Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 14 March 2016
இன்றைய புனிதர் 2016-03-14 காட்ரஸ் நகர் ஆயர் லியோபின் Leobin von Chartres
இன்றைய புனிதர் 2016-03-14 காட்ரஸ் நகர் ஆயர் லியோபின் Leobin von Chartres
பிறப்பு 6 ஆம் நூற்றாண்டு
இறப்பு 14 மார்ச் 557, காட்ரஸ், பிரான்சு
இவர் நாட்டிலுள்ள லூபின் Lubin என்ற ஊரில் இளைஞர்களை வழிநடத்தும் ஆயனாக இருந்தார். இவர் நன்றாக படிக்கக் கூடியவராகவும், வாசிக்க்க் கூடியவராகவும் இருந்தார். இவர் படிப்பறிவில்லாதவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்தார். இவர் ஒருமுறை படிப்பறிவில்லா துறவி ஒருவருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார். அத்துறவி ஒருமுறை லியோபினை தன் துறவற இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது லியோபின் துறவியர்களின் வாழ்வால் கவரப்பட்டார். இதனால் தானும் ஓர் குருவாக வேண்டுமென்று ஆசைக்கொண்டார். காட்ரஸ் என்ற மறைமாவட்டத்தின் பக்கத்து மாவட்டமான பிரவ்வில் Brau இருந்த, ஓர் குருமடத்தில் சேர்ந்து குருவானார். 544 ஆம் ஆண்டு சில்டேபெர்ட் Childebert என்றழைக்கப்பட்ட அரசன் ஒருவன், காட்ரஸ் நகரின் அரசனாக இருந்தார். அரசன் லியோபினை 544 ல் காட்ரஸ் மறைமாநிலத்தின் ஆயராக தேர்ந்தெடுத்தான். லியோபின் ஆயராக இருக்கும்போது மக்கள் அவரைப் புனிதராக கருதினார். இவர் செய்த மறைப்பணியே இவர் புனிதர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது. இவர் இறந்தப் பிறகு காட்ரசிலுள்ள பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். செபம்: ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! தான் பெற்ற கல்வியறிவின் வழியாக மற்றவர்களுக்கும், கல்வியைக் கற்று கொடுத்து சிறந்த ஆசிரியராகத் திகழ்ந்த புனித லியோபின் அவர்களின் மகத்துவமிக்க செயல்களுக்காக நன்றி கூறுகின்றோம். கல்வியறிவை வழங்கும் ஒவ்வொரு ஆசிரியர்களையும் வழிநடத்தும். காலத்தின் சூழ்நிலைக்கேற்ப மாணவர்களை புரிந்துக்கொண்டு வழிகாட்ட நீர்தாமே உதவிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment