Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 19 March 2016

இன்றைய புனிதர் 2016-03-20 லிண்டிஸ்பார்னே நகர் ஆயர் கிஸ்பெர்ட் Gisbert von Lindisfarne

                    

            இன்றைய புனிதர் 2016-03-20லிண்டிஸ்பார்னே நகர் ஆயர் கிஸ்பெர்ட் Gisbert von Lindisfarne

பிறப்பு 620, இங்கிலாந்து

இறப்பு 20 மார்ச் 687,ஃபார்னா Farna, ஐஸ்லாந்து Island

பாதுகாவல் : ஆயர்கள், கடல்வாழ் மக்கள்

இவர் ஓர் நாகரீகமான குடும்பத்தில் பிறந்தவர். 651 ஆம் ஆண்டு புனித பெனடிக்ட் துறவற மடத்தில் சேர்ந்து குருவானார். 662 ல் அம்மடத்தின் தலைவரானார்.. இவர் 664 ல் இங்கிலாந்து நாட்டிலுள்ள ஓஸ்ட்குஸ்டேOstküste என்ற தீவிற்குச் சென்று பணியாற்றினார். அத்தீவில் இவர் "மக்களின் போதனையாளர்" என்றழைக்கப்பட்டார். பிறகு இவர் 676 ஆம் ஆண்டு அங்கிருந்து ஃபார்னா என்றழைக்கப்பட்ட தீவிற்கு சென்றார். அங்கு 6 ஆண்டுகள் தனிமையாக வாழ்ந்தார்.

அங்கிருந்து அவர் திரும்பிய பின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் ஆயர் பதவியிலிருந்து மாற்றம் பெற விரும்பினார். அப்போதுதான் அத்தீவிலியே இறந்துவிட்டார். முதலில் இவரின் உடல் ஃபார்னே தீவில் அடக்கம் செய்ய்யப்பட்டது. 11 ஆண்டுகள் கழித்து அவரின் கல்லறையை திறக்கும்போது, உடல் அழியாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது/ அன்றிலிருந்து இவரின் கல்லறையில் ஏராளமான புதுமைகள் நடந்த வண்ணமாய் இருந்தது.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! இன்றைய திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் அனைவரையும் ஆசீர்வதியும். தான் செய்யும் பணிகள். அனைத்திலும் உம்மை மையமாக வைத்து பணியாற்ற உம் வரம் தாரும். காலத்தின் சூழ்நிலைக்கேற்ப, தங்களை மாற்றிக் கொண்டு, உம் மந்தையின் ஆடுகளை பராமரிக்க நீர் துணை வர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment