Enter your username and password to enter your Blogger Dasboard
Friday, 18 March 2016
இன்றைய புனிதர் 2016-03-19 தூய கன்னிமரியாவின் கணவர் புனித யோசேப்பு
இன்றைய புனிதர்2016-03-19
தூய கன்னிமரியாவின் கணவர் புனித யோசேப்பு
பிறப்பு நாசரேத்து இறப்பு முதலாம் நூற்றாண்டு
10 ஆம் நூற்றாண்டிலிருந்து மேற்றிசை நாடுகளின் பல திருவிழாக்கள் பட்டியல்களின்படி புனித யோசேப்பு மார்ச் 19 ஆம் நாள் நினைவுகூரப்படுகின்றார். இத்திருவிழா அதே தினத்தன்று கொண்டாடப்பட வேண்டுமென்று1479 ஆம் ஆண்டு உரோமையில் ஏற்றுகொள்ளப்பட்டது. பின்னர் 1621 ஆம் ஆண்டு இத்திருவிழா எல்லார்க்கும் என்றுமுள்ள பொது உரோமைப் பட்டியலில் இடம்பெற்றது.
இவர் தாவீதின் மகன். இவர் ஓர் தச்சர். இவர் மரியாவிற்கு மணம் ஒப்பந்தமானவர். அவர்கள் கூடிவாழும் முன்பே மரியா கருவுற்றிருந்தது. தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிட திட்டமிட்டார். இவ்வாறு அவர் சிந்திக்கும்போது வானதூதர் அவரின் கனவில் தோன்றி மரியாவை ஏற்றுக்கொள்ளும்படி கூறினார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்கு பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார். மரியா தன் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை. யோசேப்பு அம்மகனுக்கு இயேசு என்று பெயரிட்டார். குழந்தையை ஏரோது கொல்லத் தேடும்போது, ஆண்டவரின் தூதர் யோசேப்பின் கனவில் தோன்றி குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பி ஓடும்படி கூறினார். தூதர் கனவில் உரைத்தவாறே யோசேப்பு செய்தார். மீண்டும் ஆண்டவரின் தூதர் கனவில் தோன்றி ஏரோது காலமானதும் குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக் கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும் என்றார். யோசேப்புன் அத்தூதர் கூறியவாறே செய்தார்.
செபம்: எல்லாம் வல்லக் கடவுளே! எம் மீட்பின் தொடக்கக் காலத்தில் மரியா கருவுற்று இயேசுவை இவ்வுலகிற்குக் கொணர்ந்தபோது புனித யோசேப்பின் நம்பிக்கைக்குரிய காவலில் அவர்களை வைத்தீர். இவரது வேண்டுதலினால், உமது திருச்சபை உம் மறைப்பொருள்களின் நம்பிக்கைக்குரிய கண்காணிப்பாளராக விளங்கவும் செய்தீர். இவரின் வேண்டுதலில் எம்மையும் நீர் உடனிருந்து காத்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment