Enter your username and password to enter your Blogger Dasboard
Thursday, 3 March 2016
இன்றைய புனிதர் 2016-03-03 மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM
இன்றைய புனிதர் 2016-03-03 மறைசாட்சி லிபெராட் வைஸ் Liberat Weiß OFM
பிறப்பு 4 ஜனவரி 1675, கோனெர்ஸ்ராய்த் Konnersreuth, பவேரியா
இறப்பு 3 மார்ச் 1716, கொண்டர் Gondar, எத்தியோப்பியா
முத்திபேறுபட்டம்: 20 நவம்பர் 1988 திருத்தந்தை 2 ஆம் ஜான் பால்
இவர் பிறந்த ஊர் மக்களால், அப்போஸ்தலர் என்று அழைக்கப் பட்டார். சிறுவயதிலிருந்தே மறைப்பணியாற்றுவதில் அக் கறை காட்டி வந்தார். இவர் குருவான பிறகு 3 அருட்தந்தையர்க ளுடன் இணைந்து மறைப்பணியாற்றினார். மறைப்பணியாற் றும்போது பல இன்னல்களை எதிர்கொண்டார். இவர் அரசர் ஒருவர் சிறைப்பிடித்து செல்லப்பட்டார். அப்போது அவ்வரசன் இவரை கற்களால் அடித்துக் கொல்லும்படி ஆணையிட்டான்.
அச்சமயத்தில் இவர் இறைவனின் அருளால் எத்தியோப்பிய நாட்டில் ஒருநாள் நடந்த திருப்பலியில் பங்கெடுக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது இவர் திருப்பலி நிறைவேற்றும்போது அரசரின் படைவீரர்களால் பிடிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக கூடியிருந்த சமயத்தில் அனைவராலும் கற்களால் அடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
செபம்: அற்புதங்களை செய்து வரும் எம் இறைவா! உம்மீது கொண்ட அன்பால் ஆர்வமுடன் இறைப்பணியை செய்ய நீர் சிலரை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றீர். இறையழைத்தல் குறைந்து வரும் இந்நாட்களில், உம் அறுவடைக்குத் தேவையான மிகுதியான ஆட்களை நீர் தேர்வு செய்து, உம் பணியை வளர்த்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
No comments:
Post a Comment