Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 24 March 2016

இன்றைய புனிதர் 2016-03-25 சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini


                       

                         இன்றைய புனிதர்  2016-03-25
சபை நிறுவுநர் லூசியா பிலிப்பீனி Lucia Filippini

                        புனிதர்பட்டம்: 22 ஜூன் 1930, திருத்தந்தை 11 ஆம் பயஸ்

பிறப்பு ஜனவரி 1672, உரோம்

இறப்பு 25 மார்ச் 1732, மோண்டேபியாஸ்கோனே Montefiascone, இத்தாலி

இவர் தனது 20 ஆம் வயதில் கர்தினால் மார்க் ஆண்டோனியோ பார்பாரிகோ Marc Antonio Barbarigoஎன்பவரின் உதவியுடன் இவ ரின் பெயரில் துறவற சபை ஒன்றை நிறுவினார். இச்சபையினர் கைவிடப்பட்ட குழந்தைகளையும் விதவைகளையும் ஒன்று சேர்த்து, அவர்களை கண்காணித்து பராமரித்து வருவதை தங்களின் நோக்கமாக கொண்டனர். இவர் 1704 ஆம் ஆண்டு அச்சபையின் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் உரோமையிலும் தன் சபையை நிறுவினார். மேலும் இச்சபையினர் இளம் தம்பதியினர் எவ்வாறு இல்லற வாழ்வில் ஈடுபட வேண்டுமென்றும் என்பதைப் பற்றியும் எடுத்துக்கூறி நல்ல உறவுடன் வாழ வழிகாட்டினர். இவர் தொடங்கிய சபையானது 1910 ஆம் ஆண்டிலிருந்து திருத்தந்தையின் ஒப்புதல் பெற்ற சபையாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டது.

செபம்:
தாழ்நிலையில் இருப்போரை பரிவன்புடன் நோக்கும் எம் இறைவா! நீர் ஒருவரே அருஞ்செயல்களை செய்கின்றீர். உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை உறுதிப்படுத்துகின்றீர். தேவையிலிருப்போருக்கு பல துறவற சபைகளின் மூலம் உதவுகின்றீர். புனித லூசியா பிலிப்பீனியின் வழியாக நீர் ஏற்படுத்திய சபையை, அதன் நோக்கத்துடன் என்றும் செயல்பட உதவி செய்தருளும். இச்சபையினரின் வழியாக துயர் நிறைந்தோர்க்கு ஆறுதலாகவும், உள்ளம் உடைந்தோர்க்கு உறுதுணையாகவும், அழுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பவராகவும் இருந்தருளும்.

No comments:

Post a Comment