Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Friday, 25 March 2016

இன்றைய புனிதர் 2016-03-26 ஆயர் லியூட்கர் Liudger

                       
                     இன்றைய புனிதர் 2016-03-26
                        ஆயர் லியூட்கர் Liudger

பிறப்பு 742, பிரீஸ்லாண்ட் Friesland

இறப்பு 26 மார்ச் 809, பில்லர்பெக் Billerbeck, ஜெர்மனி

பாதுகாவல் : முன்ஸ்டர் Münster மற்றும் எஸ்ஸன் Essen மறைமாவட்டத்தின் 2 ஆம் பாதுகாவலர்

இவர் ஓர் கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர். 777 ஆம் ஆண்டு கொலோனில் தனது குருப்பட்டம் பெற்றார். பிறகு சாக்சன் சென்று மறைப்பணியாற்றினார். தான் ஆயராகத் தேர்ந்தெடுக் கப்பட்ட பிறகு முன்ஸ்டரில் பேராலயம் ஒன்றை கட்டினார். அத்துடன் சில ஆலயங்களையும் எழுப்பினார். ஏறக்குறைய 40அருட்தந்தையர்களைக் கொண்டு பல துறவற மடங்களை யும் கட்டினார். 40 பங்குகளையும் உருவாக்கினார். சில பெனடிக்ட்டீனர் துறவற மடங்களையும் கட்டினார்.  இவர் ஒருமுறை திருப்பலியில் மறையுரையாற்றிக் கொண்டிரு க்கும் வேளையில் திடீரென்று எதிர்பாராத விதமாக இறந்தார். இவர் பல துறவற இல்லங்களில் ஆன்ம குருவாக பணியாற்றி னார். இன்றும் முன்ஸ்டர் மறைமாவட்டத்தில் இவருக்கென்று தனி வணக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.


செபம்:
ஆண்டவராகிய நானே உங்களின் இதயச் சிந்தனைகளை அறிபவர் என்று மொழிந்த இறைவா! நாங்கள் அன்பின் ஆர்வத்தால் தூண்டபட்டு எப்பொழுதும் அனைத்திற்கும் மேலாக உம்மையும் உம் பொருட்டு எம் சகோதர சகோதரிக ளையும் அன்பு செய்ய வரம் தாரும். ஆயர் லியூட்கர் எழுப்பிய உம் இல்லங்களுக்கு வந்து உம்மை தரிசிக்கும் அனைவருக் கும் ஆறுதலையும் அன்பையும் பொழிந்தருளும். உம் இல்லத்தி ற்கு நாங்கள் வரும் போது உமது சாட்சிகளாக மாறிட வரம் தாரும். முழு மனதுடன் உம்மை போற்றி புகழ்ந்திட வரம் அருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்

No comments:

Post a Comment