Enter your username and password to enter your Blogger Dasboard
Saturday, 5 March 2016
இன்றைய புனிதர் 2016-03-06 துறவி கேலேட்டா போய்லெட் Coletta Boillet OSCI
பிறப்பு 13 ஜனவரி 1381,கோர்பீ Corbie, பிரான்சு
இறப்பு 6 மார்ச் 1447, கெண்ட் Gent, பெல்ஜியம்
முத்திபேறுபட்டம் : 1740 புனிதர்பட்டம் : 25 மே 1807 பாதுகாவல் : புனித கிளாரா சபை, வீட்டுவேலை செய்வோர், கெண்ட் நகர், காய்ச்சல், மலடிகள், சுகபிரசவம்.
இவர் பல ஆண்டுகள் துறவியைப்போலவே தனிமையாக வாழ்ந்த வந்தார். பிறகு 1406 ஆம் ஆண்டு புனித பிரான்சிஸ் அசிசியை பின்பற்றி புனித கிளாரம்மாள் சபையில் சேர்ந்து துறவியானார். பின்னர் இவரே 20 க்கும் மேற்பட்ட துறவற சபைகளை நிறுவினார். இத்துறவற சபைகள் அனைத்தும் திருத்தந்தை 13 ஆம் பெனடிக்ட் அவர்களின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டது, இவர் நிறுவிய அனைத்து இல்லங்களுக்கும் "கேலேட்டா இல்லம்" என்று தன் பெயரைச் சூட்டினார்.
இவர் ஆண்களுக்கென்றும் தன் பெயரில் துறவற இல்லங்களை நிறுவினார். ஆயரில்லா ஆடுகளைப்போல திரிந்த மக்களை ஒன்று மறைப்பணி ஆற்றினார்.
செபம்: திராட்சைத் தோட்டத்தின் ஆண்டவரும், தலைவருமான எம் கடவுளே, இன்றைய புனிதர் தொடங்கிய அனைத்துச் சபைகளையும் நீர் பராமரித்து தொடர்ந்து உம் பாதையில் பயணிக்க உதவிபுரியும். இச்சபை சகோதர, சகோதரிகள் செய்யவேண்டிய அலுவலையும் அதற்குரிய நியாயமான ஊதியத்தையும் கொடுத்தருளும். இவர்களின் அன்றாட வாழ்வின் சுமையை தாங்கிக்கொண்டு முறைப்பாடின்றி அனைத்திலும் உமது திருவுளத்தை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு உதவிட வேண்டுமென்று புனித கேலேட்டா வழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
No comments:
Post a Comment