Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Saturday, 5 March 2016

இன்றைய புனிதர் 2016-03-05 சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske

                      

                இன்றைய புனிதர் 2016-03-05
சபை நிறுவுநர் ராபர்ட் ஸ்பைஸ்கே Robert Spiske

பிறப்பு 29 ஜனவரி 1821, பிரேஸ்லவ் Breslau, போலந்து

இறப்பு 5 மார்ச் 1888, பிரேஸ்லவ் Breslau, போலந்து

இவர் தான் ஓர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு ஊர் ஊராகச் சென்று மறைப்பணியை ஆற்றினார். பேராலயங்களில் சிறப்பான மறையுரை ஆற்றி, பலரை மனந்திருப்பினார். திருப்பலிக்கு வராத மக்களையும் தன் அழகிய மறையுரையால் கவர்ந்து இறை இல்லம் நாடி வரச் செய்தார். இளைஞர்களின் மனதை மிக எளிதாகக் கவர்ந்தார், கைவிடப்பட்ட இளைஞர்களுக்கு இல்லம் ஒன்றை எழுப்பி, அவர்களை பராமரித்து வந்தார்.

இவர் அக்குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவனித்து பராமரிப்பதற்கென்று, எட்விக் சகோதரிகள் என்ற பெயரில் சபை ஒன்றை நிறுவினார். 1892 ஆம் ஆண்டு இச்சபை, திருத்தந்தை அவர்களால் துறவறச் சபை என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டது. ராபர்ட் ஸ்பைஸ்கே "காரித்தாஸ் அப்போஸ்தலர்" (Apostel Caritas) என்று மக்களால் அழைக்கப்பட்டார். இவர் இறந்தபிறகு, இவரால் தொடங்கப்பட்ட சபையிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.


செபம்:
படைப்பனைத்திற்கும் பாதுகாவலே! இன்றைய உலகில் வாழும் இளைஞர்களை ஆசீர்வதியும். இவர்கள் தெளிந்த சிந்தனையுடன் தங்களது வாழ்வை வாழ உதவி செய்யும். நல்லதோர் எதிர்காலத்தைப் பெற்று, நாட்டிற்கும் வீட்டிற்கும் எம் திருச்சபைக்கும் பிரமாணிக்கமுள்ளவர்களாக வாழ வழிகாட்டிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment