Login

Enter your username and password to enter your Blogger Dasboard


Tuesday, 22 March 2016

இன்றைய புனிதர் 2016-03-23 லிமா நகர் பேராயர் தோரிபியோ Toribio von Lima

                    
                  இன்றைய புனிதர்2016-03-23
லிமா நகர் பேராயர் தோரிபியோ Toribio von பிறப்பு 16 நவம்பர் 1538, மயோர்கா Mayorga, ஸ்பெயின்

இறப்பு 23 மார்ச் 1606, லீமா Lima, பெரு

                   பாதுகாவல் : பெரு, லீமா நகர்

இவர் ஓர் கிறிஸ்துவ விசுவாசம் நிறைந்த குடும்பத்தில் பிறந்தார். சலமங்காவில் Salamanca சட்டம் பயின்றார். பின்னர் பெரு என்னும் நாட்டிலிருக்கும் லீமா நகரின் ஆயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1580 ஆம் ஆண்டு தென் அமெரிக்காவுக்கு சென்றார். திருத்தூது ஆர்வத்தினால் பற்றியெரிந்தார். மறைப்பணியாளர் மன்றங்களையும் ஆட்சிமுறைப் பேரவைகளையும் அடிக்கடி ஒன்று சேர்த்து வழிநடத்தினார். இவ்வொன்றிப்பு மற்ற மாவட்டமெங்கும் கிறிஸ்துவ விசுவாசத்தைப் பரப்ப மிகவும் உதவின. திருச்சபையின் உரிமைகளைக் காப்பதில் இவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

இவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட மக்களை மிகுந்த அன்போடு வழிநடத்தினார். அவர்களின் தேவைகலை அறிந்து உடனடியாக நிறைவேற்றித் தந்தார். மக்களின் மேல் எப்போதும் அக்கறைக் கொண்டு வாழ்ந்தார். தன் மறைமாவட்டம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து, தவறாமல் நலம் விசாரித்து வந்தார். வேறுபாடின்றி அனைவருடனும் சமமாக பழகினார். இவர் ஏறக்குறைய 8,00,000 மக்களுக்கு ஒரே நேரத்தில் உறுதிபூசுதல் என்னும் திருவருட்சாதனத்தைக் கொடுத்தார். இவர் மக்கலை சந்திக்க பயணம் மேற்கொண்டபோது வழியிலேயே உயிரிழந்தார்.


செபம்:
பேசுபவர் நீங்கள் அல்ல, மாறாக உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய் பேசுவோர் என்றுரைத்த எம் தந்தையே! மறைபரப்பு பணியில் நாட்டமும் உம்மீது கொண்டிருந்த ஆர்வத்தாலும் புனித தேரிபியோவை பெரு நாடு முழுவதும் உமது திருச்சபையைப் பெருக செய்தீர், புனிதப்படுத்தபட்ட உம் மக்களாகிய நாங்களும் உம் நம்பிக்கையிலும் புனிதத்திலும் எந்நாளும் தொடர்ந்து வளம் பெறச் செய்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகின்றோம்.

No comments:

Post a Comment