Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Thursday, 3 March 2016

இன்றைய புனிதர் 2016-03-04 போலந்து நாட்டு அரசரின் மகன் கசிமீர் Kasimir von Polen

                         
                    இன்றைய புனிதர் 2016-03-04
போலந்து நாட்டு அரசரின் மகன் கசிமீர் Kasimir von Polen

பிறப்பு5 அக்டோபர் 1458

இறப்பு 4 மார்ச் 1484, குரோட்னோ Grodno, லிட்டவுன் Litauen

                                           புனிதர்பட்டம்: 1521
                    பாதுகாவல் : போலந்து, இளைஞர்கள்

இவர் அரசர் 4 ஆம் கசிமீரின் மகன். இவர் பெற்றோருக்கு இவர் மூன்றாவது குழந்தையாக பிறந்தார். இவர்1471 ஆம் ஆண்டு இவரின் 13-வது வயதில் ஹங்கேரி நாட்டிற்கு அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் இவருக்கு எதிராக மத்தியாஸ் கோர்வினுஸ் Matthias Corvinus என்பவன் செயல்பட்டான். ஏனென்றால் மத்தியாஸ் தானும் அரசராக வேண்டுமென்று ஆசைக்கொண்டான். இவன் கசிமீர் அரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே மிகவும் தொல்லை கொடுத்துக்கொண்டே இருந்தான். அவர் செய்த அனைத்துப் பணிகளுக்கும் தடைவிதித்துக் கொண்டே எதையும் செய்யவிடாமல் தடுத்தான்.

இதனால் ஒரு பக்கத்தில் கசிமீர் மிக மகிழ்ச்சியடைந்தார். வரும் தடைகள் அனைத்திற்கும் கடவுளுக்கு நன்றி கூறிக்கொண்டே இருந்தார். அரசர் பதவியிலிருந்து விலகிச் சென்று, இறைவனை பிடித்துகொள்ள கடவுள் செய்யும் உதவிகளை நினைத்து, இடைவிடாது இறைவேண்டல் செய்து நன்றி கூறினார். இவர் அரசர் மூன்றாம் பிரடெரிக்கின் மகளை 1481 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற கட்டாயச் சூழல் உண்டானபோது அவற்றை மறுத்தார். திருமணத்திற்கு பதிலாக கற்பு என்னும் வார்த்தைப்ப்பாட்டை எடுத்துகொண்டார்.

இவர் லிட்டவுனிலிருந்த வில்னா Wilna என்ற ஊரிலிருந்த கல்லூரியில் அமைந்திருந்த பேராலயத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்தார். இவர் இறந்த பிறகும் அங்கே தான் அடக்கம் செய்யப்பட்டார். சில ஆண்டுகள் கழித்து இவரின் உடல் வில்னாவில் உள்ள செயிண்ட் பீட்டர் பவுல் பேராலயத்திற்கு மாற்றப்பட்டது.

இவர் தான் இறக்கும் வரை கிறிஸ்துவப் புண்ணியங்களில் சிறப்பாக, கற்பு நெறியிலும், ஏழை எளியவர்க்கு இரங்கி அன்பு செய்வதிலும் சிறந்து விளங்கினார். திருமறையைப் பரப்புவதில் ஆர்வமிக்கவராய் திகழ்ந்தார். தூய நற்கருணைமீது பக்தியும் கன்னிமரியின்மீது பற்றுதலும் கொண்டு வாழ்ந்தார்.


செபம்:
என்றும் வாழும் எல்லாம் வல்லத் தந்தையே! உமக்கு நாங்கள் ஊழியம் செய்வது உம்முடன் ஆட்சி செய்வதாகும். எங்களது நேர்மையான தூய வாழ்வினால், உமக்கு என்றும் ஊழியம் செய்ய புனித கசிமீரின் பரிந்துரை வழியாக எங்களுக்கு வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment