Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Wednesday, 16 March 2016

இன்றைய புனிதர் 2016-03-16 கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln

                       
                      இன்றைய புனிதர் 2016-03-16
                கொலோன் நகர் பேராயர் ஹெரிபெர்ட் Herbert von Köln

பிறப்பு 970, வோர்ம்ஸ் Worms, ஜெர்மனி

இறப்பு 16 மார்ச் 1021,கொலோன் Köln, ஜெர்மனி

இவர் அரசர் ஹூயூகோபின் Hugo மகன். அரசர் 3 ஆம் ஒட்டோ அவர்களால் 994 ல் இவரின் 24 ஆம் வயதில் இத்தாலி நாட்டில் பேராலயக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அப்பொறுப்பை ஜெர்மனி நாட்டிலும் ஏற்றார். இவர் அரசர் ஒட்டோவின் நெருங்கிய நண்பரானார். பின்னர் இவர் 995 ல் குருப்பட்டம் பெற்றார். பிறகு999 ஆம் ஆண்டு கொலோன் நகரின் பேராயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஒருமுறை 1002 ஆம் ஆண்டு ஒட்டோ பயணம் ஒன்றை மேற்கொண்டபோது, திடீரென்று இறந்து போனார்.

இவ்விறப்பால் பேராயர் ஹெர்பெர்ட் பெரிதும் பாதிக்கபட்டார். இதனால் பல துன்பங்களை அனுபவித்தார். பல்வேறுபட்ட பிரச்சனைகளைச் சந்தித்தார். இவர் ஒட்டோவின் உடலை ஆஹனிற்கு Aachen கொண்டு வரப்பட்டு, அங்கு அடக்கம் செய்யப்பட்டார். ஒட்டோ இறந்ததால் அரசர் 2 ஆம் ஹென்றி பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற நாளிலிருந்து ஆயருக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். இதனால் ஆயரை கவுன்சிலர் பதவியிலிருந்து விலக வைத்தான்.

ஆயர் ஹெரிபெர்ட் தான் மேற்கொண்ட அனைத்து துன்பங்களையும் இறைவனின் அருளால் பொறுமையோடு ஏற்றார். தன் பணியை தளராமல் சிறப்பாக ஆற்றினார். ஏழைகளின் மேல் இரக்கங் கொண்டுச் செயல்பட்டார். இவர் இறந்தபிறகு கொலொனிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
குறைவில்லா நிறைபொருளாம் ஆண்டவராகிய இறைவா! உமது அன்பின் வழியில் இன்றைய புனிதரை வழிநடத்தினீர். உம் மகன் இயேசுவின் பெயரால் அவர் செய்த அனைத்து பணிகளிலும் நிறைவைத் தந்தீர். வாழ்வு முழுவதும் உடனிருந்து பாதுகாத்தீர். அவரின் வழியாக வோர்ம்ஸ் நகரில் வாழும் மக்களையும் கொலோன் நகரில் உள்ள மக்களையும் ஆசீர்வதித்து வழிநடத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment