Enter your username and password to enter your Blogger Dasboard
Monday, 21 March 2016
இன்றைய புனிதர் 2016-03-21 திருக்காட்சியாளர் எமிலி ஷ்னைடர் Emilie Schneider
இன்றைய புனிதர் 2016-03-21 திருக்காட்சியாளர் எமிலி ஷ்னைடர் Emilie Schneider
பிறப்பு 6 செப்டம்பர் 1820, ஹாரன், ஜெர்மனிஇறப்பு 21 மார்ச் 1859, ட்யூசல்டோர்ஃப் Düsseldorf, ஜெர்மனி
இவரின் திருமுழுக்குப் பெயர் ஜூலி. இவர் 1845 ல் திருச்சிலு வையின் மகள் என்றழைக்கப்பட்ட துறவறச் சபையில் சேர்ந்தார். 1851 ல் அஸ்பல் Aspel என்ற ஊரில் நவத்துறவிகளை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்றார். 1852 ல் ட்யூசல்டோர்ஃபில் உள்ள துறவற மடத்தில் தலைவியாக நியமிக்கப்பட்டார். அப் போது அவர் தன்னுடன் வாழ்ந்த மற்ற துறவிகளுடன் சுமூக மான உறவின்றி வாழ்ந்தார். பலவித பிரச்சினைகளை சந்தித் தார்.
இவர் எல்லா எதிர்மறையான சூழல்களையும் சந்திக்க இடைவிடாமல் இறைவேண்டல் செய்தார். இயேசுவின் திரு இதயத்தின் அன்பை சுவைத்தார். தேவையான சக்தியை திருச்சிலுவையிலிருந்து பெற்றார். இவர் அடிக்கடி ஆண்டவரிடமிருந்து திருக்காட்சிகளை பெற்றார். இவர் இறந்த பிறகு ட்யூசல்டோர்ஃபில் உள்ள தெரேசியன் மருத்துவமனையில் அடக்கம் செய்யப்பட்டார். அங்குதான் இன்றுவரை அவரின் கல்லறை உள்ளது.
செபம்: அன்புத் தந்தையே இறைவா! உமது இறையழைப்பின் குரலைக் கேட்டு உம்மை பின் தொடர வந்த உள்ளங்களை வழிநடத்தும் பொறுப்பை திருக்காட்சியாளர் எமிலியிடம் ஒப்படைத்தீர். இன்றும் நவத்துறவிகளை வழிநடத்தும் ஒவ்வொரு பொறுப்பாளர்களையும் நீர் ஆசீர்வதியும். தூய ஆவியின் துணையுடன் செயல்பட்டு, தெளிவான பாதையில் நேர்மையான முறையில் இளைஞர்களை வழிநடத்த துணைபுரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்
No comments:
Post a Comment