் போகவே, மீண்டும் அன்கோனா திரும்பினார். அங்கு அவர் தான் இறப்பின் வரை மறைப்பணியாற்றினார்.
இவர் சிறப்பாக நோயாளிகளை சந்தித்து, ஆறுதல் கூறி நோயில் பூசுதல் வழங்கி, ஒவ்வொரு நோயாளிகளையும் இறைவனோடு ஒன்றிக்கச் செய்தார். இவர் தான் இறந்த பிறகு எண்ணிலடங்கா புதுமைகளைச் செய்தார்.
செபம்:
அருளை வாரி வழங்குபவரே இறைவா! ஏழைகளிடத்தில் அன்பு கொண்டு மறைப்பணியாற்றிய அருட்தந்தை யோஹானஸ் பாப்டிஸ்டாவைப் போல, நாங்களும் ஏழைகளின் மேல் அக்கறை கொண்டு வாழச் செய்தருளும். ஏழை மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக உழைக்க எமக்கு நல்ல மனதைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Wednesday, 9 March 2016
இன்றைய புனிதர் 2016-03-10 மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ

இன்றைய புனிதர் 2016-03-10
மறைசாட்சி யோஹானஸ் ஒகில்வீ Johannes Ogilvie SJ
பிறப்பு 1580, டுரும் Drum, ஸ்காட்லாந்து
இறப்பு 10 மார்ச் 1615, கிளாஸ்கோவ் Glasgow, ஸ்காட்லாந்து
புனிதர்பட்டம்: 17 அக்டோபர் 1976, திருத்தந்தை 6 ஆம் பவுல்
இவர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தந்தை மரியா ஸ்டூவர்ட் Maria Stuart என்றதோர் பணியகத்தில் மேனேஜராகப் புரிந்தார். இவர் மிகத் திறமையானவர். யோஹானஸ் தனது 17 வயதிற்குள்ளேயே ஏராளமான பள்ளிகளில் படித்து பட்டம் பெற்றார். தனது 17 ஆம் வயதில் கத்தோலிக்க விசுவாசத்தில் திளைந்தார். இவர் திருத்தந்தையர்கள் கற்கும் பள்ளியில் சேர்ந்து தனது துறவற பயிற்சிகளைப் பெற்றார். பின்னர் 1599 ல் இயேசு சபையில் சேர்ந்தார். ஏறக்குறைய 10 ஆண்டுகள் கிராஸ் Graz, ஆஸ்திரியா Austria நாடுகளில் மிக முக்கிய பணிகளுக்கு பொறுப்பேற்றார். 1610 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் குருப்பட்டம் பெற்றார். அதன்பிறகு மீண்டும் தன் தாய்நாடான ஸ்காட்லாந்திற்கு திரும்பினார். அதன்பிறகு எடின்பூர்க் என்ற இடத்தில் வழக்கறிஞர் பணியாற்றிய ஒருவரின் மகனுக்கு கல்விக் கற்றுக்கொடுத்தார். இவர் கத்தோலிக்க விசுவாசத்தை கண்ணும் கருத்துமாக இருந்து பரப்பினார். இதனால் பலமுறை சிறைபிடித்துச் செல்லப்பட்டார். இவர் 1614 ஆம் ஆண்டு கிளாஸ்கோவில் மறைப்பரப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது மீண்டும் சிறைபிடித்து செல்லப்பட்டார். கத்தோலிக்க் விசுவாசத்தை கைவிடும்படி வற்புறுத்தப்பட்டார். ஆனால் இவர் அவ்விசுவாசத்தில் சிறிதும் தளராமல் சிறையிலும் போதித்தார். இதனால் இவர்மீது பொய் குற்றம் சுமத்தப்பட்டு, இறப்பதர்கு ஆணை பிறப்பிக்கபட்டது. அவ்வாணையின் பேரில் இவர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டார். இவர்தான் இறக்கும்போது கடவுளை வழிப்பட்டு விட்டு மரித்தார்.
செபம்:
தேர்ந்து கொண்டவரோடு உடன்படிக்கை செய்து கொண்ட எம் இறைவா! தனது இறுதி மூச்சுவரை உம்மீது கொண்ட இறை விசுவாசத்தில் சிறிதும் தளராமல் உம்மை பற்றிகொள்ள புனித யோஹானசிற்கு அருள் கூர்ந்தீர். அவர் கொண்ட அவ்விசுவாச த்தை நாங்களும் எம் வாழ்வில் பிரதிபலிக்க செய்தருள வாய் ப்பளிக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய புனிதர் 2016-03-09 திருக்காட்சியாளர், சபை நிறுவுநர் பிரான்சிஸ்கா ரோமானா Franziska Romana

இன்றைய புனிதர் 2016-03-09
திருக்காட்சியாளர், சபை நிறுவுநர் பிரான்சிஸ்கா ரோமானா Franziska Romana
பிறப்பு 1384, ரோம்
இறப்பு 9 மார்ச் 1440, ரோம்
புனிதர்பட்டம் : 1925, திருத்தந்தை 11 ஆம் பயஸ்
பாதுகாவல் : உரோம், பெண்கள், கார் ஓட்டுநர்
இவர் ஓர் உயர்தர குடும்பத்தில் பிறந்தவர். தனது 11 ஆம் வயதில் துறவற இல்லத்திற்கு சென்றார். இவர் துறவறத்திற்கு செல்லக்கூடாது என்று இவரின் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். லோரன்ஸோதே போசியானீ (Lorenzo de Ponziani) என்பவரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். இதனால் இவர் தான் என்ன செய்வதென்று அறியா நிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 40 ஆம் வயதில் 6குழந்தைகளுக்கு தாயானார். இவர் கணவர் இவருடன் 12 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பிறகு 1436 ல் இறந்துவிட்டார். அதன்பிறகு பிரான்சிஸ்கா சபை ஒன்றை நிறுவினார். கைவிடப்பட்ட பெண்கள் பலர் இச்சபையில் சேர்ந்தனர். இவர்கள் பல ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்தனர். சில ஆண்டுகள் கழித்து ஏராளமான இளம்பெண்களும் இச்சபையில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் கீழ்படிதல் என்னும் வார்த்தைப்பாட்டை பெற்று துறவற வாழ்வை வாழ்ந்தனர்.
பிரான்சிஸ்கா தன் சபையை வழிநடத்த எப்போதும் தனது காவல் தூதரிடம் மன்றாடினார். அவரிடமிருந்து பலமுறை திருக்காட்சிகளைப் பெற்று அதன்படி தன் சபையை வழிநடத்தினார். இவர் இறந்த பிறகு இவரின் உடல் மரியா நூவோவா என்றழைக்கப்பட்ட ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
செபம்:
அன்பின் இறைவா! உம்மீது கொண்ட ஆர்வம் புனித பிரான்சிஸ்கா ரோமானாவின் உள்ளத்தில் பற்றி எரிந்தது. இதனால் அவர் தான் திருமனம் செய்தபின்னரும் கூட உம்மை இறுகப்பற்றி வாழ்ந்தார். உம் நற்செய்தியைப் பரப்பி ஓர் சபையையும் தோற்றுவித்தார். தந்தையே! இன்றைய காலக்கட்டத்தில் இல்லற வாழ்வை வாழும் பெண்களை ஆசீர்வதியும். தன் இல்லற வாழ்வின் மத்தியிலும் உம்மைப் பற்றிக் கொண்டு, இறையுறவில் தன் குடும்பத்தை வளர்க்க வரம் தாரும்.
Monday, 7 March 2016
இன்றைய புனிதர் 2016-03-08 சபை நிறுவுநர் யோஹானஸ் Johannes von Gott

இன்றைய புனிதர் 2016-03-08
சபை நிறுவுநர் யோஹானஸ் Johannes von Gott
பிறப்பு 8 மார்ச்1495,மோண்டேகோர் ஓ நோவோ Montemor O Novo, போர்த்துக்கல்
இறப்பு 8 மார்ச் 1550, கிரானாடா Granada, ஸ்பெயின்
புனிதர்பட்டம் : 1886, திருத்தந்தை 13 ஆம் லியோ பாதுகாவல் நோயாளிகள்,மருத்துவமனைகள்,நூலகங்கள்,அச்சிடுவோர்
இவர் தனது வாழ்வில் அமைதியின்றி வாழ்ந்தார். தன்னை இறைவன் அவரின் இறைபணியை ஆற்ற அழைப்பதாக உணர்ந்தார். இதனால் ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று அவிலா நகர் யோஹானஸ் அவர்களை பின்பற்றி, மறைபரப்பு பணியை ஆற்றினார். அப்பணியுடன் மருத்துவமனைகளை கட்டி எழுப்பினார். செவிலியர் படிப்பை ஸ்பெயினில் அறிமுகப்படுத்தினார். இவர் மருத்துவமனைகளுக்குச் சென்று மனநோயால் துன்பப்படும் மக்களிடம் மணிக்கணக்கில் அமர்ந்து உரையாடி ஆறுதல் வழங்கினார்.
துன்பங்களிலிருந்து வெளியேறி நலமான வாழ்வை வாழ வழிகாட்டினார். இவர் 1540 ல் கிரானாடாவிலும் மருத்துவமனையை நிறுவினார். இவர் ஊர் ஊராகச் சென்று நோயாளிகளை கவனித்தார். மறைப்பணி ஆற்றும்போது எண்ணிலடங்கா வேதனைகளை அனுபவித்தார்.
செபம்:
நலம் அளிக்கும் வல்லவரே எம் தலைவா! ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் நீர் ஏதோ ஓர் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றீர். மனநோயால் அவதிப்படும் உள்ளங்களை நீர் கண்ணோக்கியருளும். நீர் தாமே உள்ளத்தின் வேதனைகளை அறிந்து அவற்றை ஆசீர்வாதமாக மாற்றியருளும். துக்கம் மறைந்து மகிழ்ச்சியோடு வாழ வழிகாட்டியருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Sunday, 6 March 2016
இன்றைய புனிதர் 2016-03-07 மறைசாட்சியர் புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசிடாஸ் Perpetua und Felicitas
இன்றைய புனிதர் 2016-03-07
மறைசாட்சியர் புனிதர்கள் பெர்பெத்துவா, பெலிசிடாஸ் Perpetua und Felicitas
பிறப்பு 2 ஆம் நூற்றாண்டு,கர்த்தாகோ(?), துனேசியன்
இறப்பு 7 மார்ச், 202 (?). கர்த்தாகோ Karthago, Tunesien
பெலிசிடாஸ் ஓர் அடிமைப்பெண்ணாக இருந்தார். பெர்பெத்துவா ஓர் பக்தியுள்ள குடும்பத்தில் வளர்ந்தவர். இவர்கள் இருவரும் கர்த்தாகோவில் இருந்த காட்டேகுமெனனும் Katechumenen அடிமைப்படுத்தப்பட்டார்கள். அங்கு திருமுழுக்கு பெறுவதற்கு தயாரிக்கும் பணியையும் செய்து வந்தார்கள், இவர்கள் அப்பணியை தொடர்ந்தாற்றக் கூடாதென அரசன் செப்டிமுஸ் சேவேரூஸ் Septimus Severus தடைவிதித்தான். ஆனால் இவர்கள் அத்தடையை எதிர்த்து தொடர்ந்து மறைக்கல்வியை கற்பித்தனர். இதனால் அரசன் வெகுண்டெழுந்து கோபம் கொண்டான். இருவர் மேலும் வெடிமருந்தை வைத்து, பட்டாசுகள் எரிந்து கொல்லும்படி ஆணையிட்டான்.
அரசன் இவ்விருவரையும் கொல்வதற்குக் கொண்டு சென்ற வழியிலும், இப்புனிதர்கள் போதித்து திருமுழுக்கை வழங்கினர். இதனால் அரசன் இன்னும் கோபம் கொண்டான். அரசன் இவ்விருவரையும் மிகக் கொடுமையாக தீர்ப்பிட்டு கொன்றான். இம்மறைசாட்சியரின் சாவு பற்றிய மிக விறுவிறுப்பான வரலாறு இன்றளவும் உள்ளது.
செபம்:
எல்லாம் வல்ல ஆண்டவரே! மறைசாட்சியரான புனிதர்கள் பெர்பெத்துவாவும், பெலிசிட்டாசும் உமதன்பினால் ஆட்கொள்ளப்பட்டு தங்களை வாட்டி வதைத்தவர்களை எதிர்த்து நின்று இறப்பின் வேதனையை வெற்றி கொண்டார்கள். இப்புனிதர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசுவதின் வழியாக, நாங்கள் எந்நாளும் உம்மை அன்பு செய்ய செய்தருளும்.
Saturday, 5 March 2016

இன்றைய புனிதர் 2016-03-06
துறவி கேலேட்டா போய்லெட் Coletta Boillet OSCI
பிறப்பு 13 ஜனவரி 1381,கோர்பீ Corbie, பிரான்சு
இறப்பு 6 மார்ச் 1447, கெண்ட் Gent, பெல்ஜியம்
முத்திபேறுபட்டம் : 1740 புனிதர்பட்டம் : 25 மே 1807
பாதுகாவல் : புனித கிளாரா சபை, வீட்டுவேலை செய்வோர், கெண்ட் நகர், காய்ச்சல், மலடிகள், சுகபிரசவம்.
இவர் பல ஆண்டுகள் துறவியைப்போலவே தனிமையாக வாழ்ந்த வந்தார். பிறகு 1406 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியை பின்பற்றி புனித கிளாரம்மாள் சபையில் சேர்ந்து துறவியானார். பின்னர் இவரே 20 க்கும் மேற்பட்ட துறவற சபைகளை நிறுவினார். இத்துறவற சபைகள் அனைத்தும் திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட் அவர்களின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டது, இவர் நிறுவிய அனைத்து இல்லங்களுக்கும் "கேலேட்டா இல்லம்" என்று தன் பெயரைச் சூட்டினார்.
இவர் ஆண்களுக்கென்றும் தன் பெயரில் துறவற இல்லங்களை நிறுவினார். ஆயரில்லா ஆடுகளைப்போல திரிந்த மக்களை ஒன்று மறைப்பணி ஆற்றினார்.
செபம்:
திராட்சைத் தோட்டத்தின் ஆண்டவரும், தலைவருமான எம் கடவுளே, இன்றைய புனிதர் தொடங்கிய அனைத்துச் சபைகளையும் நீர் பராமரித்து தொடர்ந்து உம் பாதையில் பயணிக்க உதவிபுரியும். இச்சபை சகோதர, சகோதரிகள் செய்யவேண்டிய அலுவலையும் அதற்குரிய நியாயமான ஊதியத்தையும் கொடுத்தருளும். இவர்களின் அன்றாட வாழ்வின் சுமையை தாங்கிக்கொண்டு முறைப்பாடின்றி அனைத்திலும் உமது திருவுளத்தை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு உதவிட வேண்டுமென்று புனித கேலேட்டா வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய புனிதர் 2016-03-05 சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske
இன்றைய புனிதர் 2016-03-05
சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske
பிறப்பு 29 ஜனவரி 1821, பிரேஸ்லவ் Breslau, போலந்து
இறப்பு 5 மார்ச் 1888, பிரேஸ்லவ் Breslau, போலந்து
இவர் தான் ஓர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஊர் ஊராகச் சென்று மறைப்பணியை ஆற்றினார். பேராலயங்களில் சிறப்பான மறையுரை ஆற்றி, பலரை மனந்திருப்பினார். திருப்பலிக்கு வராத மக்களையும் தன் அழகிய மறையுரையால் கவர்ந்து இறை இல்லம் நாடி வரச் செய்தார். இளைஞர்களின் மனதை மிக எளிதாகக் கவர்ந்தார், கைவிடப்பட்ட இளைஞர்களுக்கு இல்லம் ஒன்றை எழுப்பி, அவர்களை பராமரித்து வந்தார்.
இவர் அக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவனித்து பராமரிப்பதற்கென்று, எட்விக் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு இச்சபை, திருத்தந்தை அவர்களால் துறவறச் சபை என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ராபர்ட் ஸ்பைஸ்கே "காரித்தாஸ் அப்போஸ்தலர்" (Apostel Caritas) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இறந்தபிறகு, இவரால் தொடங்கப்பட்ட சபையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.
செபம்:
படைப்பனைத்திற்கும் பாதுகாவலே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். இவர்கள் தெளிந்த சிந்தனையுடன் தங்களது வாழ்வை வாழ உதவி செய்யும். நல்லதோர் எதிர்காலத்தைப் பெற்று, நாட்டிற்கும் வீட்டிற்கும் எம் திருச்சபைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
Thursday, 3 March 2016
இன்றைய புனிதர் 2016-03-04 போலந்து நாட்டு அரசரின் மகன் கசிமீர் Kasimir von Polen

இன்றைய புனிதர் 2016-03-04
போலந்து நாட்டு அரசரின் மகன் கசிமீர் Kasimir von Polen
பிறப்பு5 அக்டோபர் 1458
இறப்பு 4 மார்ச் 1484, குரோட்னோ Grodno, லிட்டவுன் Litauen
புனிதர்பட்டம்: 1521
பாதுகாவல் : போலந்து, இளைஞர்கள்
இவர் அரசர் 4 ஆம் கசிமீரின் மகன். இவர் பெற்றோருக்கு இவர் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவர்1471 ஆம் ஆண்டு இவரின் 13-வது வயதில் ஹங்கேரி நாட்டிற்கு அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இவருக்கு எதிராக மத்தியாஸ் கோர்வினுஸ் Matthias Corvinus என்பவன் செயல்பட்டான். ஏனென்றால் மத்தியாஸ் தானும் அரசராக வேண்டுமென்று ஆசைக்கொண்டான். இவன் கசிமீர் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். அவர் செய்த அனைத்துப் பணிகளுக்கும் தடைவிதித்துக் கொண்டே எதையும் செய்யவிடாமல் தடுத்தான்.
இதனால் ஒரு பக்கத்தில் கசிமீர் மிக மகிழ்ச்சியடைந்தார். வரும் தடைகள் அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே இருந்தார். அரசர் பதவியிலிருந்து விலகிச் சென்று, இறைவனை பிடித்துகொள்ள கடவுள் செய்யும் உதவிகளை நினைத்து, இடைவிடாது இறைவேண்டல் செய்து நன்றி கூறினார். இவர் அரசர் மூன்றாம் பிரடெரிக்கின் மகளை 1481 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயச் சூழல் உண்டானபோது அவற்றை மறுத்தார். திருமணத்திற்கு பதிலாக கற்பு என்னும் வார்த்தைப்ப்பாட்டை எடுத்துகொண்டார்.
இவர் லிட்டவுனிலிருந்த வில்னா Wilna என்ற ஊரிலிருந்த கல்லூரியில் அமைந்திருந்த பேராலயத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்தார். இவர் இறந்த பிறகும் அங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வில்னாவில் உள்ள செயிண்ட் பீட்டர் பவுல் பேராலயத்திற்கு மாற்றப்பட்டது.
இவர் தான் இறக்கும் வரை கிறிஸ்துவப் புண்ணியங்களில் சிறப்பாக, கற்பு நெறியிலும், ஏழை எளியவர்க்கு இரங்கி அன்பு செய்வதிலும் சிறந்து விளங்கினார். திருமறையைப் பரப்புவதில் ஆர்வமிக்கவராய் திகழ்ந்தார். தூய நற்கருணைமீது பக்தியும் கன்னிமரியின்மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார்.
செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உமக்கு நாங்கள் ஊழியம் செய்வது உம்முடன் ஆட்சி செய்வதாகும். எங்களது நேர்மையான தூய வாழ்வினால், உமக்கு என்றும் ஊழியம் செய்ய புனித கசிமீரின் பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
இன்றைய புனிதர் 2016-03-03 மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM

இன்றைய புனிதர் 2016-03-03
மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM
பிறப்பு 4 ஜனவரி 1675, கோனெர்ஸ்ராய்த் Konnersreuth, பவேரியா
இறப்பு 3 மார்ச் 1716, கொண்டர் Gondar, எத்தியோப்பியா
முத்திபேறுபட்டம்: 20 நவம்பர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்
இவர் பிறந்த ஊர் மக்களால், அப்போஸ்தலர் என்று அழைக்கப் பட்டார். சிறுவயதிலிருந்தே மறைப்பணியாற்றுவதில் அக் கறை காட்டி வந்தார். இவர் குருவான பிறகு 3 அருட்தந்தையர்க ளுடன் இணைந்து மறைப்பணியாற்றினார். மறைப்பணியாற் றும்போது பல இன்னல்களை எதிர்கொண்டார். இவர் அரசர் ஒருவர் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போது அவ்வரசன் இவரை கற்களால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான்.
அச்சமயத்தில் இவர் இறைவனின் அருளால் எத்தியோப்பிய நாட்டில் ஒருநாள் நடந்த திருப்பலியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் திருப்பலி நிறைவேற்றும்போது அரசரின் படைவீரர்களால் பிடிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்த சமயத்தில் அனைவராலும் கற்களால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
செபம்:
அற்புதங்களை செய்து வரும் எம் இறைவா! உம்மீது கொண்ட அன்பால் ஆர்வமுடன் இறைப்பணியை செய்ய நீர் சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றீர். இறையழைத்தல் குறைந்து வரும் இந்நாட்களில், உம் அறுவடைக்குத் தேவையான மிகுதியான ஆட்களை நீர் தேர்வு செய்து, உம் பணியை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
Tuesday, 1 March 2016
இன்றைய புனிதர் 2016-03-02 பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI
இன்றைய புனிதர்
2016-03-02
பியோமன் நகர் ஆக்னெஸ் Agnes von Böhmen OSCI
பிறப்பு 1207 (?), ப்ராக் Prag, செக் குடியரசு
இறப்பு 2 மார்ச் 1282, ப்ராக் Prag, செக் குடியரசு
புனிதர்பட்டம்: 12 நவம்பர் 1989 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்
இவர் பியோம் அரசர் முதலாம் ஒட்டோகர் என்பவரின் மகள். இவர் இளம் வயதிலிருக்கும்போதே 2 முறை திருமணம் செய்வதற்கு நிச்சயமானவர். முதல் முறை போலேஸ்லவ்ஸ் Boleslaus என்பவருடனும், இரண்டாம் முறை அரசர் 2 ஆம் பிரிட்ரிக் Friedrich II என்பவருக்கும் மண ஒப்பந்தமானவர். ஆனால் இரு முறையும் அரசியல் காரணமாக திருமணம் நடைபெறாமல் போனது. ஆக்னெஸ் தன் திருமணம் நடைபெறக்கூடாது என இறைவனிடம் இடைவிடாமல் வேண்டினார். அதன்படியே அவரின் விருப்பத்தை இறைவன் நிறைவேற்றினார். இதனால் ஆக்னெஸ் மிக மகிழ்ச்சியடைந்தார்.
இவர் புனித பிரான்சிஸ் அசிசியாரின் வாழ்வை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்ந்தார். புனித கிளாராவின் நட்பைப் பெற்று வாழ்ந்தார் என்று அவரே எழுதிய கடிதங்கள் விளக்குகின்றது. இவர் மீண்டும் அரசர் 2 ஆம் பிரட்ரிக் அல்லது அரசர் 2 ஆம் ஹென்றி இவர்களுள் ஒருவரை திருமணம் செய்யவேண்டிய கட்டாயச் சூழ்நிலை உண்டானது. இதனால் 1234 ஆம் ஆண்டு தனது அரசிக்குரிய கிரீடத்தை பெற்றார். இக்கிரீடத்தை பெற்றபோது தான் ஓர் கிளரீசியன் துறவி என்று தனக்குள் கூறிக்கொண்டு வார்த்தைப்பாடுகளைப்பெற்றார்.
இவர் தனது அரசிக்குரிய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கொண்டு, தேவாலயங்களுக்கும், துறவற இல்லங்களுக்கும் உதவினார். இவர் இறந்தபிறகு ஏராளமான புதுமைகளைச் செய்தார்.
செபம்:
ஏழ்மையின் காதலனே எம் தலைவா! நீர் ஏழைகளின் மேல் அன்பு கொண்டு, ஏழைகளுக்காகவே இவ்வுலகில் மனுவுறு எடுத்தீர். எங்களிடம் பணம், பதவி, பட்டமென அனைத்து செல்வங்கள் இருக்கும்போதும் மன நிம்மதி இல்லாமல் வாடுகின்றோம். புனித ஆக்னெசின் துணையாலும், உதவியாலும் எம்மிடம் உள்ளவற்றை பிறரிடம் பகிர்ந்து, நிறைவுடன் வாழ செய்தருள வேண்டுமென்று தந்தையே உம்மை மன்றாடுகின்றோம்
Subscribe to:
Posts (Atom)